#ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்
ஸ்ரீராமர் பூமியில் தோன்றிய காரணங்கள் நிறைவேறி விட்டன. ராமருடன் வந்த லக்ஷ்மணன் தன் இருப்பிடம் சேர்ந்து விட்டான். சீதா தேவியாக பிறவி எடுத்த லக்ஷ்மி தேவியோ ராமருக்கு முன்பாகவே வைகுண்டம் சென்று காத்திருக்கிறாள். ராஜ்யத்தை தன் பிள்ளைகளுக்கும் மற்ற சகோதரர்களின்
வாரிசுகளுக்கும் பிரித்து கொடுத்தாகிவிட்டது. பரதனும் சத்ருக்கனனும் ராமருடன் புறப்பட தயாரானார்கள். ஆனாலும் ஸ்ரீராமரால் அவர் விருப்பப்படி தன் வாழ்வை துறக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அனுமன் தான். அனுமன் இரவும் பகலும் ராமருடைய அருகில் இருந்து அவர் பணிகளைச் செய்து ஒரு போதும் அகலாமல்
இருந்தான். பகவான் ஸ்ரீ ராமர் இறுதியாக அனுமனுக்கு நிரந்தர பிரிவின் அவசியத்தை விளக்க எண்ணினார். ஒரு நாள் ராமர் அனுமன் பேசிக் கொண்டு இருந்தார். அனுமன் அறியாதவாறு தன் விரலில் சூட்டியிருந்த மோதிரத்தை ஒரு பள்ளத்தில் விழ செய்தார் ராமர். அந்த மோதிரம் பள்ளத்தின் உள்ளே ஓடியது. உடனே இராமன்
அனுமனை நோக்கி. அனுமனே! அந்த மோதிரம் பள்ளத்தில் விழுந்து விட்டது. அந்த மோதிரத்தை எடுத்து வா என்று கூறினார். அனுமன் தன் உடலை மிகச்சிறிய பூச்சி வடிவாக்கிக் கொண்டு மோதிரம் விழுந்த பள்ளத்தில் நுழைந்தார். ஆனாலும் மோதிரமோ நழுவிக்கொண்டு பாதாளம் நோக்கி சென்று கொண்டிருந் தது. அனுமனும்
விடாமல் மோதிரத்தை பின் தொடர்ந்தார். இறுதியில் அந்த மோதிரம் பாதாள லோகத்தின் வாயிலை அடைந்தது. பாதாள லோகத்தில் கதவு திறந்து கொள்ள மோதிரம் உள்ளே நழுவி விட்டது. பாதாள லோகத்தில் கதவும் மூடிக்கொண்டது. மோதிரத்தை பின்தொடர்ந்த அனுமன் பாதாள லோகத்தில் வாசலில் நின்றான். அப்போது அங்கே பாதாள
லோகத்தின் காவலரான காலதேவன்
அனுமன் முன் வந்து என்ன தேடுகிறாய் எனக் கேட்டான். அனுமனும் பகவான் ஸ்ரீராமரின் மோதிரம் உள்ளே சென்று விட்டது அதை எடுத்துச் செல்ல வந்தேன் என்றான். அப்படியா என்று புன்னகைத்தவாறு காலதேவன் பாதாள அறையின் கதவை திறந்து விட்டான். உள்ளே சென்று உன் மோதிரத்தை
எடுத்துச்செல் என்று அனுமனிடம் கூறினான். அனுமனும் பாதாள அறைக்குள் நுழைந்தான் ஆனால் அவன் தேடி வந்த மோதிரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அறையில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள் குவிந்து இருந்தன. அனைத்து மோதிரமும் ஒன்று போல் இருக்க அனுமன் குழம்பினான். காலதேவன் கூறினான். அனுமனே இவை
அனைத்தும் காலச் சுழற்சியின் அடையாளங்கள். யுகங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும். அப்போது பிரம்மா விஷ்ணு லக்ஷ்மி முதலான தெய்வங்கள் மீண்டும் மீண்டும் வரிசையாக அவதாரம் எடுப்பார்கள்.
அவர்கள் தாங்கள் எடுத்த பிறவியின் செயலை நிறைவேற்றி பின் மறைவார்கள். அவர்களை நாம் தடுக்கவோ அவர்களுடன்
செல்லவோ முடியாது. அனுமனே, ராமர் தன் மூல உரு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று ராமர் தன் மோதிரத்தை தவற விட்டார். காலசுழற்சியின் விளக்கத்தை அறிந்து நீ உன் இருப்பிடம் செல்வாயாக என்று காலதேவன் அறிவுறுத்தினான். பிறப்பு இறப்பின் மகத்துவம் அறிந்த அனுமனும்
மனம் தெளிந்த நிலையில் மீண்டும் ராமரை அடைந்தான். இப்போது பகவான் ஸ்ரீ ராமர் அனுமனிடம் விடை பெற எண்ணினார். ஆனாலும் தன் மூத்த மகன் போல் விளங்கிய அனுமனை எளிதில் உதற முடியவில்லை. ஸ்ரீராமன் அனுமனை அழைத்தார். அனுமனே உனக்கு ஒரு உரிமை தருகிறேன். உனக்கு விருப்பமானால் நான் இப்பூமியிலிருந்து
செல்லும் போது நீ என்னுடன் வரலாம் என்று கண்ணீர் மல்க கூறி அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார். அனுமன் உடல் சிலிர்த்தான். உள்ளம் நெகிந்து ஒரு கணம் யோசித்தான். பிரபு தாங்கள் என்னை உங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்ததற்கு நன்றி. ஆனால் ஒன்று மட்டும் கூறுங்கள். ஸ்ரீவைகுண்டத்தில்
நீங்கள் ராமனாக, என் பிரபுவாக இருப்பீர்களா இல்லை அவதார புருஷன் விஷ்ணுவாக இருப்பீர்களா என அனுமன் கேட்டான். என்ன சந்தேகம் மகனே! வைகுண்டத்தில் நாம் பகவான் விஷ்ணுவாகவும், சீதை லட்சுமி தேவியாகவும், லட்சுமணன் ஆதிசேஷனாகவும், பரதன் சத்ருக்கனன், சங்கு சக்கரம் ஆகவும் அவதாரத்தில் இருப்போம்
என்றார் பகவான் ராமர். அனுமனோ தயக்கமின்றி பிரபு எனக்கு ஸ்ரீராமன் போதும் உங்களை ராமனாகவும் அன்னையை சீதாபிராட்டியா கவும் மற்றவர்களை இப்புவியில் எடுத்த அவதாரங்களாவே வணங்க விரும்புகிறேன். நான் பூமியில் இருந்து உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன் உங்கள் நாமத்தை பிறர் சொல்வதை
கேட்டபடியே இருப்பேன். எனக்கு அந்த புண்ணிய நிலையை என்றென்றும் நீங்கள் அருளி னால் போதும் என்றான் அனுமன்.
ஸ்ரீ ராம சீதா ஜெயம்
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் உறையூர் சென்று சோழர்குல வல்லியும் தனது பக்தையுமான கமலவல்லியைக் கண்டு மணமுடித்து விரலில் மோதிரம் பெற்றுக்கொண்டு காவிரி வழியே மெல்ல நடந்து கோவிலில் பெரியபிராட்டியாம் தாயார் சந்நிதியை அடைவார் அரங்கன். அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலட்சுமியின் அனுமதியின்
பெயரில் தான் உறையூர் நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்! புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்து விடுகிறார். ஆஹா இன்று நாம் வீட்டுக்குப்போனால் அரங்கநாயகி எங்கே நான் அணிவித்த மோதிரம் என்று கேட்பாளே, புது மோதிரம் வந்த ஜோரில்
பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா எனக் கேட்டு நம்மை தொலைத்து விடுவாளே என்ன செய்வது என தவிக்கிறார். காவிரிக்குப் போய் பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்கள் எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறார். தானும் தேடுகிறார். தப்புப் பண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள
#மகாபெரியவா தமிழ் மொழியில் பெரிவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களை எல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை கி.வா.ஜ விடம்,“தமிழ் என்றால் என்ன” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது
சொல்லுங்கள்” என்கிறார்.
கி,வா.ஜ. அடக்கமாக, ”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்” என்றார்.
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக்கூடிய எந்தச் சொல்லும், அழகு, இனிமை.
மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது தமிழ் (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்றார்.
உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்” என்றாராம்.
ஆயுள் பலம் பெறுவதற்கும் மரண பயம் இன்றி வாழ்வதற்கும் வழிபட வேண்டிய பரிகார சிவஸ்தலங்கள் பல உள்ளன. அக்கோவில்கலில் எல்லாம் நவக்கிரகங்கள் இருப்பதில்லை. புகழ் பெற்ற புராதன சிவன் கோயில்கள் அவை. எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவக்கிரகங்கள் இருக்காது. 1. திருவான்மியூர்
மருந்தீஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் இல்லை. எமன் வந்து வழிபட்ட தலம். 2. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டுள்ளார். 3. ஸ்ரீவாஞ்சியம் 4. திருவாவடுதுறை. 5. திருப்பைஞ்சீலி 6. திருக்கடையூர். எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு
வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது. மானிடர்களின் உயிரை பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக
ஜெயதேவர் (முழுப்பெயர் ஜெயதேவ கோஸ்வாமி) இந்திய வரலாற்றின் இணையற்ற கவிகளில் ஒருவர்.
சமஸ்கிருத மொழி வல்லுனர். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் முக்கிய படைப்பு, புகழ்பெற்ற கீத கோவிந்தம் என்னும் காவியம். இந்த கவிதைத் தொகுப்பு ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் ராதைக்கும் இடையே இருந்த தெய்வீகக்
காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான இசையுடன் விவரிக்கும். இந்திய பக்தி இயக்கத்தில் இவரது படைப்பு முக்கியமானது. ஒடிசா மாநிலத்தில் உள்ள குர்தா மாவட்டத்து பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளி சாசன் என்ற இடத்தில் இவர் பிறந்தார். இது புகழ்பெற்ற கோவில் நகரமான பூரிக்கு அருகில்
உள்ளது. ஒடிசாவை கிழக்கு கங்கை பேரரசு ஆண்டு கொண்டிருந்தபோது இவர் பிறந்துள்ளார். சோடகங்க தேவர் மற்றும் அவரது மகன் இராகவா மன்னராக இருந்த காலங்களில் ஜெயதேவர் தமது படைப்புக்களை ஆக்கியிருக்க வேண்டும் என கோவில் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது. இவரது பெற்றோரின் பெயர்கள் போஜதேவன்
#அறிவோம்_வரலாறு
குஜராத்தின் #சோமநாதபுரி ஜோதிர்லிங்க சிவாலயம் #Somnath சாதுராஷ்ட்ரம் எனும் சவுராஷ்ட்ரா பகுதியின் மாபெரும் கலை பொக்கிஷமாய் இருந்தது. அன்றைய சாதுராஷ்ரம் குஜராத்தின் கடல் வணிகமும் அவர்கள் கொட்டிய செல்வமும் பெரும் நதிகளின் வளமும் அந்த சோமநாதபுரியினை சொர்க்கபுரியாக
ஆக்கியிருந்தன, மாபெரும் செல்வத்தின் அடையாளமாய் இருந்தது. இன்றைய பத்மநாதஸ்வாமி ஆலயத்தை விட அதிக தங்கம் அங்கே இருந்தது. அதை விட பெரும் அதிசயம், சிவலிங்கம் அங்கே அமரவில்லை மாறாக அந்தரத்தில் நின்றது. சுற்றிலும் 4 காந்த கல்களை பதித்து விஷேஷமான இரும்பு கல்லால் ஆன சிவலிங்கம். அதன்
ஈர்ப்பு விசையினால் நடுவில் நிறுத்தபட்டது, அந்தரத்தில் லிங்கம் மிதந்தது. நவரத்தினமும் வைரமும் பதிக்கபட்டு மின்னிய அந்த லிங்கம் சோமன் எனும் நிலவு போலவே மின்னியது. அங்கு மாபெரும் காணிக்கையும் பக்தர் எண்ணிக்கையும் குவிந்தன. கோவிலின் குறைந்த பட்ச உலோகம் தங்கம் எனும் அளவு ஜொலித்ததது.
#MahaPeriyava
When Smt D.K.Pattammal, the eminent Carnatic music singer was seven years old, she had the rarest opportunity of taking the blessings of Sri Maha Periyava. She was a regular visitor to the Kanchi Mutt and her father would always insist on her to chant slokas in the
Mutt regularly after having darshan at Kanchipuram Kamakshi Amman Temple. Having noticed the little girl’s potential, Sri Maha Periyava personally requested DKP’s father to bring her to Esanur (when she was only 7 or 8 years of age) where He was stationed for observing the
Chaturmasya Vratha. He wanted Krishnaswami Deekshithar to participate during the Navarathri Pooja and wanted young Pattammal to sing during his nine day Pooja. DKP remembered with gratitude how Sri Maha Periyavaa himself offered the coconut kept in the Navarathri kalasam to DKP’s