#AkshayaTritiya2022#அட்சயதிரிதியை2022
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவார்கள் என்ற தகவலைத் தவிர பெரியளவில் இந்நாளை பற்றி பலரும் தெரிந்து கொள்ளவில்லை. அட்சய திருதியை குறித்து 60 விஷயங்களை இங்கு காண்போம். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை, பெருமைகளை பவிஷ்யோத்தர புராணம்
விவரிக்கிறது. அட்சய திருதியை எனும் அற்புத நாள் சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாள், ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய உன்னத நாளாகும். அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி வருகிறது. 1. அட்சய திருதியை தினத்தன்று தான் #கிருதயுகம்
பிறந்தது. 2. #கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. 3. வனவாச காலத்தில் #பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 4. அட்சய திருதியை நாளில் தான் #மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள். 5. அட்சய திருதியை #ஐஸ்வர்யங்களை அள்ளி தரும்
என்று பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது. 6. அட்சய திருதியை தினத்தன்று தான் #ஐஸ்வர்யலட்சுமி, #தான்யலட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. 7. அட்சய திருதியை தினத்தன்று தான் #குபேரன் நிதி கலசங்களை பெற்றார். 8. சிவபெருமான் அன்னபூரணியிடம் #பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தில்.
9. பராசக்தியின் அம்சமான #சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்று அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார். 10. அட்சய திருதியை தினத்தன்று விஷ்ணுவின் 6-வது அவதாரமான #பரசுராமர் அவதரித்தார்.
11. #ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும். 12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு #மகாபாரதத்தை வியாசர் போதித்தார். 13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று #திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். 14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக
உள்ள #ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள். 15. #ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும். 16. வடஇந்தியர்கள் நீண்டதூர #புனிதபயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள். 17. ஒரிசாவில் #வீடுகட்ட,
#கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது. 18. பீகார், உத்தரபிரதேசத்தில் #நெல்விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள். 19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான #அன்னபூரணி அவதரித்தாள். 20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் #உப்பு
வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். 21. அட்சய திருதியை தினத்தன்று தான் #பிரம்மா உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. 22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை #மீனாட்சியை#சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. 23. அமாவாசைக்கு 3-வது
நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி #குரு குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் #பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது. 24. ஒரு தடவை சாபம் பெற்றதால் #சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி
விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று #அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார். 25. அரிதான வேலையை சந்திப்பதை #அலப்ய_யோகம் என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு
ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். 26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு #அட்சதை என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’
எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம். 27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் #அட்சய_தீஜ் என்றழைக்கிறார்கள். 28. #ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை #சமணர்கள் அனுசரிக்கிறார்கள். 29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் #மகாதயன்
என்ற வியாபாரி ஆவார். 30. #மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். 31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி #ஸ்ரீமந்நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். 32. குழந்தைகளுக்கு
கல்வி
தொடக்கமான #அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை நாளில் செய்யப்படுகிறது. 33. மகாலட்சுமி #திருமால் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். 34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் #ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை
தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து #குபேரபூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா #திருப்பரங்குன்றம், #திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 36. அட்ச திருதியை
தினத்தில் செய்யப்படும் #பித்ரு_தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 37. #வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும்
அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும். 38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி #புதுகணக்கு தொடங்குகிறார்கள். 39. #ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன்
அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று #குபேர_லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும். 40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை #விஷ்ணுபூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும். 41. அட்சய திருதியை தினத்தன்று
செய்யப்படும் தானங்களில் #அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. 42. அட்சய திருதியை அன்று #லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், #கனகதாரை நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள். 43. அட்சய திருதியை தினத்தன்று #மிருத்யுஞ்ஜய
மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். 44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் #சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும். 45. அட்சய திருதியை தினம் #சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின்
தொல்லை ஒழியும். 46. அட்சய திருதியையன்று #மிருதசஞ்ஜீவினி மந்திரம் ஜபித்தால் நோய்களின் வீரியம் குறையும். 47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத் தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-
பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும். 48. அட்சய திருதியை தினத்தன்று #பவானி_சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம். 49. #கர்நாடகமாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து
அதில் #கௌரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். 50. அட்சய திருதியை அன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் #கருடவாகனத்தில்
புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
51. அட்சய திருதியை அன்று நெல்,
அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை #தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும். 52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது
தர்மசாஸ்திரம். #தண்ணீர்_நிரம்பிய_குடத்தை தானமாகத் தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகுடம்‘ எனப்போற்றுவர். 53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்
தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், #பிறவிப்பயனும் கிடைக்கிறது. 54. அட்சய திருதியை நாளில் #வசந்த்மாதவாயநம என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று, தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி
சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை. 55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் #மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் #வியாபாரம்_பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். 56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை #மூவாயிரம்
மடங்கு நல்ல பலன்களைத் தரும். 57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும். 58. #ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது. 59. ஒவ்வொரு
அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம். 60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, #மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே
போதும். செல்வம் தானாக தேடி வரும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நம் நாட்டில் தொன்று தொட்டு வரும் பழக்கங்கள், நாகரீகம் என்ற பெயராலும் மேற்கத்திய வழக்கத்தை பெருமையாக நினைத்து காபி அடிப்பதாலும் மறைந்து வருகின்றன. அதில் நஷ்டம் நம் உடல் நலத்துக்கு தான். அப்படி வழக்கொழிந்த பழக்கத்தில் ஒன்று தரையில் அமர்வது. நாற்காலி சோபாவில் அமர்வதால் நம் முதுகுத்
தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது. மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து
வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது. ஜெரெண்டாலஜி எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால், ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டுமெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பார்கள். கீழே உட்கார்ந்து எந்த
#ஶ்ரீராமானுஜர் தம் இரண்டாம் திருமலை விஜயத்தின் போது, மலைமீது நடந்து வந்த களைப்பில், ஓரிடத்தில் (முழங்கால் முடிச்சுக்குப் பக்கத்தில், தம் முதல் விஜயத்தின் போது, பெரிய திருமலை நம்பிகள் அவரை எதிர்கொண்டழைத்த இடத்தில்) அமர்ந்து ஓய்வெடுத்தார்.
அவருக்கும், உடன் வந்த சீடர்களுக்கும்
பசியும் கூட. அப்பொழுது அங்கு ஒரு இள வயது பிரம்மசாரி வந்து அவர்களுக்கு ததியன்னமும்,(தயிர்சாதம்) மாம்பழமும் திருவேங்கடவரின் பிரசாதம் என்று கொடுத்தான். ஶ்ரீவைஷ்ணவர்கள் வெளியில் யாரிடத்திலும் எதுவும் சாப்பிடமாட்டார்கள். எனவே அவனிடம் "நீ யார்? எங்கிருந்து வருகிறாய்" என்று உடையவரின்
#MahaPeriyava
He was a Maha Siddhar (A Yogi of great stature). He was capapble of performing a lot of miracles. He had the capacity to cure some diseases too. After a surgery, my brother was having unbearable stomach pain and so I wanting some immediate relief for him I took him
to this Yogi at that time. After doing Pooja, the Yogi gave some Vibhoothi Prasadam to my brother.
As I had gone to him, the Yogi thought that I would definitely write about him. But when he saw that I showed no interest in doing that, he kept sending invitations to me to attract
me towards him. (So that I would get interested enough to write about him). During yet another unavoidable situation, I went to him again. It was almost midnight. He closed the door and performed some miracles for me. He kept cooked rice in his palm and when he rubbed his palms
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கணித ஆசிரியர் மாணிக்கம் பெயரில் மட்டும் அல்ல குணத்திலும் மாணிக்கம்! வகுப்பில் அனைவரையும் நாராயணா நாராயணா என்றே அழைப்பார். அந்த அளவுக்கு ஸ்ரீமந்நாராயண பக்தர். மாணிக்கம் ஒரு நாள் வகுப்பில் கரும்பலகையில் 1000 என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு
ஏற்படுத்திக் கொண்டிருந்த மாணவன் கணேசனைப் பார்த்து, இது எவ்வளவு என்று கேட்டார். மாணவன் கணேசன் கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, ஓராயிரம் என்று பதிலளித்தான்.
இப்போது ஆசிரியர் மாணிக்கம் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் 10000 என எழுதிவிட்டு, அது
எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். பத்தாயிரம் என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் 010000 என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். அதே பத்தாயிரம் என்று மாணவன் கணேசன் பதில் கூறினான்.
ஆசிரியர் மாணிக்கம் அவனைப் பார்த்து
#MahaPeriyava
I had requested Mudaliyar in Kanchipuram to lend me some money to meet the expenses of my daughter’s wedding. He agreed to help and told me to meet him on a particular day at three in the afternoon. I started from Chengalpat and went to Kanchipuram on the appointed
day. Before meeting the gentleman, I desired to receive Sri Maha Periyava’s darshan and so went to the SriMatham. It was possible to receive Sri Maha Periyava’s darshan that day only at two o’clock in the afternoon.
Moreover, Sri Maha Periyava began to chat with me at leisure
about everything under the sun, in the most unusual manner. As for my mind, it was solely fixed upon my appointment with Mudaliyar at three. Finally at about 5.30, Sri Maha Periyava gave me leave to depart. I almost ran to Mudaliyar’s house. I was worried that the gentleman might
#MahaPeriyava
One is apt to think that boundless compassion exists only in rhetoric till one has a Dharshan of Maha Periyava. In His marvellous presence one instinctively recognised boundless compassion, purity, grace and the quality of equal vision. Countless must be the
instances of His Grace curing diseases, warding off calamities, giving peace of mind and above all, guiding an aspirant on the razor-edge path of ascent along the Sushumna. Instance of the last kind might not be normally made public, as they pertain to the innermost lives of the
persons. I happened to know of at least one such case, as it was of my father. From among my experiences, I give the following few. More than four decades back, I passed the competitive examinations and got appointed to a top service, Paramacharyal specifically advised me that I