செயலை விட ஒரு செயலுக்கு பின் உள்ள நோக்கம் என்பது முக்கியம். பம்மல் கே சம்பந்தம் ல கமல் சொல்ற மாதிரி "இந்த அம்மாவுக்கு பிராணிகள் மேல எல்லாம் அக்கறை இல்ல என் மேல காண்டு" என்பது போல ஒரு நபரின் நோக்கத்தை அறிந்து தான் எதிர் விளைவாற்ற முடியும்.
புர்கா என்பது என்ன நோக்கத்தில் அணிய சொல்லப்படுகிறது என்பதும், என்ன நோக்கத்தில் அணிய கூடாது என்று சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம்.
பெண்கள் உடல் ஒரு போகப்பொருள். மிட்டாய் போல, அதை மூடி வைக்காவிட்டால் எறும்பு மொய்துவிடும் என்ற நோக்கத்தில் அணிய சொல்லப்படுவது தான் புர்கா.
அந்த அடிப்படையில் புர்கா என்பது கடுமையாக எதிர்க்க படவேண்டிய ஒன்றே. மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் மட்டுமே அணியப்படும் ஒன்றாகவும், தன்னை இந்த மதத்தை சார்ந்த பெண் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் நோக்கில் சொல்லப்படுவதாலும்
அதை தடை செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் புர்கா அணியும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை project செய்கிறார்கள் அந்த மதத்தை சார்ந்தவர்களை வம்பிழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முற்போக்கு என்ற முகமூடியை அணிந்து கொண்டு புர்காவை எதிர்ப்பது ஏற்கப்படலாகாது.
படிக்கும் பெண்களை ஒரு அரசு கல்லூரி இந்த காரணத்தை முன்னிட்டு் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வதும் தவறு.
புர்கா என்பது வெறும் உடை தான். புடவை, சுடிதார், துப்பட்டா, போல அதுவும் ஒரு உடை. ஒரு ஃபேஷன்.
விருப்பப்பட்ட பெண்கள் (அது எந்த மதத்தை சார்ந்த பெண்களாக இருந்தாலும் சரி), விரும்பும் நேரத்தில், விருப்பப்பட்ட நிறத்தில் அணிந்து கொள்ளலாம் என்று கூறிவிட்டால் நானே இரண்டு புர்கா வாங்கி வைத்து கொள்வேன்.
2 வீலரில் அலுவலகம், கல்லூரி செல்லும் பெண்கள் தங்களது ஆடையை தூசியில் இருந்து பாதுகாக்க புர்கா அணிந்து கொள்ளலாம், அவசரத்துக்கு கடைக்கு போக அழுக்கு நைட்டி மேல் புர்கா அணிந்து சென்று வரலாம், train இல் இரவு நேர பயணத்தில் புடவை அல்லது சுடிதார் மேல் புர்கா அணிந்து படுத்து கொள்ளலாம்
ஆடை விலகும் என்ற பயம் இல்லை. இப்படி அவசரத்துக்கு அத்தியாவசத்துக்கு மட்டும் எல்லா தரப்பட்ட பெண்களும் அணியும் ஒரு ஆடையாக இருக்கலாம். ஆனால் அப்போது என்னவாகும்? துப்பட்டா போடுங்க தோழி மாதிரி எல்லா மதத்தை சார்ந்த ஆண்களும் புர்கா போடுங்க தோழி என்று ஆரம்பித்து விடுவார்கள். 🤦♀️🤦♀️
அடிப்படை மாறாமல் இங்கு எதுவும் மாறாது. எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
ஒரு மத பழக்கமாக/அடையாளமாக பெண் உடலை மறைத்தே ஆகவேண்டும் அப்படி செய்பவள் தான் புனிதமானவள் என்றெல்லாம் லேபிள் ஒட்டி சொல்லும்போது தான் எதிர்த்தாக வேண்டிய கட்டாயம் வருகிறது.
புர்கா அணிந்தே ஆகவேண்டும் என்று சொல்பவர்களும் கூட மாற்று மத பெண்கள் அல்லது இஸ்லாமிய பெண்களே கூட புர்கா அணிந்து தனது காதலன் கூட சென்றால் அந்த புர்காவின் புனிதம் கெட்டுப்போனதாக கூப்பாடு போடுகிறார்கள்.
நைட்டிக்கு மேல புர்கா போட்டு எல்லா இடத்துக்கும் பெண்கள் செல்கிறார்கள் என்று சலித்து கொள்கிறார்கள். புர்காவில் டிசைன் போடுகிறார்கள், புர்காவை இறுக்கமாக அணிகிறார்கள் என்றெல்லாம் புலம்புகிறார்கள்.
புர்கா அணியவேண்டும், இஸ்லாமிய பெண்கள் மட்டும் தான் அணிய வேண்டும் அப்படி அணிந்து கொண்டு இவர்கள் அனுமதிக்கப்பட்ட செயல்களை தான் செய்ய வேண்டும் என்பது அடிமைத்தனம் அன்றி வேறென்ன.
அதே சமயம் புர்கா அணியக்கூடாது என்று சொல்லும் மற்றொரு மதவாதிகள் அதே புர்காவை அவர்களது அரசியல் ஆதாயங்களுக்காக அணிந்து என்னென்ன வேலை பார்த்தார்கள் என்பதும் உலகறியும்.
கமல் சொல்வது போல தான் "இவர்களுக்கு பெண்கள் மேல் எல்லாம் அக்கறை இல்ல. அவர்களது அதிகாரத்தை நிரூபிக்க வேண்டும்."
இவர்கள் சொன்னால் 5 கணவனை மணமுடித்து பாஞ்சாலியாக இருக்க வேண்டும். இவர்கள் சொன்னால் தாசியாக இருந்து சேவை செய்ய வேண்டும். இவர்கள் சொன்னால் கற்பை நிரூபிக்க தீயில் குதிக்க வேண்டும், இவர்களுக்கு பெண்கள் பத்தினியாக இருப்பதோ, தாசியாக இருப்பதோ பிரச்னை அல்ல. இவர்கள் சொல்வதற்கேற்ப ஆடவேண்டும
புர்கா போடு என்றால் போடவேண்டும் போடாதே என்றால் கழட்டி விட வேண்டும்.
அதே போல புர்கா அணிவது பெண்கள் விருப்பம் அவர்கள் விரும்பினால் அணிந்து கொள்ளட்டும் என்றும் நாம் விட முடியாது.
உடன்கட்டை ஏறுவதும் எங்கள் விருப்பம் என்று சில பெண்கள் சொல்லத்தான் செய்தார்கள் அதற்காக அது அவர்கள் விருப்பம் என்று விட முடியுமா?
நடக்க தொடங்கிய காலத்தில் இருந்து 4 வயதிலிருந்தே பெண்ணுக்கு புர்கா போட்டு பழக்கிவிட்டு,
புர்கா போடுகின்ற பெண் தான் புனிதமானவள் என்கிற கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டு, அவர்கள் வீட்டில் அம்மா, பாட்டி, அத்தை எல்லாரும் புர்கா அணிந்து பார்த்தே வளர்ந்த பெண் 20 வயதில் இயல்பாகவே புர்காவை விரும்பத்தான் செய்வாள்.
20 வருடங்களாக புர்கா அணிந்து பழக்கப்பட்ட பெண்ணை திடீரென்று அணியாதே என்றால் அவளால் எப்படி முடியும்?
நாம் செய்ய வேண்டியது புர்காவின் நோக்கத்தை குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவர்களது பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே புர்கா அணிவிப்பதை தவிர்க்க செய்விப்பதுமே ஆகும
18 வயதில் ஒரு பெண் விரும்பினால் புர்காவை தேர்தெடுத்து கொள்ளட்டும் என்றால் எந்த பெண்ணும் தேர்ந்தெடுக்க போவதில்லை. அதுவும் நம்ம ஊர் வெயிலுக்கு கருப்பு நிறத்தில். அதன் புனிதத்தன்மையை உடைப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு புர்காவிற்கு போட்டியாக நான் காவி துண்டு அணிந்து வருகிறேன், காவி தாவணி அணிந்து வருகிறேன் என்பது அவன் பாலிடால் குடித்தால் நான் பினாயில் குடிப்பேன் என்பது போல இருக்கிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அண்டார்டிகாவை சுற்றி இருப்பது Antarctic ocean என்று பொதுவாக சொல்லி வந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட கடலாக இருந்தது இல்லை அதன் பகுதிகளை பசிபிக் கடல், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் கடல் மூன்றுடனும் சேர்த்து தான் சொல்லுவார்கள்.
Antarctic ocean வெறும் பனி படலமா, அல்லது பசிபிக், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் கடலின் நீட்சியா என்று விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் நேஷனல் ஜியோகிராபிக் Antarctic ocean ஐ Southern Ocean என்ற பெயருடன் தனிப்பெரும் கடலாக அறிவித்துள்ளது.
நம்பிக்கைகள், உணர்வுகள் என்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பலமுறை நமது சொந்தங்களை நண்பர்களை நம்பி இருப்போம். அவன் நல்லவன் நேர்மையானவன் என்று மனதார நம்பி பணம் குடுத்து இருப்போம்.
ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிய பின் அடப்பாவி உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன் என்று புலம்புவோம். நீங்கள் நம்பியதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நல்லவர்கள் என்று நம்பியது உங்கள் மனப்பிராந்தி. உங்கள் நம்பிக்கைக்கும் நிஜத்திற்கும் சம்பந்தம் இல்லை.
நம்பிக்கை என்பது பகுத்தறிவின் எதிரி. ஒன்றில் மேல் உங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டால் அதை நீங்கள் ஆராய முற்படுவதில்லை. கடவுள், சோதிடம், ஆழ்மன சக்தி, பில்லி சூன்யம், ஆவி, இல்லுமினாட்டி, பிரபஞ்ச ஈர்ப்பு விதி, சக்திமான், பூமி தட்டை, கடற்கன்னி என்று மக்கள் பல விஷயங்களை நம்புகிறார்கள்
சமீப காலமாக பச்சை மஞ்சள் டப்பாக்களுடன் கட்டம் கட்டமாக பலர் post செய்வதை பார்த்து இருப்பீர்கள். என்ன அது?
Wordle எனப்படும் online game தான் அது. சில வாரங்களாக viral ஆகி அனைவராலும் விளையாடப்படுகிறது.
Josh Wardle, என்னும் software engineer உருவாக்கிய word game ஐ powerlanguage.co.uk/wordle/ என்னும் வலைத்தளத்தில் சென்று விளையாடலாம். எந்த கட்டணமும் இல்லை. எதையும் பதிவிறக்கம் செய்ய தேவையும் இல்லை. விளம்பரங்களும் இல்லை.
எளிமையான விளையாட்டு தான் ஒவ்வொரு நாளும் ஒரு ஆங்கில ரகசிய வார்த்தை இருக்கும் உலகம் முழுவதும் அனைவருக்கும் ஒரே வார்த்தை தான். அந்த ரகசிய வார்த்தையை கண்டுபிடிக்க 6 வாய்ப்புகள் தரப்படும். முதல் வார்த்தை நீங்கள் விருப்பப்பட்ட 5 எழுத்து கொண்ட ஒரு வார்த்தை.
அமெரிக்காவில் இன்று அதிக எண்ணிக்கையிலான மக்கள், அச்சிடப்பட்டப் புத்தகங்களைவிட டிஜிட்டல் புத்தகங்களை அதிகமாகப் படிக்கின்றனர்.
அமேசானின் ‘கின்டில்’ போன்ற கருவிகள், அவற்றைப் பயன்படுத்துவோர் படித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகத்தின் எந்தப் பகுதிகளை நீங்கள் விரைவாக வாசிக்கிறீர்கள், எவற்றை மெதுவாக வாசிக்கிறீர்கள், எந்தப் பக்கத்தில் ஓர் இடைவேளை எடுத்தீர்கள், எந்த வாக்கியத்துடன் அப்புத்தகத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டீர்கள் போன்ற எல்லாத் தகவல்களையும் கின்டிலால் திரட்ட முடியும்.
முகங்களை அடையாளம் காணும் உணரிகளையும் உயிரியளவு உணரிகளையும் சேர்த்துக் கின்டில் மேம்படுத்தப்படால், நீங்கள் வாசித்த ஒவ்வொரு வாக்கியமும் உங்கள் இதயத்துடிப்பு விகிதத்தின்மீதும் ரத்த அழுத்தத்தின்மீதும் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியது என்பதையும் கின்டில் அறிந்து கொள்ளும்.