*அருள்மிகு ஸ்ரீ ஆனந்த நடராஜர் உடனுறை பார்வதி அம்மையார் திருக்கோவில் விளாங்குறிச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.*
200 முதல் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவஸ்தலம் முழுக்க முழுக்க எம்பெருமான் சிவனுக்காக அர்ப்பணிப்பதாக திருக்கோவில் தமிழர்கள் கட்டிடக் கலையால் கட்டப்பட்டுள்ளது.
🙏🇮🇳1
திருக்கோவிலில் மூலவராக ஆனந்த நடராஜர் அருள் பாலிக்கின்றார்.
திருக்கோயிலின் தாயாராக பார்வதிதேவி அம்மையார் அருள் பாலிக்கின்றார்.
இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக அரசமரம் உள்ளது.
கோவிலில் பூஜைகள்
சிவாகமதின் அடிப்படையில் நடைபெறுகின்றது.
🙏🇮🇳2
இத்தலத்தில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும் ஞாயிறுகளில் மாலை 7 மணிக்கு ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது. கடலூரில் நடப்பது போலவே இங்கும் ஏழு திரைகள் விலகி நிறைவாக ஜோதியைத் தரிசிக்கலாம்.
🙏🇮🇳3
இச்ஜோதியை தரிசிப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. வருட திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம் இவற்றோடு, மாசி மாத நட்சத்திரத்தில் குருபூஜையும் நடைபெறுகிறது. சிவாகம முறைப்படி பூஜைகள் நடக்கும்.
🙏🇮🇳4
வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரை தரிசிப்பதும், ஜோதி தரிசனத்தைக் காண்பதும் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது .
🙏🇮🇳5
ஒரு சமயம் நீண்ட காலமாக மழையே இல்லாமல் இப்பகுதியில் விவசாயம் முடங்கி விட்டது. குடிநீர்கூட இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.
விளை நிலங்கள் எல்லாம் பாளம் பாளமாக வெடித்து காயந்து விட்டன. ஊரார் ஒன்றுகூடி வெங்கடரமண சுவாமிகளிடம் முறையிட்டனர்.
🙏🇮🇳6
இறைவனை வேண்டி சுவாமிகள் செய்த பிரார்த்தனையின் பலனாக பெருமழை பொழிந்து விவசாயம் செழித்தது. குடிநீர் கிணறுகள் நிறைந்தன. அனைவரும் சுவாமியை வணங்கி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். 🙏🇮🇳7
மற்றொரு சமயம் அருகில் இருந்த ஊரில் ஒரு சிறுவன் வறுமை காரணமாக திருஅருட்பா பாடி யாசகம் எடுத்துக் கொண்டிருந்தான். அக்காட்சியை கண்டு அதிர்ந்துபோன பக்தர்கள் சிலர் அச்சிறுவனை கோயிலுக்கு அழைத்து வந்து சுவாமி முன் நிறுத்தினர்.
🙏🇮🇳8
சுவாமி அச்சிறுவனை ஆசீர்வதித்து, உன் குறை யாவும் பதினைந்தே நாட்களில் சரியாகிவிடும் எனக் கூறி.உபதேசித்து திருநீற்று பிரசாதம் வழங்கி விடை கொடுத்தனுப்பினார் .
🙏🇮🇳9
நம்பிக்கையோடு ஊர் திரும்பினான், சிறுவன். பதினைந்தாவது நாள் சிறுவன் ஒரு நதிக்கரையில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் அந்த நாட்டின், ஜமீன்தார் ஒருவர் உடல்நலம் குன்றிய தன் மகளை சிகிச்சைக்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
🙏🇮🇳10
எந்த சிகிச்சை முறையும் பலன் அளிக்கவில்லை. எனவே வேறு மாளிகைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். தியானம் முடிந்து கண் விழித்த அச்சிறுவன், ஜமீன்தாரின் மகளைக் கூட்டிச் செல்வதைக் கண்டான்.
🙏🇮🇳11
அவரைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்து தாமே சிகிச்சை அளிப்பதாகத் தெரிவித்தான். பின் சுவாமிகள் வழங்கிய திருநீற்றை தண்ணீரில் கலந்து குடிக்கச் செய்து பின் உடலில் திருநீறை பூசியும் விட்டான். சிறிது நேரத்திலேயே அப்பெண் கண் விழித்து பார்த்து பேச ஆரம்பித்தாள்.
🙏🇮🇳12
பிணி நீங்கி,நான்கைந்து நாட்களில் பூரண குணமடைந்தாள். தன் மகளின் பிணியைப் போக்கிய சிறுவனை மாளிகைக்கு அழைத்து வெகுவாகப் பாராட்டி, அவன் மகிழும் வண்ணம் பெருஞ்செல்வத்தை அளித்தார் ஜமீன்தார் . 🙏🇮🇳13
பின் அவன் மூலம் சுவாமிகளைப் பற்றி அறிந்து தன் மகளுடன் இக்கோயிலுக்கு வந்து நன்றி தெரிவித்து ஆசி பெற்றுச் சென்றனர்.
🙏🇮🇳14
ஞான சபையில் தினமும் வள்ளலார் சுவாமிகளின் திருஅருட்பா எனும் இறைநூலை கூட்டு வழிபாட்டில் பாடிவந்தனர். அன்று முதல் இன்றளவும் தொடர்ந்து நடந்து வருவது சிறப்பு.
🙏🇮🇳15
1911-ம் ஆண்டு தனது 84-வது வயதில் தான் அவதரித்த சித்திரை நட்சத்திரத்தன்றே ஜீவ சமாதி அடைந்தார் வெங்கடரமணர். ஞானியர்களுக்கு மரணம் இல்லை என்பது அருளாளர்கள் வாக்கு,
🙏🇮🇳16
கோயில் அருகே 132 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட வேம்பு அரசு விநாயகர், ராகு-கேது மற்றும் கன்னிமார் சன்னிதிகளும் உள்ளன.
🙏🇮🇳17
இன்றும் நம்பிக்கையுடன் இத்தலம் வந்து பணிவோர்க்கு தாயினும் சாலப்பரிந்து அவர்களது துன்பங்களையும் அனைத்து உடல் பிணிகளையும் உள்ளத்து நோய்களையும் தீர்த்து நல் அருள் புரிகின்றார்.
🙏🇮🇳18
செல்வமும் நன்மக்கட்பேறும் அளிக்கிறார். 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ந்து ஓங்கிய அரசு, வேம்பு மரங்களின் கீழ் அருள்பாலிக்கும் விநாயகரையும் ராகு கேது பகவான்களையும் தொழுவது தோஷத்தைப் போக்கவல்லதென்பது ஐதிகம்.
🙏🇮🇳19
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
🙏🇮🇳20
கோயில் அருகே 132 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட வேம்பு அரசு விநாயகர், ராகு-கேது மற்றும் கன்னிமார் சன்னிதி உள்ளன.
🙏🇮🇳21
30 அடி உயரமும் 25 டன் எடையுமுள்ள ஒரே கல்லால் செய்யப்பட்ட துவஜஸ்தம்பத்துடன் கூடிய முன் மண்டபமும் எழுப்பப்பட்டது.
🙏🇮🇳22
1901-ம் வருடம் ஆவணி மாதம் முதல் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
🙏🇮🇳23
ஞான சபையில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, துரியம் என்ற ஏழு நிலைக்கும் ஏழு திரையிட்டு எவ்வுலகும் எவ்வுயிரும் ஞான இன்பமும் அடைதல் பொருட்டு அதி அற்புத அருள் ஞான ஆனந்தத் திருத்தாண்டவ திருநடனம் செய்யும் அருட்பெருஞ்சஜோதியை ஸ்தாபித்தார் .
🙏🇮🇳24
சன்மார்க்க சபா மண்டபத்தில் கனகசபை அமைத்து, அதில் வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரையும் , பார்வதி தேவியையும் எழுந்தருளச் செய்தார்.
🙏🇮🇳25
திருக்கோயில் மிகச்சிறந்த அதிசயமாக வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரை தரிசிப்பதும் , ஜோதி தரிசனத்தைக் காண்பதும் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது .
*மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் இன்ப துன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள், தோஷங்கள் எல்லாவற்றிற்கும் தன்னுடைய கர்ம வினைகளும், செய்த பாவங்களுமே காரணமென்று நம்புகிறான்.*
🙏🇮🇳1
இதிலிருந்து விடுபடவும், பயங்களைப் போக்கி கொள்ளவும் கடவுளைச் சரணடைகிறான்.
பூஜை புனஸ்காரங்கள், விரதங்கள் என்று விதவிதமான வழிபாடுகளை மேற்கொண்டாலும் அவன் நாடுவது இறையருளை மட்டுமே. 🙏🇮🇳2
எல்லா நாட்களிலும் இறைவனை வழிபட்டாலும் சில நாட்களுக்கும் மாதங்களுக்கும் மட்டும் தனிப்பட்ட சிறப்பு கிடைத்து விடுகிறது.
உதாரணமாக, மார்கழி, புரட்டாசி, கார்த்திகை, தை மாதங்களில் திருமால், அம்பாள், ஐயப்பன் என்று ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனிச்சிறப்புக் கொடுத்துக் கும்பிடுகிறோம். 🙏🇮🇳3
ராசி என்பது இரண்டேகால் நாளைக்கு ஒன்று வீதம் வரும்.
லக்னம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் வரும்.
அதுவும் அம்சலக்னம் 13நிமிடத்திற்கு ஒன்று வீதம் வரும்.
இன்னும் சொல்லப்போனால் சஷ்டியாம்ச லக்னம் என்பது 2நிமிடத்திற்க் ஒன்று வீதம் ஒரு நாளைக்கு 720லக்னங்கள் வரும்.ஆகவேதான் ஒரே ராசியில் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு விதமாக அமைகிறது.ஒரே லக்னத்தில் ஒரே நட்சரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைமுறைக் கூட வேறு பட்டுள்ளது.ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில்தான் எவ்வளவு வித்தியாசம்! .
திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.*
திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். 🙏🇮🇳1
ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
🙏🇮🇳2
புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.