1966ல் SSLC க்கு பிறகு எனது தந்தை, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர நேர்முகத்தேர்வு இருந்தது.
அந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தாலும் நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்றால்தான் படிக்க இடமே கிடைக்கும்.
இந்த நேர்முகத்தேர்வு முறையானது இந்திய கிரிக்கெட் அணியில் ஆட்கள் எடுக்கும் முறையை போன்றதுதான்.
அவாக்களுக்கு போக மீதம் இடமிருந்தால்தான் தருவார்கள்.
அவ்வளவு ஏன் 1990கள் வரை கூட வங்கி பணிகளுக்கு ஆள் எடுப்பது நேர்முகத்தேர்வை வைத்துதான். முதல் நாள் இந்து பேப்பரில் விளம்பரம் கொடுத்து
அடுத்த நாள் சென்னையிலோ அல்லது மும்பையிலோ நேர்முகத்தேர்வு நடத்தி ஆட்களை எடுத்துவிடுவார்கள். ஆனால் அவர்களின் ஆட்களுக்கு எப்பொழுது நேர்முகத்தேர்வு என்று முதலிலே தெரியும்.
ஒரு வங்கியில் கிளர்க் வேலை பார்ப்பதற்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனின் அறிவுத்திறன் போதுமானது.
ஆனால் 1990கள் வரை கூட பொதுத்துறை வங்கிப்பணியில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. அவர்கள் தகுதி என்று நிர்ணயித்தது நேர்முகத்தேர்வில் நூல் இருக்கிறதா என்பதை வைத்து.
தமிழகத்தில் இன்று எந்த அரசு கல்லூரிகளில் சேர்வதற்கும் நேர்முகத்தேர்வு என்ற முறை கிடையாது.
நான் பள்ளி விடுதியில் படிக்கும்போது 1995ல் ஜெயலலிதா ஆட்சியின் இறுதியில் ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த விடுதி வார்டன் ஒருவர் நேர்முகத்தேர்வில் 50000 ரூபாய் கொடுத்து வேலை வாங்கியதாக சொன்னார்.
அடுத்த சில மாதங்களில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு ஆசிரியர் தேர்வில் நேர்முகத்தேர்வை ஒழித்து முற்றிலும் சீனியாரிட்டி அடிப்படையில் பணியிடங்களை நிரப்பினார்கள். அவருடன் படித்த பலர் எந்த செலவும் இல்லலாமல் அடுத்த சில மாதங்களில் வேலை பெற்றனர்.
கலைஞர் படிப்படியாக தமிழகத்திலிருந்து நேர்முகத்தேர்வு என்ற இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை ஒழித்தார்.
கலைஞரை ஏன் சிலர் ஆழ்மனதில் இருந்து வெறுக்கிறார்கள் என்பதற்கும்
ஏன் எங்களைப் போன்றோர் உயிரினும் மேலாய் மதிக்கின்றோம் என்பதற்கும் அவரின் இதுபோன்ற சமூக நீதிச் செயல்பாடுகளே காரணம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆங்கிலத்தில் இப்படி ஒரு சொல் இருக்கிறது. எதிரியுடன் கை கோர்த்துக் கொண்டு தன் நாட்டுக்கு எதிராகத், தன் சொந்த மக்களின் நலனுக்கு, விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுபவர், முக்கியமாக எதிரியின் ஆதிக்கத்தின் கீழ், அதிகாரமில்லாத, அடிவருடும், ஒரு
பொம்மை அரசை நடத்துபவர் என்பது அதன் பொருள்.
இது உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதரின் பெயரைக் கொண்டு உருவான சொல் (எபோனிம் eponym).
விட்குன் குயிஸ்லிங் நார்வே நாட்டில் மக்கள் செல்வாக்கில்லாத கட்சியை நடத்தி வந்தவர்; இனவெறி கொடுங்கோலன் இட்லர் பிற நாடுகளைக் கைப்பற்ற தொடங்கியதும்
இட்லர் படைகளை வரவழைத்து நார்வேயைக் கைப்பற்றி, இட்லரிடம், காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி, நார்வேயில், நியமிக்கப்பட்ட ஜெர்மானிய ஆளுநருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு, அவருக்கடியில் நார்வேயின் பொம்மை பிரதமராக 1942 முதல் 1945 வரை இருந்தவர்.
நான் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன், நன்றாக இருக்கிறேன். இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம்? இதற்கும் கலைஞருக்கும் என்ன சம்மந்தம்?
எங்கள் ஊர் தம்பிகள் சிலரின் கேள்வி இது.
அவர்களுக்கான பதில்.
உங்கள் வீட்டில், சித்தப்பா, பெரியப்பா வீடுகளில் 1967களுக்கு முன்பு எத்தனை பேர் எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்துப்பார், அப்படி தேர்ச்சியடைந்திருந்தால், எத்தனை பேர் பதினோறாம் வகுப்பு(அன்றைய SSLC) தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று
யோசித்துப் பார்க்கவும். அதையும் மீறி எத்தனை பேர் PUC தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்கவும்.
எனது அப்பா SSLCயில் மூன்றாவது முறைதான் தேர்ச்சியடைய முடிந்தது. எனது சித்தப்பா PUCயில் தோல்வியடைந்த பிறகு அவரால் அடுத்து படிக்க முடியவில்லை.
யார் நமக்கு நன்மையைச் செய்தார்களோ எது நமக்கு நன்மையை விளைவித்ததோ அதையே கெட்டதாக காட்டுவது சங்கிகளின் வித்தைகளில் ஒன்று.
குடிசைமாற்று வாரியத்தை அந்த மக்களுக்கு எதிரானமாக கட்டமைத்தார்கள்.
தந்தை பெரியார் சமத்துவபுரங்களை பட்டியலின மக்களுக்கு எதிரானதாக கட்டமைத்தார்கள்.
அதுபோன்றதொரு போலி கட்டமைப்புதான் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இழிவானதாக கட்டமைத்திருக்கிறார்கள் சங்கிகளின் தம்பிகள்.
90களுக்கு முன்புவரை எங்கள் கிராமத்தில் பரவலாக கூரை வீடுகளை பார்க்க முடியும். பெரும்பாலோர் பள்ளிக்கல்வியோடு படிப்பை நிறுத்தியவர்கள்.
பலர் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்த சிறு விவசாயிகள். நீர்வளம் இல்லாத,மண் வளமும் இல்லாத அந்த நிலங்களில் விவசாயம் செய்வது வரவிற்கும் செலவிற்குமே பொதுமானதாக இருக்கும். எங்கள் பகுதிகளில் தொழில் வளர்ச்சியும் இல்லை.
வரலாற்றில் இதுவரை கிடைத்த ஆதராங்களின் படி முதன் முதலில் எழுத்து முறையை உருவாக்கியவர்கள் சுமேரியர்கள். சுமார் 8000 வருடங்களுக்கு முன்பே அதை உருவாக்கியிருந்தாலும் ஆரம்பத்தில் அதை வரி வசூல் கணக்குகளை எழுத பயன்படுத்தும் கணித குறியீட்டு மொழியாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அந்த சுமேரிய எழுத்து வரி வடிவத்தை இப்பொழுது க்யூனிஃபார்ம் என்று அழைக்கிறார்கள்.
5000 வருடங்களுக்கு முன்பு இந்த வரிவடிவத்தை வாக்கியங்கள் எழுதவும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.
பாபிலோனிய அரசன் ஹமுராபியின் சட்டங்கள் இன்று நமக்கு தெரியக் காரணம் இந்த வரிவடிவத்தை ஆங்கிலேய அதிகாரி ஒருவர் எப்படி படிக்க வேண்டும் என்று கண்டறிந்த பின்பு தான்.
சரி விசயத்திற்கு வருவோம். ஹராப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகமும் சுமேரிய நாகரிகமும் சம காலத்தில் இருந்தன. இரண்டிற்கும் வர்த்தக
மன்னர்களிடம் வரியில்லா மானிய நிலங்களைப் பெற்று உழைக்காமல் உட்கார்ந்து தின்றுவிட்டு, வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு சென்னையில் இருந்தால்தான் வளர்ச்சி் என்று தங்கள் முன்னோர்களுக்கு இலவசமாக கிடைத்த நிலங்களை விற்றுவிட்டு சென்னையின் மையப்பகுதிகளில் குடியேறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க
வில்லை. அப்படி குடியேறியவர்களின் தலைமுறை இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். நாங்கள் இப்பொழுதுதான் முதல் தலைமுறையில் படித்து வெளியில் வருகிறோம். பெற்றோர் உதவியில்லாமல் பரம்பரை சொத்துக்களின் பலமில்லாமல் சொந்த உழைப்பில் புறநகர் பகுதிகளில்
அடுக்குமாடி வீடுகளை மட்டும்தான் வாங்க முடியும். மாநகரங்களில் தனி வீடு வாங்க கோடிகள் தேவைப்படும். அதிவும் மையப் பகுதிகளில் கனவு கூட காண முடியாது. மாநகரத்து கல்வி, வேலைவாய்ப்புகள் நம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதை குற்றமாக பார்க்க வைத்துவிட்டார்கள் போலி
திராவிடக் கொள்கைகளின் அடிப்படை நமது சுயமரியாதை,சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைதான். நூறாண்டுகளாக நம் தலைவர்கள் இவற்றிற்குதான் தங்கள் வாழ்நாள் உழைப்பைக்கொடுத்தார்கள். நம்ம தலைவர்களின் கவனத்தை இவற்றில் இருந்து திசைதிருப்பத்தான் காவிகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். இனியும்
ஈழத்தை வைத்து திசைதிருப்ப முடியாது. ஆகையால் பூமாதேவியை கையில் எடுத்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பிரச்சனை என்பது உலகளாவிய பிரச்சனை. வளர்ந்த நாடுகளின் அளவிற்கு மீறிய சுரண்டலால் ஏற்பட்டது. அதை அவர்களால்தான் சரி செய்யமுடியும். கடந்த 30 வருடங்கள் முன்பு வரை நம்மில் பெரும்பாலோர்
கூரை வீடுகளில்தான் வாழ்ந்தோம். இன்றுவரை பெரும்பாலோரிடம் நான்கு சக்கர வாகனங்கள் கிடையாது. தமிழர்கள் சிக்கனமானவர்கள். நம் உருவாக்கும் impact என்பது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. இவர்கள் இவற்றை நம்முடைய ஆகப்பெரிய பிரச்சனையாக பேசுவதன் நோக்கம், நம் தலைவர்களை அடிப்படை