#மப்பேடு #சிங்கீஸ்வரர்_கோவில் #வீனை_வாசிக்கும்_அனுமன் திருவாலங்காட்டில் இறைவன் ஆனந்த தாண்டவ நர்த்தனம் ஆடியபோது சிங்கி என்ற நந்தி மிருதங்கம் இசைப்பதில் ஆழ்ந்திருந்ததால் அந்த நடனத்தை ரசிக்கத் தவறிவிட்டார். இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனைத்தைக்
காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்தினுள் மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.
நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன்தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார்.
சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு #சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். இங்கு விசேஷமாக ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில்
பிறந்தவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்கநாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவர் பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர்
என்ற பட்டமும் கிடைத்தது.  மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள். சிவன் சன்னதியின் முன் #வீணை_வாசிக்கும்_ஆஞ்சநேயர் உள்ளார். சீதையை தேடிக்கொண்டு அனுமன் தென்திசை சென்றபோது,
இந்த தலத்திற்கு வந்ததாகவும், அப்போது மழையின்றி வரட்சியுடன் காணப்பட்ட இந்த பகுதி செழிக்க அருள் புரியுமாறு இப்பகுதி மக்கள் வேண்டிக் கொண்டதால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, ஆஞ்சநேயர் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்து பாடினார் என்றும் அதன் தொடர்ச்சியாக பெரும் மழை பெய்தது என்றும் சொல்லப்
படுகிறது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக விளங்குவார்கள். வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் தகப்பனார். பின்னர் இதே
கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கி.பி.1501ல் கோவில் ராஜ கோபுரம், மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார்.

முகவரி: அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோவில், மப்பேடு – 631 403
(பேரம்பாக்கம் வழி), திருவள்ளூர் மாவட்டம்
திறக்கும் நேரம்: காலை 6.00 – 9.00 AM  மாலை 5.30 – 7.30 PM . ஃபோன்: 94447 70579,
94432 25093
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 13
#மகாபெரியவா
கட்டுரையாளர்- டாக்டர் சுதா சேஷய்யன்.
தினமணி வெள்ளி மணி 19-02-2016
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1985-ஆம் ஆண்டு, தீபாவளிக்கு முந்தைய நாள் காஞ்சிபுரத்தில் கம்பன் கழக நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு தீபாவளியன்று ஸ்ரீமடம் சென்று தரிசித்தபோது ஏற்பட்ட அனுபவம். ஆனந்தம், Image
அற்புதம். அன்று தீபாவளி என்பதால் ஆசீர்வாதம் பெற வந்த பக்தர்கள், தீபாவளி மலர்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பத்திரிகைக்காரர்கள், எல்லோருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்கள் ஸ்ரீ மஹா பெரியவா. தட்டுத்தட்டாகப் பட்டாசுகள். தாம்பாளம் தாம்பாளமாகப் பழங்கள் -காணிக்கையாய் வந்தவையெல்லாம்
ஸ்ரீ மஹா பெரியவர்கள் அருகில். தாயாரோடும் தந்தையோடும் நின்று தரிசித்துக் கொண்டிருந்த அடியேனுடைய அனுபவம் இது!
வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நிறைய சிறுவர்கள் வந்திருந்தார்கள்.(அவர்கள் எந்த ஊர், எந்த பாடசாலை என்றெல்லாம் விசாரிக்கத் தோன்றாத வயசு)
ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அவர்களை
Read 11 tweets
Jun 13
#மகாபெரியவா
ஒரு முறை பக்தர் ஒருவர் பெரியவாளிடம், சுவாமி! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே. வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, காலம் போகப் போகத் தான் பக்தியின் ருசி புரியத் தொடங்கும், அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்குமா? அது வரை பொறுமையுடன் இருக்க வேண்டுமா? Image
வலுக்கட்டாயமாக பக்திப் பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா என்று கேட்டார்.
சுவாமிகள் கனிவுடன், "உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?" என்றார். பக்தர், தினமும் தயிர்ப் பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே என்றார்.
"எந்த வேளையில் கடைவார்கள்?காலையிலா,
மத்தியானமா?"
"அதிகாலையில் தான் சுவாமி"
"மத்தியானம், அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?"
பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர்.
"அதிகாலை சுபமான வேளை. அந்நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சி யாக இருக்கும். அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும். உருகாமல் கெட்டியாகவும்
Read 6 tweets
Jun 12
#NupurSharama #நுபுர்சர்மா மீது இஸ்லாமிய நாடுகள் ஒரு சேர குரல் கொடுத்து கண்டனத்தை இந்திய தூதரகம் மூலம் பதிந்தது. அதில் இரு நாடுகள் இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது? இன்னும் சில நாடுகள் தங்கள் கோபத்தை காட்டும். ஆனால் இந்தியா நீ ஜெர்க் ரியாக்‌ஷன் எதுவும்
கொடுக்கவில்லை, இந்த பிரச்சினையை மட்டுமல்ல இது போன்ற பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நினைத்தது. அதன் விளைவாக சர்மாவை கட்சி பதவியில் இருந்தும், உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது. உடனே நாம் எல்லாம் கொதித்து எழுந்தோம். ஆம், நாம் நம் உணர்ச்சிகளுக்கு ஆளானதால், அரபு நாடுகளுக்கு
இந்தியா கொடுத்த அழுத்தமான, ஆழமான பதிலை கவனிக்க தவறிவிட்டோம். அந்த பதிவுகளை மீடியாவில் மட்டுமல்ல, வலைதளத்தில் கூட கிடைக்காத அளவிற்கு மறைக்கப்பட்டது. ஏனெனில், அதில் சொல்லப்பட்ட விஷயங்களும் சொல்லாமல் சொன்ன விஷயங்களும் ( Read between lines) அந்த நாடுகளை அதற்கு மேல் பேச விடாமல்
Read 12 tweets
Jun 12
#நம்மாழ்வார்திருநட்சத்திரம் #வைகாசி_விசாகம்
ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில், இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார். இவரின் மற்ற பெயர்கள் சடகோபன், பராங்குசன், காரிமாறன், குருகூர் நம்பி ஆகியவை. நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம்
தமிழ் செய்த மாறன் என்றே புகழ்ப்படுகிறார். இவர் அவதரித்து 5120 வருடங்கள் ஆகின்றன. ஸ்ரீ ஆளவந்தார் அவருக்காக இயற்றிய தனியன்:
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
வகுளமாலை
(மகிழம்பூ) தரித்தவரும், தாமரைத் திருவடிகள் முழுதும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ என்னும் திவ்யமங்களம் நிறைந்திருப்பவரும், எங்கள்(ஸ்ரீவைஷ்ணவ) குலபதியும் (தலைவர்) ஆன நம்மாழ்வார் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன். நம் குலத்தாருக்கு அவரே தாய், தந்தை, கணவர்(மனைவி), மக்கட்பேறு, மற்றும் எல்லாச்
Read 5 tweets
Jun 12
இன்று #வைகாசிவிசாகம் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இன்று பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். திருச்செந்தூரில் தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இன்றாகும். பராசர முனிவருக்கு ஆறு
குழந்தைகள். ஒரு நாள் குளத்தில் குளிக்கும்போது ஆறு பேரும் நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. இதைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும்.
நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள் என்று கட்டளையிட்டார். ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு
Read 7 tweets
Jun 12
#MahaPeriyava
A devotee once voiced his sorrow to Periyava. The Siva temple in our village has not been renovated for long. Nor has the temple been sanctified by ashtabandhanam. If anyone comes forward to renovate it he is faced with hurdles of all kinds. So many fear to take on
the responsibility. Sri Maha Swamigal replied, "There is a grama devata, a female deity in your village. Let the village as a whole hold a special festival, perform abhisheka and worship the deity in an elaborate manner. Drape a new cloth on the deity and make a food-offering of
chakkarai pongal. You may then begin the renovation of the Siva temple." The devotee conveyed Periyava’s instruction to the village. The people of the village realised their lapse. Convening a meeting at once, they fixed an auspicious date for conducting the festival for the
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(