பண்டைத் தமிழகத்தின் #பாலை என்பது நிலையான திணை அல்ல.
குறிஞ்சியிலும், முல்லையிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது #பாலை எனும் வறண்ட பிரதேசம் உருவானது.
கோடையின் மிகக் கடுமையான வறட்சியிலும், இந்நிலத்தில் பாலை மரம் வாடாமல்...
பசுமையுடன் கண்ணுக்குப் புலப்பட்டதால், பாலை என்ற பெயர் இத்திணைக்கு வந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.
வேனிற்கால நண்பகலிலும், பாலை மரத்தின் மலர்கள் கொத்துக் கொத்தாகக் கொடுஞ்சுரங்களின் வழிகளில் மலர்ந்திருக்கும் என #ஐங்குறுநூறு (383) மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
அதனாலேயே வெஞ்சுரமானாலும் அது பாலை எனப்பட்டது.
இதன் நீட்சியாக அங்கு இசைக்கப்பட்ட #பண் ‘பாலைப் பண்’ எனவும்,
அதனை இசைத்த #யாழ் ‘பாலை யாழ்’ எனவும் வழங்கப்பட்டன.
இச்சூழலில் பாலை என்பது ஒரு தனி நிலம் அன்று எனும் கருத்து கவனிக்கத்தக்கது (நற். 43, 84, 186).
பாலையில் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால், மரஞ்செடி கொடிகள் கரிந்து காய்ந்து நிற்கும்.
விலங்குகள் உணவுக்கும், நீருக்கும் ஓயாது அலைந்து கொண்டிருக்கும்.
நிரை மீட்ட மறவர்களின் வெற்றி #பிள்ளையாட்டு விழாவாக நடைபெற்றது.
வெட்சி வீரர்களின் (#மறவர்) வாழ்க்கையும், கரந்தை வீரர்களின் (#மழவர்) வாழ்க்கையும் வேறுபட்ட நிலையில் இருந்தன என்பதை அகப்பாடல்கள் காட்டுகின்றன.
காட்டு வழியில் செல்வோரை ஒளிந்திருந்து தாக்கி, அவர்களுடைய பொருள்களைப் பறித்துத் தமக்குள் கூறுபோட்டுக் கொண்டவர்கள் 'ஆறலைக் கள்வர்' (குறுந். 331).
வணிகச் சாத்துகளை வழிமறித்துப் பொருட்களைக் கொள்ளையடிப்பதும், ஆறலைக் கள்வர்களின் தொழிலாக இருந்தது என்பதை...
'செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை’ என #அகநானூற்று (245) கூறுகிறது.
பாலைத் திணை வாழ்வு ஆநிரை கவர்தல், கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல் முதலான கொடுஞ்செயல்கள் நிறைந்ததாக இருந்தது.
இதனைப் போர் பற்றிய மானிடவியலோடு புரிந்துகொள்ள வேண்டும்.
சங்ககாலம் என்பது வீரயுகக் காலம்.
சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், குறுநில மன்னர்கள் பல்கிப் பெருகியிருந்த காலமது.
இவர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி செய்த காலமும் உண்டு; வேந்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து திறை செலுத்தி ஆண்ட காலமும் உண்டு.
இவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.
மகட்கொடை மறுத்தலுக்கும்கூடப் போர் நடந்திருக்கிறது (புறம். 336–356).
எதிரி நாட்டு வளங்களை முழுவதும் அழித்தொழிப்பதுதான், வெற்றி பெறும் மன்னனின் இறுதி இலக்காக இருந்தது.
இவ்வாறான வெட்சி, கரந்தைப் போரில் ஈடுபட்ட மறவர், மழவர், பழையர், வம்பலர், வேட்டுவர் முதலான பாலைக்குடிகள்...
போர் இல்லாத காலத்திலும், போரில் சூறையாடியது போன்ற செயல்களின் நுண் வடிவங்களில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
போர் செய்யும் #மறக்குடியினர் போர் நடைபெறாத காலத்தில் தம் உணவாதாரத்திற்காகக் கொள்ளையடித்தலும், வழிப்பறி செய்தலும், ஆநிரை கவர்தலும் செய்தார்கள்.
இவற்றை மன்னர்கள் கண்டுகொண்டதில்லை.
போருக்குப் பிந்தைய காலத்தில், ஒரு வகையான முறைசாரா சலுகைகளை மறக்குடியினர் அனுபவிக்கும், செயலாக நிரை கவர்தலும் மீட்டலும் கொள்ளையும் வழிப்பறியும் காணப்பட்டன.
பாலைத் திணையில் வழிப்பறி, கொள்ளை முதலான செயல்களில் ஆடவர் ஈடுபட்டிருந்தாலும், பெண்கள் சிறு வணிகத்தில் ஈடுபட்டுப் பொருளீட்டினார்கள்.
பாலை நில மகளிர் பூ விற்றும், கள் விற்றும், பொருள் ஈட்டியதை #அகநானூறு பின்வருமாறு பதிவு செய்துள்ளது.
- நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!
மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.
இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.
இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.
#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.
▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.
▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.
சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.
#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.