இன்று பொதுவான கருத்து ஆங்கிலேயர்கள் பண்பாடு மற்றும் நடத்தையில் சிறந்தவர்கள் என்பது. English Etiquette இன்று உலகில் பிரபலம். ஆங்கிலேயர்கள் எதையும் முறையாக செய்யக்கூடியவர்கள். எல்லாவற்றிக்கும் ஒரு ரூல் இருக்கிறது.
எதை எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அடுத்தவருக்கு தொல்லை தராமல் நமது செய்கைகள் இருக்க வேண்டும் இதுதான் etiquette இன் அடிநாதம்.
வரிசையில் நிற்க வேண்டும், அடித்து பிடித்து ஓட கூடாது,
நமது பாதையில் குறுக்கே நிற்கும் ஒருவரை கடந்து செல்லும்போது excuse me சொல்ல வேண்டும், வயதானவர்கள் பெண்களுக்கு கதவை திறந்துவிட வேண்டும், புதிதாக அறிமுகம் ஆகும் போது அவர்களிடம் வயது, வருமானம் போன்றவற்றை கேட்பது அநாகரீகம்,
ஒருவர் வீட்டு விருந்துக்கு செல்லும்போது பரிசு கொண்டு செல்ல வேண்டும் இதெல்லாம் சில etiquettes.
இந்த etiquette களின் வரலாறு என்ன?
Etiquette களில் சிறந்தவர்கள் இப்போது ஆங்கிலேயர்களாக இருக்கலாம் ஆனால் இவற்றை துவக்கி வைத்தது French மக்கள்.
Etiquette என்கிற French வார்த்தைக்கு அர்த்தம் அறிவிப்பு பலகை. 1600 களில் Louis XIV அரண்மனையில் புல்தரைகள் மிக பிரமாதமாக பராமரிக்கப்பட்டு இருக்கும். அரண்மனைக்கு வருபவர்கள் எல்லாம் அந்த புல் தரையில் நடப்பது உட்காருவது என்று அதை பாழாக்கி கொண்டு இருந்தார்கள்.
இதைப் பார்த்து கடுப்பான ராஜா. புல்தரைகளுக்கு முன் "யாரும் புல்தரையில் கால் வைக்க கூடாது" என்று அறிவிப்பு பலகைகளை வைத்தார். பின்னர் அந்த வழக்கம் அப்படியே கூட்டம் கூடாதீர்கள், வரிசையில் வரவும் என்றெல்லாம் அறிவிப்பு பலகைகள் வர காரணமாக இருந்தது.
Etiquette என்கிற வார்த்தைக்கான அர்த்தமும் நல்ல பழக்க வழக்கங்கள் என்பதாக மாறிவிட்டது.
நன்னடத்தைகள் பற்றிய முதல் புத்தகம் எழுதியவர் Ptahhotep என்னும் எகிப்தியர். 2400 B.C. களில் இவர் எழுதிய புத்தகம் இளைஞர்களுக்கான புத்தகம்.
இளைஞர்கள் எப்படி பெரிய நிலைக்கு செல்லலாம் என்று அவர் எழுதி இருந்த புத்தகத்தில் குறிப்பிட தகுந்த சுவாரஸ்யமான விஷயம், "முதலாளி/மேல் அதிகாரியுடன் அமர்ந்து இருக்கும் போது அவர் சிரிக்கும்போது மட்டுமே நாம் சிரிக்க வேண்டும்."
இவருக்கு பின் 1200 CE இல் Tommasino di Cerclaria என்பவர் A Treatise on Courtesy என்கிற புத்தகத்தை எழுதினார். பின் 1290 இல் Bonvicino da Riva என்கிற துறவி table manners பற்றி Fifty Courtesies of the Table என்கிற புத்தகத்தை எழுதினார்.
அதன் பின் பல நாடுகளில் பலர் இது போல நன்னடத்தை பற்றிய புத்தகங்கள் எழுதி இருக்கிறார்கள். தமிழில் எனக்கு தெரிந்து பாலகுமாரன் மற்றும் சுஜாதா ஆகியோர் இது போல etiquette பற்றி எழுதி இருக்கிறார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அகக்கண்ணாடி
ஒரு மனநல மருத்துவரின் டைரிக்குறிப்புகள்
டாக்டர் ரைஸ் இஸ்மாயில்
2021 முடியும் போது ஒரு நல்ல புத்தகத்துடன் முடித்து இருக்கிறேன் என்கிற நிறைவு இந்த புத்தகத்தை முடித்ததும் வந்தது.
நடைமுறை வாழ்வியல் சார்ந்த அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் “வாழ்க்கைக்கான அறிவியல்" (Science of Living) எனும் தலைப்பில், இந்நூலை நிகர்மொழி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. மனநலத்திற்கு நமது சமூகம் இன்றளவும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
எல்லாம் போகப் போக சரியாப் போயிடும், பூஜை போட்டா சரியா போயிடும், கல்யாணம் செய்தால் சரியா போயிடும், tour போனால் சரியா போயிடும் என்று அலட்சியமாக தான் கையாளப்படுகிறது. மருத்துவ ஆலோசனை பெறுவதை அவமானமாகவும் கருதுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என்று ஒரு சிறப்பு உண்டு, அது அதற்கென்று எந்த சிறப்பும் இல்லை என்பதே! Constantine கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டை மாற்றியதும் ஏற்கனவே கொண்டாடி வந்த pagan பண்டிகைகளுக்கு கிறிஸ்துவ காரணம் குடுத்தார்.
இந்த டிசம்பர் மாதம் என்பது பனியில் வீட்டுக்குள் அடைந்த மக்கள் எதோ ஒரு காரணம் சொல்லி குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முயலும் மாதமாக இருந்தது. பல மதங்களில் டிசம்பர் மாதம் பண்டிகை மாதமாக இருக்கிறது.
Winter Solstice என்னும் ரோம பண்டிகை, Saturnalia (Roman கடவுள் Saturn ஐ சிறப்பிக்கும் பண்டிகை), Dies Natalis Solis Invicti (பனிக்கால துவக்கத்தை குறிக்கும் பண்டிகை) Yule (ஜெர்மனியர்களின் பனிக்கால பண்டிகை), Hanukkah (யூத பண்டிகை), Yalda (பெர்ஷிய பனிக்கால பண்டிகை)
“இந்தப் புராண, இதிகாச, வேதம் என்பவை, அவை எவ்வளவு செல்வாக்கு பெற்றவையாக இருந்தாலும், அது கண்டு மனம் தளராமல், மலைத்துவிடாமல், அவை பற்றிய உண்மைகளை ஆராய்ந்து,
அவை மனிதனால் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட பழைய கற்பனைகள், கதைகள், வாழ்க்கை முறைகள் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி, அவற்றின் மயக்கத்திலிருந்து அவர்களை விடுவித்து,
மனிதர்களாக்கிப் பார்ப்பதைவிட, அதற்குப் பாடுபடுவதைவிட, மனிதாபிமானம் படைத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இங்கு இருக்க முடியும்?”
சமகாலத்தில் நம் கண் முன்னாடி திடீரென்று முளைக்கும் சாமியார்களை நாம் எப்படி பகடி செய்து விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்குகிறோமோ அதே போல தான் இன்று establish ஆகி இருக்கும் பல மதங்களின் தோற்றுவிப்பாளர்களை
அன்றைய காலத்தில் அவர்களது சமகால மக்கள் கேலி செய்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். இன்று எப்படி பிடிங்க சார் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் என்று பொங்குகிறோமோ அதே போல தான் அன்றும் மக்கள் பொங்கி இருப்பார்கள்.
2000 வருடங்களுக்கு முன் நடந்ததை புனிதப்போராக பார்க்கும் நாம் இன்று நடப்பதை கலக்கப்போவது யாரு என்பது போல பார்த்து சிரித்து மகிழ்கிறோம்.
எல்லா சாமியார்களும் தொடக்கத்தில் ஒரு cult தான். அது யேசுவாக இருந்தாலும், நபிகளாக இருந்தாலும், ஜக்கியாக இருந்தாலும்.
Tiresias கண் இல்லாதவராக இருந்தாலும் ஞான கண் இருக்கும் ஒரு தீர்க்கதரிசி. மக்களின் எதிர்காலத்தை சொல்லக்கூடியவர். இவரது பார்வை போனதற்கும் ஞான கண் வந்ததற்கும் இரண்டு விதமான கதைகள் இருக்கின்றன.
1. ஒருமுறை Athena நிர்வாணமாக குளித்து கொண்டு இருந்ததை தெரியாமல் பார்த்துவிட்ட Tiresias இன் கண் மேல் Athena கையை வைத்து அவரது பார்வையை பறித்து விடுகிறாள். ஆனால் தான் தெரியாமல் செய்துவிட்டதாக Tiresias வருந்தவும் பரிதாபப்பட்டு அவருக்கு ஞான கண்ணை தருகிறாள்.
பொதுவாகவே கிரேக்கத்தில் தீர்க்கதரிசிகள், அறிவாளிகள், கவிஞர்கள் எல்லாம் பார்வை இல்லாதவர்களாகவே சித்தரிப்பது கிரேக்க வழக்கம்.
2. இன்னொரு கதையில் Hera விற்கும் Zeus க்கும் நடுவில் சண்டை நடந்தபோது Tiresias, Zeusக்கு ஆதரவாக இருந்ததால் Hera அவரது பார்வையை பறித்துவிட்டதாக கூறப்படுகிறத