1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரியவரும்.
2.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.
3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.
4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.
5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.
6.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும்.
7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்
8.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும்.
9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.
10.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.
12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காக்கை குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத் தோன்றும்.
13.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப் பிராவகிக்கும்.
14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.
15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.
16. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்புகொள்ளத் தோன்றும்.
17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.
18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.
19. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது இவ்வுலகை விட்டு மறைந்து போன மாமனிதர்களுடன் பேசிவிட்டுத் திரும்பிய உணர்வு ஏற்படும்..
20. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமக்கு பிடித்துவிட்டால் மற்றோரையும் அந்நூலை வாசிக்க வைக்கத் தூண்டும்.
21. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது அது தன்னை சேகரித்து சேகரித்து வீட்டில் ஒரு நூலகம் அமைக்கச் செய்துவிடும்.
22. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது அந்த வாசிப்பு அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பதிவாகப் போடவைக்கும்.
23.ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது அந்த வாசிப்புப் பழக்கத்தினால் பிறர்க்கு பரிசுகள் கொடுக்கும்பொழுது புத்தகமாக வாங்கிக் கொடுக்கவைக்கும்.
24. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது அது புதிய புத்தகங்கள் பற்றிய விளம்பரம் வரும்பொழுது அந்த விளம்பரம் மட்டும் கண்களுக்கு ஜூம்ஆகித் தோன்றி புத்தகங்களை வாங்கச் சொல்லி மனதைப் பிராண்டும்.
25. ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது அது எங்கு புத்தகக் கண்காட்சி நடந்தாலும் அந்த ஊருக்குப் பயணப்பட்டு அந்தப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வர வைத்துவிடும்.
ஒரு புத்தகத்தை வாசிக்கும்பொழுது.... அடப் போங்கப்பா..இன்னும் என்னென்னவோ செய்யும்..அவை எல்லாவற்றையும் இங்கு குறிப்பிடவும் முடியாது... நேரமும் பத்தாது.. எழுத எழுத போய்க்கொண்டே இருக்கும்.
இப்படி பல புத்தகங்களை வாசிக்கும் பொழுது அந்த வாசிப்பு உங்களை ஒரு எழுத்தாளனாகவும் மாற்றும்.
புத்தகம் ...அது மனிதகுலத்தின் அறிவுச்சொத்து.
நூல்களை நேசிப்போம்.. வாசிப்பை சுவாசிப்போம்...
வாசியுங்கள்
தினமும் பத்து பக்கங்களாவது...
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
செயலை விட ஒரு செயலுக்கு பின் உள்ள நோக்கம் என்பது முக்கியம். பம்மல் கே சம்பந்தம் ல கமல் சொல்ற மாதிரி "இந்த அம்மாவுக்கு பிராணிகள் மேல எல்லாம் அக்கறை இல்ல என் மேல காண்டு" என்பது போல ஒரு நபரின் நோக்கத்தை அறிந்து தான் எதிர் விளைவாற்ற முடியும்.
புர்கா என்பது என்ன நோக்கத்தில் அணிய சொல்லப்படுகிறது என்பதும், என்ன நோக்கத்தில் அணிய கூடாது என்று சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம்.
பெண்கள் உடல் ஒரு போகப்பொருள். மிட்டாய் போல, அதை மூடி வைக்காவிட்டால் எறும்பு மொய்துவிடும் என்ற நோக்கத்தில் அணிய சொல்லப்படுவது தான் புர்கா.
அந்த அடிப்படையில் புர்கா என்பது கடுமையாக எதிர்க்க படவேண்டிய ஒன்றே. மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் மட்டுமே அணியப்படும் ஒன்றாகவும், தன்னை இந்த மதத்தை சார்ந்த பெண் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் நோக்கில் சொல்லப்படுவதாலும்
அண்டார்டிகாவை சுற்றி இருப்பது Antarctic ocean என்று பொதுவாக சொல்லி வந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட கடலாக இருந்தது இல்லை அதன் பகுதிகளை பசிபிக் கடல், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் கடல் மூன்றுடனும் சேர்த்து தான் சொல்லுவார்கள்.
Antarctic ocean வெறும் பனி படலமா, அல்லது பசிபிக், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் கடலின் நீட்சியா என்று விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் நேஷனல் ஜியோகிராபிக் Antarctic ocean ஐ Southern Ocean என்ற பெயருடன் தனிப்பெரும் கடலாக அறிவித்துள்ளது.
நம்பிக்கைகள், உணர்வுகள் என்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பலமுறை நமது சொந்தங்களை நண்பர்களை நம்பி இருப்போம். அவன் நல்லவன் நேர்மையானவன் என்று மனதார நம்பி பணம் குடுத்து இருப்போம்.
ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிய பின் அடப்பாவி உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன் என்று புலம்புவோம். நீங்கள் நம்பியதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நல்லவர்கள் என்று நம்பியது உங்கள் மனப்பிராந்தி. உங்கள் நம்பிக்கைக்கும் நிஜத்திற்கும் சம்பந்தம் இல்லை.
நம்பிக்கை என்பது பகுத்தறிவின் எதிரி. ஒன்றில் மேல் உங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டால் அதை நீங்கள் ஆராய முற்படுவதில்லை. கடவுள், சோதிடம், ஆழ்மன சக்தி, பில்லி சூன்யம், ஆவி, இல்லுமினாட்டி, பிரபஞ்ச ஈர்ப்பு விதி, சக்திமான், பூமி தட்டை, கடற்கன்னி என்று மக்கள் பல விஷயங்களை நம்புகிறார்கள்
சமீப காலமாக பச்சை மஞ்சள் டப்பாக்களுடன் கட்டம் கட்டமாக பலர் post செய்வதை பார்த்து இருப்பீர்கள். என்ன அது?
Wordle எனப்படும் online game தான் அது. சில வாரங்களாக viral ஆகி அனைவராலும் விளையாடப்படுகிறது.
Josh Wardle, என்னும் software engineer உருவாக்கிய word game ஐ powerlanguage.co.uk/wordle/ என்னும் வலைத்தளத்தில் சென்று விளையாடலாம். எந்த கட்டணமும் இல்லை. எதையும் பதிவிறக்கம் செய்ய தேவையும் இல்லை. விளம்பரங்களும் இல்லை.
எளிமையான விளையாட்டு தான் ஒவ்வொரு நாளும் ஒரு ஆங்கில ரகசிய வார்த்தை இருக்கும் உலகம் முழுவதும் அனைவருக்கும் ஒரே வார்த்தை தான். அந்த ரகசிய வார்த்தையை கண்டுபிடிக்க 6 வாய்ப்புகள் தரப்படும். முதல் வார்த்தை நீங்கள் விருப்பப்பட்ட 5 எழுத்து கொண்ட ஒரு வார்த்தை.
அமெரிக்காவில் இன்று அதிக எண்ணிக்கையிலான மக்கள், அச்சிடப்பட்டப் புத்தகங்களைவிட டிஜிட்டல் புத்தகங்களை அதிகமாகப் படிக்கின்றனர்.
அமேசானின் ‘கின்டில்’ போன்ற கருவிகள், அவற்றைப் பயன்படுத்துவோர் படித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகத்தின் எந்தப் பகுதிகளை நீங்கள் விரைவாக வாசிக்கிறீர்கள், எவற்றை மெதுவாக வாசிக்கிறீர்கள், எந்தப் பக்கத்தில் ஓர் இடைவேளை எடுத்தீர்கள், எந்த வாக்கியத்துடன் அப்புத்தகத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டீர்கள் போன்ற எல்லாத் தகவல்களையும் கின்டிலால் திரட்ட முடியும்.
முகங்களை அடையாளம் காணும் உணரிகளையும் உயிரியளவு உணரிகளையும் சேர்த்துக் கின்டில் மேம்படுத்தப்படால், நீங்கள் வாசித்த ஒவ்வொரு வாக்கியமும் உங்கள் இதயத்துடிப்பு விகிதத்தின்மீதும் ரத்த அழுத்தத்தின்மீதும் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியது என்பதையும் கின்டில் அறிந்து கொள்ளும்.