கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவிலுக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் #திருச்சேறை. சைவமும் வைணவமும் கோகோத்த புண்ணியத் திருத்தலம் இது. இங்கே, #சாரபரமேஸ்வரர் கோயிலும் #சாரநாதபெருமாள் கோயிலும் உள்ளன. மூலவர் திருநாமம் சாரநாத பெருமாள். தாயார் திருநாமம் சாரநாயகி தாயார்,
பஞ்சலக்ஷ்மித் தாயார். திருச்சாரம் என புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்த திருத்தலமாகத் திகழ்கிறது. இத்தலத்தில் ஐந்து தேவியருடன் சேவை சாதிக்கிறார் பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீமகாலட்சுமி, சாரநாயகி,
ஸ்ரீ நீலாதேவி இங்கு அருள்பாலிக்கின்றனர். நின்ற திருக்கோலத்தில், கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் பெருமாளின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒரு முறை #காவிரித்தாய் பெருமாளிடம், ஐயனே அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என பெருமை பேசுகின்றனர்
அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும், என கேட்டு இத்தல சார புஷ்கரணியில் மேற்குக் கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என காவிரி கூறியவுடன், கருட வாகனத்தில் சங்கு
சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, வேண்டும் வரம் கேள் என்றார். அதற்கு காவிரி, தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும், கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும் என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார்.
மன்னார்குடியில் உள்ள #ராஜகோபாலசுவாமி கோவிலின்
திருப்பணிக்காக நாயக்க மன்னர் வண்டிகள் நிறைய பொருட்களை அனுப்பி வைத்தார். அந்த வண்டிகள் இந்தத் தலத்தின் வழியாக சென்றன. அவற்றை அழைத்துச் சென்ற #நரசபூபாலன் என்பவர் ஒவ்வொரு வண்டியில் இருந்தும் ஒரு கல்லை மன்னருக்குத் தெரியாமல் இந்தத் தலத்தின் திருப்பணிக்காக இறக்கிவைத்தார். மன்னருக்கு
விஷயம் தெரிந்தது. அதனால் நரசபூபாலன் நடுநடுங்கிப் போனான். பெருமாளை சரணடைந்தான். மணவாள நாயக்கர் மன்னன் இத்தலத்திற்கு வந்து கோயிலைக் கண்டார். அப்போது, மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக திருச்சேறையில் காட்சி கொடுத்தார் பெருமாள். இதில் நெக்குருகிப் போன மன்னன் இந்தக் கோவிலுக்கும்
திருப்பணிகள் மேற்கொண்டான் என்கிறது ஸ்தல வரலாறு. மூலவரின் வலப்பக்கமாக மார்க்கண்டேய முனிவர் இருக்கிறார். அவரது முக்தி ஸ்தலம் இது. உப்பிலியப்பன் மார்க்கண்டேயரின் மகளான பூதேவியை திருமணம் செய்து கொண்டார்.
உலகம் அழியும் பிரளய காலத்தில் பிரம்மா திருச்சேறை திருத்தலத்தில் இருந்த மண்ணை
எடுத்து அதனுள் வேதங்களை வைத்து காப்பாற்றினார் என்கிறது புராணம். இந்தத் தலத்தின் மண்ணானது, மிகுந்த சாரம் மிகுந்தது. ஆகவே பெருமாள் சாரநாத பெருமாள் என அழைக்கப்பட்டார். இதுவே பின்னாளில், திருச்சேறை என்றும் சாரநாத பெருமாள் என்றும் மருவியதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. இங்கே உள்ள
தீர்த்தத்திற்கு சார புஷ்கரணி என்று பெயர். இநதப் புஷ்கரணியின் மேற்குக் கரையில், காவிரித்தாய், ஸ்ரீபிரம்மா, அகத்தியமுனி ஆகியோருக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் உள் பிராகாரத்தில், பால சாரநாதன், நரசிம்மர், ருக்மிணி, சத்யபாமா, ஆண்டாள், ஸ்ரீராஜகோபாலன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராமன்,
கூரத்தாழ்வார், உடையவர், நம்மாழ்வார், சீனிவாசப் பெருமாள், ஆழ்வார்கள் முதலானோருக்கு சந்நிதிகள் அமைந்து உள்ளன. எந்த வைஷ்ணக் கோயிலிலும் இல்லாத ஒன்றாக, தைப்பூச திருவிழா இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் அப்போது, காவிரித்தாய்க்கு பிரமாண்டமான விழாவும் பூஜைகளும் நடைபெறுகின்றன.
திருச்சேறை பெருமாளை ஒரு முறையேனும் வழிபட்டால், காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்கும் என்றும் நம் பாவங்களெல்லாம் தொலையும் என்றும் ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 12
#திருநீரும்_ருத்திராட்சமும்
ஒரு ஊரில் இருந்த ஒரு திருடன், அவன் திருடாத இடமே இல்லை என்று மக்களுக்குக் கடும் அவதியை தந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று முறையிட்டனர். அவன் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்ததால் அரசர், இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம் என Image
அறிவித்தார். சில நாட்கள் கழித்து அந்த அரசர், யார் பற்று இல்லாமல் இருகிறார்களோ அவருக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என அறிவித்தார். பின் மந்திரியிடம் நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிப் பார்த்து அழைத்து வாரும் என ஆணையிட்டார். மந்திரி தேடி செல்லும்
போது இந்த திருடன் அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டான். மந்திரி ஒரு சூழ்ச்சி செய்தான். உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூறியுள்ளார். நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகிறேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கிறேன் என உறுதி அளித்தான். சரி என இந்த திருடனும்
Read 12 tweets
May 12
#Walking The need to walk as a form of exercise cannot be stressed more. #10K steps a day is most recommended now a days. The largest and strongest joints and bones of the human body are in the legs. Strong bones, strong muscles and flexible joints form the Iron Triangle that
carries the most important load i.e. the human body. 70% of human activity and burning of energy in one's life is done by the two feet. When a person is young, his/ her thighs have enough strength to lift a small car of 800 kg! The foot is the center of body locomotion. Both the
legs together have 50% of the nerves of the human body, 50% of the blood vessels and 50% of the blood is flowing through them. It is the largest circulatory network that connects the body. So walk daily. Only when the feet are healthy then the convention current of blood flows
Read 8 tweets
May 12
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீரங்க மன்னரை ஆண்டாள் திருப்பாவை மூன்றாம் பாசுரத்தில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று பாடியுள்ளாள். அந்தப் பாசுரத்தின் பொருளைத் திருப்பாவை ஜீயரான ராமானுஜர், தம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடர் எழுந்து, சுவாமி, ஒரு ஐயம். ஓங்கி உலகளந்த
‘உத்தமன்’ என்று த்ரிவிக்கிரமப் பெருமாளை ஆண்டாள் பாடுகிறாளே! உண்மையிலேயே அவர் உத்தமரா என்று கேட்டார். புருஷோத்தமரான பெருமாளை ‘உத்தமன்’ என்று சொல்வதில் என்ன தவறு என்று கேட்டார் ராமானுஜர். அந்தச் சீடரோ, இல்லை சுவாமி! த்ரிவிக்கிரமப் பெருமாள் உண்மையில் ஏமாற்று வேலை தானே செய்தார்.
சிறிய கால்களை மகாபலியிடம் காட்டி மூவடி நிலம் வேண்டுமென யாசித்து விட்டுப் பெரிய கால்களால் மூவுலகங்களையும் அளந்தாரே!இப்படிப்பட்ட ஏமாற்று வித்தைக்காரரைப் போய் ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாளே! இதை எப்படி ஏற்க முடியும் என்றார். அதற்கு மிக அழகாக விடையளித்தார் ராமானுஜர், “மனிதர்களில்
Read 10 tweets
May 11
#சம்மணம் நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நாம் அதிகநேரமாக காலைத் தொங்க
வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு
அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்
Read 12 tweets
May 11
#மஹாபெரியவா
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்
உள்ளது. அப்போ பொண்ணப் பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"
கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம்
பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள். தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.
ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானம்
Read 8 tweets
May 11
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பின் அவர் குடும்பம் மிகவும் சிரமத்துக்கு உள்ளானது. உணவு வாங்கக் கூட பணம் இல்லாத நிலையை அடைந்தனர். அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த வைர நெக்லஸை அவன் கையில் கொடுத்து, இதை எடுத்துக் கொண்டு, உன்
மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குப் பணம் தரும்படி கேள் என்றாள். மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, மாமாவின் கடையை அடைந்தான். அவன் மாமா அந்த நெக்லஸை நன்கு பரிசோதித்தார். பின் அவனிடம், என் அன்பு மருமகனே, இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள்
கழித்து இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்று உன் அம்மாவுடன் சொல் என்றார். பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார்.
மேலும், நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக்கொள் என்றார். அடுத்த நாள் முதல் அந்தப் பையனும் தினமும் கடைக்குப்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(