#அங்காரக_சங்கடஹர_சதுர்த்தி
இன்று சித்திரை 6, ஏப்ரல் 19/4/2022 சங்கடஹர சதுர்த்தி செவ்வாய்க்கிழமையில் வந்தால் அதிக விசேஷம். இன்று விநாயகப் பெருமானை மனமுருகப் பிரார்த்தனை செய்தால் வாழ்வில் உள்ள சங்கடங்களையெல்லாம் தீர்த்து மகிழ்ச்சியை அளிப்பார் அவர்.
மனிதர்களுக்கு ஏற்படும் சங்கடத்தை
நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும். நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் எளிதில் முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது.
நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம். மனிதர்களுக்கு மட்டும் அல்ல,
தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் கணபதியை வணங்கி நலம் பெற்றுள்ளனர். சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, விநாயகர் படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி
வழிபட வேண்டும். இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றார். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகிறது.
அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். இந்த விரதத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து எதற்காக விரதம் இருக்கப் போகிறோமோ அதை சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச்சின்னங்களை தரித்து
கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும். விநாயகரின் நாமத்தை இடைவிடாது அன்று முழுவதும் ஜெபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதும் நன்று. இரவு சந்திரோதயம் ஆன உடன் சந்திரனை பார்த்துவிட்டு, அர்க்கியம் விட்டு பிறகு பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். அன்று விநாயக புராணத்தை பாராயணம்
செய்வதும் நன்மை பயக்கும். இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். இதை அனுஷ்டித்த நிறைய பேர் இதனை உணர்ந்துள்ளனர்.கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின்
அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும். செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும். சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி
உயர்வு போன்றவை கிடைக்கும்.
‘முதாகராத்த மோதகம்‘ எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம் (5 பாடல்கள்) கணநாயக அஷ்டகம் (எட்டு பாடல்கள்) வினாயகர் அகவல், சிறப்பு வாய்ந்தவை. விநாயகரை வழிபடும்போது இவற்றை சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி அடைய வழிசெய்யும்.
விநாயகரைப் பணிவோம்.
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் ஒரு நாள் கங்கைக்கரையோரம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில் நாய்கள் வேகமாகக் குரைத்தன.
குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக் கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும்
என்பதிலேயே அதன் கவனம் இருந்தது. இதைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள் என்றார். ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். ஒரு சீடர், நாய்களின் இயல்பு இது தானே. மற்ற நாய்கள் பார்த்திருக்க ஒரு நாய் தின்று கொண்டிருக்கும் என்றார். வலிமை தான்
#MahaPeriyava
I am reminded of an incident narrated to me by an ex-official of the Indian Express. Once he went to Kalavai near Kanchi where the Swami was staying. (I too saw him once there and it was most touching to see poor villagers explaining to Periyava their worries and
problems such as the loss of a dear one, daughter eloping with a married man, or son taking to liquor. The Swami would offer them advice or guidance and they would leave, having passed on their burdens to Him). When the Express official went to the Swami, he found Him totally
silent. He was in a trance, the people there thought, and so they sat there quietly waiting for Him to look at them. A little later a poor villager came there literally sobbing and supplicating the Swami's help for his daughter's marriage. The Swami opened His eyes and asked him
#தேர்_இழுப்பதினால்_வரும்_நன்மைகள் #மஹாபெரியவா நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய வேதனையை உணர்ந்த பெரியவர் அவரிடம் “தேர் இழுத்திருக்கிறாயோ”என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார்.
“ஒரு முறை தேர்வடம் இழுத்து
விட்டு, பிறகு உன் பணியைத் தொடரு எல்லாம் நன்றாக முடியும்” என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார்.
“தேர் இழுத்தாயோ” என பெரியவர் வினவ
ஆம் அதன் பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார். தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடியும். கோயிலில் தெய்வசக்தி எப்போதும்
#திருப்புல்லாணி#ஆதி_ஜெகநாத_பெருமாள் திருக்கோயிலில் வருகிற 21 ஆம் தேதி கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த விக்னேஷ், பவதாரணி திருமணம் நடைபெறுகிறது. (பெயரைப் பார்த்து ஏமாறாதீர்கள்). நம் கோவில்களில் வழிபாடுகள், ஆகம முறைப்படியான அனுஷ்டானங்கள் பின்பற்றப் படுகின்றன. கிறிஸ்தவர்கள் திருமணம்
மற்றும் இறப்பு, இதரவை அவர்கள் மத வழக்கப்படி நடத்துகின்றனர். இந்த திருமணத்தை வேண்டுமென்றே கிறிஸ்தவ ஆலயத்தில் வைக்காமல் இந்து கோவிலில் வைப்பதில் உள்நோக்கம் உள்ளது. இந்துக்களின் ஆலயத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த திருமணம் இந்துக்களின் கலாசாரத்தை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு
திட்டமிட்டு நடக்கிறது. இந்துகளின் பழமையான கோவில்களை கிறிஸ்தவ மயமாக்க முயற்சி நடக்கிறதா? ஆலய நிர்வாகம் இந்த திருமணத்தை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.
கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்து திருமணங்களை அனுமதிப்பார்களா? இந்த திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு வேண்டுமென்றே
. @RajeAiye Yes. Actually the festival was started to bring about unity between the Saivites & Vaishnavites by Thirumalai Naicker. He did so much for the temples after the ravages of the Islamic invaders. He repaired & made several temples functioning. During his renovation work,
he saw that the temple cars (தேர்) were in a very bad condition. He built two huge Thers, one for Swami, one for Amman using some of the greatest carpenters of that time. The Masi Ther festival was re-started using these new cars. However, he had a challenge. The Thers were too
huge that a lot of people were required to pull them around the Masi streets. It was difficult to get the required manpower, especially as it was harvest time. There used to be a Chitra Pournami festival associated with #AzhagarTemple. During that time Kallazhagar will travel to
#ஆஞ்சநேயர்
அஞ்சனா கிரி மலையில் அஞ்சனா என்ற பெண் குரங்கிற்கும், கேசரி என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் அனுமன் அவதரித்தார். அஞ்சனா பிரம்மாவின் சபையில் ஒரு அப்ஸரஸாக இருந்தவர். துர்வாச முனிவரின் தவத்தை கலைத்ததற்காக சாபம் பெற்று குரங்காகப் பிறந்தார்.
அவர் சிறு பெண்ணாக இருககும்போது ஒரு
குரங்கு, காலை ஆசனமிட்டு தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அதை பார்த்தவுடன் குதூகலத்தில் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்தார். அந்த குரங்கு துர்வாச முனிவராக மாறி தவம் கலைந்து எழுந்தது. கடும் சினம் கொண்ட அவர் அஞ்சனா யார் மீதாவது காதல் கொண்டால், அத்தருணமே குரங்காக மாறி விடுவாள்
என சாபமிட்டார். மன்னிப்பு கேட்டு மன்றாடிய அஞ்சனா, தனக்கு குரங்கு முகம் இருந்த போதிலும் தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே நடக்க அவர் ஆசி கூறினார். மேலும் சிவபெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்றும், அப்படி பிறந்தவுடன் தான் சாப விமோசனம்