#காஞ்சிகாமாட்சிஅம்மன்
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி. காம என்றால் அன்பு, கருணை. அட்ச
என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைக் கொண்டது. அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று.
அவை:
காஞ்சி காமாட்சி,
மதுரை மீனாட்சி,
காசி விசாலாட்சி திருக்கோவில்களே. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. புண்ணிய பூமியான பாரத தேசத்தில் உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது.
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்று தான். அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். திருக்கோவில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய
ராஜகோபுரத்துடன் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக அமைந்துள்ளது. காமாட்சி அம்மன் திருக்கோவிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள். பெரும்பாலான கோவில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில் தான் அன்னை காட்சியளிப்பாள். அந்த மூவகை வடிவங்களாவன:
காமகோடி
காமாட்சி (ஸ்தூல வடிவம்)
(மூல விக்கிரக உருவில்).
அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்).
காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்).
காமாட்சி அன்னைக்கு மகாதேவி,
திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.
காஞ்சிபுரம் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சி அளிக்கின்றனர். மூல
மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சி அளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால் இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப்
பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள். தந்திர சூடாமணியின்படி இத்தலம் 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோவிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும்
உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். இக்கோவிலில் காமாட்சி அம்மன் இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு
கையிலும் கொண்டுள்ளார். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம். அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோவிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். 70 கிலோ
தங்கத்தில் கருவறை விமானம் அமைந்துள்ளது. பராசக்தியாய் எழுந்தருளி இருக்கும் காமாட்சி அம்மன் திருக்கோவில் 1841, 1944, 1976, 1995, 2017 ஆகிய வருடங்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோவிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் 5 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ளது.
வெளிப் பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிற்குக் போனால் அனைத்து அம்பாள் சன்னதிக்கும் போன பலன் நமக்கு கிடைக்கும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த அம்மன். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ள
இத்திருக்கோவிலில் கள்வர் பெருமாள் உள்ளது குறிப்பிடத் தக்கது. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது முதுமொழி. ஏராளமான புண்ணியம் தரும் கோவில்களை கொண்ட இந்த நகருக்கு தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.

ௐம் சக்தி பராசக்தி
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 4
#NanganallurAnjaneyar Temple is famous for the Hanuman which is 32 feet tall and sculpted from a single piece of stone. Sri Ramani Anna of Nanganallur, Chennai planned to build a temple with a big Anjaneyar of 32 feet high, in Nanganallur. He went to Sri Kanchi Matam, met Image
Sri #MahaPeriyava and sought his permission and blessings. With great difficulty, they hunted for a single big stone and finally the sculptor selected a suitable one and began his work. One fine morning, he finished the work and the statue of the great Anjaneyar was brought to
Nanganallur and kept at the place where the temple was to be built. The Balalayam (before prathishta, the deity had to be kept for a certain period separately in the water, milk, paddy, grains, etc.) was established properly. In the meantime, Ramani Anna went to Sri Kanchi Matham
Read 11 tweets
Jun 4
Dr எஸ்.ரங்காச்சாரி
நம் தமிழகத்தில் வாழ்ந்த பெருமை மிக்க, சாதித்த, பெரும் சேவை செய்த மகோன்னதர்களை நாம் தெரிந்து கொல்ளாமல் உலகத்தின் இன்னொரு மூலையில் இருப்பவரை பாராட்டி மகிழ்கிறோம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியவர்களில் ஒருவர் மருத்துவர் #எஸ்_ரங்காச்சாரி
1939 இல் சென்னையில் அவருக்கு Image
மட்டும் தான் வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே சிலை வைக்கப்பட்டது. இன்றும் ஜெனெரல் ஆஸ்பத்திரியில் காணலாம். சைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்தவர், நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று ரோல்ஸ் ராய்ஸ் வாங்கி பின் puss moth என்ற சிறு ரக விமானம் வாங்கி அதில் சென்று மருத்துவம் பார்த்தார்.
தினம் 18 மணி நேர உழைப்பு. எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் டெபுடி சுப்பரின்டென்டென்ட் ஆக இருந்தவர். அரசு மருத்துவராக இருந்த வரை ஒரு பைசா கூட சம்பளமாக வாங்காதவர். அப்படி ஒரு சேவை மனப்பான்மை. சர்ஜரிக்காகவே பிறந்தவர் என்று சொல்லலாம். நீண்ட
Read 9 tweets
Jun 3
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய புள்ளி விவரம்.
அரசு கேபிள் டிசிசிஎல் செட்டப் பாக்ஸில் உள்ளபடி கிறித்துவர்கள் நடத்தும் தமிழ் டிவிகள் மொத்தம் எத்தனை?
1 நம்பிக்கை டிவி
2 மாதா டிவி
3 ஏஞ்சல் டிவி
4 கெவன் டிவி
5 பெத்தேல் டிவி
6 நம்பிக்கை டிவி
7 எல்சடைடிவி
8 தூது டிவி
9 ஜெயம் டிவி


Image
10 தமிழன் டிவி
11 அற்புத ஏசு டிவி
12 சுபவார்த்தா டிவி
13 ஹோசன்னா டிவி
14 ஜாய் டிவி
15 ஷாலோன் டிவி
16 சுபவார்த்தா டிவி
17 ஹோசன்னா டிவி
18 சால்வேஷன்.டிவி
19 ஆசீர்வாதம் டிவி
20 316 டிவி
21 கிராஸ் டிவி
22 நிஜம் டிவி
23 ஆராதனா டிவி
24 வெளிச்சம் டிவி
25 சத்தியம் டிவி
26 இமயம் டிவி
பெரும்பான்மை இந்துக்களுக்காக ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடியவை தான். சங்கரா டிவி, டிடிடி தேவஸ்தான டிவி மாதிரி.
இத்தனை கிறுஸ்துவ தொலைக்காட்சி நிலையங்களை நடத்துவதற்கு எவ்வளவு கோடி பணம் வேண்டும்! எங்கு இருந்து இவ்வளவு பணம் வருகிறது? அயல் நாடுகளில் இருந்து வரும் கள்ளப் பணம்
Read 8 tweets
Jun 3
#மகாபெரியவா
காலம்:1930-களில் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.
“எங்கே அவன்? எங்கே அவன்?” என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக் கொண்டு ஓர் அந்தண விதவை பாட்டி தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது). உள்ளே
சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டி தனக்குத் தானே பொரிந்து தள்ளிக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன. “கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்
கதவைத் தெறந்து வச்சவ, ஏதோ சித்தக் கண்ண அசந்துட்டேன்னா, நாலு தரம் கையைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்ப மாட்டான்! அவனே சர்வ சுதந்திரமா ஆத்துக்குள்ள வந்து அடுக்களை வாசப்படி கிட்ட பாத்திரத்துல பாலை விட்டுட்டுப் போயிருக்கானே! கட்டேல போக! எங்கோயோ போய்ட்டானே அதுக்குள்ளே!”

“எங்கேயும் போகலே
Read 20 tweets
Jun 2
உண்மையில் 12 திருநாமங்கள். கேசவ – நாராயண – மாதவ – கோவிந்த – விஷ்ணு – மதுஸூதன – த்ரிவிக்ரம – வாமன – ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – பத்மநாப – தாமோதர என்பவையே இந்தப் பன்னிரண்டு நாமாகள். மஹா விஷ்ணுவுக்கு த்வாதச நாமாகள் முக்கியமானவை. வைஷ்ணவர்கள் நெற்றியிலே போட்டுக்கொள்வதை ‘நாமம்’ என்கிறோம்.
வைஷ்ணவர், சைவர், ஸ்மார்த்தர், மாத்வர் யாவரும் நெற்றியில் மட்டுமில்லாமல் மார்பு, வயிறு, புஜம், மணிக்கட்டு முதலான இடங்களில் நாமமோ, விபூதியோ, கோபி சந்தனமோ இட்டுகொள்ள வேண்டும். ஆசார சீலர்கள் இப்படியே இன்றைக்கும் செய்கிறார்கள். இப்படிப் பன்னிரண்டு இடங்களில் நாமம் போட்டுக் கொள்ள
வேண்டும். ‘த்வாதச நாமம் போட்டுக்கொண்டு வந்தார்’ என்று சொல்கிறோம். மஹா விஷ்ணுவுக்கு ரொம்பவும் ப்ரீதியாக இருக்கப்பட்ட பன்னிரண்டு நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக சரீரத்தின் ஒவ்வொரு இடத்திலும் உலகளந்தவனும், உலகமே உருவானவனுமான பகவான் நினைப்போடு திருமண் இட்டுக் கொள்ள வேண்டும்
Read 9 tweets
Jun 2
#மகாபெரியவா காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை. பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை. சென்னையில் இருந்த திரு ராஜகோபாலின் மனைவி கீதாவுக்கு மகானிடம் பெரும் பக்தி. அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி
வந்தனர். ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. எல்லா விதமான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கச் செய்து மசியாத அந்த நோய் அவரை படுத்த படுக்கயக்கி விட்டது. மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும் கீதா மகானிடம் வேண்டாத நாளில்லை. இருப்பினும் தந்தையின் உடல் நாளுக்கு நாள் மோசமகி வர, ஒரு
நாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார். அந்த நிலை நீடித்தால் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும். பூஜை அறைக்கு போய் மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்துவிட்டு, இத்தனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள் என்று கதறிக் கொண்டு இருக்கிறேனே பெரியவா உங்கள் காதில் விழவ
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(