#மகாபெரியவா #நங்கநல்லூர்ராஜராஜேஸ்வரிகோவில்
பல வருடங்களுக்கு முன்பு நடந்த அதிசயம் இது. அப்போது காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்தரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு
திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார். வரும் வழியில், பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள, அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக வேண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைத்தார். மகா பெரியவா கேட்டது
சிஷ்யர் காதில் விழவில்லை. சிறிது நேரத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள் தண்ணீர் கேட்டீர்களே"என்று கூறி கொடுத்தாள். அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு அவளை காணவில்லை. உடனே தனது
சிஷ்யரை அழைத்து விவரத்தைக் கூறி, "யார் அந்த சிறுமி, தண்ணீரை நீங்கள் தான் சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா?" என்று கேட்க, அவர்களோ, இல்லையே, அந்த சிறுமி யாரென்றே தெரியாது என்று வியப்புடன் கூறினார்களாம். மகா பெரியவர் சற்றே கண்மூடி அமர்ந்திருந்தார். வந்தது சாட்சாத் அகிலமெல்லாம்
காக்கும் அம்பிகையான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உணர்ந்து, அன்றைய கிராமமான பழவந்தாங்கல் கிராம பெரியவர்களையும், ஊர் மக்களையும் அழைத்து, "இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள். உடனே தோண்டி கண்டு பிடியுங்கள்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்க சென்றுவிட்டார். மகா
பெரியவர் கூறியபடி, கிராமப் பெரியவர்கள் அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும், பின் ஸ்ரீ சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைத்தது. இந்தத் தகவல் மகா பெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் மகிழ்வுற்று, அந்த இடத்தில் விக்ரக பிரதிஷ்டை செய்து, அந்த அம்பிகைக்கு
ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி' என்ற திருநாமத்தை வைத்தார். இதுதான், நங்கநல்லூரில், பழவந்தாங்கல் நேரு காலனியில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, சிறுமி வடிவத்தில் அருள் பாலிப்பது சிறப்பு. இந்தக் காட்சியை வேறு எங்கும் காண்பது அரிது.மாசி மாதத்தில்
ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை சுமார் ஆறு மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது விழச் செய்வது வருடமும் அற்புதமாக நடைப்பெறும். இதன் காரணமாக சூரிய வழிபாடு என்ற நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரகாரத்தில் விநாயகர் வள்ளி தெய்வானையுடன்
முருகன் சண்டிகேஸ்வரி உள்ளனர். கோயில் முன்புறத்தில் ராஜேஸ்வரி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்க அவருக்கு இருபுறமும் லட்சுமி சரஸ்வதி விநாயகர் முருகன் ஆகியோர் உள்ளனர். பக்தர்கள் தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் கல்விச் செல்வத்துடன் பொருட் செல்வமும் பெற்று வாழ பிரார்த்தனை
செய்கிறார்கள்.
ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 6
#MahaPeriyava
Tirupugazh Mani Krishnaswamy Iyer, a devotee, lived in Mylapore, Chennai. He and his family had immense devotion towards Periyava. Krishnaswamy Iyer dedicated his life to popularize Arunagirinathar's Tirupugazh songs. His wife was affected with Tuberculosis and it Image
became worse. She was treated at the Madanapalle Tuberculosis Hospital (Sanatorium) in Andhra Pradesh. Periyava set out on a pilgrimage to Kasi by Padayatra and enroute stayed at Madanapalle. Mani’s wife was eager to see the Mahaan. But her physical condition did not make it
possible. She knew her days were numbered. ‘Before Yama could come, how comforting it would be to see Shankara! I can't even turn my body on the sick bed. I am so unlucky’ she thought. The news that Tirupugaz Mani's wife is in serious condition was conveyed to Periyava. It is not
Read 19 tweets
Apr 5
பாரத நாடு பழைய பாரம்பரிய நிலையை அடைகிறது. உக்ரெயின் போர் தொடங்கியபின் நம் நாட்டுக்கு நம் பிரதமர் #மோடி உடன் ஆலோசிக்க வந்த வெளிநாட்டு பிரமுகர்கள் பட்டியல்:
மார்ச்19 - ஜப்பான் பிரதம மந்திரி
மார்ச்20 - ஆஸ்திரியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்
மார்ச்21 - ஆஸ்திரேலியா பிரதம மந்திரி
மார்ச் 23 - கிரீஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்
மார்ச் 24 - ஓமான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்.
மார்ச் 25 - சைனா வெளியுறவுத் துறை அமைச்சர்
மார்ச் 28 - ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு தூதர்- இந்தோ பசிபிக்
மார்ச் 30 - மெக்சிகோ & ஜெர்மனி நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள்.
மார்ச் 31 - பிரட்டன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் & அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் துணை இயக்குனர்.
ஏப்ரல் 1 - ரஷ்ஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்.
ஏப்ரல் 2 - நேபால் நாட்டு பிரதம மந்திரி.

இவர்கள் எல்லாம் வளர்ந்த நாடுகள், உலகில் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.
Read 4 tweets
Apr 5
#ஸ்ரீமுஷ்ணம் மனிதர்களுக்கு மோக்ஷ பூமி. இங்கு அருள்புரிபவர் ஸ்ரீ பூவராஹ மூர்த்தி. ஸ்ரீ வராஹ க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இந்த புண்ய க்ஷேத்திரம் ஸ்வயம் வயக்த க்ஷேத்திரம். அதாவது பூமியில் யாராலும் தோற்றுவிக்கப்படாது, அனாதி காலம் முதல் இருந்து வரும் க்ஷேத்திரம். இவ்வாறான மற்ற Image
க்ஷேத்திரங்கள்: வேங்கடாத்ரி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அகோபிலம், நரநாராயணம், துவாரகை, மதுரா, ஜனார்த்தனம் போன்றவை. நதிகளில் எப்படி கங்கை முக்கியமானதோ அது போல ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு க்ஷேத்திரங்களில் முக்கியமானது இந்த வராஹ க்ஷேத்திரம்.
ஸ்ரீமுஷ்ணத்தில் எல்லா தீர்த்தங்களும் சேர்கின்றன Image
என்பது நம்பிக்கை. எல்லா தேவதைகளும் இங்கிருக்கும் ஸ்வேதவராஹனுக்கு சேவை சாதிக்கும் பொருட்டு வசிப்பதாக ஐதீகம். இப்பெருமாளை ஆராதித்து வந்தால் வைகுந்த பதவி நிச்சயம் என்று வராஹ புராணம் கூறுகிறது. பெருமாள், கடலில் இருந்து பூமியை மேலே கொண்டு வந்து தேவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி Image
Read 29 tweets
Apr 4
காங்கிரஸ் கூட்டணி அரசு உருவாக்கிய ₹1.3 லட்சம் கோடி எண்ணெய் கடனை 2014ல் எங்கள் அரசு (மோடி-பாஜக அரசு) தலையில் வந்து விழுந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மோடி அரசு இதுவரை அசல் + வட்டியாக ₹93,685 கோடி செலுத்தியுள்ளது என்பது நமக்குத் தெரியுமா? மேலும் 2026 ஆம் ஆண்டுக்கு முன்
வட்டி மற்றும் அசல் தொகை ₹1.67 கோடியைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. காங்கிரஸ் வெளியிட்ட ₹1.3 லட்சம் கோடி கடன் பத்திரத்திற்கு, எங்கள் அரசு ₹2.6 லட்சம் கோடியை (வட்டி + அசல்) திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஜூன் 4, 2008 அன்று, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்,
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்: “என்ன இருந்தாலும் கடனில் எண்ணெய் வாங்குவதும் எண்ணெய் நிறுவனங்களில் கடன் பத்திரங்கள் மற்றும் பற்றாக்குறையை ஏற்றுவது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அல்ல என்பதை இந்த தேசம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய
Read 4 tweets
Apr 4
Prime Minister Modi is bringing every single citizen of India free of cost from war-torn Ukraine. Whereas, at the time of the Kedarnath disaster, Congress took a mind-boggling Rs 4,60,000/body for the removal of Hindu dead bodies! On the 16th day of June 2013 there was a huge
flood in Kedarnath in the Uttarakhand state causing heavy destruction and casualties. 25,000 pilgrims died in the heavy flood which continued for three consecutive days. The Congress Government didn't take any measures to rescue the pilgrims who were trapped in Kedarnath. On the
fourth day the international community came to know of the terrible disaster and the news became the headlines in international media. It was only then that the shameless Congress Government made a declaration of assistance. On the 18th of June, Sonia Gandhi went to the USA for
Read 12 tweets
Apr 4
“வரதராஜுலு நாயிடு தலைமையில் #ஈவேரா வெளியேறி திராவிட இயக்கம் உருவானதன் பின்னணியில் உள்ள இந்த மொழி அரசியலை நாம் கோவை அய்யாமுத்து போன்றவர்களின் சுயசரிதையில் காணலாம். சி.என்.அண்ணாத்துரை போன்றவர்கள் கூட வீட்டில் தெலுங்கு பேசியவர்கள் என்பதை பாரதிதாசனின் கட்டுரை காட்டுகிறது.
இத்தனை
ஆண்டுக்கால அரசியல் வழியாக வடுகர் x தமிழர் பிரச்சினையை வெற்றிகரமாக பிராமணர் X தமிழர் என்று மாற்ற இவர்களால் முடிந்தது. அன்று எழுச்சி பெற்று வந்த இடைநிலைச்சாதி அரசியலுக்கு இந்த இருமை உதவிகரமாகவும் இருந்தது. இதுவே வரலாறு. சிலகாலம் முன்பு அசோகமித்திரனுக்கு சென்னையில் நிகழ்ந்த ஒரு
கூட்டத்தை லீனா மணிமேகலை பிராமணியக் கூட்டம் என்று கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார். நான் லீனாவை நன்றாக அறிவேன். தனிப்பட்ட முறையில் மதிப்பும் பிரியமும் அவர்மேல் உண்டு. அந்தக் கட்டுரை எனக்கு ஒரு ஆச்சரியம். நான் நண்பரைக்கூப்பிட்டு லீனா தெலுங்கரா என்றேன். இல்லை சார் தலித் என்றார்கள்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(