சிறுகதை சமபங்கு
கெளரிக்கும் சங்கரனுக்கும் பீச் ரோட்டில் நடந்தே இரண்டாவது பிள்ளை வீட்டுக்கு போக பிடிக்கும். இருவரும் பேசாமல்தான் நடப்பார்கள்.ஆனால் இருவரின் மனமோ அந்த அலை சத்தத்துடன் பழைய நாட்களை அசை போட்ட படியேதான் நடக்கும்.
பெரியபிள்ளை ரமணன் காரில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை.ஆமாம் பெரிய பிள்ளை வீட்டில் நாலு மாத turn முடிந்து விட்டது.இனி இரண்டாவது பிள்ளையிடம் நாலு மாதம்.அங்கிருந்து பெண் வித்யாவிடம் நாலு மாதம்.பெண்ணுக்கு சம பங்கு சொத்துதானே.
.
பின்னே அவளும் சரிசமமாகத் தான் வச்சுக்கணும் எனும் வாதம்.ஆனால் பெண் நாலு மாதம் தாண்டியும் இங்க இருக்கட்டும் என சொல்ல முடியாது.பெரியவன் காச்மூச்னு கத்துவான்.வேண்டாம் அப்புறம் நான்தான் நிறைய நாள் வச்சுண்டேன் அம்மா நகையெல்லாம் எனக்குத்தான்னு உன் பெண் ஆரம்பிப்பாள்.
எனக்கு இரண்டும் பெண் என்பான் தன் யோசனையில் பேசுகிறனா அல்லது ஆலோசனை பெற்று பேசுகிறானா? மனதில் நினைத்துக்கொண்டாலும் கணவரிடம் கூட பகிர்ந்து கொள்ள மாட்டாள் கௌரி..
சங்கரனும் தன் சக்திக்கு மீறியே தான் குழந்தைகள் மூவருக்கும் செய்தார்.
நல்ல படிப்பு கல்யாண செலவு என வஞ்சனை
இல்லாமல் செய்தார்.தன் பூர்விக சொத்து விற்று மூவருக்கு சரி சமமாக பிரித்துக் கொடுத்தார். கெளரி யின் நகைகள் மட்டுமே பாக்கி.நகையையும் பிரித்து விடலாம் என்று நினைத்தாலும் ஏதோ இருக்கட்டும்.நாம போனப்புறம் எடுத்துக்கட்டும் என்று இருந்து விட்டாள் கெளரி.
கெளரிக்கு தனியாக இருக்கமுடியும் எனும் தன்னம்பிக்கை குறைந்தவுடன் பெரிய பிள்ளை வந்தவன் வீடு வாசலை விற்றுவிட்டு தாய் தந்தையை தன்னுடன் வா என கூட்டிச் செல்லவும் சங்கரனும் கெளரியும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள்.
ஆனால் நாலு மாதம் முடியும் நேரத்தில் த்தான் தாங்கள் போட்டிருக்கும்
ப்ளானை ஆளுக்கு நாலு மாதமாக வைத்துக்கொள்ளலாம் என போட்டிருக்கும் ப்ளானை பெரிய பிள்ளை சொன்னான்.
சங்கரனால் கெளரியால் எதுவும் பேசமுடியாது ஏதேதோ நியாயம். ஆமாம்மா என்
குழந்தையை பார்த்துக்கலை உன்குழந்தையைத்தானே பார்த்துண்டாங்கிற பேச்சு வேண்டாம் .
நீ எப்படி சொத்தை சரியா பிரிச்சயோ அதே மாதிரி நாங்களும் உங்களை கரெக்டா நாலு நாலு மாசம் வச்சுக்கிறோம் என சொன்ன போது இதுதான் இந்தக்கால நியாமோ என இருவரும் பேசாமலே இருந்தனர்.
ஆனால் இந்த நாலு நாலு மாதம்
அவரவர்களுக்கு ஏற்றமாதிரி எல்லாத்தையும் மாத்திண்டு இருப்பது இருவருக்கும் க
ஷ்டமாக வே இருந்தது.இது என்னிடம் எனும் ஒட்டுதல் இல்லாமல் சொந்த வீட்டிலேயே விருந்தாளி போல் இருப்பது சொல்லமுடியாத துயரமே.
இதை சொன்னா என்ன சொல்வார்கள்.
குழந்தைகள் பெற்றோரை வச்சுக்கவே யோசிக்கும் இந்த காலத்தில் இவர்கள் அழகா வச்சுக்கறாளே.
இந்த பெரியவங்களுக்கே அட்ஜெஸ்ட்மென்ட் போறாது என்பார்கள்.
தான் அரைச்சு வைச்சுட்டு போங்கோன்னு லதா சொன்னா.டிபன் கவலை இல்லாம ஒரு வாரம் ஒடுமே.அதான் கேட்டா செஞ்சேன்.
எனக்கும் என் கடைசி மூச்சு வரை என் மாமியார் மாதிரியே செஞ்சுடம்ணா.ஞாபகம் இருக்கோ உங்கம்மா சாகறன்னிக்கு க்கூட தோசை வாத்து தான் சாப்பிட்டு எனக்கும் வாத்துப் போட்டுட்டு
ஒரு மணி நேரத்தில் போயிட்டா .ம்ஹூம் கிடைக்கணும்.மகராசி என்றாள் கௌரி.
ஏன் இன்னைக்கு உன்பிள்ளை திரும்ப திரும்ப கார்ல் கொண்டு விடறேன்னா?வேண்டாங்கவும் எதுக்கு தன்னோடு காசியாத்திரை கம்பை கொண்டு வந்து கொடுத்தான்.?
சங்கரன் கேட்கவும் சிரித்தாள் கெளரி.அது ஒண்ணுல்லைனா.
நீங்க நடுவில் என் கையை பிடிச்சுக்கறேள்ளோனோ அப்படி பிடிச்சுக்காம கம்பை ஊணிண்டு போகத்தான்.சிரித்த படியே சொன்னவள் தொடர்ந்தாள்.
போனமுறை நாம கை பிடிச்சுண்டு நடந்து போறதை அவன் பிரண்ட் சுரேஷ் பாத்துட்டு
ஏதோ கமென்ட் அடிச்சுருக்கான் அதான்.
ஏண்டி.ஏண்டி என்றார் கெளரியை பார்த்து.
ஆமாண்ணா அவா சின்னவா கையை விடாம பிடிச்சுண்டே இருந்தா பிரியம்.
நாம் வயசானவா விழுந்துடாமா இருக்க பிடிச்சுண்டாலும் வயசாயியும் கிழங்களுக்குக்கு ஆசை விடலை என்பா.
அதான் என்னை பிடிச்சுக்காம நடக்கிறதுக்காக கம்பு கொடுத்துருக்கான் பிள்ளையாண்டான்.புரிஞ்சதா? நின்றாள் கௌரி.
அந்த நேரம் பார்த்து பூக்காரி அம்மா பூ வாங்கிக்க அம்மா என வர இரண்டு முழம் தாம்மா.இலைல சுத்திடு.எனக்கு ஒரு கிள்ளு தா.போதும் என வாங்கி அந்த பூவை தலையில் வைத்துக் கொண்டு நகர்ந்தாள் கௌரி.
ஏன் கௌரி எல்லோரையும் போல உனக்கும்
பூவோடு பொட்டோட போகத்தான் ஆசையா?நின்று கேட்டார் மனைவியை.
இல்லைனா.
இல்லவே இல்லை.உங்களை அனுப்பிட்டுத்தான் நான் வரணும்னு நினைப்பு.இந்தக்கால குழந்தைகளுடன் தாயார்களால் எப்படியோ மேனெஜ் செய்து விட முடியும்.அதுவும் உங்களைப்போல் ஒரு வென்னீர் கூட வைக்க தெரியாமல் இருக்கும் ஆண்கள் ரொம்பவே கஷ்டப்படுவீள். ஞாபகம் இருக்கோ.ஒரு சினிமாவுல வருமே.
இந்த அம்மா போனதுக்கு பதிலாக அப்பா போயிருக்கலாம்.சமையல் வேலையாவது செய்வாள் என மருமகள் சொல்வாளே.ம்ஹும்
என்று பெரு மூச்சு விட்டவள் சித்த ஒக்காத்துண்டுட்டு போவோமா?என்னவோ நடக்கவே முடியலை.மூச்சு ரொம்ப வாங்கறது என்றாள் கௌரி.
சரி சரி உட்காரு.காலைலேருந்து வேலை வேலை.
ஒருவார ஏற்பாடு பண்ணி வச்சுட்டு கிளம்பி இருக்க.கொஞ்சநஞ்ச வேலையா என்ன?அலுப்பும் கோபமுமாக சொல்லி அங்கிருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னவர் அந்தபக்கம் வந்த ஆட்டோவை நிறுத்தலாம் என அவசரமாக கம்பை ஊண்றி ரோட்டில் இறங்க வேகமாக வந்த ஆட்டோ வோ சடன் ப்ரேக் போட்டு நிறத்து முன் பயந்து பின்வாங்க
கால் தடுமாறி அங்கிருந்த கல்லின் மேல் தலை நச்சென படுமாறு விழ எந்த நேரத்தில் கௌரி நீங்க முன்னாடி போயிடணும்னு சொன்னாளோ தெரியலையே.சட்டென நிகழ்ந்ததே.
பார்த்துக்கொண்டிருந்த கௌரியோ
பதறி எழுந்தவள் ஏன்ன்ன்னா என கத்திக்கொண்டே நிற்க முடியாமல் பெஞ்சிலேயே தலை தொங்க சரிந்தாள்.
இனி இவர்கள்வருவார்களோ என கடலலைகள் வந்து வந்து கரை தொட்டுத்தொட்டு தேடினாலும் அவர்கள்தான் வரப்போவதில்லை.
கண்களில் கண்ணீருடன்
சர்வம் சீதாராம மயம்
Thanks for the picture
Govindaraj Lakshmi Narayanan
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்., பெயருடன் நான்கு சேர்ந்து வரும்.
சில நாலு., நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என ‘நான்கு’ வரும்.
நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது
அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்....
ஒரு பெண் ஷாப்பிங் போனார்.
.
கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம்!
"நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா?" என்று கேட்டார்.
.
அதற்கு அந்தப் பெண், "இல்லை. இல்லை. என் கூட ஷாப்பிங் வரமாட்டேன்னு என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு. அதான் அவர் டி.வி பார்க்காம இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டேன்." என்றாள்.
.
*கருத்து: மனைவி எங்கே கூப்பிட்டாலும்*
*செல்ல மறுக்காதீர்கள்* ..!!
.
இதைக்கேட்டு கடைக்காரர்
சிரித்தபடி அந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார்.
.
"என்னாச்சு?" என்று ஆச்சரியத்தோடு
அந்த பெண் கேட்டார்.
.
அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார், "உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார்." என்று.
.
ஒரு நல்ல கதை.
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை....
அனைவரும் இது போன்ற நேரங்களில் படித்துப் பயனடையுங்கள்.....
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?
பஞ்ச பாண்டவரின் தந்தையான
பாண்டு,
உயிர் பிரியும் தருணத்தில் தனது மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.
பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.
விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்.
சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?
‘மரியாதையோ, இல்லையோ. சுத்தம் முக்கியமில்லையா? தெருவில் போட்டுக்கிட்டு நடந்த செருப்பைப் போட்டுக்கிட்டு அப்படியே கோயிலுக்குள்ளே போகலாமா?’ என்றார் இன்னொரு நண்பர்.