நேற்று பெரியாரின் கல்விச் சிந்தனைகள் புத்தக அறிமுகத்தில் தோழர் இந்திரகுமார் ஒரு கருத்தை முன்வைத்தார். பெரியார் பெரியாரிஸ்டுகளை உருவாக்க விரும்பவில்லை. பெரியார் பகுத்தறிவாதிகளை உருவாக்கவே உழைத்தார். ஆனால், இன்று பெரியாரிஸ்டுகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ++
பகுத்தறிவாதிகளாக இருக்கிறோமா என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம் என்றார்.
பெரியாரிய உணர்வாளர் என்ற பெயரில் ஒரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்தை வைத்திருப்பதும், அவர்களை நாம் தமிழர் போன்ற இன்னொரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்திற்கு மாற்றாக வைத்திருப்பதும் தான் இங்கே ++
நடந்துக்கொண்டிருக்கிறது.
இங்கே தேவை என்னவோ Radical Periyarism தான். பெரியாரை நீர்த்துப்போகும் வேலையை பெரியாரிஸ்டுகளே செய்யக்கூடாது என்பதை தாழ்மையான கருத்தாகவும், எனக்குமான பாடமாகவும் முன்வைக்கிறேன்.
நிற்க!
தோழர் Ravishankar Ayyakkannu அவர்கள் தபெதிக தோழர் மனோஜ் ++
அவர்களுடன் விவாதிக்கும் ஆதன் தமிழ் “மோதி விளையாடு” நிகழ்ச்சியை பார்த்தேன்.
ரவியை சில ஆண்டுகளாக அறிவேன் என்ற வகையில், இந்த விவாதத்தை அவர் எதிர்கொண்ட விதத்தை கண்டு வியக்கிறேன். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை/ அவதூறுகளை நெறியாளரும் எதிரே பேசியவரும் வைத்தபோதும், ++
எந்த இடத்திலும் குறுக்கீடு செய்யாமல், தான் சொல்ல வந்த கருத்துக்களை சுருக்கமாகவும், நச்சென்றும் எடுத்து வைத்தார்.
எல்லாத்துக்கும் பரணிப்பய தான் காரணம் என்பது போல, இவர்கள் RAW கைக்கூலிகள், பார்ப்பனிய அடிமைகள் என மனோஜ் அவதூறுகளை வீசி, ++
அரக்கர்கள் திமுகவிற்கு எதிரானவர்கள் என்று நிறுவ முயற்சித்துக்கொண்டிருந்தார்.
2019ல் மகத்தான தேர்தல் வெற்றிக்கு பிறகு, திமுக தலைவர் தளபதி, எந்தவித பிரதிபலனும் பாராமல் இணையத்தில் உழைத்த அரக்கர்களுக்கு நன்றி தெரிவித்திருந்ததை ரவிசங்கர் சுட்டிக்காட்டினார்.
++
திமுகவின் நிலைப்பாடான ஈழ மக்களின் உரிமை, நல்வாழ்வு, புணரமைப்பு தான் அரக்கர்களின் நிலைப்பாடும் என்பதை தெளிவுப்படுத்தினார். சில நாட்களுக்கு முன்னர் கூட முதலமைச்சர் தளபதி, அகதி முகாம்களில் இருக்கும் இலங்கை மக்களுக்கு இந்திய குடியுரிமை தருவது குறித்து டெல்லியில் இந்திய ++
அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்ததை ரவிசங்கர் சுட்டிக்காட்டினார்.
விடுதலைப்புலிகள் ஆதரவு தவிர்த்த 99% திராவிட இயக்கங்களின் கருத்தோடும், கொள்கையோடும் அரக்கர்கள் ஒன்றுப்பட்டு தான் நிற்கிறார்கள் என்பதையும் ரவிசங்கர் விளக்கினார்.
++
ஆனால், மனோஜ் அரக்கர்களின் நிலைப்பாடு, திமுகவிற்கு பாதகமாக முடியும் என்பதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். 2011, 2016 தேர்தலில் இவர்கள் அதிமுகவை ஆதரித்ததை ரவிசங்கர் சுட்டிக்காட்டினார். அதற்கு எந்த பதிலையும் மனோஜ் தரவில்லை.
எனக்கென்னவோ, அரக்கர்களின் ++
அரசியல் இவர்களுக்கு தான் குடைச்சலை தருகிறது என்று தெரிகிறது. 40 ஆண்டுகளாக ஆதரித்தோம் என்று இவர்கள் உணர்வு ரீதியாகவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள். விடுதலைப்புலிகளை குறித்து சிறு விமர்சனம் வைத்தாலே நம் மீது அவதூறுகளை வீசுவது வருந்தத்தக்க போக்கு!
++
தமிழ்நாட்டு அரசியலுக்கு தேவை Radical Periyarism என்கிற தீவிரமான பெரியாரியம் தான் என்பதில் நூறு சதவிகிதம் நான் உடன்படுகிறேன். அதை முன்னெடுக்கும் அனைத்து தோழர்களுக்கும் என் வணக்கங்கள். பெரியாரியம் என்பது சிந்தனை சார்ந்தது, பகுத்தறிவு சார்ந்தது. உண்மை சார்ந்தது, ++
அது கடைப்பிடிப்பதற்கு கடினமான ஒன்றாக இருக்கலாம். பெரியார் ஒருவர் தான் பெரியாராக இருக்க முடியும். நம்மால் முடியாது என்று நாம் இருக்க கூடாது. பெரியாரியத்தை விட்டு விலகிச்செல்லக் கூடாது. அது நம்மை பின்னோக்கி இழுத்துவிடும்!
பெரியார் சொன்னது, நூறாண்டுகளுக்கு பிறகு வரும் தலைமுறை, ++
என் கருத்துக்களை பிற்போக்கானது என்று சொல்லும் அளவுக்கு பகுத்தறிவாதிகளாக, அறிவாளிகளாக இருக்க வேண்டும் என்பது தான்.
பெரியார் காணவிரும்பிய பகுத்தறிவாதிகளாக நாம் மாற சிந்திப்போம், செயல்படுவோம்!
தோழர் ரவிசங்கர் பங்கேற்ற விவாதம்:
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திராவிட வாசிப்பு குழுமத்தின் மூலமாக இதுவரை விவாதிக்கப்பட்ட புத்தகங்கள்..
1) The politics of cultural nationalism in South India - Marguerite Ross Barnett 2) The Dravidian Model - Kalaiarasan A, Vijayabaskar M 3) பணத்தோட்டம் - பேரறிஞர் அண்ணா
++
4) Karunanithi A Life - A.S. Panneerselvam 5) Caste - Isabel Wilkerson 6) The war for kindness - Jamil Zaki 7) பெரியார் கல்விச் சிந்தனைகள் - அ.மார்க்ஸ்
இவை அனைத்துமே முக்கியமான புத்தகங்கள். இந்த புத்தகங்கள் குறித்து மிகச்சிறப்பான உரையாடலை தோழர்கள் நிகழ்த்தினார்கள்.
++
Clubhouse ல் Record செய்ய முடியாதது ஒரு பிரச்சனை.
ஆயினும், மேற்சொன்ன புத்தகங்கள் குறித்த விரிவான வாசிப்பும், பகுப்பாய்வும் அதிகம் தேவைப்படும் என்பதால், அந்த கலந்துரையாடலை முகநூல், யுடூயுப் சேனல்களிலும் பதிவு செய்யும் எண்ணம் இருக்கிறது.
++
பெரியாருக்கு பின்னால் திக செயல்படவில்லை என்று சொல்லலாம். திடலை கைப்பற்றுவோம் என்று சொல்லலாம்.
அண்ணா இந்தியாவிடம் சமரசம் செய்துக்கொண்டார் என்று சொல்லலாம். அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதால் தான் ஈழப்போர் நடந்தது என்று சொல்லலாம்.
++
திமுக ஓட்டுப்பொறுக்கி கட்சி என்று சொல்லலாம். அதிமுகவும் திமுகவும் ஒன்று என்று சொல்லலாம்.
தலைவர் கலைஞரை, முதலமைச்சர் ஸ்டாலினை எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் பேசலாம்.
தினகரன், சசிகலாவை “சீமான்தனமாக” ஆதரித்துவிட்டு, இயக்க அரசியலை புனிதப்படுத்தலாம்.
++
திமுக காரனை கொத்தடிமை,இன்பநிதிக்கு கழுவி விடுபவர்கள் என்றுக்கூட சொல்லலாம். ஏனெனில் இதெல்லாம் விமர்சனங்கள். சொல்பவர்கள் இயக்க அரசியல் செய்யும் புனிதர்கள்.
ஆனால்,நாம் விடுதலைப்புலிகளை குறித்தோ, இவர்களின் போலித்தனத்தை குறித்தோ விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. சிறு கேள்வியை வைத்தாலே++
ஆசிரியர் என்பது அவர்களுக்கு பிடிக்காத சொல். குரு என்பார்கள்.
ஆசிரியர் நாளை குரு உட்சவ் என பெயர் மாற்றுவார்கள்.
++
கட்டவிரலை காணிக்கையாய் கேட்ட துரோனாசாரியா எனும் சனாதன வெறியன் பெயரில் தான் விருதுகள் வழங்குவார்கள்.
பெண்ணுக்கு எதற்கு கல்வி என்று கேட்டவர்கள் அவர்கள். போராடித்தான் இங்கே பெண்கள் படிக்கவே ஆரம்பித்தார்கள்.
பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், ++
வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்கள், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது என்பதை உணர்ந்தவுடன், வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என வாய்கூசாமல் பேசியவர்கள்.
அனைவரும் சமம் என்று சொன்னாலே அவர்களுக்கு பிடிக்காது. அனைவருக்கும் சமச்சீர் கல்வி என்று சொன்னால்
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுடன் பேசப்போகிறோம் என்றதுமே ஒருவித பதட்டம் எனக்கு வந்துவிட்டது. காரணம் அவரைப் பார்த்து பேச வேண்டும் என்று சில ஆண்டுகளாவே நினைத்து வருகிறேன்.
தஞ்சை மாவட்டத்தில், எனது தந்தையார் Govi Rajamahendiran (Red Cross)
கோவி.ராஜமகேந்திரன் அவர்கள் ஆசிரியருடன் இணைந்து பல பணிகளை செய்தவர்.2009 ல் அப்பா,இறந்த போது, தஞ்சையில் ஆசிரியர் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, வாயில் வரை வந்தவர், அவரின் பிள்ளைகள் யார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறோம்? என கேட்டுவிட்டு சென்றார். அது என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்பா இறந்துவிட்டார்.அடுத்து என்ன என்பதை பார்ப்பது தானே பகுத்தறிவு?அதை சொல்லாமல் விதைத்துவிட்டு சென்றார் ஆசிரியர்.நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம் என்பதை ஆசிரியரிடம் ஒருநாள் நேரில் சந்தித்து சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.இன்றைய நிகழ்வு அந்த வாய்ப்பை வழங்கியது.
சீமானின் தந்தை இறப்பிற்கு ஆறுதல் சொல்ல தலைவர் @mkstalin அவர்கள் தொலைப்பேசியில் பேசியதை கேட்டேன்.
அவரின் மீதும், தலைவர் கலைஞர் மீதும், பேரறிஞர் அண்ணா மீதும் வன்மமாக பேசியவர் சீமான். ஆனால், அதை எதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதை பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். ஆனால், தலைவர் மு.க. ஸ்டாலின் என்றுமே ஒரு சிறந்த அரசியல் பண்பாளராக, சிறந்த மனிதராக தான் இருந்திருக்கிறார்.
என் திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி “அரசியல் பண்பாளர் மு.க. ஸ்டாலின்” எனும் தலைப்பிலான கட்டுரை தான்.
பல்வேறு காலக்கட்டங்களில் அவரிடம் வெளியான அரசியல் நாகரீகம், அரசியல் பண்பு, மனிதநேயம், நிதானம் போன்ற பல பண்பு நலன்களை கொண்ட சம்பவங்கள் தொகுக்கப்பட்ட கட்டுரை அது.
அந்த கட்டுரை திராவிட வாசிப்பு - The Dravidian Herald மின்னிதழிலும் வெளியானது.