இன்று #நரசிம்மஜெயந்தி #NarasimhaJayanti மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம ஜெயந்தி சதுர்த்தசி திதி மே 14 அன்று பிற்பகல் 3:22 முதல் மே 15 மதியம் 12:45 வரை உள்ளது. அதே போன்று, நரசிம்ம ஜெயந்தி பூஜை நேரமாக, மாலை 4:22 மணி முதல் 7:04 மணி வரை உள்ளது.
ஹிரண்யகசிபு என்ற அரக்கன்
நீண்ட ஆயுளை பெற பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தான். இரவிலோ, பகலிலோ, தேவர்களாலோ, மனிதனாலோ, விலங்காலோ, பறவையாலோ, ஆயுதங்களாலோ, நீரிலோ, நிலத்திலோ, ஆகாயத்திலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது, என் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் நிலத்தில் சிந்தினாலும்
தன்னை கொல்ல முயல்பவன் தலை சுக்குநூறாக வெடித்துவிட வேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் பெற்றான். அதன் பிறகு அவனின் அட்டூழியங்கள் எல்லை மீறி போயின. ஶ்ரீமன் நாராயணனை வணங்கியதற்காக தன் சொந்த மகன் பிரஹலாதனையே கொல்லத் துணிந்தான். பலவாறாக மகனை சித்தரவதை செய்தும் பிரகலாதன் நாராயண நாமத்தை
விடவில்லை. எப்படி கொல்ல முயன்றாலும் பகவான் அவனை காப்பாற்றினார். ஒரு முறை கடுங் கோபத்தில், உன்னை காக்கும் பகவான் எங்கு இருக்கிறார் என்று கேட்க, பிரகலாதன் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் உள்ளார் என்று பதிலுரைத்தான். இந்தத் தூணில் இருக்கிறாரா என்று ஒரு தூணைக் காட்டி அந்த தூணை
அடித்தபோது, நரசிம்மர் குழந்தையை காக்க அந்த ஸ்தம்பத்தில் இருந்து வெளிப்பட்டார். பிரம்மாவின் வரத்தை மீறாமல் ஹிரண்யகசிபுவை அழிக்க, பாதி மனிதனாக, பாதி மிருகமாக, பகலும் அல்லாமல் இரவும் அல்லாத அந்தி சாயும் வேளையில், உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வாசல் படியிலும், நிலத்திலும்
அல்லாமல் ஆகாசத்திலும் அல்லாமல் தன் மடி மீது வைத்து, ஆயுதங்கள் அன்றி தன் கூரிய நகங்களையே கொண்டு நரசிம்ம அவதாரமாக அவனை வதம் செய்தார். இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றது. இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை.
சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்ல. பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின்
சினம் அடங்கியது. அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார். திருமால் அவதாரங்களில் மிகக் குறுகிய கால அவதாரம் நரசிம்ம அவதாரம் 24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகவும் உக்கிரமான அவதாரம். அவர் அவதரித்த இந்த நாளை தான் நாம் #நரசிம்மர்ஜெயந்தியாக கொண்டாடி
எந்த நேரமும் இடைவிடாது நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு திக்கெட்டும் புகழ் கிடைக்கும். நரசிம்ம அவதாரம் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. நரசிம்மருக்கு
எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிகம் விரும்பப்படுகிறது. வட இந்தியாவை விட தென் இந்தியாவில்தான் அதிக நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. ஆந்திராவில் உள்ள அகோபிலத்தில் தான் அவதரித்தார். நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது. நரசிம்மருக்கு
நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி
கொடுத்தார். திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ''இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்தது.
இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது. எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் வணங்கலாம். நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக
படைத்து வணங்குதல் வேண்டும்.
நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே உள்ளார்.
நரசிம்மரை வழிபடும் போது ''ஸ்ரீநரசிம்ஹாய நம''
என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையையும் கற்ற பலன் உண்டாகும். நரசிம்மரை ம்ருத்யுவேஸ் வாகா என்று கூறி வழி பட்டால் மரண பயம் நீங்கும்.
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
– பெரியாழ்வார்
ஶ்ரீ லக்‌ஷ்மி ந்ருசம்மர் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
நரசிம்ம ஜெயந்திக்கு @veeba6 அவர்களின் அருமையான பாமாலை! பூமாலையினும் மணம் மிக்கது🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 16
#தர்ப்பை சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாக இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு. தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் 'குசா'. எந்த ஒரு புனிதச்செயல் செய்யும் நேரத்திலும் நம் சக்தி தடைபடாமலிருக்க நாம் கையில் தர்பத்தினாலான பவித்ரத்தை (மோதிரம் போன்ற அமைப்பு) ImageImageImage
தரிக்கிறோம். முழுமையாக அந்த வேலை பூர்தியாகும் வரை கழற்றாமலிருப்பது நம் செயலுக்கு உதவுகிறது. #பாணிணி முனிவர் கௌமுதியை எழுதும் போது "பவித்ர பாணியாக உட்கார்ந்து ஆலோசித்து எழுதினார்" என்று மஹாபாஷ்யத்தில் கூறப்படுகிறது. பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம். இந்த பவித்ரம்,
செய்யப்படும் கர்மாவுக்கு ஏற்ப தர்ப்பை புல்லின் எண்ணிக்கை மாறுபடுகிறது. அவை:
1) ப்ரேத கார்யங்களில் ஒரு தர்ப்பை
2) சுப கர்மாவில் 2 தர்ப்பை
3) பித்ரு கர்மாவில் 3 தர்ப்பை
4) தேவ கர்மாவில் 5 தர்ப்பை
5) சஷ்டியப்த பூர்த்தி போன்ற சாந்தி கர்மாவில் 6 தர்ப்பை
தேவ கார்யங்களுக்கு கிழக்கு
Read 18 tweets
May 16
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சாமியார் மணிகண்டன் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் பரணி என்பவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார், தான் வளர்த்த குரங்கைப் பார்த்து ஆஞ்சநேயா இலை போடு என்றார். குரங்கு ஆஞ்சநேயா வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த Image
பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. திரும்பவும் தலையில் அடித்தார் மணிகண்டன். அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது. நண்பர் பரணிக்கு மனம் பொறுக்கவில்லை. குரங்கு தான் நீங்கள்
சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே, அப்புறம் ஏன் அந்த வாயில்லா ஜீவனை அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார். சாமியார் மணிகண்டன் எதுவும் பதில் அளிக்கவில்லை. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார். சற்று நேரத்தில் குரங்கு ஆஞ்சநேயன் தாவிப்
Read 7 tweets
May 15
#MahaPeriyava was god incarnation Himself. Though He never attempted to display His spiritual powers explicitly, innumerable miracles stand as a testimony for the power of His blessings to save the world. Such a miracle was witnessed at an event happened at Tirupathi Kshetram. It Image
happened about 50 years ago. It is a common practice for the people of Tirupathi Tirumala Devasthanam to bring changes in the temple, to facilitate easy darshan to the devotees considering the ever increasing number. Once the Public Works Department and the Devasthanam members
had planned for such a change. It was customary for the people to go into the Sanctum Sanctorum and come out through the same way as they went in. Instead, if the side walls of the Artha Mandapa was removed and a way made through it, people could move to their right & left sides
Read 30 tweets
May 14
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஆறுமுகசாமி ராம நாமவை சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன், ஏ கிழவா! இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி
ஆறுமுக சாமி ராம நாமவை சொல்லிக்கொண்டே, இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா என்று கேட்டான். அதற்கு அத்துறவி ராம நாமவை சொல்லிக் கொண்டு, சற்று முன் இந்த வழியாகச்
சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான் என்றார். மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன், துறவியாரே வணங்குகிறேன். இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள் என்று பணிவோடு கூறினான். உடனே துறவி ஆறுமுக
Read 6 tweets
May 14
#பிரதோஷம் #அதன்_மகிமை
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அப்பொழுது தான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்தார். இந்த பிரதோஷ வேளையில் தேவர்கள் அனைவரும், பூமியில் அமைந்துள்ள சிவன்
கோவிலுக்கு வந்து பூஜிப்பதாக ஐதீகம். அதனால் இந்த நேரத்தில் நாமும் சிவன் கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றால், தேவர்களுடன் இணைந்து பூஜை செய்த பலன் கிடைக்கும். இந்த வகையில் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு ஈசனின் அபிஷேக ஆராதனைகளைப் பார்த்து வந்தால், பிரம்மஹத்தி தோஷம் கூட
விலகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில், பிரதோஷ நிகழ்வை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

3 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் பிரம்மா. விஷ்ணு, சிவன் முதல் மூன்று தெய்வங்களும் பார்ப்பதற்கு சமம்.
5 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால்
Read 7 tweets
May 14
#இடிவிழுந்த_சிவலிங்கம்
ஒரு ஏழைப்பெண் பூ வியாபாரம் செய்து வந்தாள். பூ கட்டாத தினங்களில் கோயிலுக்கு சந்தனம் அரைத்துக் கொடுப்பது, கோயிலைப் பெருக்கிக் கோலமிடுவது. நந்தவனத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை அவள் செய்து வந்தாள். (இக்கோவிலின் பெயர் #அச்சாளீஸ்வரர் கோவில், நாதனே பொன்
மனை மகாதேவர் கோயிலுக்கும் நந்தீஸ்வரத்துக்கும் இடைப்பட்ட கோயில், கன்யாகுமரி மாவட்டம்.)
அப்பெண்ணுக்கு, கோயிலுக்கு தினமும் வரும் பணக்காரப் பெண் ஒருத்தியோடு தோழமை ஏற்பட்டது. அது கைமாற்றாய் பணம் கேட்குமளவு வளர்ந்தது. ஒரு முறை அந்தப் பணக்கார நங்கையிடம் கொஞ்சம் பெரிய தொகையை வாங்கினாள்.
ஒரு மாதம் சென்றபின் பணத்தைத் திருப்பிக் கேட்டாள் செல்வவதி. இதோ அதோ என்று சாக்குச் சொல்லி வந்தாள் ஏழைப் பெண். கடன் கொடுத்தவளோ, என் வீட்டாருக்குத் தெரியாமல் நகையை அடகு வைத்து இப்பணத்தைக் கொடுத்தேன். அடுத்த மாதம் என் மைத்துனர் திருமணம். அதற்குள் திருப்பாவிட்டால் என் கணவர் திட்டுவார்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(