🏹 #சிவதனுசு சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார். இதில் ஒன்று ராவணனின் தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது. சிவ தனுசுவை வைத்திருக்கும்
ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது. ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும். இதை பூரணமாக உணர்ந்தவன்தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து
எல்லா லோகங்களுக்கும் சென்று அனைத்து லோகங்களையும் வென்று தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான். நவகிரக லோகங்களுக்கும் சென்று எல்லா நவகிரகங்களையும் தன் அடிமையாக்கி தன் சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவமானப்படுத்தினான். இத்தகைய அதர்மமான செயல்களால் சிவதனுசுவின் சக்தி சிறிது
சிறிதாகக் குறையத் தொடங்கியது. அனைத்து லோகங்களையும் வென்ற இராவணன் கடைசியில் பிரம்ம லோகத்திற்கும் சென்றான். சிவதனுசு இராவணன் பிரம்ம லோகத்தை அடைந்தவுடன் முழுதுமாகத் தன் சக்தியை இழந்து விட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத இராவணன் செய்வதறியாது திகைத்தான். பிரம்ம லோகத்தை ஆளும் பிரம்மாவை
எதிர்க்க முடியாமல் வெட்கம் அடைந்து தலை குனிந்தான் இராவணன். தன் செய்கையால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைந்து வருந்தி உடனடியாகத் தன் சொந்த அரக்க லோகத்திற்கு வெறுங்கையுடன் திரும்பி விட்டான். இனி சிவ தனுசால் என்ன பயன் என்று எண்ணி அதைத் தூக்கி எறிந்து விட்டான். இதைப் பார்த்தார் ஜனக
மகாராஜா. சிவ பிரசாதம் என்றுமே சிவப் பிரசாதம் அல்லவா! இதை இராவணன் அறியவில்லையே என்று வருந்தி அந்த சிவதனுசை தான் எடுத்து வைத்துக் கொண்டு அதற்குத் தினமும் எல்லா விதாமன அபிஷேக ஆராதனைகளையும் பூஜைகளையும் பன்னெடுங்காலமாக செய்து வந்தார் ஜனக மகாராஜா. காலச் சக்கரம் சுழன்றது. குழந்தை
பாக்கியம் இல்லாததால் சீதையைப் பூமியில் கண்டெடுத்துத் தன் மகளாக ஜனகர் வளர்த்து வந்தார் அல்லவா? சீதை சிறுமியாக இருக்கும்போது ஒரு நாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்தப் பந்து உருண்டு போய் சிவ தனுசுவின் கீழ் மறைந்து விட்டது. பந்தைத் தேடி வந்த சீதை தன்
இடது கையால் சிவ தனுசுவைச் சாதாணமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையால் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள். இந்தக் காட்சியைக் கண்ட ஜனக மகராஜாவுக்கு ஒரே ஆச்சரியம். அந்த சிவ தனுசை 10,000 வீர மல்லர்கள் சேர்ந்தால்தான் நகர்த்தவே முடியும். ஆனால், இந்தக் குழந்தை அலட்சியமாக இடதுகையால்
தூக்கி விட்டதே! அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதே சமயத்தில் இன்னொரு வருத்தமும் அவருக்கு எற்பட்டது. இந்தப் பராக்கிரமம் பொருந்திய கன்னியை எவருக்கு மணம் முடிப்பது? இவளுக்கே இவ்வளவு ஆன்மீக பலம் இருந்தால் இந்தச் சிறுமியை மணக்கும் வீரன் எத்தகைய பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும்?
உண்மையில் அப்படி ஒருவன் ஈரேழு உலகத்திலும் இருக்கிறானா என்பதே சந்தேகம். இருந்தாலும் எப்படி, எங்கே அவனைத் தேடுவது, இப்படி பல்வேறு சிந்தனைகளிடையே உழன்றார் ஜனக மகாராஜா. மகளுக்கு திருமண வயது வந்தவுடன் தகுந்த மணவாளணைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசித்தார். ஒவ்வொருவரும் தங்களுக்குத்
தோன்றிய அற்புதமான யோசனைகளையெல்லாம் கூறினர். இறுதியில் சிவ தனுசை நாணேற்றி உடைப்பவருக்கே சீதா தேவி மனைவி ஆவாள் என்று அறிவித்தார். அதன் பிறகு நடந்தவைகள் நமக்கு நன்றாக தெரியும். ஸ்ரீராமர் சிவதனுசை நாணேற்றி உடைத்துவிட்டார். அதன் பிறகு அவருக்கு திருமணம் நடந்தது. அதற்குப் பின் முறிந்த
சிவ தனுசு என்னவாயிற்று? என்பதனைப் பற்றி பார்ப்போம். நாம் நினைப்பது போல சிவ தனுசு என்பது சண்டைக்காகப் பயன்படுத்தக் கூடிய ஒரு வில் மட்டுமன்று. சிவ தனுசு சிவபெருமானுடைய திரண்ட சக்தியின் ஒரு கூறு. சிவ தனுசில் ஆயிரக்கணக்கான தனுர் வேத தேவதைகளும் தெய்வங்களும் ரிஷிகளும் முனிவர்களும்
வாசம் செய்தனர். தனுசு முறிந்ததால் அனைத்து தெய்வ சக்திகளும் வெளிவந்து தாங்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்தன. எல்லோரும் ஜனக மகாராஜாவை வணங்கி, சுவாமி பன்னெடுங் காலமாக நாங்கள் இந்த சிவ தனுசிலே குடி கொண்டுள்ளோம். இப்போது இந்தத் தனுசு முறிந்து விட்டால் நாங்கள் எங்கே செல்வது?
எங்களுக்கு சாத்வீகமாக எதிலும் ஈடுபட முடியாது. தனுர் வேதத்தில் இலயித்துள்ள எங்களுக்கு வீரம், சண்டை இவற்றில்தான் மனம் ஈடுபடும். எனவே, தாங்களுக்கு எங்கள் மார்கத்திலேயே ஒரு நல்ல வழியைக் கூற வேண்டும், என்றவுடன் ஜனகர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் சிவ தனுசிலிருந்து வெளிவந்த
எல்லா தேவ, தெய்வ சக்திகளையும் 1008 அஸ்திரங்களில் ஆவாஹணம் செய்தார். அந்த 1008 அம்புகளையும் ராமபிரானுக்கே வெற்றிப் பரிசாக அளித்து விட்டார். அந்த தனுர் வேத சக்திகளும் ராமபிரானுடைய அம்பாரத் துணியிலேயே குடி கொண்டு ராமருக்கு உறுதுணையாக நின்றன. இலங்கையில் ராவணனுக்கு எதிராக நடந்த
யுத்தத்தில் இராவணனின் உடலைத் துளைத்து அவனைப் பரலோகத்திற்கு அனுப்பியதும் இந்த 1008 அஸ்திர சக்திகளே. இராவணன் சிவ தனுசை முறையாகப் பயன்படுத்தாது யாரை எல்லாம் அதர்மமாகத் துன்புறத்தினானோ அவர்களுடைய சாபங்களே சிவ தனுசு அஸ்திரங்களாக மாறி அவன் உயிரைக் கவர்ந்தன. உண்மையில் இராமர் இராவணனைக்
கொல்லவில்லை. இராவணனுடைய தீவினைகளே அவன் உயிரைக் கவர்ந்தன. தன் வினை தன்னைச் சுடும் என்று முதுமொழிக்கு நிரூபணமாக நின்றதும் சிவ தனுசே.
ஜெய் ஶ்ரீராம்

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 13
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் உறையூர் சென்று சோழர்குல வல்லியும் தனது பக்தையுமான கமலவல்லியைக் கண்டு மணமுடித்து விரலில் மோதிரம் பெற்றுக்கொண்டு காவிரி வழியே மெல்ல நடந்து கோவிலில் பெரியபிராட்டியாம் தாயார் சந்நிதியை அடைவார் அரங்கன். அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலட்சுமியின் அனுமதியின் ImageImageImage
பெயரில் தான் உறையூர் நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்! புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்து விடுகிறார். ஆஹா இன்று நாம் வீட்டுக்குப்போனால் அரங்கநாயகி எங்கே நான் அணிவித்த மோதிரம் என்று கேட்பாளே, புது மோதிரம் வந்த ஜோரில்
பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா எனக் கேட்டு நம்மை தொலைத்து விடுவாளே என்ன செய்வது என தவிக்கிறார். காவிரிக்குப் போய் பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்கள் எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறார். தானும் தேடுகிறார். தப்புப் பண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள
Read 12 tweets
Apr 13
#மகாபெரியவா தமிழ் மொழியில் பெரிவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களை எல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை கி.வா.ஜ விடம்,“தமிழ் என்றால் என்ன” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது Image
சொல்லுங்கள்” என்கிறார்.
கி,வா.ஜ. அடக்கமாக, ”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்” என்றார்.
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக்கூடிய எந்தச் சொல்லும், அழகு, இனிமை.
மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே Image
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது தமிழ் (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்றார்.
உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்” என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
Read 8 tweets
Apr 13
ஆயுள் பலம் பெறுவதற்கும் மரண பயம் இன்றி வாழ்வதற்கும் வழிபட வேண்டிய பரிகார சிவஸ்தலங்கள் பல உள்ளன. அக்கோவில்கலில் எல்லாம் நவக்கிரகங்கள் இருப்பதில்லை. புகழ் பெற்ற புராதன சிவன் கோயில்கள் அவை. எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவக்கிரகங்கள் இருக்காது.
1. திருவான்மியூர் ImageImage
மருந்தீஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் இல்லை. எமன் வந்து வழிபட்ட தலம்.
2. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டுள்ளார்.
3. ஸ்ரீவாஞ்சியம்
4. திருவாவடுதுறை.
5. திருப்பைஞ்சீலி
6. திருக்கடையூர். எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு
வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது. மானிடர்களின் உயிரை பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக
Read 6 tweets
Apr 12
ஜெயதேவர் (முழுப்பெயர் ஜெயதேவ கோஸ்வாமி) இந்திய வரலாற்றின் இணையற்ற கவிகளில் ஒருவர்.
சமஸ்கிருத மொழி வல்லுனர். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் முக்கிய படைப்பு, புகழ்பெற்ற கீத கோவிந்தம் என்னும் காவியம். இந்த கவிதைத் தொகுப்பு ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் ராதைக்கும் இடையே இருந்த தெய்வீகக் Image
காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான இசையுடன் விவரிக்கும். இந்திய பக்தி இயக்கத்தில் இவரது படைப்பு முக்கியமானது. ஒடிசா மாநிலத்தில் உள்ள குர்தா மாவட்டத்து பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளி சாசன் என்ற இடத்தில் இவர் பிறந்தார். இது புகழ்பெற்ற கோவில் நகரமான பூரிக்கு அருகில் Image
உள்ளது. ஒடிசாவை கிழக்கு கங்கை பேரரசு ஆண்டு கொண்டிருந்தபோது இவர் பிறந்துள்ளார். சோடகங்க தேவர் மற்றும் அவரது மகன் இராகவா மன்னராக இருந்த காலங்களில் ஜெயதேவர் தமது படைப்புக்களை ஆக்கியிருக்க வேண்டும் என கோவில் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது. இவரது பெற்றோரின் பெயர்கள் போஜதேவன்
Read 7 tweets
Apr 12
#அறிவோம்_வரலாறு
குஜராத்தின் #சோமநாதபுரி ஜோதிர்லிங்க சிவாலயம் #Somnath சாதுராஷ்ட்ரம் எனும் சவுராஷ்ட்ரா பகுதியின் மாபெரும் கலை பொக்கிஷமாய் இருந்தது. அன்றைய சாதுராஷ்ரம் குஜராத்தின் கடல் வணிகமும் அவர்கள் கொட்டிய செல்வமும் பெரும் நதிகளின் வளமும் அந்த சோமநாதபுரியினை சொர்க்கபுரியாக ImageImageImageImage
ஆக்கியிருந்தன, மாபெரும் செல்வத்தின் அடையாளமாய் இருந்தது. இன்றைய பத்மநாதஸ்வாமி ஆலயத்தை விட அதிக தங்கம் அங்கே இருந்தது. அதை விட பெரும் அதிசயம், சிவலிங்கம் அங்கே அமரவில்லை மாறாக அந்தரத்தில் நின்றது. சுற்றிலும் 4 காந்த கல்களை பதித்து விஷேஷமான இரும்பு கல்லால் ஆன சிவலிங்கம். அதன்
ஈர்ப்பு விசையினால் நடுவில் நிறுத்தபட்டது, அந்தரத்தில் லிங்கம் மிதந்தது. நவரத்தினமும் வைரமும் பதிக்கபட்டு மின்னிய அந்த லிங்கம் சோமன் எனும் நிலவு போலவே மின்னியது. அங்கு மாபெரும் காணிக்கையும் பக்தர் எண்ணிக்கையும் குவிந்தன. கோவிலின் குறைந்த பட்ச உலோகம் தங்கம் எனும் அளவு ஜொலித்ததது.
Read 37 tweets
Apr 12
#MahaPeriyava
When Smt D.K.Pattammal, the eminent Carnatic music singer was seven years old, she had the rarest opportunity of taking the blessings of Sri Maha Periyava. She was a regular visitor to the Kanchi Mutt and her father would always insist on her to chant slokas in the Image
Mutt regularly after having darshan at Kanchipuram Kamakshi Amman Temple. Having noticed the little girl’s potential, Sri Maha Periyava personally requested DKP’s father to bring her to Esanur (when she was only 7 or 8 years of age) where He was stationed for observing the
Chaturmasya Vratha. He wanted Krishnaswami Deekshithar to participate during the Navarathri Pooja and wanted young Pattammal to sing during his nine day Pooja. DKP remembered with gratitude how Sri Maha Periyavaa himself offered the coconut kept in the Navarathri kalasam to DKP’s
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(