#ஶ்ரீராமானுஜர் தம் இரண்டாம் திருமலை விஜயத்தின் போது, மலைமீது நடந்து வந்த களைப்பில், ஓரிடத்தில் (முழங்கால் முடிச்சுக்குப் பக்கத்தில், தம் முதல் விஜயத்தின் போது, பெரிய திருமலை நம்பிகள் அவரை எதிர்கொண்டழைத்த இடத்தில்) அமர்ந்து ஓய்வெடுத்தார்.
அவருக்கும், உடன் வந்த சீடர்களுக்கும்
பசியும் கூட. அப்பொழுது அங்கு ஒரு இள வயது பிரம்மசாரி வந்து அவர்களுக்கு ததியன்னமும்,(தயிர்சாதம்) மாம்பழமும் திருவேங்கடவரின் பிரசாதம் என்று கொடுத்தான். ஶ்ரீவைஷ்ணவர்கள் வெளியில் யாரிடத்திலும் எதுவும் சாப்பிடமாட்டார்கள். எனவே அவனிடம் "நீ யார்? எங்கிருந்து வருகிறாய்" என்று உடையவரின்
சீடர்கள் கேட்க,
"அடியேன் பெயர் மதுரகவிதாஸன். அனந்தாழ்வானின் சீடன். திருமலையில் இருந்து வருகிறேன்"
என்றான். உடையவர் அவனிடம் ஆசார்யன் தனியனைக் கூறுமாறு கேட்க,
"அகிலாத்ம குணாவாஸம், அஜ்ஞாத திமிராபகம், ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்"
நற்குணங்கள் அனைத்துக்கும்
இருப்பிடமானவரும், அறியாமையாகிய இருளை அகற்றுபவரும், அடியவர்களுக்கு உயர்ந்த தஞ்சமானவரான் அனந்தாழ்வானை வணங்குகிறேன் என்று சொன்னான். தனியனில் ஆசார்யரின், ஆசார்யரைப் போற்றியும் குறிப்பு இருக்க வேண்டும். இந்தத் தனியனில் அனந்தாழவானின் ஆசார்யரான் ராமானுஜரைப் பற்றி ஒன்றும் இல்லையே என்று
வினவ, சுதாரித்துக் கொண்ட பிரம்மச்சாரி, இன்னொரு தனியனும் உள்ளது என்று கூற
"ஶ்ரீமத் ராமானுஜாசார்ய, ஶ்ரீ பாதாம்
போருஹத்வயம், ஸ்துத்தமாங்க ஸந்தார்யம், அனந்தார்யம் அஹம் பஜே"
ஶ்ரீமத் ராமானுஜருடைய திருவடித் தாமரைக்கு இணயானவரும், அதனால் நல்லோர்களால் சென்னிக்கு அணியாகத் தரிக்கப்படுமவருமான
அனந்தாழ்வானைச் சேவிக்கிறேன்", என்று அந்தத் தனியனச் சொன்னான்.
அதன் பிறகே அவர்கள் பிரசாதம் எடுத்துக் கொண்டனர். அந்த பிரம்மசாரி அதன் பிறகு அங்கிருந்து சென்று விட்டான். சிறிது நேரம் கழித்துப் புறப்பட்ட உடையவரும் சீடர்களும் திருமலை அடைந்து அனந்தாழ்வானிடம் சீடன் மூலம் கொடுத்தனுப்பிய
பிரசாதம் போக்யமாக இருந்தது என்றனர். அனந்தாழ்வான், "அடியேன் யாரையும் அனுப்பவில்லையே. பிரசாதமும் கொடுக்க வில்லையே” என்று ஆச்சர்யப் பட்டார். அவர்கள் சீடனின் பெயரையும், அவன் சொன்ன தனியனையும் கூற, அப்படி ஒரு சீடன் தமக்கு இல்லையென்றும், தனியனைக் கேள்விப்பட்டதே இல்லை என்றும் கூறினார்.
அவர்கள் அனைவருக்கும் அப்போது தான் புரிந்தது திருவேங்கடவரே நேரில் சென்று தமக்கு நைவேத்யம் செய்த பிரசாதங்களை ராமானுஜருக்கு கொடுத்தார் என்பது.
அது மட்டும்ல்லாமல் ராமானுஜரையும், அவரது அத்யந்த சீடர் அனந்தாழ்வானையும் போற்றித் தனியன் பாடியதிலும் திருவேங்கடவரின் அளவற்ற கருணையையும்,
அன்பையும் எண்ணிப் பரவசம் அடைந்தனர். ஏற்கனவே மலையப்பனுக்கு சங்காழி அளித்ததால் ராமானுஜரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார் பெருமாள். இப்பொழுது அனந்தாழவானுக்கு தனியன் பாடி, அவரையும் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார் திருமலையப்பன்.
ஏற்கனவே
"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியன் எப்படி ஶ்ரீரங்கத்தில்
நம்பெருமாள் மணவாள மாமுனிகள் பேரில் தனியன் பாடி அவரை ஆசார்யனாக் ஏற்றுக் கொண்டார் என்பதையும், அனைத்து திவ்ய தேசங்களிலும் அந்தத் தனியன் பாட வேண்டும் என்று நம்பெருமாள் நியமனம் செய்ததையும் அறிவோம்.
அங்கு நம்பெருமாள் பாடியதற்கு முன்னோடியாக ஶ்ரீனிவாசப் பெருமாள் திருமலையில் பாடிவிட்டார்.
திருமலையில் மட்டும் இரண்டு தனியன்களும் -பொதுத் தனியனான "ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" மற்றும் அனந்தாழ்வான் மீது திருவேங்கடவர் பாடிய தனியனும் முன்னும், பின்னும் சேவிக்கப் படுகின்றன!
#மாம்பழ_ராமானுஜர் வழியில் திருவேங்கடவர் பிரசாதமாகக் கொடுத்த மாம்பழத்தைப் புசித்த ராமானுஜர் கொட்டையை அங்கே
எறிந்து விட்டார். அங்கு ஒரு மாஞ்செடி முளைத்து, மாமரமாகி விட்டது, அதற்குப் பக்கத்தில் இந்த வைபவத்தின் நினைவாகவும், முதல் விஜயத்தில் பெரிய திருமலை நம்பிகள், ராமானுஜரை எதிர்கொண்டு அழைத்ததின் நினவாகவும், பிற்காலத்தில் ராமானுஜருக்கு அங்கு (நடைபாதையில் படி எண் 3260க்கு அருகில்) ஒரு
சந்நிதி அமைக்கப்பட்டது.
"தோவ பாஷ்யகாரர் (ஶ்ரீ பாஷ்யத்தை இயற்றிய ராமானுஜருக்கு கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியே கொடுத்த பட்டம்) சந்நிதி" என்று அழைக்கப் படுகிறது. பிற்காலத்தில் திருமலைக்கு எழுந்தருளிய ராமானுஜரின் மறு அவதாரமான ஸ்வாமி மணவாள மாமுனிகள், மாமரக் கோவில் ராமானுஜரைச் சேவித்து
"மாம்பழ ராமானுஜர்" என்று கொண்டாடினார். இனிமேல் திருமலை செல்லும் போது மாம்பழ ராமானுஜரையும் சேவித்து வாருங்கள்.
ஆசார்யன் திருவடிகளே சரணம்
ஆழ்வார், ஆசாரியார், எம்பெருமானார், ஜீயர், மணவாள மாமுனிகள், தேசிகன் திருவடிகளே சரணம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 2
நம் நாட்டில் தொன்று தொட்டு வரும் பழக்கங்கள், நாகரீகம் என்ற பெயராலும் மேற்கத்திய வழக்கத்தை பெருமையாக நினைத்து காபி அடிப்பதாலும் மறைந்து வருகின்றன. அதில் நஷ்டம் நம் உடல் நலத்துக்கு தான். அப்படி வழக்கொழிந்த பழக்கத்தில் ஒன்று தரையில் அமர்வது. நாற்காலி சோபாவில் அமர்வதால் நம் முதுகுத் ImageImage
தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது. மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து Image
வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது. ஜெரெண்டாலஜி எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால், ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டுமெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பார்கள். கீழே உட்கார்ந்து எந்த
Read 11 tweets
May 1
#MahaPeriyava
He was a Maha Siddhar (A Yogi of great stature). He was capapble of performing a lot of miracles. He had the capacity to cure some diseases too. After a surgery, my brother was having unbearable stomach pain and so I wanting some immediate relief for him I took him
to this Yogi at that time. After doing Pooja, the Yogi gave some Vibhoothi Prasadam to my brother.
As I had gone to him, the Yogi thought that I would definitely write about him. But when he saw that I showed no interest in doing that, he kept sending invitations to me to attract
me towards him. (So that I would get interested enough to write about him). During yet another unavoidable situation, I went to him again. It was almost midnight. He closed the door and performed some miracles for me. He kept cooked rice in his palm and when he rubbed his palms
Read 29 tweets
Apr 30
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கணித ஆசிரியர் மாணிக்கம் பெயரில் மட்டும் அல்ல குணத்திலும் மாணிக்கம்! வகுப்பில் அனைவரையும் நாராயணா நாராயணா என்றே அழைப்பார். அந்த அளவுக்கு ஸ்ரீமந்நாராயண பக்தர். மாணிக்கம் ஒரு நாள் வகுப்பில் கரும்பலகையில் 1000 என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு Image
ஏற்படுத்திக் கொண்டிருந்த மாணவன் கணேசனைப் பார்த்து, இது எவ்வளவு என்று கேட்டார். மாணவன் கணேசன் கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, ஓராயிரம் என்று பதிலளித்தான்.
இப்போது ஆசிரியர் மாணிக்கம் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் 10000 என எழுதிவிட்டு, அது
எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். பத்தாயிரம் என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் 010000 என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். அதே பத்தாயிரம் என்று மாணவன் கணேசன் பதில் கூறினான்.
ஆசிரியர் மாணிக்கம் அவனைப் பார்த்து
Read 7 tweets
Apr 30
#AkshayaTritiya2022 #அட்சயதிரிதியை2022
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவார்கள் என்ற தகவலைத் தவிர பெரியளவில் இந்நாளை பற்றி பலரும் தெரிந்து கொள்ளவில்லை. அட்சய திருதியை குறித்து 60 விஷயங்களை இங்கு காண்போம். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை, பெருமைகளை பவிஷ்யோத்தர புராணம்
விவரிக்கிறது. அட்சய திருதியை எனும் அற்புத நாள் சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாள், ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய உன்னத நாளாகும். அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி வருகிறது.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் #கிருதயுகம்
பிறந்தது.
2. #கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் #பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் #மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியை #ஐஸ்வர்யங்களை அள்ளி தரும்
Read 32 tweets
Apr 30
#MahaPeriyava
I had requested Mudaliyar in Kanchipuram to lend me some money to meet the expenses of my daughter’s wedding. He agreed to help and told me to meet him on a particular day at three in the afternoon. I started from Chengalpat and went to Kanchipuram on the appointed
day. Before meeting the gentleman, I desired to receive Sri Maha Periyava’s darshan and so went to the SriMatham. It was possible to receive Sri Maha Periyava’s darshan that day only at two o’clock in the afternoon.
Moreover, Sri Maha Periyava began to chat with me at leisure
about everything under the sun, in the most unusual manner. As for my mind, it was solely fixed upon my appointment with Mudaliyar at three. Finally at about 5.30, Sri Maha Periyava gave me leave to depart. I almost ran to Mudaliyar’s house. I was worried that the gentleman might
Read 6 tweets
Apr 29
#MahaPeriyava
One is apt to think that boundless compassion exists only in rhetoric till one has a Dharshan of Maha Periyava. In His marvellous presence one instinctively recognised boundless compassion, purity, grace and the quality of equal vision. Countless must be the
instances of His Grace curing diseases, warding off calamities, giving peace of mind and above all, guiding an aspirant on the razor-edge path of ascent along the Sushumna. Instance of the last kind might not be normally made public, as they pertain to the innermost lives of the
persons. I happened to know of at least one such case, as it was of my father. From among my experiences, I give the following few. More than four decades back, I passed the competitive examinations and got appointed to a top service, Paramacharyal specifically advised me that I
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(