மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳1
மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி தரும் சிறப்புகளை கொண்ட பழனியப்பர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது.
🙏🇮🇳2
*தல வரலாறு*
படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. 🙏🇮🇳3
இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார்.
🙏🇮🇳4
கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது.
🙏🇮🇳5
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மும்மூர்த்திகளுக்குரிய தொழில்களையும், முருகப்பெருமான் தன்வசம் எடுத்துக் கொண்டார். பிறவியைத் தருவதற்கும், முடிப்பதற்கும் உரிய சகல அதிகாரமும் இவரிடம் உள்ளது.
🙏🇮🇳6
*தல பெருமை*
முருகப்பெருமான், சிவன்-பார்வதி அம்சமாக இருப்பதால் இங்குள்ள மூலவர் பழனியாண்டவர் மூன்று பட்டை வடிவில் நெற்றியில் திருநீறும், பொட்டும் காணப்படுகிறது.
🙏🇮🇳7
அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.
🙏🇮🇳8
முருகனின் கையில் சேவல் : பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும், அவனை முருகன் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். 🙏🇮🇳9
மற்ற முருகன் கோவில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🙏🇮🇳10
இடும்பன் சன்னதி : அகத்தியரின் உத்தரவுப்படி சிவகிரி, திகிரி என்னும் மலைகளை இமயமலையில் இருந்து ஒரு தண்டத்தின் இருபுறமும் கட்டி தூக்கி வந்தவன் இடும்பன் என்னும் அசுரன். பார்ப்பதற்கு இது காவடி போல இருக்கும். முருகப்பெருமான் அவனைத் தடுத்து அந்த மலைகளைத் தனதாக்கிக் கொண்டார்.
🙏🇮🇳11
காலணி அணிந்தவர் : முருகப்பெருமான் வேடன் ரூபத்தில் எழுந்தருளியுள்ளார். தலையில் கொண்டையும், வேங்கை மலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடியுள்ளார். 🙏🇮🇳12
ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். காலில் காலணியும், வீரதண்டையும் அணிந்துள்ளார். இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், வலது கையில் ஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் தாங்கியுள்ளார்.
🙏🇮🇳13
*பிரார்த்தனை*
தோல் மற்றும் எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபடுகின்றனர். இவர் தன்னை வணங்கும் பக்தர்களின் பிறப்பை வேட்டையாடி முக்தி தருபவராக உள்ளார்.
🙏🇮🇳14
*இருப்பிடம்*
நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் செல்லும் சாலையில் 22 கி.மீ. தூரத்தில் பேளுக்குறிச்சி உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தூரத்திலுள்ள கொல்லிமலை அடிவாரத்தில் கோயில் உள்ளது.
மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்! சிவராத்திரியின் உண்மையான விளக்கம்
மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு..
நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.
ஒரு சன்னியாசி. அவர் ஒரு நாள் கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் சொர்க்கத்துக்குப் போகிறார். அங்கே ஒரு பெரிய திருவிழா நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் அலங்கார வளைவுகள். வண்ணமயமான விளக்குகள். பாதைகள் பூராவும் மலர்கள். எல்லா கட்டடங்களும் ஒளிமயமாக இருந்து.
இவ்வளவு கோலாகலமாக பிரம்மாண்டமாக அந்த திருவிழா நடந்து கொண்டிருந்தது. அது என்ன திருவிழா என்பது இந்த சந்நியாசிக்கு புரியவில்லை.
அங்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் இது என்ன விசேஷம் என்று விசாரித்தார்.
உங்களுக்கு தெரியாதா விஷயம் இன்றைக்கு கடவுளின் பிறந்தநாள். அதைத்தான் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். இதற்காக பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்று வரப்போகிறது. இறைவனே அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார் என்றார்.
இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.
தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.
டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.
ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.,வும் இடம் பெற்றிருந்தது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.,வை கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டனர்,
அ.தி.மு.க.,வினர், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி போன்றவர், தமிழக பா.ஜ., தலைவராக இருந்திருந்தால், 'ஐயா சாமி! அடியேன் சரணம்! நீங்கள் கொடுக்குறதை கொடுங்க; நாங்கள் சந்தோஷமா ஏத்துக்கறோம்' என்று சொல்லி, பழனிசாமி, பன்னீர்செல்வம் கால்களில் விழுந்து இருப்பார்.
என்ற கேள்விக்கு, தமிழகத்தின் பெரும்பாலானவர்களுக்கு பதில் தெரிவதில்லை. இந்திய சுதந்திரத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வீரத் தியாகியை நமக்குத் தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத தவறு.
இதற்கு சரித்திரத்தை தன் போக்குக்கு இழுத்துச் சென்ற காங்கிரஸே காரணம்.
சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன் தாத்தா காந்தி, மாமா நேரு போன்ற தலைவர்களை மட்டும் தேசியமயமாக்கிவிட்டு, மற்றவர்களை அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாக்கிய காங்கிரஸின் பாடத் திட்டமே இதற்குக் காரணம்.
அடுத்தவரை குறை சொல்லி பிரயோஜனமில்லை. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாத நமக்கும் அதில் பங்கு உண்டு.
எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதற்கான பலன் நமக்குக் கிடைக்க வேண்டும். இதுதான் நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி பலனை பெறுவதிலும் இரண்டு வகை உண்டு.