#உலகநாயகன் அவர்களின் #விக்ரம் இசை & முன்னோட்டம் வெளியிட்டு விழா - ஒரு பார்வை.
ஒரு மனிதன். ஒரு நாயகன். ஒரே உலகநாயகன். அவரின் விழா. இது #நம்மவர் களின் விழா! நேரு உள் விளையாட்டு அரங்கம் இது போல் ஒரு கூட்டத்தை திரும்ப பார்க்குமா எனும் அளவிற்கு வந்த ரசிகர்கள். பாஸ் இல்லாமல் வெளியே 1/
இருந்த கூட்டமே அதற்கு சாட்சி. நிகழ்ச்சி 6:30 க்குத் தான் ஆரம்பம். அதற்கு முன் பாடகர் சீனிவாஸ் & ஹரிச்சரன் குழுவினரால் #உலகநாயகன் பாடல்கள் சில அருமையாக பாடப்பட்டது. திரைபிரபலங்கள் & படத்தில் சம்மந்தப்பட்ட குழுவினர் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். 2/
பாடல்கள் பாடி முடித்ததும், சரியாக 6:30 க்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. திவ்யதர்சினி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து போல். இசைஞானி வாழ்த்தோடு ஆரம்பம் ஆனது. திரையில் தோன்றி ராஜ்கமல் & உலகநாயகன் அவர்களை வாழ்த்தினார்.3/
அடுத்து #கமல்ஹாசன் யார்? என்கிற குறும்படம் காட்டப்பட்டது. உலகநாயகன் திரைத்துறை சாதனைகள் & அவர் திரைத்துறைக்காக கொண்டு வந்த தொழில் நுட்பங்கள் பற்றி மிகவும் விலாவாரியாக அழாக தொகுத்து காண்பித்தனர். இது முடியவும் #உலகநாயகன் அரங்கினில் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அரங்கம் அதிரும் 4/
கைதட்டல்களுடன் #நம்மவர் அரங்கினிற்குள் வந்தார். V என்று டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற உடையுடன் அசத்தலாக வந்தார். படத்தின் நடன இயக்குநர் சான்டி & குழுவினரின் அசத்தலான #கமல்ஹாசன் ட்ரிபியுட் நடனம் அரங்கேறியது. தனது நடனத்தின் மூலம் அசர வைத்தார் சான்டி, பிறகு இயக்குநர் 5/
பா ரஞ்சித் அவர்களை பேச அழைத்தார் திவ்யதர்சினி. தனக்கும் #கமல்ஹாசன் அவர்களின் படங்களுக்குமான உறவை அழகாக சொன்னார், அது திரையில் தொடர வேண்டும் என்றார். #கமல்ஹாசன் அவர்களை வைத்து மதுரை பிண்ணனியில் ஒரு படம் எடுக்க ஆசை இருப்பதாக கூறி அரங்கத்தை அதிர வைத்தார். வேட்டி மடித்து கட்டி 6/
மட்டும் அல்ல, கோட்சூட் போட்டவராகவும் வருவார் என்றார். ஆக, பாரஞ்சித் உடனான வெற்றி கூட்டணி நேற்று உறுதி செய்யப்பட்டது. அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது. அடுத்து நம்மவர் நண்பர் & இயக்குநர் சந்தாணபாரதி வாழ்த்தி பேசினார். தனக்கும் ராஜ்கமல் & கமலுக்கும் உண்டான 50+ ஆண்டுகால நட்பை 7/
எடுத்துரைத்தார். சிறுவயதில் அடித்த லூட்டிகளை தற்போது சொல்ல முடியாதே என்றார். ராஜ்கமலில் தனது பங்களிப்பு சிறிதாவது இல்லாமல் எந்த படமும் வராது என சத்தியம் செய்து கொடுத்திருப்பதாக மிகப் பெருமையுடன் எடுத்துச் சொல்லி, தானும் இந்த படத்தில் நடித்திருப்பதாக பெருமையாக சொன்னார் 8/
இளம் இயக்குநர்கள் மூவர் மேடைக்கு ஏறி தங்களது உலகநாயகன் அனுபவங்களை எடுத்துரைத்தனர். இதற்கிடையே 8 மணிக்கு டிரைலர் லாஞ்ச் #நம்மமவர் ட்வீட் செய்ய வேண்டும் என ஞாபகபடுத்திகு கொண்டே இருந்தார் திவ்யதர்சனி. படத்தில் நடித்துள்ள நரேன், காளிதாஸ், காயத்திரி மேடையில் தோன்றி பட அனுபவங்களை 9/
பேசினார்கள். நரேன் தனது ரசிக அனிபவத்தை மிக அழகாக பகிர்ந்து கொண்டார். சந்திப் கிசன் பேச்சும் மிக அருமையாக இருந்தது. மாநகரம் படத்திற்கான பட்ஜெட் தான் இந்த ஆடியோ லாஞ்சுக்கான பட்ஜெட் என்ற போது பிரமிப்பாக இருந்தது. ராஜ்கமல் நிறுவனம் திரைபடம் எடுக்க செய்யும் செலவு என்ன என்பதும் 10/
புரிந்தது. சரியாக மணி 8 ஆவதற்கு ஒரு நிமிடம் முன்பாக கவுன்ட்டவுன் ஆரம்பித்தது. 8 மணி ஆனதும் நம்மவர் டிரைலர் டுவிட் செய்த அடுத்த நொடி, திரையில் மிரட்டலான ட்ரெய்லர் காட்டப்பட்டது. உள்விளையாட்டு அரங்கம் அதிரும் படி கைதட்டல்கள் விசிலுடன் டிரைலர் அமைந்தது. மிரட்டலாக இருந்தது. 11/
இயக்குநர் லோகேஷ் & டீமின் கடும் உழைப்பு தெரிந்தது. நம்மவரின் "பார்த்துகலாம்" என்கிற வசன மாடுலேசன் தெறித்தது. எடிட்டர் தனது அனுபவத்தை பகிர்ந்தார். பிறகு, படத்தை விநியோகம் செய்யும் உதயநிதி அவர்கள் மேடைக்கு வந்து, விநியோக உரிமைப்பெற்றது எப்படி எனபேசினார் "மிரட்டி வாங்கினிங்களாமே 12/
என அனைவரும் பேசுகின்றனர். எழுதுகின்றனர். #கமல்ஹாசன் அவர்களை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது. அது உலகத்திற்கே தெரியும் என்றார். அரசியல் வேறு இது வேறு என #கமல்ஹாசன் அவர்கள் சொல்லி, பரவாயில்லையா எனக் கேட்டு, நான் ஒகே எனக் கூறி, கடைசியில் ஓடும் ரயிலில் ஏறுவது போல் தானும் இந்த 13/
படத்தின் அங்கம் என்பதைக் கூறிச் சென்றார். உதயநிதிக்கு முன்பு இயக்குநர் பிரபு சாலமன் அழகாக பேசினார். பிறகு ராதிகா சரத்குமார் & லிசி இருவரும் மேடைக்கு வந்து வாழ்த்தி பேசினார்கள். படத்தின் சண்டை இயக்குநர்கள் அன்பறிவு இரட்டையர்கள் தோன்றி பட அனுபவங்களை பகிர்ந்தனர். படத்தில் 14/
கண்ணாடி உடைக்கும் புதிய அனுபவத்தை #உலகநாயகன் அவர்களிடம் கற்ற அனுபவத்தை கூறினார்கள். இயக்குநர் பார்த்திபன் அவர்களின் பேச்சு வழக்கம் போல் வித்தியாசமாக அருமையாக இருந்தது. ஐசரி கணேஷ் பேசும் போது, எந்த படத்தையும் 4 மணி காட்சி பார்த்ததில்லை. ஆனால், இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து 15/
பார்க்கப் போவதாக உறுதி அளித்தார். இயக்குநர் மகேஷ் நாராயணன் & ஒளிப்பதிவாளர் ரத்ணவேலு இருவரும் வாழ்த்தி பேசினார்கள். விஜய் சேதுபதி பேச வரும் போது அரங்கு அதிர்ந்தது. "எங்க அப்பன் பாட்டன் செய்த புண்ணியமோ தெரியலை, #கமல்ஹாசன் அவர்களோடு நடித்துவிட்டேன். உங்க இயக்கத்திலும் நடிக்க ஆசை 16/
இருப்பதாக", தனது கோரிக்கையை வைத்தார். இதயத்தை தொடும் பேச்சாக அமைந்தது. சிலம்பரசன் அவர்களின் பெயரைச் சொன்னதும் விசில் சத்தம் கைத்தட்டல்கள் அடங்க மிக நேரமானது. "திரையில் தனது குரு #கமல்ஹாசன் அவர்கள் என்றும், விஸ்வரூபம் பிரச்சனையின் போது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஒரு நாள் 17/
முழுவதும் கூடவே இருந்ததைப் பற்றி மிக நெகிழ்ச்சியாக பேசுனார். அவரும் சான்டியும் ஒரு ஸ்டெப் போட்டு காட்டி அசத்தினார்கள். அனிரூத் படத்தின் டைட்டில் ட்ராக்கை பாடி அசத்தினார். பத்தலை பத்தலை பாடலின் தமிழ், தெலுங்கு.. இந்தி என மூன்று மொழிகளிலும் நம்மவர் பாடி அசத்தியுள்ளதை பெருமையாக 18/
கூறினார். தெலுங்கு பாடல் வார்த்தைகளை நம்மவர் சரி செய்தபோது அவரின் மொழி ஆற்றலை கண்டு வியந்ததை கூறினார். இயக்குநர் லோகேஷ் கணகராஜ் பேச முடியாமல் ஆனந்த கண்ணீரோடு தவித்தார். தான் #உலகநாயகன் மீது கொண்ட பக்தி பாசம் பற்றி விளக்கியது நெகிழ்ச்சியாக இருந்தது. தனது உதவி இயக்குநர்களை 19/
அறிமுகம் செய்தார். ஒரு காட்சிக்கு #நம்மவர் புஷ் அப் எடுத்ததை பற்றி சொல்லி வியந்து போனார். அது நம்மவருக்கு தெரியாமல் எடுத்து வைத்துள்ளதாகவும், மேக்கிங் விடியோவில் வரும் எனக் கூறினார். இரவு மணி 10:15 ஆகிவிட்டது. கூட்டம் அப்படியே உலகநாயகனுக்காக காத்திருந்தது. அனிருத் கீபோர்டுடன் 20/
இருக்க, தலைவர் மேடை ஏறினார். சத்தம் வின்னைப் பிளந்தது. அன்பே சிவம் பாடலை அசத்தலாக பாடினார். பிறகு பேச ஆரம்பித்தார் 4 வருடம் உங்களுக்காக படம் இன்றி இருந்தேன். அரசியல் சினிமா பிரிக்க முடியாது. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. முழு நேர அரசியல்வாதி யாரும் கிடையாது. 21/
தமிழ் மொழிக்கு கெடுதல் என்றால் குரல் கொடுப்பேன். முதல்வர் என் நண்பர். நட்பு வேறு அரசியல் வேறு. அரசியலில் அவர் அந்த பக்கம். நான் இந்த பக்கம். அரசியலையும் நட்பையும் ஒன்றாக சொல்லக்கூடாது. லோகேஷ், விஜய் சேதுபதி என ஒவ்வொருவரின் பெயர் சொல்லி நன்றி கூறினார். ராஜ்கமலின் பணியாற்றும் 22/
ஒவ்வோருவர் பெயர் சொல்லி.. குறிப்பாக ஓட்டுநர் சேட் & காலம் சென்ற எங்கள் நண்பர் முரளி அவர்கள் பெயர் சொன்னது நெகிழ்வாக இருந்தது. இறுதியாக அனைவரும் மேடையில் தோன்றி, ஆடியோ லாஞ்ச் அபிசியலாக செய்யப்பட்டது. மணி 10:50. ஏறக்குறைய 5 மணி நேரம். கூட்டம் கலையாமல் காத்திருந்து நிகழ்ச்சியை 23/
நான்பலவற்றை குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.அதில் முக்கியமானஒன்று @Suriya_offl அவர்கள் #விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் லோகேஷ் & நம்மவர் அவர்கள் உறுதிபடுத்தினார்கள். இறுதியில் கை கொடுத்த தம்பி சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தார் #நம்மவர் . இதை குறிப்பிட தவறிவிட்டேன். 🙏
25/25
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@Nakkalites விமர்சனத்தை எப்போதுமே வரவேற்பவர் #கமல்ஹாசன் & #மக்கள்நீதிமய்யம் கட்சியினர். ஆனால், அந்த விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் எத்தனை பொய் அவதூறு காணொளிகள் போடுவதற்கு நீங்கள் சொல்லும் பதில் சொல்கிறது, நீங்கள் யார் என்று! 1/
சிங்காரவேலன், சகலகலாவல்லவன் படத்தை பார்த்த நீங்கள், அதே கால கட்டத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தை பார்க்க தவறியதேன்! அதற்கு முன்பும் சரி பின்பும் சரி பல அரசியல் கருத்துக்களை தனது படங்கள் மூலமாக கொடுத்ததை பார்க்க தவறியதேன்! சத்யா வில் இறைஞர்களை எப்படி அரசியல் கட்சிகள் 2/
விலைக்கு வாங்குகின்றன என்பது. இந்தியனில் லஞ்சத்தின் கொடுமைகள் (ஜென்டில்மேன் & ஐயா படங்களை சாதி காரணமாக நடிக்க மறுத்தவர்), தேவர் மகனில் ஒரே சாதிக்குள் நடக்கும் வன்மத்தால் மக்கள் படும் அவதி, குருதிப்புனல் படத்தில் நக்சலைட் உருவாகும் விதம், அன்பே சிவம் படத்தில் கார்பரேட் 3/
மயத்தின் கல்வி கொள்கைகள். தேர்தல் வாக்குறுதிகள். 9 பக்கம் கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 1. கல்விக்காக ஒட்டு மொத்த ஜிடிபியுல் 6% ஒதுக்கீட 2. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவோம். 3. தரமான இலவச கல்வி அளிக்கப்படும் 4. தமிர் கலாசரம், தமிழர்பண்பாடு, தமிழுக்காக 1/
உழைத்தவர்கள் வரலாறு பாடத்திட்டமாக கொண்டுவரப்படும் 5. மனப்பாட கல்வி முறை மாற்றப்படும் 6. மாணவர்களின் புத்தகசுமை குறைக்கப்படும் 7. சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் 8. ஆசிரியர்களுக்கு பன்னாட்டு கல்வி நிலையங்களிலில் இருந்து பயிற்சி அளிக்கப்படும்
2/
9. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் 10. மருத்துவர் & வழக்கறிஞர்களுக்கு சீரூடை போல் மரியாதையான சீருடை வழங்கப்படும் 11. ஆசிரியர்களுக்கு அவர்கள் பணி மட்டுமே கொடுக்கப்படும், சம்மந்தமேயில்லாத பணி கிடையாது 12. 9-12 மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்
3/
@maiamofficial
தலைவர் @ikamalhaasan
அவர்களின் உணர்ச்சி மிக்க ஆவேச உரை. 1. கட்சியின்பொருளாளர் தவறுசெய்தார் என நிருபிக்கப்பட்டால், கட்சியிலிருந்துநீக்கும் துணிவு&நேர்மைஎனக்குஉண்டு. துரைமுருகன்வீட்டில் எடுக்கப்பட்டபணத்திற்காக காங்கிரஸ்கட்சிவெளியே 1/
வந்துவிட்டதா? எனது கட்சியில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் ,உங்களால் அது முடியுமா? 2. அம்மா இருந்த போது பேசினாரா என கேட்கிறார்கள். அவங்க இருந்த போது, அவங்களை அதாவது அரசை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றிபெற்றவன். 3. சமூக நீதி பற்றி பேசுவாரா? என்கிறார்கள். எனது குரல் 2/
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி தலித்தாக பிறந்தது எப்படி உங்க குற்றமில்லையோ, அது போல் நான் பார்ப்பனராக பிறந்தது என் குற்றமில்லை. நான் சாதி பார்ப்பது இல்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து இருக்கும். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். 4. நிர்பயா நிதியை ஒழுங்காக இந்த 3/
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக#அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்: 1. கூட்டம் இல்லை. 2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு 3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி 2. 3000 பேர் வந்ததை மறைத்தது 3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது 4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது 5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள். 1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம் 2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது 3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக 4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது 5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
@maiamofficial நம்மவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எந்த செய்தியையும் தலைப்பையும் & படத்தையும் வைத்து, அது நமது கட்சிக்கு ஆதரவு என நினைத்து பதிவிட்டு பரப்ப வேண்டாம். அதிலும் தினமலர் பரப்பும் பொய் செய்திகளை உண்மை கலந்து கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம், இதில் சபரீசன் 1/6
ரகசிய சந்திப்பு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். காலையிலிருந்து இந்த தினமலர் செய்தி அனைவராலும் பரப்ப படுகிறது. சபரீசன் சந்தித்தது உண்மை என மய்யம் நண்பர்கள் நம்புகிறர்களா? இதை மாநில அளவில் பொறுப்புள்ளவர்கள் விளக்க வேண்டும். #திமுக வுடன் கூட்டணியில்லை எனும் போது எப்படி ரகசிய 2/6
சந்திப்பு, அதுவும் 2 முறை நடக்கும்?
அது என்ன ரஜினிகாந்த் என்றால் பரவாயில்லை என்ற ஒரு வாக்கியம். அரசியலுக்கு வரவே பயந்து தொடை நடுங்கி அரசியலே வேண்டாம் என்று சன்யாசம் வாங்கியவருக்கு மக்கள் ஆதரவு உண்டு என பிதற்றி உள்ளது தினமலர். மக்கள் ஆதரவை எப்படி கண்டுபிடித்தது? 3/6