சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!
மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.
இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.
இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.
#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
#பிட்டங்கொற்றன் ஆண்ட குதிரை மலைநாட்டுக் குறவர்கள் பன்றி கிளரிய இடத்தில் விளைவித்த தினையோடு, பால் கலந்து, மான் கறியை இட்டு வேக வைத்து உண்டனர் (புறம்.168).
குறிஞ்சியில் இயற்கையாகப் பாறையில் வாட்டுவதும், தீயிட்டுச் சுடுவதும் முதன்மையானதாக இருந்தாலும், அதன் பின்னர் வேகவைத்தலும்...
சமைத்தலும் தோன்றியதைக் காணமுடிகிறது.
#உமணர்கள் காட்டு வழியாகச் சென்றபோது சமைத்த கல் அடுப்பில், அங்கிருந்த #வேடர்கள் இறைச்சியைப் புழுக்கி (அவித்து) உண்டார்கள் என்பதை #அகநானூறு (119:8-9) சொல்கிறது.
அருவியில் அடித்து வரப்பட்ட பலாப்பழத்தின் கொட்டைகளை இடித்துத் தயாரித்த மாவையும்,
கடமான் கறி, முள்ளம்பன்றிக் கறி ஆகியவற்றையும் கலந்து சமைத்து,
மூங்கில் அரிசிச் சோற்றையும், புளி கலந்த மோரையும் #குறமகள் பரிமாறினாள்.
சிறுவர்கள் வேட்டையாடி வந்த உடும்பின் தசையை இல்லறப் பெண் ஒருத்தி, தயிருடன் சமைத்துப் பாணருக்கும், அவரோடு வந்த ஏனைய விருந்தினர்களுக்கும், விருந்தோம்பியதைப் புறநானூறு பின்வருமாறு பேசுகிறது.
இதைப் போன்றதொரு செய்தியைப் பெரும்பாணாற்றுப்படையிலும் (131-133) காணமுடிகிறது
எயினப் பெண் தம் இருப்பிடம் நோக்கி வந்த பாணர்களுக்கு, உடும்பின் கறியைச் சமைத்து உபசரித்தாள்.
சங்ககால மக்கள் உணவின் சுகாதாரம் பற்றியும் சிந்தித்துள்ளனர்.
உணவு வகைகளை மூடி வைத்துப் பாதுகாப்பதும், அவற்றைக் கையில் தொடாது கருவிகள் கொண்டு பயன்படுத்தியதும் #புறநானூறு (396) கூறுகிறது
குறிஞ்சித் திணை மக்கள் இயற்கை உணவைப் பெரிதும் நம்பியிருந்தார்கள். சமைக்காத உணவையும் அவர்கள் சார்ந்திருந்தார்கள்.
மரத்திலிருந்து தானாக வீழ்ந்த பலாவின் சுளையை மேலும் சுவையூட்டி உண்ணும் பொருட்டுத் தேனிறாலைச் சிதைத்துத் தேனில் நனைத்து உண்டனர்.
பாலில் தினை அரிசியோடு மான்கறியைக் கலந்து சமைத்தனர். இதனை வாழை இலையில் பகுத்துண்டனர்.
#கானவன் கொன்ற முள்ளம்பன்றிக் கறியை, அவனுடைய #கொடிச்சி கிழங்கோடு அவர்கள் வாழும் 'சிறுகுடிக் குறவர்' குடும்பங்களுக்குப் பகிர்ந்தளித்தாள் என்பதை #நற்றிணை (85:8-10) குறிப்பிடுகிறது.
குறவர்களின் உணவில் #தினைமாவு முக்கிய இடம் பெற்றிருந்தது.
#குறமகள் மென்தினையின் மாவினை உண்டபடி, தட்டையை அடித்து ஐவன நெற்பயிரைக் காவல் காத்தாள் என்கிறது #ஐங்குறுநூறு (285: 1-3).
புளியைக் கலந்து சமைத்த வெஞ்சோற்றை விரும்பி உண்டனர்.
சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.
▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.
▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.
சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.
#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.