#தேர்_இழுப்பதினால்_வரும்_நன்மைகள்
#மஹாபெரியவா நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய வேதனையை உணர்ந்த பெரியவர் அவரிடம் “தேர் இழுத்திருக்கிறாயோ”என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார்.
“ஒரு முறை தேர்வடம் இழுத்து
விட்டு, பிறகு உன் பணியைத் தொடரு எல்லாம் நன்றாக முடியும்” என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார்.
“தேர் இழுத்தாயோ” என பெரியவர் வினவ
ஆம் அதன் பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார். தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடியும். கோயிலில் தெய்வசக்தி எப்போதும்
வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்த்திருவிழா அன்று தெய்வ சக்தி ஊர் முழுவதும் வெளிப்படும். ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடும். தேர் இழுப்பவர்களில் பேதங்கள் கிடையாது. எல்லாவற்றிலும் பேதங்கள் பார்க்கும் மனிதர்களாலேயே தம் பக்கம் இழுக்க முடியும் என்பதே
தேரோட்டம் உணர்த்தும் உண்மை. தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும், தேர் இழுப்பதற்கும், தேரோட்ட திருவிழாவுக்கு உதவி செய்வதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் தான் நம்மால் தேர்த் திருவிழாவில் கலந்து கொள்ள முடியும். தேர்வடத்தைத் தொட்டுக் கொண்டு
ஆயிரக்கணக்கான பேர் நிற்கும்போது அங்கே அபரிமிதமான மனித சக்தி பொங்கத் தொடங்குகிறது. அத்தனை மனிதர்களும் கடவுளின் அருளை வேண்டி கூடியிருக்கும் போது அங்கே பிரார்த்தனையின் சக்தி மகத்தானதாக மாறுகிறது. பக்தியுடன் தெய்வத்தை இழுக்கும் சக்தி தங்களுக்கு இருப்பதாக மக்கள் கருதுவதும் பக்தர்களின்
பக்திப் பெருக்கைக் கண்டு தெய்வம் ஓடி வருவதும் தேர்த் திருவிழாவின் மகத்துவம் ஆகும். இந்த மாதிரி தெய்வ சாநித்யம் அதிகரித்துள்ள இடத்தில் இருப்பதற்கே ஒருவரின் ஜாதகம் சரியாக அமைய வேண்டும்.
நிலக்கிழாரின் கர்மவினை அவரைத் தேர்த்திருவிழாவில் பங்கெடுக்க முடியாமல் செய்திருந்தது. ஆனால் ஒரு
மகானை தரிசித்த மாத்திரத்தில் அவரது பாப வினைகள் நீங்கியதுடன் தேர்த் திருவிழாவிலும் கலந்துகொள்ளச் செய்தது. அதனால் கடவுளின் அருள், பலம் சேர வழக்கும் அவருக்கு சாதகமானது. தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதால், கடவுளின் அருள் கிடைக்கும், பாவ வினைகள் தீரும், தீரா வியாதிகள் தீரும், நாள்
பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும், நமக்கு மகிழ்ச்சியும் மன நிம்மதியும் ஏற்படும். இத்தனை நன்மைகள் தரக்கூடிய தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வதும், அதை நடைபெற செய்ய உதவி செய்வதும், தொண்டுகள் புரிவதும் நிறைந்த புண்ணியத்தைத் தரும்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 21
#சங்கரஜெயந்தி 6.5.2022. ஆதி சங்கர பகவத் பாதாள், சேது-ஹிமாச்சலம் மூன்று முறை பாத யாத்திரையாக திக்விஜயம் செய்து, தன்னுடைய தரிசனத்தால், மக்களை புனிதப்படுத்தி, தன் வாக் அம்ருதத்தினால் அனைவருக்கும் தெளிவு பிறக்கும்படி செய்தார். #ஆதிசங்கரர் #திருவானைக்காவிற்கு வந்த பொழுது, Image
திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரி இந்த அண்டசராசரத்திற்கும் தாயார், கருணையே வடிவானவள் தான் ஆனால் இந்த கலியில மக்கள் ரொம்ப பாவம் செய்வதால் கோபமாக உக்கிர ரூபத்தில் அங்கு இருந்தாள். அப்படி ரொம்ப கோபத்துடன் இருந்த அவளை சாந்தப் படுத்தி, மக்களுக்கு அனுக்கிரஹம் கிடைக்க செய்யணும் Image
என்று சங்கரர் நினத்தார். என்ன கோபமாக இருந்தாலும் அம்மாக்கு தன் பிள்ளையை பார்த்தால் மனஸ்சாந்தி ஏற்படும், சந்தோஷம் வந்துவிடும் என்று எண்ணம் உதிக்க, விநாயகரை அம்பாளுக்கு முன் பிரதிஷ்டை செய்தார். திரும்ப அந்த உக்கிரமான கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, உக்கிர கலையை, இரண்டு Image
Read 7 tweets
Apr 21
#ஆலிலையில்_கண்ணன் தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்கு உரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்குக் கீழே ImageImage
அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்து Image
எடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. Image
Read 4 tweets
Apr 21
நமக்கு இப்போ #கோடம்பாக்கம் என்றாலே #கோலிவுட் தான். சிலர் ஆர்காட் நவாபின் குதிரை லாயம் - கோடே-பாக் என்பது தான் மருவி கோடம்பாக்கம் ஆனது என்றும் சொல்வார்கள். ஆனால் கோடம்பாக்கம் #கார்கோடகன் சிவபெருமானை வழிபட்டதால் ஏற்பட்ட பெயர்! கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது
பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் #வேங்கீஸ்வரர் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் #சுனந்தமுனிவர் (மூஞ்சிகேசவ முனிவர்) முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில். (இக்கோவில் எனக்குத் ImageImageImage
தெரிந்தே மிகச் சிறியதாகிவிட்டது.
அவ்வளவு ஆக்கிரமிப்பு + 100 அடி ரோட் விரிவாக்கத்தில் கோவில் இடம் கையகப்பட்டது. குளத்தையே காணோம். கீழேயுள்ள படங்கள் குளம் இருந்த இடம்) சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான். அதனால் ImageImage
Read 12 tweets
Apr 21
#MahaPeriyava
It is my remembrance that the year was 1965. When Sri Maha Periyava was camping in Tirupathi, He had arranged for performing a Kalyana Utsavam (for a fee of Rs.600/-). The Devasthanam people gave prasadam after the Utsava events were over. Srinivasa Perumal Image
Darshanam was arranged for those who paid for the Kalyana Utsavam outside the formality of the usual queue. Because of his devotion to Sri Maha Periyava, the Peshkar invited everyone who was with Sri Maha Periyava, there were 15 people, for Perumal Darshanam.
"If a Kalyana
Utsavam is done, to how many is the darshan permission given?"
"Six people", said the Peshkar.
"In that case, only six of us will come for this privileged darshan. Myself, Pudu Periyava and then four other people"
"Everyone can go for the darshan” said the Peshkar submissively.
Read 7 tweets
Apr 20
பணத்துக்குத் தான் எத்தனை பெயர்கள்!
அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை
கோயில் உண்டியலில் போட்டால் காணிக்கை
யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை
கல்விக் கூடங்களில் கட்டணம்
திருமணத்தில் வரதட்சணை
திருமண விலக்கில் ஜீவனாம்சம்
விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு
ஏழைகளுக்குக் கேட்டு கொடுத்தால் Image
தர்மம்
ஏழைகளுக்கு நாமே விரும்பி கொடுக்கும் போது தானம்
திருமண வீடுகளில் பரிசாக மொய்
திருப்பித் தர வேண்டும் என
யாருக்காவது கொடுத்தால் கடன்
திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அன்பளிப்பு
நீதிமன்றத்தில் தவறுக்குத் தண்டனையாக செலுத்தினால் அபராதம்
அரசுக்கு நம் வருமானத்தின்
பேரில் செலுத்தினால் வரி
அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் நன்கொடை
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம்
தினமும் கிடைப்பது கூலி
பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம்
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்
லஞ்சம்
கடன் வாங்கினால் அத்தொகை அசல்,
Read 5 tweets
Apr 20
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் ஒரு நாள் கங்கைக்கரையோரம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில் நாய்கள் வேகமாகக் குரைத்தன.
குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக் கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும்
என்பதிலேயே அதன் கவனம் இருந்தது. இதைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள் என்றார். ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். ஒரு சீடர், நாய்களின் இயல்பு இது தானே. மற்ற நாய்கள் பார்த்திருக்க ஒரு நாய் தின்று கொண்டிருக்கும் என்றார். வலிமை தான்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(