ஒரு சன்னியாசி. அவர் ஒரு நாள் கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் சொர்க்கத்துக்குப் போகிறார். அங்கே ஒரு பெரிய திருவிழா நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் அலங்கார வளைவுகள். வண்ணமயமான விளக்குகள். பாதைகள் பூராவும் மலர்கள். எல்லா கட்டடங்களும் ஒளிமயமாக இருந்து.
இவ்வளவு கோலாகலமாக பிரம்மாண்டமாக அந்த திருவிழா நடந்து கொண்டிருந்தது. அது என்ன திருவிழா என்பது இந்த சந்நியாசிக்கு புரியவில்லை.
அங்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் இது என்ன விசேஷம் என்று விசாரித்தார்.
உங்களுக்கு தெரியாதா விஷயம் இன்றைக்கு கடவுளின் பிறந்தநாள். அதைத்தான் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். இதற்காக பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்று வரப்போகிறது. இறைவனே அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார் என்றார்.
உடனே அந்த சந்நியாசி ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று கொண்டார். ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு குதிரை வந்து கொண்டிருந்தது. அதன் மேலே ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நிறைய பேர் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள்.
இவ்வளவு கூட்டம் இவர் பின்னாடி வருகிறது யார் இவர் என்று கேட்டார் சந்நியாசி.
ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி அவர் அந்த மதத்தின் தலைவர். அவரை பின்பற்றுகின்ற மக்கள் கூட்டம் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று விவரம் சொன்னார்கள்.
இவர்களுக்கு அடுத்தபடியாக இன்னொரு குதிரையிலே ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ஏகப்பட்ட கூட்டம்.
இவர் யார் என்று கேட்டார் சந்நியாசி. இன்னொரு மதத்தின் பெயரைச் சொல்லி இவர் அந்த மதத்தின் தலைவர். அவர் வழியை பின்பற்றுகிறவர்கள் அவர் பின்னால் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொருவராக குதிரை மீது வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பின்பற்றியும் ஒவ்வொரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. அந்த பெரிய ஊர்வலம் போய்க்கொண்டே இருந்தது. கடைசியாக அது முடிந்து விட்டது .
அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான ஆள் குதிரைமேல் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்குப் பின்னால் யாருமே இல்லை. அவர் தனியாக வந்து கொண்டிருந்தார். அவர் அந்த ஊர்வலத்தை சேர்ந்தவரா என்றே தெரியவில்லை.
இவர் யார் இவர் ஏன் இப்படி தனியாக போய்க்கொண்டு இருக்கிறார் என்று கேட்டார் அந்த சன்னியாசி.
என்ன இப்படி கேட்கிறீர்கள்? இவர்தான் கடவுள். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள். முன்னால் போகிற ஊர்வலம் எல்லாம் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான் அப்படி என்றார்.
இதை கேட்டதும் அந்த சந்நியாசிக்கு தூக்கி வாரிப்போட்டது . இதுவரைக்கும் கனவு கண்டு கொண்டிருந்தவர் முழித்துக் கொண்டார். அதன் பிறகு யோசித்துப் பார்த்தார்.
உண்மைதான் மக்கள் எல்லோரும் பக்தி மார்க்கத்திலே போவதாக நினைத்துக் கொண்டு பாதை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். கடவுளை பின்பற்றுவதாக நினைக்கிறார்கள் ஆனால் கடவுளுக்கு பின்னால் யாருமே இல்லை.
இன்னும் இயல்பாக இதைப்பற்றி யோசித்துப்பார்த்தால் உண்மைக்குப் பின்னால்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் அந்த உண்மை அனாதையாய் போய்க்கொண்டிருக்கிறது.அந்த அளவுக்கு ஆகிவிட்டது இந்த உலகம்.
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*மேற்கத்திய வல்லரசு வணிகர்களுக்கு எதிராக இந்தியாவைக் காப்பாற்ற வங்காளதேச போரில் குதித்த ரஷ்யாவே நமது உண்மையான நண்பன்...*
*50 ஆண்டுகளுக்கு முன், டிச., 1971ல், வங்காளதேசம் மீதான போரை நிறுத்தும்படி, இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது...*
*அதிர்ச்சியடைந்த இந்தியா சோவியத் யூனியனுக்கு உதவி கேட்டு SOS அனுப்பியது...*
*இந்திய வரலாற்று புத்தகங்களில் இருந்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட வரலாறு இது...*
*1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானின் தோல்வி உறுதியான போது, அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான உலகின் பிரம்மாண்டமான USS எண்டர்பிரைஸ் தலைமையிலான அமெரிக்க 7வது கடற்படையின் படைக்குழுவை வங்காள விரிகுடாவிற்கு அனுப்புவதற்கு
நித்ய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பக்ஷ சிவராத்திரி
யோக சிவராத்திரி
மஹா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி: வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
சென்னை : கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு, நகைகளை திரும்ப வழங்காததுடன், அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் செய்வதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்து பெற்ற கடன்களை, தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.இதற்கு, பல்வேறு நிபந்தனைகளின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களின் பட்டியல், அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்காத ஊரக பகுதிகளில், பயனாளிகளிடம் நகைகளையும், தள்ளுபடி சான்றும் வழங்கும் பணி, பிப்., 10ம் தேதி துவங்கியது.
உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பி கொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா ?
அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள் பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..
பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ் பாருங்க ..
🌹 🌿 சிவத் தலங்களில் தலைமையாகக் கருதப்படுவது காசி. அங்குள்ள சிவன் கோயில்களைக் கணக்கிட முடியாது. காசி நகருக்கு இதயம் போலக் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது. 🙏🇮🇳1
அங்கு சிவ ராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும்.
🙏🇮🇳2
🌹 🌿 காசியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள். ஒரே வரியில் சொல்வதானால், காசி முழுவதுமே அன்று ஜெக ஜோதிமயமாக இருக்கும்.
*ஒருத்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று நாலு பேரிடம் யோசனை கேட்டான்.
பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். அதனால் பணம் சம்பாதிக்கின்ற வழியைப் பார் அதன் பிறகு நீ தேடிக் கொண்டிருக்கின்ற மகிழ்ச்சி உன்னைத் தேடிக் கொண்டு வரும் என்று சொன்னார்கள்.
அப்படி என்றால் மகிழ்ச்சி இருக்கிற இடம் பணம்தான் என்று அவன் முடிவு செய்தான். அதை சேர்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளில் பெரிய ஆள் ஆகிவிட்டான். செல்வம் நிறைய சேர்ந்துவிட்டது.
இப்போதும் அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் நண்பர்களிடம் யோசனை கேட்டான்.