ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை. தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார். எனவே, மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும் பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்
நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனவே, தோற்றால் நீ வருத்தப்படக் கூடாது என்றார். பக்தரும் சம்மதித்தார். இருவரும் விளையாட ஆரம்பித்தனர். பக்தர், ஒவ்வொரு முறையும் #ஜெய்அனுமான் என்றபடியே காய்களை உருட்டினார். ஆஞ்சநேயர் #ஜெய்ஸ்ரீராம் என்றபடி காய்களை உருட்டினார். ஒவ்வொரு
முறையும் பக்தனே வெற்றி பெற்றான். சரி அடுத்த முறை ஜெயிக்கலாம் என்று ஆஞ்சநேயர் மீண்டும் மீண்டும் விளையாட வெற்றி பக்தனின் பக்கமே! உடனே ஆஞ்சநேயர் ராமரை நினைத்து, ஸ்வாமி, தங்கள் நாமத்தை உச்சரித்தும் எனக்கு தோல்வியா? என்று ராமரிடம் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ராமன், "ஆஞ்சநேயா
நீ என் பக்தன் ஆதலால், உன்னிடம் என் சக்தி இணைந்துள்ளது. அவனோ உனது பக்தன். ஆதனால், அவனது சக்தியுடன் நம் இருவரது சக்தியும் இணைந்து விடுகிறது. இதுவே அவனது வெற்றிக்கு காரணம்!'' என்றார்.
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீராம்
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#வைணவத்தமிழ்
கண்ணமுது கோவில்!
கறியமுது விண்ணகர்!
அன்னமுது
வில்லிப்புத்தூர் ஆனதே!
எண்ணும் சாற்றமுது மல்லை!
குழம்புமது குருகூர்!
பருப்பதனில்
திருமலையே பார்!
என்று விருந்து எப்படி இருந்தது என்று கேட்ட அன்னமிட்டவரிடம், உண்ட விருந்தினை இவ்வாறு புகழ்ந்தார் வைணவர் ஒருவர். விருந்தளித்த
அன்பரும், ஆகா கோவில் நைவேத்யம் போல நம் விருந்து இருந்திருக்கிறதே என்று உள்ளம் மகிழ்ந்து நன்றி கூறினார். ஆனால் உண்மையோ வேறு :)
கண்ணமுது கோவில்! கண்ணமுது என்றால் பாயசம்! கோவில் என்றால் ஸ்ரீரங்கம். அரங்கன் கோயிலில் பாயசம் மண் சட்டியில்தான் வைப்பார்கள. அதனால் பாயசம் சற்று அடிபிடிப்பத
என்பது அங்கே தவிர்க்க முடியாத ஒன்று. விருந்துண்ட வீட்டிலும் பாயசம் அடிப் பிடித்து இருந்ததால் கண்ணமுது கோவில் என்றார்😃
கறியமுது விண்ணகர்! கறியமுது என்றால் காய்கறி வகைகள். விண்ணகர் இருக்கும் ஒப்பில்லாத பெருமானுக்கு நைவேத்தியம் எதுவிலும் உப்பே சேர்க்க மாட்டார்கள்! விருந்தின்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சமயம் நந்தவனத்தில் #ஶ்ரீஅனந்தாழ்வான் பகவானுக்கு அர்பணிக்க துளசி எடுத்துக் கொண்டிருந்த பொழுது பாம்பு ஒன்று அவரை தீண்டி விட்டது. ஆனால் அவரோ அதைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளாமல் பகவானுக்கான தன்னுடைய நித்திய சேவையைத் தொடர்ந்து செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய்
இருந்தார். இதைக் கண்டு பதறிய பக்தர்கள் பாம்பு விஷத்தை போக்க மருத்துவம் பார்க்கும் படி அவரை வேண்டினர். கோயில் முழுவதும் இதே பேச்சாயிற்று. பகவான் ஸ்ரீனிவாசரும் அனந்தாழ்வானிடம் விஷத்தை முறிக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று வினவினார். அனந்தாழ்வானோ நீங்கள் எந்த விஷத்தை
முறிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்? என்னிடம் அகங்காரம், மமகாரம் என்ற கொடிய இரண்டு பாம்புகள் உள்ளன. அவற்றின் விஷத்தை நான் முறிக்க வேண்டுமா? அல்லது என் உடலை தீண்டிய பாம்பின் விஷத்தை முறிக்க வேண்டுமா? முதல் விஷம் ஆத்மாவை அழிக்கக் கூடியது. அந்த விஷத்தை முறிக்க உங்களை தவிர வேறு
#மகாபெரியவா
பெரியவாள் முகாம் செய்திருந்த சிறிய கிராமத்தில், மொத்தம் பதினைந்து வீடுகளே இருந்தன. ஓர் ஆரம்பப் பள்ளியில் பெரியவாள் தங்குவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய தினம் முகாம் செய்திருந்த கிராமம் சற்றுப் பெரியது. ஆனால் தண்ணீர் வசதியில்லை. எல்லாவித
உபயோகங்களுக்கும் ஒரு குளம் தான் கதி! அதில் தண்ணீர் அசுத்தமாக இருந்தது குடிதண்ணீருக்கே அந்தத் தண்ணிதான் என்று மனம் வருந்தி முறையிட்டார்கள் கிராம மக்கள் பெரியவாளிடம். அன்றைய தினம் அந்தக் குளத்தில் தான் பெரியவா ஸ்நானம் செய்தார்கள். அன்று மாலையே புறப்பட்டு, சிறிய கிராமத்துக்கு
வந்தாகிவிட்டது. மறுநாள் காலை வழக்கம் போல பெரிய கிராமத்து மக்கள் அதே குளத்துக்குப் போனார்கள். இன்ப அதிர்ச்சி. ஒரு குப்பை இல்லை, பாசி இல்லை, சேறு இல்லை! தண்ணீர் நிர்மலமாகப் பளிங்கு போலிருந்தது. பெரியவங்க வந்து குளிச்சது, நம்ம பாக்கியம் என்று மகிழ்ந்தனர் மக்கள்.
சுவாமிகளுக்கு
#சாதுர்மாஸ்யம் இந்த பேர் நம் காதுகளில் நிறைய தடவை விழுந்திருக்கும். சந்நியாசிகள், மடாதிபதிகள் சாதுர்மாஸ்யம் அனுஷ்டிக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். சாதுர்மாஸ்யம் என்றால் என்ன? ஒவ்வோர் ஆண்டும் ஆடி சுக்ல தசமியிலிருந்து கார்த்திகை சுக்ல பௌர்ணமி வரை 4
மாத காலம் சாதுர்மாஸ்ய புண்ணிய சுபகாலம் எனப்படும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி கார்த்திகை ஆகிய 4 மாதங்கள் இதில் அடங்கும். (ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல், கார்த்திகை ஏகாதசி துவாதசி வரை என்றும் கணக்கு) ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார். இதற்கு சயன ஏகாதசி என்று
பெயர். கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார். இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர். பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலமாக இருக்கும். ஆகவே ஒரே இடத்தில், தங்கி, சத்சங்கங்கள், பஜனைகள், வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகளை பெரியோர்கள், ரிஷிகள் எல்லோரும் செய்வார்கள்.
#மஹாபெரியவா
ஒரு அனுஷத்தில் நடந்த சம்பவம். டிசம்பர் 15,2015 தினமலர், சி. வெங்கடேஸ்வரன்
ஒரு பாட்டி மகாபெரியவரின் பரம பக்தை. அந்தக்கால வழக்கப்படி அவருக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி கணவரை இழந்து விட்டிருந்தார். கணவர் வழியில் நிறைய சொத்து கிடைத்தது அவருக்கு. குழந்தை இல்லை. சொத்து
நிறைய இருந்தால் சொந்த பந்தங்கள் விடுவார்களா என்ன, அவற்றை அடைய துடித்தார்கள். ஆனால் பாட்டி எப்படியோ அதைக் காப்பாற்றிக் கொண்டார். ஒருமுறை, மகாபெரியவரிடம் வந்து, இந்த சொத்து முழுக்க காமாட்சிக்கு தான். ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டினார். பெரியவர் அதை வேண்டாம் என எவ்வளவோ மறுத்தார்.
ஆனால், பணத்துக்கு துளியும் முக்கியத்துவம் கொடுக்காத அவர், பெரியவரை வற்புறுத்தி சொத்துக்களை காமாட்சிக்கு என கொடுத்து விட்டார். இதனால், மடத்தின் சார்பில் அந்த மூதாட்டிக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டது. ஒரு முறை அனுஷத்திற்கு மறுநாள், நிறைய பக்தர்கள் பெரியவரைத் தரிசிக்க வந்தார்கள்.
#நெய்_குள_தரிசனம் #திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் வருடத்தில் மூன்று முறை மட்டுமே கிடைக்கும் அதில் ஒன்று வைகாசி மாதம் பெளர்ணமி அன்று. கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம் தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல் அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர்
கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதுதான் நெய்க்குள தரிசனம் திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும்.