*மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் இன்ப துன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள், தோஷங்கள் எல்லாவற்றிற்கும் தன்னுடைய கர்ம வினைகளும், செய்த பாவங்களுமே காரணமென்று நம்புகிறான்.*
🙏🇮🇳1
இதிலிருந்து விடுபடவும், பயங்களைப் போக்கி கொள்ளவும் கடவுளைச் சரணடைகிறான்.
பூஜை புனஸ்காரங்கள், விரதங்கள் என்று விதவிதமான வழிபாடுகளை மேற்கொண்டாலும் அவன் நாடுவது இறையருளை மட்டுமே. 🙏🇮🇳2
எல்லா நாட்களிலும் இறைவனை வழிபட்டாலும் சில நாட்களுக்கும் மாதங்களுக்கும் மட்டும் தனிப்பட்ட சிறப்பு கிடைத்து விடுகிறது.
உதாரணமாக, மார்கழி, புரட்டாசி, கார்த்திகை, தை மாதங்களில் திருமால், அம்பாள், ஐயப்பன் என்று ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனிச்சிறப்புக் கொடுத்துக் கும்பிடுகிறோம். 🙏🇮🇳3
ராசி என்பது இரண்டேகால் நாளைக்கு ஒன்று வீதம் வரும்.
லக்னம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் வரும்.
அதுவும் அம்சலக்னம் 13நிமிடத்திற்கு ஒன்று வீதம் வரும்.
இன்னும் சொல்லப்போனால் சஷ்டியாம்ச லக்னம் என்பது 2நிமிடத்திற்க் ஒன்று வீதம் ஒரு நாளைக்கு 720லக்னங்கள் வரும்.ஆகவேதான் ஒரே ராசியில் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு விதமாக அமைகிறது.ஒரே லக்னத்தில் ஒரே நட்சரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைமுறைக் கூட வேறு பட்டுள்ளது.ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில்தான் எவ்வளவு வித்தியாசம்! .
திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.*
திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். 🙏🇮🇳1
ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
🙏🇮🇳2
புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.
*அருள்மிகு ஸ்ரீ ஆனந்த நடராஜர் உடனுறை பார்வதி அம்மையார் திருக்கோவில் விளாங்குறிச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.*
200 முதல் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவஸ்தலம் முழுக்க முழுக்க எம்பெருமான் சிவனுக்காக அர்ப்பணிப்பதாக திருக்கோவில் தமிழர்கள் கட்டிடக் கலையால் கட்டப்பட்டுள்ளது.
🙏🇮🇳1
திருக்கோவிலில் மூலவராக ஆனந்த நடராஜர் அருள் பாலிக்கின்றார்.
திருக்கோயிலின் தாயாராக பார்வதிதேவி அம்மையார் அருள் பாலிக்கின்றார்.
இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக அரசமரம் உள்ளது.
கோவிலில் பூஜைகள்
சிவாகமதின் அடிப்படையில் நடைபெறுகின்றது.
🙏🇮🇳2
இத்தலத்தில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும் ஞாயிறுகளில் மாலை 7 மணிக்கு ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது. கடலூரில் நடப்பது போலவே இங்கும் ஏழு திரைகள் விலகி நிறைவாக ஜோதியைத் தரிசிக்கலாம்.