*திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி திருக்கோவில்*
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.நாறும்பூநாதர் கோவில் :
🙏🇮🇳1
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
🙏🇮🇳2
ஊருக்கு மேற்கில் ஆற்றின் கிழக்கு கரையோரமாக அமைந்து உள்ள ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கருவறை, விஜயநகர பேரரசர்கள் மற்றும் நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணி களால் கோவில் சிறப்புற்று விளங்குகிறது.
🙏🇮🇳3
நாறும்பூநாதர் என்பது இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் திருநாமம் ஆகும். இத்தலத்திற்கு திருப்புடைமருதூர் என்ற பெயரோடு மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி, சுரேந்திரபுரி என்ற பெயர்களும் உள்ளன. தற்போது திருப்புடைமருதூர் என்ற பெயர் மட்டுமே நிலைத்து விட்டது.
🙏🇮🇳4
ஆதி பிரம்மாவின் மகனாகிய மனு பல சுயம்பு லிங்கங்கள் உள்ள தலங்களுக்கெல்லாம் சென்று வணங்கி வந்த நிலையில் அகத்திய முனிவரின் அருளாணைப்படி இத்தலத்திற்கும் வந்தான். 🙏🇮🇳5
மருத மரத்தின் அடியில் லிங்கமாய் நின்ற சிவபெருமானை கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகியோர் வழிபடும் காட்சியை தூரத்தில் இருந்து பார்த்த ஆதிமனு தானும் வழிபடுவதற்காக விரைந்து வந்தார்.
🙏🇮🇳6
அருகில் வந்ததும் அந்த காட்சி மறைந்ததை கண்டு வருந்திய ஆதிமனு தனது வாளினை மரத்தில் குத்தி தனது தலையை துண்டிக்க முயன்றான். அப்போது மரத்தில் இருந்து ரத்தம் பொங்கியதால் அதிர்ந்து நின்றான்.
🙏🇮🇳7
அப்போது ‘நிறுத்துக’ என்று அசரீரி ஒலித்தது. உடனே மருத மரத்தின் பொந்தில் இருந்து இறைவன் ஆதிமனுவுக்கு காட்சி கொடுத்தார். சிவபெருமானை வழிபட்ட ஆதிமனு அவ்விடத்தில் இறைவனுக்கு ஆலயம் கட்டுவதற்கு அருள்செய்ய வேண்டும் என்று கேட்டான். 🙏🇮🇳8
இறைவனும் ‘மரத்தின் கீழ்திசையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள சுயம்பு லிங்கம் இருக்கும் இடத்தில் ஆலயம் எழுப்பி வழிபடுக’ என்று அருள ஆதி மனு அங்கு கோவிலை எழுப்பினான்.
🙏🇮🇳9
ஆதிமனு கட்டிய கோவில் காலப்போக்கில் மறைந்து விட்டது. அப்போது களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீரமார்த்தாண்ட மன்னன் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். ஒரு மானை கண்டு தனது அம்பை எய்தான். அப்போது மான் மறைந்து விட்டது. 🙏🇮🇳10
ஆனால் மன்னன் எய்த அம்பு மருத மரத்தின் பொந்தில் குத்தி நிற்க, அங்கே சிவலிங்கத்தை மன்னன் கண்டான். உடனே அந்த இடத்தில் மிகப்பெரிய ஆலயத்தை எழுப்பினான்.
🙏🇮🇳11
கருவூர் சித்தர் பல்வேறு கோவில்களுக்கு சென்று வணங்கி வருகையில் தாமிரபரணியின் வடக்கரை வழியாக வரும்போது மறுக்கரையில் இக்கோவிலை கண்டார். 🙏🇮🇳12
கோவிலுக்கு செல்ல முடியாதபடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அங்கு உறையும் இறைவன் பெயர் அறியாத கருவூரார் அங்கிருந்து வரும் மலர்களின் மணத்தை அறிந்து இறைவனை ‘நாறும்பூநாதா’ என சத்தம் போட்டு அழைத்தார். 🙏🇮🇳13
“நாறும்பூநாதா, உன்னை காண முடியாமல் ஆற்றிலே வெள்ளம் போகிறதே, நான் சொல்வது உனக்கு கேட்கிறதா?” என்று கேட்க இறைவன் தனது திருமேனியை இடப்பக்கம் சரித்து செவிமடுத்து கேட்க 🙏🇮🇳14
சித்தர், வெள்ளத்தை நிற்கும்படி இறைவனிடம் வேண்ட சித்தருக்கு இறங்கி வெள்ளம் வழிவிட்டு நிற்க இறைவனை வணங்கி கருவூர் சித்தர் அருள் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது.
🙏🇮🇳15
இதன் வெளிப்பாடாக இன்றும் சாய்ந்த நிலையிலேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் புடார்ச்சுன பெருமான். இங்குள்ள அம்மனின் பெயர் கோமதி அம்பாள். 🙏🇮🇳16
அபூர்வமான நீலக்கல் திருமேனி உடைய இந்த அம்பாள் அருளே வடிவானவள். இந்த அம்பாள் பெண்களின் நோய்களை தீர்ப்பதில் சிறப்பானவள். 🙏🇮🇳17
பேய் மற்றும் கெட்ட ஆவி பிடித்த பெண்கள், மனநலம் சரியில்லாதவர்கள் அம்பாள் சன்னிதியில் இருந்து தினமும் வழிபட்டால் 21 நாட்களில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 🙏🇮🇳18
பெண்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் பாயாசம் வைத்து ஆற்றங்கரையில் நீராடி படித்துறையை கழுவி அதில் வைத்து சாப்பிடுவார்கள். இதை படி பாயாசம் என்பர்.
🙏🇮🇳19
தீர்த்தத்தின் சிறப்பு :
புண்ணிய நதியாம் தாமிரபரணி, கடனா நதி, ராமநதி ஆகிய மூன்றும் சங்கமித்து வடக்கு நோக்கி தாமிரபரணி இங்கே உத்தரவாகினியாக ஓடுவதே தனி சிறப்பாய் கருதப்படுகிறது. 🙏🇮🇳20
உலகில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் இவளை உபாசனை பண்ணியே தீர்த்த சக்தி பெறுகின்றன. சிவசக்தி ரூபினியான இவள்(ஆறு) பரமசிவன் அம்சமாகவும், பார்வதி அம்சமாகவும் மற்ற அங்கங்கள் பல்வேறு தேவர்கள் அம்சமாகவும் விளங்குகின்றன என தாமிரபரணி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது. 🙏🇮🇳21
இத்தலத்தினை சுற்றி இவ்வாற்றில் பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.
*எங்களுக்கு ஒரு கடவுள் - உங்களுக்கு ஏன் பல கடவுள்* ?
கவிஞர் *கண்ணதாசனிடம்*, வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :
"ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!
அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.
மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை முடிவை, நியமன பதவியில் அமர்ந்திருக்கும் கவர்னர் மதிக்காதது, மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என விமர்சித்துள்ளனரே?
அரசியல் சட்டத்தின், 254 பிரிவின்படி, பொது பட்டியலில் உள்ள சட்டத்தில், ஏதேனும் விவாதம் இருப்பின், மத்திய அரசின் நிலைப்பாடே இறுதியானது.ஒருவேளை, மாநில அரசு நடைமுறைப் படுத்தும் ஒரு தீர்மானத்தை, ஜனாதிபதி ஏற்றால் மட்டும் தான், அந்த மாநிலத்தின் கோரிக்கையை சட்டமாக மாற்ற முடியும்.
ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று, ஜனாதிபதி, தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டார்.
கடந்த 2017 செப்., மாதம், இதேபோன்ற ஒரு தீர்மானத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்ற அடிப்படையில், ஜனாதிபதி நிராகரித்தார்.
நீட் தேர்வுக்கு முன், 90 சதவீதம் அளவுக்கு, மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு, மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது என, ஒரு வாதத்தை முன்வைக்கின்றனரே?
கடந்த 2006ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், 200 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இருந்தன. தற்போது 1,300 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகள், தி.மு.க.,வின் வாரிசுகள் நடத்தி வருபவை.
மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என்றால், இத்தனை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தது யார், ஏன்?