புதிய Omicron variant கொரோனா வைரஸ் குறித்து உலகநாடுகளின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள்..
உலகை அச்சுறுத்தி வந்த கொரொனா வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய variant டிற்கு Omicron என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
++
இந்த வைரஸை தென் ஆப்ரிக்காவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள்.
தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த வைரஸ் அதற்கு முன்பே ஐரோப்பாவில் (நெதர்லாண்ட்டில்) பரவி இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
++
இந்த ஒமிக்கிரான் வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம்,வேகமாக பரவக்கூடிய நோய் என்றும், இது உலகம் முழுவதும் பரவக்கூடிய வாய்ப்புடைய வைரஸ் என்றும் எச்சரித்தது.கொரோனா காலம் முடிந்துவிட்டது என்று பலரும் கருதிய வேளையில், இன்னும் முடியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.++
ஒமிக்கிரான் வைரஸ் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு முழுமையான தகவல்கள் தெரிய இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகலாம்.
ஆனால், சில அடிப்படை தகவல்கள் நமக்கு தெரிவிப்பது..
டெல்டா வைரஸ் 2 மடங்கு வேகமாக mutate ஆகுமென்றால், Omicron 10 மடங்கு வேகமாக mutate ஆகக்கூடியது.
++
வேகமாக பரவினாலும், இது எத்தனை ஆபத்தானது என்ற கேள்வி உள்ளது. இதுவரை தென்ஆப்ரிக்காவில் இந்த புதிய வைரஸ் 10 வயதில் இருந்து 30 வயது வரையிலானவர்களை தான் அதிகம் தாக்கியுள்ளது. அவர்களுக்கு மிதமான பாதிப்பே ஏற்பட்டு இருக்கிறது. வயதானவர்கள், நோயாளிகளை இந்த வைரஸ் எப்படி பாதிக்கும் என்பது++
முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
தடுப்பூசி குறித்து..
ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகள், இந்த புதிய கொரோனா வைரஸின் spike protein ஐ எதிர்த்து போராடக்கூடியது தான். அப்படியே ஊடுருவி சென்றாலும் T-Cells Antibodies காப்பாற்றும் என்று சொல்கிறார்கள்.
++
உலக நாடுகள் தடுப்பூசிகளை போடும் வேகத்தை அதிகரித்து உள்ளது.பிரிட்டன் பிரதமர் ஜனவரிக்குள் பூஸ்டர் தடுப்பூசி உரியவர்களுக்கு போடப்படும் என்று சொல்லி இருக்கிறார்.
புதிய கொரோனா வைரஸினால், ஏற்கனவே இருக்கும் தடுப்பூசி வேலை செய்யாது,அதனால் தடுப்பூசி போட வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு,++
சிங்கப்பூர் தலைவர் ஒருவர் தந்த விடை..
நமக்கு தெரியாத ஒரு நோயிற்காக நாம் எப்படி insurance எடுத்துக்கொள்வோமோ, அந்த insurance தான் நமக்கு கிடைத்திருக்கும் தடுப்பூசி. அதை எடுத்துக்கொள்வது நம் உயிரைக் காக்கும்.
++
தடுப்பூசி போடாதவர்கள், இந்த omicron அலையில் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் மிக அதிகம்.
உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு Booster தடுப்பூசியை போடுவதற்கான செயல்களில் ஈடுபடவும். நீங்களும் உரிய நேரத்தில் போட்டுக்கொள்ளவும். தடுப்பூசி போடாதவர்களை போட வைக்கவும். இது அடிப்படை!
++
ஆராய்ச்சியாளர்கள், முழுமையான தகவல்களை தரும் வரையில் நாம் விழிப்புடன் இருப்போம்!
இம்முறை உலகநாடுகள் வேகமாக விழித்திருக்கிறது. கொரொனா வைரசை முழுமையாக வெல்வதற்கான அறிகுறிகள் தெரிகிறது. நமது கடமையை சரியாக செய்து அதற்கு நம் பங்களிப்பையும் வழங்குவோம்!
- ராஜராஜன் ஆர்.ஜெ
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நேற்று பெரியாரின் கல்விச் சிந்தனைகள் புத்தக அறிமுகத்தில் தோழர் இந்திரகுமார் ஒரு கருத்தை முன்வைத்தார். பெரியார் பெரியாரிஸ்டுகளை உருவாக்க விரும்பவில்லை. பெரியார் பகுத்தறிவாதிகளை உருவாக்கவே உழைத்தார். ஆனால், இன்று பெரியாரிஸ்டுகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ++
பகுத்தறிவாதிகளாக இருக்கிறோமா என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம் என்றார்.
பெரியாரிய உணர்வாளர் என்ற பெயரில் ஒரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்தை வைத்திருப்பதும், அவர்களை நாம் தமிழர் போன்ற இன்னொரு உணர்ச்சிவயப்பட்ட கூட்டத்திற்கு மாற்றாக வைத்திருப்பதும் தான் இங்கே ++
நடந்துக்கொண்டிருக்கிறது.
இங்கே தேவை என்னவோ Radical Periyarism தான். பெரியாரை நீர்த்துப்போகும் வேலையை பெரியாரிஸ்டுகளே செய்யக்கூடாது என்பதை தாழ்மையான கருத்தாகவும், எனக்குமான பாடமாகவும் முன்வைக்கிறேன்.
நிற்க!
தோழர் Ravishankar Ayyakkannu அவர்கள் தபெதிக தோழர் மனோஜ் ++
திராவிட வாசிப்பு குழுமத்தின் மூலமாக இதுவரை விவாதிக்கப்பட்ட புத்தகங்கள்..
1) The politics of cultural nationalism in South India - Marguerite Ross Barnett 2) The Dravidian Model - Kalaiarasan A, Vijayabaskar M 3) பணத்தோட்டம் - பேரறிஞர் அண்ணா
++
4) Karunanithi A Life - A.S. Panneerselvam 5) Caste - Isabel Wilkerson 6) The war for kindness - Jamil Zaki 7) பெரியார் கல்விச் சிந்தனைகள் - அ.மார்க்ஸ்
இவை அனைத்துமே முக்கியமான புத்தகங்கள். இந்த புத்தகங்கள் குறித்து மிகச்சிறப்பான உரையாடலை தோழர்கள் நிகழ்த்தினார்கள்.
++
Clubhouse ல் Record செய்ய முடியாதது ஒரு பிரச்சனை.
ஆயினும், மேற்சொன்ன புத்தகங்கள் குறித்த விரிவான வாசிப்பும், பகுப்பாய்வும் அதிகம் தேவைப்படும் என்பதால், அந்த கலந்துரையாடலை முகநூல், யுடூயுப் சேனல்களிலும் பதிவு செய்யும் எண்ணம் இருக்கிறது.
++
பெரியாருக்கு பின்னால் திக செயல்படவில்லை என்று சொல்லலாம். திடலை கைப்பற்றுவோம் என்று சொல்லலாம்.
அண்ணா இந்தியாவிடம் சமரசம் செய்துக்கொண்டார் என்று சொல்லலாம். அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதால் தான் ஈழப்போர் நடந்தது என்று சொல்லலாம்.
++
திமுக ஓட்டுப்பொறுக்கி கட்சி என்று சொல்லலாம். அதிமுகவும் திமுகவும் ஒன்று என்று சொல்லலாம்.
தலைவர் கலைஞரை, முதலமைச்சர் ஸ்டாலினை எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் பேசலாம்.
தினகரன், சசிகலாவை “சீமான்தனமாக” ஆதரித்துவிட்டு, இயக்க அரசியலை புனிதப்படுத்தலாம்.
++
திமுக காரனை கொத்தடிமை,இன்பநிதிக்கு கழுவி விடுபவர்கள் என்றுக்கூட சொல்லலாம். ஏனெனில் இதெல்லாம் விமர்சனங்கள். சொல்பவர்கள் இயக்க அரசியல் செய்யும் புனிதர்கள்.
ஆனால்,நாம் விடுதலைப்புலிகளை குறித்தோ, இவர்களின் போலித்தனத்தை குறித்தோ விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. சிறு கேள்வியை வைத்தாலே++
ஆசிரியர் என்பது அவர்களுக்கு பிடிக்காத சொல். குரு என்பார்கள்.
ஆசிரியர் நாளை குரு உட்சவ் என பெயர் மாற்றுவார்கள்.
++
கட்டவிரலை காணிக்கையாய் கேட்ட துரோனாசாரியா எனும் சனாதன வெறியன் பெயரில் தான் விருதுகள் வழங்குவார்கள்.
பெண்ணுக்கு எதற்கு கல்வி என்று கேட்டவர்கள் அவர்கள். போராடித்தான் இங்கே பெண்கள் படிக்கவே ஆரம்பித்தார்கள்.
பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், ++
வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்கள், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது என்பதை உணர்ந்தவுடன், வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என வாய்கூசாமல் பேசியவர்கள்.
அனைவரும் சமம் என்று சொன்னாலே அவர்களுக்கு பிடிக்காது. அனைவருக்கும் சமச்சீர் கல்வி என்று சொன்னால்
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுடன் பேசப்போகிறோம் என்றதுமே ஒருவித பதட்டம் எனக்கு வந்துவிட்டது. காரணம் அவரைப் பார்த்து பேச வேண்டும் என்று சில ஆண்டுகளாவே நினைத்து வருகிறேன்.
தஞ்சை மாவட்டத்தில், எனது தந்தையார் Govi Rajamahendiran (Red Cross)
கோவி.ராஜமகேந்திரன் அவர்கள் ஆசிரியருடன் இணைந்து பல பணிகளை செய்தவர்.2009 ல் அப்பா,இறந்த போது, தஞ்சையில் ஆசிரியர் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, வாயில் வரை வந்தவர், அவரின் பிள்ளைகள் யார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறோம்? என கேட்டுவிட்டு சென்றார். அது என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்பா இறந்துவிட்டார்.அடுத்து என்ன என்பதை பார்ப்பது தானே பகுத்தறிவு?அதை சொல்லாமல் விதைத்துவிட்டு சென்றார் ஆசிரியர்.நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம் என்பதை ஆசிரியரிடம் ஒருநாள் நேரில் சந்தித்து சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.இன்றைய நிகழ்வு அந்த வாய்ப்பை வழங்கியது.