கேரளால இருக்க "கட்டாடி TMT ஸ்டீல் கம்பெனி" யோட ஓனர் தான் ஜான் கட்டாடி (மோகன்லால்), அவரோட மனைவி அன்னம்மா கட்டாடி (மீனா), அவரோட பையன் ஈஷோ ஜான் கட்டாடி (பிரித்வி ராஜ்). இவங்க ஒரு சந்தோசமான குடும்பமா இருக்காங்க.
ஜான் கட்டாடியோட நெருங்கிய நண்பர் தான் குரியன் மலியேக்கள் (லாலு அலெக்ஸ்) இவரு ஒரு விளம்பர கம்பெனி நடத்திட்டு வர்றாரு, இவரோட மனைவி எல்சி குரியன் (கனிகா), இவரோட பொண்ணு அன்னா (கல்யாணி பிரியதர்ஷன்). இவங்களும் ஒரு சந்தோசமான குடும்பமா தான் வாழ்ந்து வர்றாங்க.
குரியன் தன்னோட பொண்ணுக்கு
கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லிட்டே இருக்காரு, அதுக்கு அவரு பொண்ணு அன்னா எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லி மறுத்துட்டே இருக்காங்க.
இவங்க ரெண்டு குடும்பமும் இவங்க ஃபேமிலி டாக்டர் பையனோட கல்யாணத்துக்கு போறாங்க. அங்க வச்சி அன்னாவ பாத்ததும் ஜான் கட்டாடி மனைவி அன்னாக்கு
புடிச்சி போயிடுது.
இன்னொரு பக்கம் குரியனுக்கும் ஈஷோவ பார்த்ததும் புடிச்சி போக நீயும் பெங்களூர்ல விளம்பர கம்பெனில தானே வேலை பாக்குற பேசாம என் கம்பெனிக்கு வேலைக்கு வந்துருன்னு கேட்க, அதுக்கு ஈஷோ நக்கலா பதில் சொல்லி கிளம்ப குரியனுக்கு பிடிக்காம போக, ஈஷோ மேல ஈகோவா இருக்காரு.
இன்னொரு பக்கம் ஈஷோவும், அன்னாவும் பேசிக்கிறாங்க. அப்போ அன்னாவும் பெங்களூர்ல IT கம்பெனில வேலை பாக்குறது தெரிய வருது. அப்போ ஜான் கட்டாடி இடைல வந்து ஒரே ஊர்ல இருக்கீங்க ஒருத்தருக்கொருத்தர் தெரியாதானு சொல்லி நம்பர் ஷேர் பண்ணிக்கோங்கனு சொல்றாரு.
அப்பறம் ஈஷோவும், அன்னாவும் லீவ்
முடிஞ்சு பெங்களூர்க்கு கெலம்பிடுறாங்க.
இங்க ஒருத்தருக்கொருத்தர் தெரியாத மாதிரி இருந்தவங்க, அங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல லிவிங் ரிலேஷன்ஷிப்ல ஒன்னா தங்கி இருக்காங்க. ரெண்டு பேரும் வேலைக்கு போக வீடு திரும்பனு சந்தோசமா வாழ்க்கை போயிட்டு இருக்க, ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் ஹாஸ்பிடல்
போக வேண்டி வருது.
அப்போதான் அன்னா மாசமா இருக்காங்கனும், எட்டு வாரம் ஆச்சுனும் தெரிய வருது. நாங்க புருஷன் பொண்டாட்டி இல்ல, லிவிங்ல இருக்கோம்னு டாக்டர் கிட்ட சொல்ல. ஒன்னும் அவசரம் இல்ல பொறுமையா யோசிச்சி முடிவு எடுங்க, அதே சமயம் குழந்தையும் ரொம்ப அவசியம் சொல்லி அனுப்புறாங்க.
ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னு குழப்பம் வர, வழக்கமான ஆண்கள் மாதிரியே குழந்தையை களைக்க சொல்றாரு ஈஷோ. இதுவும் ஒரு உயிர் தானே அதை எப்டி களைக்கிறதுனு அன்னா சொல்ல உன் இஷ்டம்னு சொல்லி கோவமா வேலைக்கு கிலம்புறாரு ஈஷோ.
அன்னைக்கு நைட் வீட்டுக்கு வந்ததும், ரெண்டு பேரும் பேசிட்டு
இருக்கும் போது. ஜான் கட்டாடி கால் பண்ணி ஒரு குழப்பமான மனநிலையில, ஒரு மாதிரியா சோகமா பேசுறாரு. நீ காலைல ஊருக்கு வா முக்கியாம பேசணும்னு சொல்லி போனை வைக்கிறாரு.
உடனே ஈஷோ நீ எங்க அப்பா கிட்ட இதை பத்தி பேசுனியானு கேட்க, நா யார் கிட்டயும் சொல்லல நம்மள தவிர வேற யாருக்கும் தெரியாதுன்னு
சொல்றாங்க அன்னா.
இவரும் குழப்பத்தோட ஊருக்கு போய் இறங்க, அங்க பஸ்டான்ட்லயே வண்டியோட நிக்கிறாரு ஜான் கட்டாடி. ஈஷோக்கு ஒன்னுமே புரியல, வீட்டுக்கு போனா அங்க அம்மாவும் அப்பா மாதிரியே சோகமா குழப்பமா இருக்காங்க.
இவங்களுக்கு மத்தியில நம்ம விஷயத்தை எப்டி சொல்றதுன்னு ஏற்கனவே குழப்பமா
இருக்க ஈஷோக்கு, இங்க நடக்குறது இன்னும் குழப்பாமா இருக்க. அப்போ அவங்க அப்பா கூப்ட்டு ஒரு விஷயம் சொல்ல ஈஷோ ஒரே ஷாக்.
அப்படி ஜான் கட்டாடி என்ன சொன்னாரு? ஈஷோ தங்களோட விஷயத்தை எப்டி சொன்னாரு? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்றத படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க.
இதுக்கு அப்பறம்தா படம் 😍😂👌🏼
மோகன்லால் அந்த முகத்துல புன்னகையோட, வெட்கத்தோட, ஒவ்வொரு விஷத்தையும் கூலா ஹேண்டில் பண்ணும் போது 😍👌🏼💓 மனுஷன் நம்ம கண்ணுகுள்ளையே நிக்கிறாரு. மீனாவோட ரொமான்ஸ் சீன் ஆகட்டும், பிரித்வி ராஜோட அப்பப்போ பண்ற கேலி கிண்டல், சென்டிமென்ட் ஆகட்டும் மனுஷன் உண்மையாவே கம்ப்ளீட் ஆக்டர் தான் 💥.
கல்யாணி பிரியதர்ஷன் 😍💓 காதல், காமெடி, சென்டிமென்ட்னு இவங்களும் அந்த முகத்துல பல எக்ஸ்பிரஸன் கொடுக்கும் போது அவ்ளோ க்யூட்டா அழகா இருக்காங்க 😍💓👌🏼.
பிரித்வி ராஜ், லாலு அலெக்ஸ், கனிகானு படத்துல வர்ற எல்லோரும் ரொம்பவே நல்லா நடிச்சிருக்காங்க. ஜான் கட்டாடியோட அம்மாவா வர்ற மல்லிகா
மொத்தத்துல குடும்பத்தோட பார்க்க கூடிய ஒரு சிறந்த ஃபீல் குட் காமெடி மூவி தான் இந்த Bro Daddy 😇.
⚠️ படத்தின் இணைப்பு வேண்டும் என்பவர்கள் எனை ஃபாலோ செய்து ரிப்ளை செய்யவும், ஆல்ரெடி நமது சேனலில் இருப்பவர்கள் இந்த படத்தின் இணைப்பை நமது சேனலில் பின் லிஸ்ட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ⚠️
படத்தோட ரிவ்யூ போற முன்னாடி படம் பாக்கதவங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இது ஒரு டைம் லூப் திரைப்படம் என்பதால், டைம் லூப் என்றால் என்ன என்பதை நன்கு தெரிந்துக்கொண்டு அதன் பிறகு படம் பாருங்கள். டைம் லூப் பற்றிய புரிதல்
இல்லாமல் படத்திற்கு சென்று விட்டு, வந்த காட்சியே வருகிறது நல்லாவே இல்லை என்று ஒரு நல்ல படத்தை பற்றி தவறான விமர்சனம் செய்திட வேண்டாம் 🙏🏼.
#Maanaadu
நண்பரோட காதலை சேர்த்து வைப்பதற்காக துபாயில் இருந்து இந்தியா வருகிறார் #STR , காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் வேளையில்
எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, இறந்தும் விடுகிறார்கள். அங்கிருந்து துவங்குகிறது நாயகன் #STR க்கு டைம் லூப் ♾️. அது ஏன் நடக்கிறது? இவர்கள் சந்தித்த பிரச்சனை என்ன? நாயகனுக்கு ஏன் டைம் லூப் உருவாகிறது? இறுதியில் அந்த டைம் லூப்பில் இருந்து எப்படி
எல்லோரும் அரைச்சு ஓஞ்ச மா(ரிவ்யூ)வ தான் நா இன்னைக்கு அரைக்கப் போறேன், ஏன்னா நா இப்போ தான் பாத்து முடிச்சேன் அதான் 😌.
சின்ன பசங்க விளாட்ற விளையாட்ட பெரியவங்களோட, பிரைஸ் மணி வச்சி, கொஞ்சம் சீரியஸா
விளையாண்டா எப்டி இருக்கும்?! அதான் இந்த #SquidGame .
பணத்தேவை இருக்குற கொஞ்சம் நடுத்தர மக்களா பாத்து டார்கெட் பண்ணி இந்த கேம் குள்ள இழுக்குறாங்க. அப்படி அவங்கள இந்த கேம் குள்ள இழுக்க அதுக்கு ஒரு சின்ன கேம வச்சி அதுல ஜெய்ச்சா இவளோ பணம் தர்றேன்னு சொல்லி ஆரம்பிக்கிறாங்க.
அவங்களும் பணத்தேவைக்காக ஒத்துக்கிட்டு விளாட்றாங்க, அதுல ஜெய்ச்சி முடிச்சோன இந்த மாதிரி நெறைய விளையாட்டு இருக்கு அதுல நீங்க கலந்துக்கிட்டு ஜெயிச்சா இந்த மாதிரி நெறைய காசு சம்பாதிக்கலாம்ன்னு சொல்றாங்க. ஒத்துக்க மறுத்தோன ஒரு கார்ட் கைல கொடுத்து நீங்க மனசு மாறுனா இந்த நம்பர்க்கு கால்
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
நாயகி Jennifer Hills ஒரு எழுத்தாளர், தனது அடுத்த புத்தகத்தை எழுதுவதற்காக தனிமையை நாடி நகரத்தில் இருந்து வெளியே இருக்கும் கிராமம் ஒன்றில் வாடகை வீட்டிற்க்கு வருகிறார்.
வரும் வழியில் பெட்ரோல் பங்க்கில் இருக்கும் சில வாலிபர்கள் இவளை கிண்டல் செய்ய முயற்சிக்க அவர்களை மொக்கை செய்து
விட்டு வருகிறாள்.
முதல் நாள் தன்னை யாரோ கவனிப்பதாக உணர்கிறார், பின் அடுத்த நாளும் அதே போல் நடக்க வெளியே சென்று பார்க்கையில் யாரும் இல்லை. மீண்டும் வீட்டில் வந்து பார்த்தால் பங்கில் பார்த்த அந்த வாலிபர்கள் இவள் வீட்டின் உள்ளே இருக்க, இவளிடம் சில்மிஷம் செய்கிறார்கள். ஆனால்
(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)
9 கதைகள், 9 உணர்ச்சிகள், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்று எதிர்பார்ப்பில் எகிற வைத்த #Navarasa எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? எத்தனை ரசங்கள் நம்மை ஈர்த்தது!? வாருங்கள் பார்ப்போம்.
கதையின் துவக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது, கொலை செய்தவன் எதிரியா? அந்த கொலையை நடக்க விட்டு அமைதியாக இருந்தவர் எதிரியா? என்பதை நம் பார்வையில் விட்டு விடுகின்றனர். தான் செய்தது தவறு என்பதை இருவருமே உணர்ந்தபோது அங்கு எதிரி யாரும் இல்லை என்பது என் கருத்து