அவர்கள், வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த இயற்கையைத் தெய்வமாகப் போற்றினார்கள்; அதற்குரிய ஓர் அறத்தையும் கொண்டிருந்தார்கள் என #கலித்தொகை (39) கூறும் பாடல் பின்வருமாறு!
அல்லவை புரிந்து வாழ்ந்தால், மலையில் வாழும் நமக்குத் தேனும், கிழங்கும் கிடைக்காமல் போகும் எனும் அறம் சார்ந்த ஒரு தொன்மத்தைக் #கலித்தொகை காட்டுகிறது.
வேட்டைச் சமூகத்தில் #பகுத்துண்ணுதல் கூட்டுவாழ்வின் விழுமியமாக இருந்துள்ளது.
இது ஓர் உலகளாவிய பண்பாகும்.
இது எல்லா வேட்டைச் சமூகங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
ஆநிரைகளைக் கொன்று அவற்றைப் பெரிய கற்பாறையின் முடுக்கில் தசையை அறுத்துண்டனர் என்பதை #அகநானூறு (97:4-6) கூறுகிறது.
வேட்டுவச் சமூகத்தார் தொன்மைப் பொதுவுடைமையை மிகச் சிறப்பாகக் கொண்டிருக்கக் கூடியவர்கள் என்பது #இனவரைவியல் கண்டறிந்துள்ள முடிவாகும்.
சங்ககால வேட்டுவக் குடியினரும், ஆதிப் பொதுவுடைமைப் பண்புகளைப் பெரிதும் கொண்டிருந்ததாக அறிய முடிகிறது.
வேட்டையில் கிடைத்த உடும்பின் இறைச்சியைக் குடியிருப்பில் உள்ள குடியினர் அனைவரும், கூறுபோட்டுப் பகிர்ந்து கொண்டதைப் பின்வரும் #புறநானூறு வழி அறிகிறோம்.
வேடர்கள் கூடி உண்ணுவதற்கென்றே சில மன்றங்களும் இருந்துள்ளதைப் 'புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து' (நற் 33:3) என அறியலாம்.
சங்க காலத்தில் குறிஞ்சி நில மக்கள் தேன், கிழங்கு, மான் இறைச்சி, மது போன்றவற்றைப் பிற திணை மக்களுக்குக் கொடுத்துத் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.
இத்தகு 'பண்டமாற்றம்' இவர்களின் வாழ்வில் ஒரு கூறாக இருந்ததைச் சிறுபாணா. (150-153), பெரும்பாணாற்றுப்படை (67-68), பொருநர் ஆற்றுப்படை (214-217), மூலமும் வேறு சில பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது.
கடுங்கண்களைக் கொண்ட வேழத்தின் (யானை) கொம்புகளைக் கொடுத்து, அதனால் வந்த பொருளைக் கொண்டு உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதனைக் #குறுந்தொகை 'கடுங்கண் வேழத்துக் கோடு கொடுத்துண்ணும்' (குறுந்.100: 4) எனக் குறிப்பிடுகிறது.
புன்செய் விளைபொருட்களான வரகு, கொள் முதலானவற்றைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்து வாங்கி உண்டுள்ளனர் (பதிற். 75:9-13).
குறிஞ்சித் திணையில் காணப்பட்ட 'தொடக்க நிலைப் பண்டமாற்றம்' (அ) 'சிறிய அளவிலான பண்டமாற்றம்' எனலாம்.
முல்லைத் திணையில் ஏற்பட்ட பண்டமாற்றமே விரிவானதாகும்.
- நன்று
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!
மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.
இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.
இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.
#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.
▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.
▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.
சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.
#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.