சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்து தான் விருப்பப்பட்டவர்களுக்கு #ஒன்றியஉயிரினங்கள்
சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும்.
சுயசம்பாத்திய சொத்து
ஆனால் உயில் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம்.
மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால் வாரிசுகள் அதை எதிர்க்க முடியாது. ஆதலால் பிரியமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உயிலை எழுதி வைக்கலாம்.
எனினும் உயில் எழுதுவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்
ஒன்று இருக்கிறது. ஒருவர் தான் உரிமை கொண்டாடும் அத்தனை சொத்தையும் உயிலாக எழுதிவைக்க முடியாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும். தன்னுடைய தந்தை வழியில் வந்த பூர்வீக சொத்துக்கு உயில் எழுதி வைக்க முடியாது.
விருப்பப்பட்ட நபர்கள்
அந்த சொத்தை பாக பிரிவினை மூலம் தனது பெயருக்கு பதிவு செய்து இருந்தாலும் அதற்கு உயில் எழுதி வைக்க முடியாது. அந்த சொத்துக்கு வாரிசுகள்தான் உரிமை கொண்டாட முடியும். ஆனால் முழுக்க, முழுக்க தன்னுடைய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும்
உயில் எழுதி வைக்க முடியும். எனினும் அது தன்னுடைய உழைப்பினால் மட்டுமே சேர்க்கப்பட்ட சொத்து என்பதை உறுதிபடுத்தி கொண்டால் மட்டுமே எழுதும் உயில் செல்லுபடியாகும்.
ஒருவர் சுயமாக சேர்த்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு எழுதி வைப்பதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.
அவர் தன்னுடைய வாரிசுகளை மட்டுமே கருத்தில் கொண்டு உயில் எழுதி வைத்தால் அந்த சொத்தை பங்கு பிரிப்பதற்கு வாரிசு கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அந்த சொத்து மனைவிக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துவிடும்.
மனைவிக்கு சொத்து
வாரிசுகளுக்கு எழுதி வைத்தால் மனைவிக்கும் அதில்
பங்கு கிடைத்துவிடும் என்று கருத முடியாது. அந்த சொத்துக்கு மனைவி எந்த வகையிலும் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே ஒருவர் சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு உயில் எழுதி வைப்பதாக இருந்தால் மனைவியையும் ஒரு பங்குதாரராக
சேர்த்து உயில் எழுதுவது நல்லது.
அதேபோல் தன்னுடைய சுய சம்பாத்திய சொத்து முழுவதையும் மனைவி பெயரில் மட்டும் எழுதி வைப்பதும் சிக்கலை ஏற்படுத்தும். உயிலில் மனைவி பெயரை மட்டும் குறிப்பிட்டால் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது. தனது மனைவி பெயரில் எழுதி வைத்தால் வாரிசுகளுக்கு சொத்து
போய் சேர்ந்துவிடும் என்று கருதிவிட முடியாது. அது அவருடைய மனைவிக்கு மட்டுமே உரிய சொத்தாக மாறிவிடும்.
விருப்பப்படி சொத்து பங்கீடு
அவர் அந்த சொத்தை யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ அவருக்குதான் அந்த சொத்து போய் சேரும். நான்கு வாரிசுகளில் மூன்று பேருக்கு மட்டுமே சொத்தை
பாகம் பங்கிட்டு பகிர்ந்து கொடுத்தால் அது செல்லுபடியாகும். நான்காவது வாரிசு தனக்கு பாகம் பிரித்து தரவில்லை என்று எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. மேலும் வாரிசுகளுக்கும் சம அளவில் சொத்து பிரிக்கப்பட வேண்டும் என்று நிர்பந்திக்கவும் முடியாது. மனைவி தனது காலத்துக்கு பிறகு
ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு என்று குறிப்பிடுகிறாரோ அந்த பங்கை மட்டுமே பெற முடியும்.
ஒருவருக்கு அதிகமாக கிடைத்தால் மற்றவர் அதை எதிர்க்க முடியாது. இதனால் வாரிசுகளுக்கு இடையே தேவையற்ற பிரச்சினைகள் எழக்கூடும். மேலும் மனைவி வாரிசுகளை தவிர மற்ற வேறு யாருக்கு வேண்டுமானாலும்
சொத்தை பிரித்து கொடுக்கலாம். அது அவருடைய சொத்தாகவே கருதப்படுவதால் அவருடைய விருப்பப்படியே உயில் சொத்துக்கான பங்கீடு அமையும். ஆகவே உயில் எழுதும்போது யாருக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எந்தவொரு விஷயத்திலும் தொடர்புடைய நீதிமன்றத்தில் அவர் மீது வேறு சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஒரு பெரிய பயம் அல்லது பதட்டம் கொண்ட ஒரு நபர் எடுக்கும் முன்னெச்சரிக்கை #ஒன்றியஉயிரினங்கள்
நடவடிக்கையாக கேவியட் மனு வரையறுக்கப்படுகிறது
சட்ட நடவடிக்கை நடவடிக்கைகளுக்கு முன் தகவல்களைப் பெற மனு
சட்டத்தில், இது ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பாகும், அதில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அந்த நபருக்கு எப்போதும் தெரிவிக்கப்படும். இதைச் செய்வதன் மூலம்,
அவர் / அவள் மீது கொண்டுவரப்பட்ட எந்தவொரு வழக்கிலும் முடிவெடுப்பதற்கு முன்னர் நீதிமன்றம் நியாயமான விசாரணையை நடத்தும் என்பதை உறுதிசெய்வது.
சட்ட உடல் கடமைகள்
எச்சரிக்கை மனு கிடைத்த பிறகு, வழக்குகள் பதிவு செய்யப்படும்போது நீதிமன்றம் கேவியேட்டருக்கு அறிவிக்கும். சட்டத்தின் படி,
கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு
நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு
24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்
பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட
படிப்பை முடித்து விட்டு அடுத்ததாக என்ன படிக்கலாம் என்று காத்துகொண்டிருக்கும் இளைஞர்கள் “ஹேக்கிங்” படிப்பை தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும்
என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், ஆன்லைன் வங்கி, போன்றவற்றிற்கு முக்கியமான ஒன்று பாஸ்வோர்ட். இன்று உலகளவில் பாஸ்வேர்ட் ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது பெருகி வரும் சைபர்
குற்றங்களை தடுப்பதற்கு வல்லுனர்கள் குறைவாக தான் உள்ளனர்.சைபர் குற்றங்களை தடுக்கும் வல்லுனர்களை உருவாக்கும் படிப்பு தான் இன்டெர்நெட் செக்யூரிட்டி என்று அறியப்படும் ‘எத்திக்கல் ஹேக்கிங்’. இளைஞர்கள் மத்தியில் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான படிப்புகளுக்கு தொடர்ந்து ஆர்வம் அதிகரித்து
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப்
பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி கிராம ஊராட்சி,
ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்ற ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சிகள் என்றும்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு `அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை
மருத்துவமனையில் கடந்த ஜூன் 8-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
உடல் பரிசோதனைத் திட்டம்
மிகக் குறைந்த கட்டணத்தில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்" முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கென
சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படும்.
பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இதற்கு தனியார் மருத்துவமனைகள் ரூ. 12000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதால்,