*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*
கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நாவல் பொடி
தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி*
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.
*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும்,
ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.
*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல்,
வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும்,
சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு,தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி*
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர்*
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி*
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி*
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி*
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி*
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி*
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாழை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து 3 நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அறிவோம்கடை

அறிவோம்கடை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @arivomkadaioffi

Feb 4
அய்யன் உணவகம் - Ayyan Gramiya unavagam , Komarpalayam.
Location : goo.gl/maps/vAjkTwQio…
Contact : 9865231331
Time : 11am to 11pm

Landmark : கொங்கு வேளாளர் கல்யாண மண்டபம் எதிரில் அமைத்துள்ளது Image
கோவை சேலம் பைபாஸ் ரோட் ல தான் இருக்கு இந்த கடை. இந்த கடையின் சிறப்பு என்னனா ? நாட்டுக்கோழி ( சண்டைகோழி ) மற்றும் வெள்ளாட்டு கறி அதுவும் எந்த மசாலா வும் இல்லாமல் காட்டு வறுவல் னு சொல்ற முறையில் சமைத்து தராங்க .
இன்னொரு முக்கிய விஷயம் , இங்க மெனுவை நீங்க customise செஞ்சுக்கலாம் . Image
இவங்க நாட்டு சின்ன வெங்காயம் , சுத்தமான மரசெக்கு எண்ணை தான் சமையலுக்கு பயன்படுத்தறாங்க .
இவங்க சமையல் செய்யற இடத்தை லைவ் ஆக பார்க்கலாம். அதுலயே தெரிஞ்சுகலாம் இவங்க எந்த அளவு சுத்தமா சமைப்பாங்கனு .
சரி இவங்க மெனு என்ன எல்லாம் இருக்கு னு பார்க்கலாம் . Image
Read 5 tweets
Feb 1
இந்த Glass Bridge கேரளா மாநிலத்தில் உள்ள கண்டி , வயநாட்டில் உள்ளது . இது ஒரு Private Property ல தான் இருக்கு. இதற்கு கட்டணம் Rs.200(Above 4 years) . இந்த Glass Bridge க்கு ரொம்ப எதிர்பார்த்து செல்ல வேண்டாம் . ஆனால் இங்க போகற இடம் செமையா இருக்கும்.
நீங்கள் மலையேற்றம் அல்லது ஆஃப்-ரோடு திறன் கொண்ட வாகனம் மூலம் இங்கு செல்லலாம். Rs.1500 க்கு ஜீப் வசதி இருக்கு .
மாலை 6 மணிக்கு மேல இல்லை . எனவே ப்ளான் செய்யறவங்க கவனத்தில் வைத்துக் கொள்ளவும் .
சரி வயநாடு போனால் கண்டிப்பா பார்க்க வேண்டிய இடங்களை இங்க பார்க்கலாம் .

CHEMBRA PEAK :
வயநாடு போனால் இங்க போட்டோ எடுக்காமல் யாரும் வர மாட்டாங்க 💖
கல்பெட்டாவிற்கு தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில், மேப்பாடி நகரத்திற்கு அருகில், வயநாட்டின் மிக உயரமான உச்சியில் உள்ளது.செம spot
Read 10 tweets
Jan 30
#அறிவோம்கடை:
Kanthalloor - The Apple Valley of Kerala
இங்க mud cottage ல தங்குவது அவ்ளோ peaceful ah இருக்கும்💖 இவங்க கிட்டையே tent stay இருக்கு, off road ஜீப் ride arrange செஞ்சு அருவிக்கு எல்லாம் கூட்டிட்டு போவாங்க👌 camp fire, வீட்டு முறை சமையல் னு சகலமும் அனுபவிக்கலாம்🤩 Image
*Kanthalloor Jungle Resort

*Package Include *

🚖 OFF ROAD JEEP RIDE TO THE COTTAGE

🏕️1 NIGHT MUD COTTAGE
(3/4 share)

🍴DINNER

🍜BREAKFAST

🔥CAMPFIRE

MIN 15 PERSONS
1400 PER PERSON

MIN 08 PERSONS
1500 PER PERSON

MIN 04 PERSONS
1600 PER PERSON

50% charge :Below 10 yrs ImageImageImageImage
Call for Booking : 9846956446 / 9207871608
Kanthalloor Jungle Resort By Skybz

skybzresorts.com

இவங்க கிட்டயே மூனார்,கொச்சின், வயநாடு னு எல்லா இடத்துலையும் private property வெச்சிருக்காங்க. உங்களுக்கு எங்க சவுகரியமோ அங்க புக் செஞ்சுக்கலாம். விலையும் நிச்சயம் வேறுபடும். ImageImageImageImage
Read 4 tweets
Jan 27
#அறிவோம்கடை : UK Kitchen, Ramanathapuram, Coimbatore.
இவங்க கிட்ட நிறைய முறை வாங்கி இருக்கோம். இப்போ சமீபத்தில் வாங்குன பனை ஓலை சிக்கன் பிரியாணி காம்போ வீடியோ தான் இது. வீடியோ பாருங்க...கீழ இன்னும் விரிவா எழுதறேன்.
சிக்கன் பிரியாணி:
Serves 5 னு போட்டிருக்காங்க ஆனா அளவு அவ்ளோ இல்லை.. 4 பேர் நல்லா சாப்பிடலாம்.
பனை ஓலையில் தருவது மிக நல்ல முயற்சி👌 கூடவே அவரை விதைகள் இலவசமாக கொடுத்தார்கள். அருமை👌
Pumpkin Halwa :
இவங்க கொடுக்கற ஸ்வீட் எப்பவும் ரொம்ப சூப்பரா இருக்கும்.. ஆனா இந்த முறை சுவை கொஞ்சம் குறைவு. ஆனா ஸ்வீட் texture பார்க்கவே செம tempting ஆக இருந்தது👌
Read 6 tweets
Jan 26
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்🇮🇳

அண்ணன் பெயர் அமனுல்லா..
ஆற்காடு சாலையில் இருந்து ஸ்ரீதேவி குப்பம் சாலை நுழையும் வழியில் முகப்பிலே புட்டு கடை வைத்திருக்கிறார்..

கடை என்றால் திறந்தவெளியும் ஒரு மேசையும் மட்டும்தான்.
அதற்கு வாடகையும் உண்டு..

ஒருநாள் அந்த வழியாக வந்தபோது என் மனைவிதான் அந்த கடையை பார்த்துவிட்டு ,
"புட்டு சாப்பிடலாமா பாலா.." என்று கேட்டார்.

"சரி சாப்பிட்டுதான் பார்ப்போம் " என்று முடிவு செய்து, கூட்டத்திற்கு நடுவில் புகுந்து புட்டும் பருத்திப்பாலும் வாங்கி சாப்பிட்டோம்..
அப்படி ஒரு அற்புதமான ருசி.. அதன்பிறகு அந்த வழியாக எப்போது போனாலும் வீட்டுக்கு புட்டு வாங்கிச் செல்வது வழக்கம்..

இங்கு சொல்ல வந்த விசயம் இதுவல்ல..

நேற்றும் அந்த கடையில் புட்டு வாங்கினோம்.. வழக்கமாக கூட்டம் இருக்கும்.. நேற்று கொஞ்சம் நெரிசல் இல்லாமல் இருந்தது..

அதனால்
Read 10 tweets
Aug 22, 2021
#அறிவோம்கடை - #CocoLagoon By Great Mount , Pollachi
நம்ம டீசர் லையே சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள்👌
இது பொள்ளாச்சியில் இருந்து 10km ல இருக்கு. மிக பிரீமியம் ரிசார்ட் இது. சரி இங்க தங்க என்ன விலை, உணவு வகைகள், வசதிகள் என்ன என்ன இருக்கு? எல்லாத்தையும் பார்க்கலாம் ImageImageImageImage
இங்க இருக்கும் ரூம் மற்றும் அதன் விலை (Per Night for 2 persons) :
✴️Executive Deluxe (Free Breakfast) - Rs.7499 and Rs.8899(With B.F & Buffet Dinner) and Rs.10,299(B.F,Lunch & Dinner)
✴️Royal Suite - Rs.11k to Rs 13,800
✴️Presidential Suite - Rs.11k to Rs.13,800 ImageImage
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா...Royal Suite ல் தான் இந்த படுத்துட்டு குளிர்க்கற டப் option இருக்கு🛀
✴️ Pool Villa - 18k starting.

ரூம் ல 24x7 AC பயன் படுத்திக்கலாம்.. Tv , heater, wifi இப்படி காமன் ஆக எல்லா ரிசார்ட் லையும் இருக்கற வசதியும் இருக்கு. ImageImage
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(