#அறிவோம்_மகான்கள் #ஸ்ரீவிட்டோபா உடல் முழுதும் புழுதி, சேறு; இடுப்பில் ஒரு கோவணம் மற்றும் அரைகுறையான மேலாடை என்னும் கோலத்தோடு, ஊர் முழுதும் சுற்றிக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். (திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புறம்) சாப்பாடு கிடையாது. ஒருவேளை பசித்தால், ஏதாவது ஒரு வீட்டின்
முன் நின்று, இருமுறை கைகளைத் தட்டுவார். ஓசை கேட்டு, யாராவது வந்து உணவு இட்டால் சரி, இல்லையேல் பட்டினி தான். நல்லவர்கள் என்றும் எங்கும் இருப்பர் அல்லவா! அதன்படி அந்த ஊரில் இருந்த பெண்மணி ஒருவர், இந்த உத்தம துறவியின் நிலை உணர்ந்து இரங்கி, தினந்தோறும் அத்துறவி வரும் போது, அவரை வணங்க
உபசரித்து, உணவு அளிப்பார். துறவியும் அன்போடு இடப்படும் அந்த அன்னத்தை ஒரு கவளம் வாங்கி கொள்வார். இந்த உத்தமருக்கு உணவளிக்காமல், நான் உண்பதில்லை என்ற நியதியைக் கடைப்பிடித்து வந்தார் அந்தப் பெண்மணி. ஒருநாள் அந்த வீட்டுக்கு, உணவிற்காக துறவி சென்றபோது, பெண்மணி வீட்டில் இல்லை. ஏதோ
வேலையாக வெளியே சென்றிருந்தார். பெண்மணியின் கணவர் மட்டும் வீட்டில் இருந்தார். துறவியைப் பார்த்தார், துறவியின் கோலமும் தோற்றமும் அந்த மனிதருக்கு அலட்சியத்தையும், சினத்தையும் உண்டாக்கின. ஆதலால், அவர் தன் கையில் இருந்த பிரம்பை ஓங்கி, ’போ, போ இங்க நிக்காதே போ’ என்று திட்டி, விரட்டி
விட்டார். துறவியும் வாய் திறவாமல், நகர்ந்து விட்டார். இது நடந்து நீண்டநேரம் கடந்து, பெண்மணி வீடு திரும்பினார். துறவி வந்ததோ, அவரைத் தன் கணவர் அவமானப்படுத்தித் துரத்தியதோ, பெண்மணிக்குத் தெரியாது. அவர், என்ன ஆச்சு இன்னிக்கி அந்த மகான் உணவுக்கு இன்னும் வரலியே என்று கவலையில் ஆழ்ந்தார
அலுவலகம் சென்ற அந்தப் பெண்மணியின் கணவர் எழுதத் துவங்கினார். ஊஹூம், எழுதமுடியவில்லை. சில வினாடிகளில் கை முழுதுமாக உணர்ச்சியற்று, செயலற்றுப் போய் விட்டது. மருத்துவரிடம் ஓடினர், பலனில்லை. அதனால் அவரை வீட்டிற்கு கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினர் நண்பர்கள். பதறித் துடித்தார் மனைவி.
ஏன் இப்படி நடந்தது எனக் குழம்பினார். அந்த நேரத்தில் அவர் கணவர், இன்று ஒரு பரதேசி வீட்டிற்கு வந்தார். பிரம்பை ஓங்கி, கண்டபடி திட்டி, அவரை விரட்டினேன். ஒருவேளை, அதனால் இப்படி ஆகியிருக்குமோ என்றார் மனைவியிடம். பெண்மணிக்கு உண்மை புரிந்தது. ஆகா! வந்தது, நம் மரியாதைக்கு உரிய துறவி தான்
நம் கணவர் அவமானப்படுத்தியது அவரைத்தான் என்பதை உணர்ந்தார். உடனே கணவரை ஒரு வண்டியில் அழைத்துக் கொண்டு, துறவியைத் தேடிப் போனார். துறவி, ஒரு இடத்தில், உட்கார்ந்து, கைகளால் தாளம் போட்டபடி, பாடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், பெண்மணி வண்டியிலிருந்து இறங்கி துறவியின் திருவடிகளில்
விழுந்தார். துறவியின் முன் கணவரை நிறுத்தி, மன்னிக்கும்படி வேண்டி அழுதார். அவர் கணவரின் பாதிக்கப்பட்ட கையை, கருணையோடு பார்த்த துறவி, 'ஜா ஜா' என்று சொல்லி, பழையபடி பாடலை முணுமுணுத்து தாளம் போடத் துவங்கினார். அதே வினாடியில், செயலற்று இருந்த கை செயல்படத் துவங்கியது. கணவரின் கை செயல்
படத் துவங்கியதைக் கண்ட பெண்மணி, ஆனந்தக் கண்ணீர் சிந்த, கணவரோடு சேர்ந்து, துறவியின் திருவடிகளில் மீண்டும் விழுந்து வணங்கினார். அந்தத் துறவி, விட்டோபா சுவாமிகள். இந்நிகழ்ச்சி நடந்த இடம், திருவண்ணாமலையில் இருந்து வேலுார் செல்லும் வழியில் உள்ள போளூர் என்னும் ஊர். #ஸ்ரீவிட்டோபா
சுவாமிகளின் சமாதி, இன்றும் அங்கே உள்ளது. யாரையும் இழிவாகப் பேசி, அவமானப் படுத்தாமல் இருந்தால், தெய்வத் திருவருள் தானே வந்து பொருந்தும் என்பதை விளக்கும் வரலாறு இது. விட்டோபா சுவாமிகள் போளூரில் 7.11.1909 அன்று காலை 6 மணிக்கு சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார். இவர் சித்தியான போது
ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகள் வானத்தை நோக்கி அதோ விட்டோபா போறான் என்று பல முறை கூறினார். ஒரு ஞானியை இன்னொரு ஞானி தானே அறிய முடியும்! அவரின் பெருமைகள் பல. இங்கு ஒரு சம்பவம் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். விட்டோபா சுவாமிகள் திருவடிகளில் விழுந்து வணங்குவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 19
#அறிவோம்_மகான்கள் #ஸ்ரீமன்னார்குடி_பெரியவா 28.5.1815- 4.3.1903
#மகாபெரியவா என்றால் எல்லாருக்கும் தெரியும். மன்னார்குடி பெரியவா என்று ஒருவர் இருந்தார். மகா பெரியவா அவர்களே, ஒருவரை #பெரியவா என்று அழைத்தார் என்றால் அவர் எப்படிப் பட்டவராக இருக்கவேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம். Image
மன்னார்குடி மஹா மஹோபாத்யாய தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் தான் அந்த மன்னார்குடி பெரியவா. பாரத்வாஜ வம்ச வேத வியாசர் அவர். அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பம். திருவாரூர் கூத்தம்பாடி கிராமத்தில் பிறந்தவர். அம்மா மரகதவல்லி ஜானகி அம்மாள். அப்பா மார்க்க ஸஹாய அப்பய்ய தீக்ஷிதர் Image
மன்னார்குடியில் முதல் அக்ரஹாரத்தில் குருகுலம் அமைத்து ஆயிரக்கணக்கான மாணாக்கர்களுக்கு வேத சாஸ்திரம், அனுஷ்டானம் கிரந்தம் எல்லாம் கற்பித்தார். வெளி மாநிலங்களில் இருந்து வந்து கற்றார்கள். மாணவர்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அநேகர் அளித்தனர். பிள்ளைகள் கற்பதில் ரொம்ப கண்டிப்பாக
Read 17 tweets
May 19
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கல்பனா தன் குடும்ப நிலைமை குறித்து தன் தோழி ரேகாவிடம் கூறினாள், என் தாய் தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை முனுசாமி பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே Image
பிறந்தோம். நான் ஐந்தாவது பெண். ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி. என் தந்தை தமிழ் ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமில்லை, நண்பர்களும் கவலைப்பட்டார்கள். என் முதல் அக்கா பானுமதிக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்
போனார்கள். அக்காவிற்கு அப்பா எப்படித் திருமணம் நடத்தப் போகிறார், பணம் வேண்டாமா என்று அனைவரும் கவலைப்பட்டோம். திடீரென்று ஒரு நாள் வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார். அவ்வளவு வசதியும் பெரிய வேலையில் இருக்கும்
Read 9 tweets
May 19
Rama Bhakta Hanuman acted upon the injustice done to Sita Devi in Sri Lanka on the day he lit fire to Lanka. This kind of fire is still burning in the minds of the people against injustice. People in many places have had the courage to question the atrocities that have been going Image
on against them for years.

“One thing good people have to do to thrive Evil is be silent” Edmund Burke.

“The day we die is the day we refuse to speak the truth even after knowing the truth.“ Martin Luther King
Violence, injustice, and crime are prevalent in the world today.
But there are very few voices against it. No one cares about injustice unless it affects themselves or their community. But they are unjust. The voice of those who are not affected by injustice has the power to make greater impact. No society should forget that if we raise our
Read 5 tweets
May 19
#MahaPeriyava
The Kumbhabhishekam of Sri Kamakshi Amman temple was held in 1944. It was during this period that Janakiramayya grew close to the SriMatham. He belongs to the sub-sect called teertha purohits and was foremost among them in those days. In his father’s days there were Image
3 or 4 assistant purohits in his house. They would go to the Kanchipuram railway station, receive pilgrims from North India and arrange for their food and stay. Pilgrims from royal families and from Rajasthan would often visit Kanchi. The priests would guide them to take a
sankalpa snana at Sarvateertha temple tank and then arrange for the performance of the oblations to their forefathers. But gradually this stopped. No one was interested in doing this any more. At a certain point of time, Maha Swami gave up the office of the hereditary Chief
Read 16 tweets
May 18
#இந்துகளாகிய_நாம்_கடைபிடிக்க_வேண்டிய_சில_முக்கிய_பழக்கங்கள்:
காலையில் எழுந்தவுடன் அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க இறையருளை நாடி இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனத்தில் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். (சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று அனைத்து செயல்களையும் அவனுக்கு அர்ப்பணித்து
விட்டால் பொறுப்பு அவனுடையது ஆகிவிடுகிறது.) புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை ஒரு நிமிடமாவது நினைத்து வணங்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடவேண்டும். சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ
ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிட வேண்டும். பெறோரை தினம் வணங்க மறக்கக் கூடாது. அன்றாடம் சக்திக்கேற்றபடி தர்மம் செய்ய வேண்டும். நெற்றியில் தவறாது நம் குடும்ப வழக்கப்படி திலகம் தரித்துக் கொள்ள வேண்டும். நம்மை சுற்றியுள்ள அனைவரையும் எந்த வேறுபாடும் பார்க்காமல் நேசிக்க வேண்டும்.
Read 4 tweets
May 18
#ஸ்ரீரங்கம்_நெல்_அளவை_படியளக்கும்_பெருமாள்
பகவான் எல்லாருக்கும் படி அளக்கிறான் என்று வழக்கில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார், வருஷத்துக்கு ஏழு தடவை!
சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவைத் திருநாள்
நடைபெற்று வருகிறது. மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில், அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது. நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள். ஏன்? இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு செலவு எவ்வளவு, மீதி இருப்பு
எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்க்க. அதற்கு எதற்கு தேவியரையும் சேர்த்து அழைத்துக் கொண்டு போக வேண்டும்? கணவனின் சரிபங்கான மனைவிக்கு, எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று நமக்கு உணர்த்துவதற்காக வருகிறார். தவிர, தானிய அளவையின் போது,
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(