*எங்களுக்கு ஒரு கடவுள் - உங்களுக்கு ஏன் பல கடவுள்* ?
கவிஞர் *கண்ணதாசனிடம்*, வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :
"ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!
அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.
அதற்கு அவர், ' *மகன்* ' என பதிலளித்தார்.
'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது.
*கணவன்*.!
'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
'அண்ணன் குழந்தைகளுக்கு.?'
'சித்தப்பா.!'
விடவில்லை, கேள்விகள் நீண்டு கொண்டே நீண்டு கொண்டே போனது.
"பெரியப்பா, மைத்துனர், மாமன், மச்சான்"
என பல உறவுகளில் பதில் வந்து கொண்டே இருந்தது.
சில நிமிடங்கள் கண்ணதாசன்
நிறுத்தினார். பின்பு ஆரம்பித்தார்.
" *வெறும் மண்ணை தின்னப் போகும் உன் சடலத்திற்க்கே இத்தனை பெயர் வைத்து அழைக்கும் போது*,
"யாதுமாகி நின்று, எங்கெங்கும் நின்று உலகையே கட்டிக் காக்கும் என் அப்பன் பரம் பொருளை எத்தனை பெயர்களால் அழைத்தால் என்ன..??
அவன் எதற்குள்ளும் அடங்காதவன், எதற்குள்ளும் இருப்பவன். உன்னுள்ளும் இருப்பவன், என்னுள்ளும் இருப்பவன். உன்னை அழைத்தாலும் அவனே, என்னை அழைத்தாலும் அவனே."
*திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி திருக்கோவில்*
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.நாறும்பூநாதர் கோவில் :
🙏🇮🇳1
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
🙏🇮🇳2
ஊருக்கு மேற்கில் ஆற்றின் கிழக்கு கரையோரமாக அமைந்து உள்ள ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கருவறை, விஜயநகர பேரரசர்கள் மற்றும் நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணி களால் கோவில் சிறப்புற்று விளங்குகிறது.
மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை முடிவை, நியமன பதவியில் அமர்ந்திருக்கும் கவர்னர் மதிக்காதது, மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என விமர்சித்துள்ளனரே?
அரசியல் சட்டத்தின், 254 பிரிவின்படி, பொது பட்டியலில் உள்ள சட்டத்தில், ஏதேனும் விவாதம் இருப்பின், மத்திய அரசின் நிலைப்பாடே இறுதியானது.ஒருவேளை, மாநில அரசு நடைமுறைப் படுத்தும் ஒரு தீர்மானத்தை, ஜனாதிபதி ஏற்றால் மட்டும் தான், அந்த மாநிலத்தின் கோரிக்கையை சட்டமாக மாற்ற முடியும்.
ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று, ஜனாதிபதி, தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டார்.
கடந்த 2017 செப்., மாதம், இதேபோன்ற ஒரு தீர்மானத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்ற அடிப்படையில், ஜனாதிபதி நிராகரித்தார்.
நீட் தேர்வுக்கு முன், 90 சதவீதம் அளவுக்கு, மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு, மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது என, ஒரு வாதத்தை முன்வைக்கின்றனரே?
கடந்த 2006ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், 200 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இருந்தன. தற்போது 1,300 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகள், தி.மு.க.,வின் வாரிசுகள் நடத்தி வருபவை.
மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என்றால், இத்தனை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தது யார், ஏன்?