எங்க வீட்டில் மாமா - அத்தை ன்னு அறிமுகம் செய்யப்பட்டவர்களில் பலர் கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்களே!
வேளாங்கண்ணி திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் அப்பா, ரெட்கிராஸ் சார்பில் சேவை செய்திருக்கிறார்.
வேளாங்கண்ணி செல்லும் போதெல்லாம் நாகூர் தர்கா செல்லாமல் நாங்கள் திரும்பியதில்லை!
++
அப்பாவின் பிறந்தநாளுக்கு அவர் அழைக்கும் பல நண்பர்களில் அனைத்து மதத்தவர்களும் இருப்பார்கள். தினமும் திருநீர் இடாமல் வெளியே செல்லாத அப்பா, தன் பிறந்தநாளுக்கு பாஸ்டரை வைத்து ஜெபம் செய்வார்!
ரம்ஜான், பக்ரீத்துக்கு பிரியாணி மட்டுமல்ல, ++
பொங்கலுக்கு கரும்பும் ராஜகிரி பாய் வீட்டில் இருந்து வரும்!
எங்கள் வீட்டு சுக துக்கங்களை வெளிப்படையாக அப்பாவும் அம்மாவும் பகிர்ந்ததில் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் உண்டு. அவர்கள் வீட்டு பிரச்சனைகளையும் உரிமையாய் பேசும் இடமாக எங்கள் வீடு இருந்தது.
++
அண்ணன் என்றும் அண்ணி என்றும் அப்பா அம்மாவை வாஞ்சையாக அழைத்த அத்தைகளின், மாமாக்களின் குரல்கள் இன்னமும் கேட்கிறது!
நாங்கள் விருந்தாளிகளாக மகிழ்ந்துண்ட வீடுகள் அதிகமாக இஸ்லாமிய, கிருஸ்துவ வீடுகளாகவே இருந்தன!
++
எங்கள் வீட்டை அம்மா பார்த்துப்பார்த்து கட்டியபோது, பக்கபலமாக இருந்தவர் டொமினிக் அங்கிள்!
அப்பாவின் ஆரம்ப கால நண்பர் பொதக்குடி அப்துல்லா. இவர்களின் பெயர்களை எல்லாம் எங்கள் வாழ்வில் இருந்து பிரிக்கவே முடியாது!
++
என்னுடைய கல்லூரி காலத்தில் என் வீட்டில் இருந்ததை விட என் நண்பன் முகமது ஃபாலே வீட்டில் இருந்தது தான் அதிகம். அவன் வீட்டில் எங்களுக்கு கிடைத்த விருந்தோம்பலை சொற்களில் சொல்ல முடியாது.
எங்கள் வாழ்வில் இரண்டற கலந்தவர்கள் இவர்கள்.++
நாங்கள் இவர்களை வேறொருவராக பார்த்தது கிடையாது.பார்க்கவும் மாட்டோம். ஏனெனில் நாங்கள் தமிழர்கள்!
நாங்கள் சாதியோ, மதமோ பார்த்துப் பழகுவதில்லை. இங்கே அனைவரையும் இணைப்பது அன்பும், நட்பும், மனிதமும் மட்டுமே!
இது தான் தமிழ்நாடு!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காமராசர் ஆட்சியில் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொல்வார்.
எப்படியும் தோற்றுவிடுவீர்கள். எதற்கு வாக்கெடுப்பு என்று ஆதிக்க மமதையில் ஏளனமாக கேட்பார்கள்.
அதற்கு பேரறிஞர் அண்ணா பதில் சொல்வார்.++
தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை யார் யார் எல்லாம் எதிர்த்தார்கள் என்பதை வரலாற்றில் பதிய வேண்டும் என்பதற்காகவே இந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பார். அண்ணாவின் அந்த சட்டமன்ற உரை வரலாற்று சிறப்புமிக்கது.
அதே, பேரறிஞர் அண்ணா, 1967 ல் முதலமைச்சராக பதவியேற்ற பின்,++
தாய் திருநாட்டிற்கு, தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற சட்டத்தை நிறைவேற்றினார்.
அன்று, பேரறிஞர் அண்ணா செய்த மற்றொரு சம்பவம்.
எந்த காங்கிரஸ்காரர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத்தை எதிர்த்தார்களோ, அவர்களையும் சேர்த்து, தீர்மானத்தின் முடிவில்..
தமிழ்நாட்டில் அறிவார்ந்த சங்கி என்று யாராவது இருக்க முடியுமா?
சங்கி என்றாலே முட்டாள்கள் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், அப்படி நினைப்பது தான் முட்டாள்தனம். சங்கிகளில் பல்வேறு அடுக்குகள் இருக்கின்றன. மேல் அடுக்கில் இருப்பவர்கள் முட்டாள்கள் இல்லை. ++
அவர்கள் அறிவு தளத்தில் வேலை செய்பவர்கள்.வரலாற்றையே மாற்றும் அளவுக்கு ஆற்றல் படைத்தவர்கள். கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி மையங்கள் என அறிவுத் தளம்,பண்பாட்டு தளத்தில் இவர்களது ஊடுறுவல் அதிகம்.இவர்களின் இன்னொரு பிரிவு தான் இலக்கியத்துறையிலும் இருக்கிறது.இது சங்கிகளின் மேலடுக்கு.
++
அடுத்த அடுக்கில் இருப்பவர்கள், காலாட்படையினர். அதாவது foot soldiers. இவர்களின் வேலை முற்றிலும் வேறானது. சாதி, மத, மொழி, இன அடையாள பிரச்சனைகளை கிளப்பி நம்மை பிசியாக வைத்திருப்பவர்கள் இவர்கள் தான். நாம் அதிகமாக பார்ப்பது இவர்களாக தான் இருக்கும். ++
பெரியார் நாத்திகரா?
பெரியார் பிரிவினைவாதியா?
பெரியார் சாதி ஒழிப்புப் போராளியா?
பெரியார் பார்ப் பனரை எதிர்த்தவரா?
பெரியார் ஓட்டரசியலை எதிர்த்தவரா?
பெரியார் சட்டத்தை எரித்தவரா?
பெரியார் பெண்ணுரிமை போராளியா?
பெரியார் மொழிப்பற்றை எதிர்த்தவரா?
பெரியார் தமிழ் தேசிய வாதியா?
++
பெரியார் எல்லாரும் போராட்ட வேண்டும் என்று சொன்னாரா?
இந்த கேள்விகளுக்கு இரண்டு விதமாக பதில் அளிக்கலாம். “ஆம்” என்று சொல்லலாம்.“ஆம், ஆனால்...” என்று சொல்லலாம். அதாவது, அவரை இதில் எந்த வார்த்தை சட்டகத்திற்குள்ளும் பொருத்த முடியாது.++
நீங்கள் பொருத்த முயற்சித்தால் திமிரி அதில் இருந்து வெளி வந்து விடுவார்.
அவர் நாத்திகர், ஆனால் மனிதநேயர்.
அவர் பார் பன பனியா ஆதிக்க இந்தியாவின் எதிர்ப்பாளர், ஆனால் திராவிட இந்தியாவின் ஆதரவாளர்.
அவர் சாதி ஒழிப்பு போராளி, ஆனால் சாதி அறியாமையில் உழன்ற மக்களை வெறுத்தவரில்லை.
++
ஸ்பானிய மொழியை மீண்டும் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இன்றுடன் 150 நாட்கள் நிறைவடைந்திருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு பாடமாவது முடிக்க வேண்டும். அதற்கு பத்து நிமிடங்கள் தேவைப்படலாம்.
ஆனால், நான் கற்றுக்கொள்ளும் Duolingo செயலி, கற்றல் முறையை மிக எளிமையாகவும், ++
ஆர்வமூட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட ஒரு செயலி என்பதால் எனது கற்றல் வேகமும் நன்றாக இருக்கிறது. It’s an interesting, engaging and playful learning app. இந்த முறையில் நாமும் ஒரு கற்றல் செயலியை உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பு எனக்கு உருவானது.
++
இந்த செயலியில் கற்க ஆரம்பித்ததும் ஸ்பானிய மொழியில் உள்ள சொற்களும், சொற்றொடர்களும், உச்சரிப்பு முறையும் வேகமாக கற்க முடிந்தது. இதன் மூலம் அடுத்தக்கட்டமாக எளிய ஸ்பானிய புத்தகங்களை வாசிக்கவும் முயற்சிக்கிறேன்.++
புதிய Omicron variant கொரோனா வைரஸ் குறித்து உலகநாடுகளின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள்..
உலகை அச்சுறுத்தி வந்த கொரொனா வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய variant டிற்கு Omicron என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
++
இந்த வைரஸை தென் ஆப்ரிக்காவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள்.
தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த வைரஸ் அதற்கு முன்பே ஐரோப்பாவில் (நெதர்லாண்ட்டில்) பரவி இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
++
இந்த ஒமிக்கிரான் வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம்,வேகமாக பரவக்கூடிய நோய் என்றும், இது உலகம் முழுவதும் பரவக்கூடிய வாய்ப்புடைய வைரஸ் என்றும் எச்சரித்தது.கொரோனா காலம் முடிந்துவிட்டது என்று பலரும் கருதிய வேளையில், இன்னும் முடியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.++
நேற்று பெரியாரின் கல்விச் சிந்தனைகள் புத்தக அறிமுகத்தில் தோழர் இந்திரகுமார் ஒரு கருத்தை முன்வைத்தார். பெரியார் பெரியாரிஸ்டுகளை உருவாக்க விரும்பவில்லை. பெரியார் பகுத்தறிவாதிகளை உருவாக்கவே உழைத்தார். ஆனால், இன்று பெரியாரிஸ்டுகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ++
பகுத்தறிவாதிகளாக இருக்கிறோமா என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம் என்றார்.
பெரியாரிய உணர்வாளர் என்ற பெயரில் ஒரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்தை வைத்திருப்பதும், அவர்களை நாம் தமிழர் போன்ற இன்னொரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்திற்கு மாற்றாக வைத்திருப்பதும் தான் இங்கே ++
நடந்துக்கொண்டிருக்கிறது.
இங்கே தேவை என்னவோ Radical Periyarism தான். பெரியாரை நீர்த்துப்போகும் வேலையை பெரியாரிஸ்டுகளே செய்யக்கூடாது என்பதை தாழ்மையான கருத்தாகவும், எனக்குமான பாடமாகவும் முன்வைக்கிறேன்.
நிற்க!
தோழர் Ravishankar Ayyakkannu அவர்கள் தபெதிக தோழர் மனோஜ் ++