சங்க கால #நெய்தல் திணை மக்களின் பன்மைத் தொழில் நுட்பங்கள்!
சங்க கால மீனவர்களின் தொழில்நுட்பம் பன்மைத் தன்மை வாய்ந்தது.
#பரதவர்கள் நள்ளிரவிலும் மீன் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.
தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு திண்ணிய திமிலில் அலைகடல் நடுவே சென்றுள்ளனர்.
விளக்கொளியைக் கண்ட சிறுமீன்கள் திரண்டெழும்; அவற்றைத் தின்ன வெஞ்சுறாக்கள் விரைந்து வரும்.
அவற்றைப் பரதவர்கள் பிடித்துத் திமிலில் ஏற்றி வந்தனர் - நற்.67:6-9
இரவில் மீன் வேட்டம் செய்வோர், கடலில் வெளிச்சம் வார் போடுவதற்குத் தாம் பிடித்த மீன்களின் கொழுப்பைச் சேகரித்து அதனை...
எண்ணெய்யாகப் பயன்படுத்தியுள்ளனர் என
பின்வரும் பாடலடிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.
இரவில் மீன் வேட்டத்திற்குச் செல்லும்போது, சுறா மீன்கள் கட்டுக் கடங்காமல் விரைந்து திரிவதுண்டு.
அவற்றைக் கனன்று எரியும் தீப்பந்தம் மூலம் கூர்ந்து நோக்கி, வலுவான கயிற்றில்...
கட்டப்பட்டுள்ள #எறியுளி கொண்டு தாக்கிப் பிடித்தனர்.
இத்தகைய பெரு மீன்கள் நிரம்பப் பிடித்த மகிழ்ச்சியோடு, தங்கள் பெருங்கழிப் பாக்கங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
இத்தகைய காட்சியொன்றை #நற்றிணை பின்வருமாறு விளக்குகிறது.
சங்க காலம் தொட்டே மீன்பிடித் தொழிலில் #பாடு (மீன்கள்) கிடைப்பதென்பது ‘பட்டா பட்டா பாக்கியம்' ஆகும்.
மீன்கள் எப்போது கிடைக்கும், எப்போது கிடைக்காது என்பது உறுதியாகக் கணிக்க முடியாது.
கடலின் தன்மையையும், நீரோட்டத்தையும் கணித்தே மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல முடியும்.
மீன்பிடிக்கும் குழுவில் அனுபவம் மிக்க மூப்பனே கடலில் வலைவீசும் இடத்தைக் கணிப்பார்.
அவருடைய கணிப்பு பலிக்கும் போது மீன்கள் கிடைத்துவிடும்; பலிக்காதபோது மீன்கள் கிடைக்காது.
#பரதவர்கள் கடலிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிய காலமும் உண்டு.
கடலில் வீசிய வலைகளைச் சினம் கொண்ட சுறாக்கள் கிழித்துவிட வலையில் பட்ட மீன்கள் தப்பித்து விடுகின்றன.
இதனால் #பரதவர்கள், ஏமாற்றத்துடன் கரை திரும்பிக் கிழிந்த வலைகளைத் தம்மனை முற்றத்தில் நின்ற தாழை மரங்களின் கீழ் விரித்துப் போட்டிருந்த சூழலையும் காணமுடிகிறது. (அகம்.340:18-23)
வலைகள் கிழிந்தபோதும் பரதவர் விடாமுயற்சியுடையவர் என்பது, அவர்களின் தொழில் முறையில் காணப்பட்ட ஒரு விடயமாகும்.
வலைகளைச் சீர்செய்து கொண்டு மீண்டும், சுறா மீன்களைத் தம் வேட்டை மூலம் பிடித்து வந்ததன் மூலம், #பரதவர் விடா முயற்சியுடையவர் என்பதை #நற்றிணை பாடல்கள் மூலம் முடியும்.
'மீன்கள் துஞ்சம் பொழுதும் யான் கண்துஞ்சேன்' (நற்.319) எனும் பாடலடி மூலம்,
#பரதவர்கள் இரவிலும் கண் துஞ்சாது மீன்பிடித் தொழில் ஈடுபட்டிருந்ததைத் தெரிவிக்கிறது.
பரதவர்கள் பெரிய மீன்களைப் பிடிப்பதற்கு எறியுளியைப் பயன்படுத்தினர் என்கிறது #அகநானூறு.
கடலில் மீன் வேட்டம் செய்யும் மீனவர்களின் வாழ்வியல் பலவாறு சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளது.
நெற்களத்தில் அறுவடை செய்யும் உழவர்கள் போன்று ஏராளமான மீன்களைப் பிடித்துவரும் பரதவர்,
அவற்றை இரந்தோர்களின் வறுங்கலன்கள் நிறைந்து வழியுமாறு வழங்குவார்கள்.
மீதமுள்ளவற்றைத் தங்களுக்குள் பங்கிட்டு, அவற்றை விலை கூறி விற்று, கரையுயர்ந்த அந்த மணற்பரப்பிலே உறங்குவார்கள் என #அகநானூறு (30 7-11) பாடலொன்று கூறுகிறது.
கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் தொழில் என்பது ஒரு கூட்டுத் தொழிலாகும்.
குறைந்தது இரண்டு, மூன்று ஆடவர்கள் இணைந்து செய்யும் தொழிலாகும். இத்தகைய குழுச்செயற்பாடு சங்ககாலம் தொட்டு இருந்து வருவதைக் காணமுடிகிறது.
இன்றுங்கூடக் கட்டுமரத் தொழிலில் ஒரு சிறு குழுவாகக் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவதைக் காணமுடிகிறது.
இவ்வாறு மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பும் மீனவர்கள் கிடைத்த மீன்களைப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்கிறது #அகநானூறு.
பரதவர்கள் சுறா மீன்களைப் பிடிப்பதற்கு இரவு நேரங்களில் செல்வர். அதற்குக் கூர்மையான உளியைப் பயன்படுத்தினர். உளியை மூங்கிலில் செருகிக் கயிற்றில் கட்டுவர்.
இதன் காம்பில் கயிறு கட்டப்பட்டிருக்கும். இதைப் படகிலிருந்தபடியே எறிவர்.
சுறா வேட்டம் இவ்வாறு நிகழ்த்தப்பட்டதாகக் #குறுந்தொகை கூறுகிறது.
சங்க காலத்தில் பரதவர் தூண்டிலில் சிறிய மீன்களை, இரையாகக் குத்திக் கடலிலும், கழியிலும் எறிந்து மீன் பிடித்தனர் (பெரும்பாண். 285-287).
பரதவர் பல்வேறு மீன்களைப் பிடித்தனர். தூண்டில் மூலம் #வரால்மீன் பிடித்தனர். இதனை பின்வருமாறு அறியலாம்.
'கொடுந்திமில் பரதவர்' (நற்.199:6) எனும் அடிகள், சுறா மீன் வேட்டை பற்றிக் குறிப்பிடுகிறது.
சுறாவை வலுவான கயிற்றோடு சேர்ந்த #சாட்டுளி (#எறியுளி) வீசிப் பிடித்துப் படகில், தூண்டாக்கிக் கரைக்குக் கொண்டு வந்ததை பின்வருமாறு அறியலாம்.
#கோட்டுமீன் 6-12 அடிகள் வளரக்கூடியது. இதன் இரு கொம்புகளில் கண்களும், காதுகளும் இருக்கும்.
வாள், சுறா என்ற வகையையும் அம்பி, தோணி முதலிய கலங்களில் சென்று வேட்டையாடினர் (நற்.111:5-8).
கடலுக்குள் செல்லாமல் நிலப் பகுதியிலிருக்கும் ஏரி, குளம், ஆறு, கழனி ஆகிய இடங்களில் வலைஞர்கள் மீன் பிடித்தனர்.
பூக்கள் நிரம்பிய பொய்கையில், சேற்றில் சென்று ஒளியும் #ஆரல் மீன்களையும்,
நீரின் மேல்பகுதியில் துள்ளும், பருத்த கோட்டையுடைய #வாளை மீன்களையும்,
பண்டைத் தமிழகத்தின் #பாலை என்பது நிலையான திணை அல்ல.
குறிஞ்சியிலும், முல்லையிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது #பாலை எனும் வறண்ட பிரதேசம் உருவானது.
கோடையின் மிகக் கடுமையான வறட்சியிலும், இந்நிலத்தில் பாலை மரம் வாடாமல்...
பசுமையுடன் கண்ணுக்குப் புலப்பட்டதால், பாலை என்ற பெயர் இத்திணைக்கு வந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.
வேனிற்கால நண்பகலிலும், பாலை மரத்தின் மலர்கள் கொத்துக் கொத்தாகக் கொடுஞ்சுரங்களின் வழிகளில் மலர்ந்திருக்கும் என #ஐங்குறுநூறு (383) மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
அதனாலேயே வெஞ்சுரமானாலும் அது பாலை எனப்பட்டது.
இதன் நீட்சியாக அங்கு இசைக்கப்பட்ட #பண் ‘பாலைப் பண்’ எனவும்,
அதனை இசைத்த #யாழ் ‘பாலை யாழ்’ எனவும் வழங்கப்பட்டன.
இச்சூழலில் பாலை என்பது ஒரு தனி நிலம் அன்று எனும் கருத்து கவனிக்கத்தக்கது (நற். 43, 84, 186).
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!
மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.
இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.
இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.
#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.
▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.
▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.
சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.
#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.