அமெரிக்காவில் இன்று அதிக எண்ணிக்கையிலான மக்கள், அச்சிடப்பட்டப் புத்தகங்களைவிட டிஜிட்டல் புத்தகங்களை அதிகமாகப் படிக்கின்றனர்.
அமேசானின் ‘கின்டில்’ போன்ற கருவிகள், அவற்றைப் பயன்படுத்துவோர் படித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகத்தின் எந்தப் பகுதிகளை நீங்கள் விரைவாக வாசிக்கிறீர்கள், எவற்றை மெதுவாக வாசிக்கிறீர்கள், எந்தப் பக்கத்தில் ஓர் இடைவேளை எடுத்தீர்கள், எந்த வாக்கியத்துடன் அப்புத்தகத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டீர்கள் போன்ற எல்லாத் தகவல்களையும் கின்டிலால் திரட்ட முடியும்.
முகங்களை அடையாளம் காணும் உணரிகளையும் உயிரியளவு உணரிகளையும் சேர்த்துக் கின்டில் மேம்படுத்தப்படால், நீங்கள் வாசித்த ஒவ்வொரு வாக்கியமும் உங்கள் இதயத்துடிப்பு விகிதத்தின்மீதும் ரத்த அழுத்தத்தின்மீதும் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியது என்பதையும் கின்டில் அறிந்து கொள்ளும்.
எது உங்களைச் சிரிக்க வைத்தது, எது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது, எது உங்களுக்குக் கோபமூட்டியது ஆகியவையும் அதற்குத் தெரியும். விரைவில், நீங்கள் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும்போது, புத்தகங்கள் உங்களை வாசிக்கும்.
நீங்கள் படிக்கின்றவற்றில் பெரும்பாலானவற்றை விரைவில் நீங்கள் மறந்துவிடுவீர்கள், ஆனால் அமேசான் எந்தவொரு விஷயத்தையும் ஒருபோதும் மறக்காது. இத்தகைய தகவல்கள், உங்களுக்கான புத்தகங்களை அமேசான் மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுப்பதற்கு உதவும்.
அதோடு, துல்லியமாக நீங்கள் யார் என்பதையும், உங்களை எப்படி உற்சாகப்படுத்த வேண்டும் என்பதையும், எப்படி ஊக்கமிழக்கச் செய்ய வேண்டும் என்பதையும் அமேசான் அறிந்து கொள்ள அத்தகவல்கள் உதவும்.
இறுதியில், எல்லாமறிந்த இந்தப் பிணையத்திலிருந்து ஒரு கணம்கூட நம்மால் பிரிந்திருக்க முடியாத ஒரு நிலையை நாம் எட்டக்கூடும். இணைப்பைத் துண்டிப்பது என்பது மரணத்திற்குச் சமம்.
புத்தகம்: homo deus
ஆசிரியர்: யுவால் நோவா ஹராரி (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சமீப காலமாக பச்சை மஞ்சள் டப்பாக்களுடன் கட்டம் கட்டமாக பலர் post செய்வதை பார்த்து இருப்பீர்கள். என்ன அது?
Wordle எனப்படும் online game தான் அது. சில வாரங்களாக viral ஆகி அனைவராலும் விளையாடப்படுகிறது.
Josh Wardle, என்னும் software engineer உருவாக்கிய word game ஐ powerlanguage.co.uk/wordle/ என்னும் வலைத்தளத்தில் சென்று விளையாடலாம். எந்த கட்டணமும் இல்லை. எதையும் பதிவிறக்கம் செய்ய தேவையும் இல்லை. விளம்பரங்களும் இல்லை.
எளிமையான விளையாட்டு தான் ஒவ்வொரு நாளும் ஒரு ஆங்கில ரகசிய வார்த்தை இருக்கும் உலகம் முழுவதும் அனைவருக்கும் ஒரே வார்த்தை தான். அந்த ரகசிய வார்த்தையை கண்டுபிடிக்க 6 வாய்ப்புகள் தரப்படும். முதல் வார்த்தை நீங்கள் விருப்பப்பட்ட 5 எழுத்து கொண்ட ஒரு வார்த்தை.
இன்று பொதுவான கருத்து ஆங்கிலேயர்கள் பண்பாடு மற்றும் நடத்தையில் சிறந்தவர்கள் என்பது. English Etiquette இன்று உலகில் பிரபலம். ஆங்கிலேயர்கள் எதையும் முறையாக செய்யக்கூடியவர்கள். எல்லாவற்றிக்கும் ஒரு ரூல் இருக்கிறது.
எதை எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அடுத்தவருக்கு தொல்லை தராமல் நமது செய்கைகள் இருக்க வேண்டும் இதுதான் etiquette இன் அடிநாதம்.
வரிசையில் நிற்க வேண்டும், அடித்து பிடித்து ஓட கூடாது,
நமது பாதையில் குறுக்கே நிற்கும் ஒருவரை கடந்து செல்லும்போது excuse me சொல்ல வேண்டும், வயதானவர்கள் பெண்களுக்கு கதவை திறந்துவிட வேண்டும், புதிதாக அறிமுகம் ஆகும் போது அவர்களிடம் வயது, வருமானம் போன்றவற்றை கேட்பது அநாகரீகம்,
அகக்கண்ணாடி
ஒரு மனநல மருத்துவரின் டைரிக்குறிப்புகள்
டாக்டர் ரைஸ் இஸ்மாயில்
2021 முடியும் போது ஒரு நல்ல புத்தகத்துடன் முடித்து இருக்கிறேன் என்கிற நிறைவு இந்த புத்தகத்தை முடித்ததும் வந்தது.
நடைமுறை வாழ்வியல் சார்ந்த அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் “வாழ்க்கைக்கான அறிவியல்" (Science of Living) எனும் தலைப்பில், இந்நூலை நிகர்மொழி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. மனநலத்திற்கு நமது சமூகம் இன்றளவும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
எல்லாம் போகப் போக சரியாப் போயிடும், பூஜை போட்டா சரியா போயிடும், கல்யாணம் செய்தால் சரியா போயிடும், tour போனால் சரியா போயிடும் என்று அலட்சியமாக தான் கையாளப்படுகிறது. மருத்துவ ஆலோசனை பெறுவதை அவமானமாகவும் கருதுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என்று ஒரு சிறப்பு உண்டு, அது அதற்கென்று எந்த சிறப்பும் இல்லை என்பதே! Constantine கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டை மாற்றியதும் ஏற்கனவே கொண்டாடி வந்த pagan பண்டிகைகளுக்கு கிறிஸ்துவ காரணம் குடுத்தார்.
இந்த டிசம்பர் மாதம் என்பது பனியில் வீட்டுக்குள் அடைந்த மக்கள் எதோ ஒரு காரணம் சொல்லி குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முயலும் மாதமாக இருந்தது. பல மதங்களில் டிசம்பர் மாதம் பண்டிகை மாதமாக இருக்கிறது.
Winter Solstice என்னும் ரோம பண்டிகை, Saturnalia (Roman கடவுள் Saturn ஐ சிறப்பிக்கும் பண்டிகை), Dies Natalis Solis Invicti (பனிக்கால துவக்கத்தை குறிக்கும் பண்டிகை) Yule (ஜெர்மனியர்களின் பனிக்கால பண்டிகை), Hanukkah (யூத பண்டிகை), Yalda (பெர்ஷிய பனிக்கால பண்டிகை)
“இந்தப் புராண, இதிகாச, வேதம் என்பவை, அவை எவ்வளவு செல்வாக்கு பெற்றவையாக இருந்தாலும், அது கண்டு மனம் தளராமல், மலைத்துவிடாமல், அவை பற்றிய உண்மைகளை ஆராய்ந்து,
அவை மனிதனால் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட பழைய கற்பனைகள், கதைகள், வாழ்க்கை முறைகள் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி, அவற்றின் மயக்கத்திலிருந்து அவர்களை விடுவித்து,
மனிதர்களாக்கிப் பார்ப்பதைவிட, அதற்குப் பாடுபடுவதைவிட, மனிதாபிமானம் படைத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இங்கு இருக்க முடியும்?”