வாளைமீன், வரால், நண்டு, வெண்சோறு ஆகியன உழவர் மக்களின் உணவாகக் காட்டப்பட்டுள்ளன.
உழவர் வீடுகளில் பலவகையான உணவுப் பண்டங்கள் இருந்தன.
பலாப்பழம், தெங்கின் இளநீர், பனை நுங்கு, முதிர்ந்த வாழைப்பழம், சேம்பின் கிழங்கு, காய்கறிகள், பால் பொருட்கள் என விதவிதமான பொருட்கள் இருந்ததைப் #பெரும்பாணாற்றுப்படை (354-366) கூறுகிறது.
மருத நிலத்தில் வயல்களில் வேலை செய்யும் உழவர்கள், முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேய விடுவர்.
ஆட்டிறைச்சியுடனே வாளை மீனைப் பழைய சோற்றுடன் உண்டு மகிழ்ந்தனர்.
இதனை பின்வரும் பாடலடிகளில் காணமுடிகின்றது.
மருத நிலத்தில் முக்கியப் பணியாக #வேளாண்மை உள்ளது. இத்தொழிலில் பெண்களின் பங்கு மிகுதியாகும்.
களையெடுத்தலும், நாற்று நடுதலும் பெண்களாலேயே செய்யப்பட்டன.
விளை நிலங்களைக் காவல் செய்யும் பணியையும் பெண்கள் செய்தனர்.
வயலில் வேலை செய்துவிட்டு, இல்லம் திரும்பும் போது வயலில் கிடைக்கும் மீன்களையும், வயல் நண்டுகளையும் பிடித்து வந்து சமைத்தனர்.
மருத நிலத்துப் பெண்கள், வரால் மீன் குழம்பைச் சமைத்துத் தலைவனுக்குச் சோற்றுடன் கொடுக்க, அதனை உண்டுவிட்டுத் தன் தலைவியுடன் நாற்று நடுவதற்குச் செல்கிறான்.
பெண், உணவு சமைத்து இல்லத்தைப் பராமரித்துவிட்டு வயலில் சென்று பணிபுரிகிறாள்.
இதன் மூலம் தலைவி இல்லறப் பணியுடன் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு, வாழ்வில் சிறப்புற்றாள் என்பதைப் பின்வரும் நற்றிணைப் பாடலில் காணமுடிகிறது.
பச்சரிசிக் கஞ்சியை மக்கள் விரும்பி அருந்தியுள்ளனர் என்கிறது #மலைபடுகடாம் (454-464).
பசிய அவல் இடிப்பதற்குப் (பச்சை நெல்லை இடித்துச் செய்யப்படும் அவல்) பயன்படுத்திய உலக்கை #வயிரம் பாய்ந்து இருக்கும்.
பண்டைத் தமிழகத்தின் #பாலை என்பது நிலையான திணை அல்ல.
குறிஞ்சியிலும், முல்லையிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது #பாலை எனும் வறண்ட பிரதேசம் உருவானது.
கோடையின் மிகக் கடுமையான வறட்சியிலும், இந்நிலத்தில் பாலை மரம் வாடாமல்...
பசுமையுடன் கண்ணுக்குப் புலப்பட்டதால், பாலை என்ற பெயர் இத்திணைக்கு வந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.
வேனிற்கால நண்பகலிலும், பாலை மரத்தின் மலர்கள் கொத்துக் கொத்தாகக் கொடுஞ்சுரங்களின் வழிகளில் மலர்ந்திருக்கும் என #ஐங்குறுநூறு (383) மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
அதனாலேயே வெஞ்சுரமானாலும் அது பாலை எனப்பட்டது.
இதன் நீட்சியாக அங்கு இசைக்கப்பட்ட #பண் ‘பாலைப் பண்’ எனவும்,
அதனை இசைத்த #யாழ் ‘பாலை யாழ்’ எனவும் வழங்கப்பட்டன.
இச்சூழலில் பாலை என்பது ஒரு தனி நிலம் அன்று எனும் கருத்து கவனிக்கத்தக்கது (நற். 43, 84, 186).
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!
மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.
இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.
இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.
#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.
▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.
▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.
சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.
#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.