#வடுவூர்_கோதண்டராமர்_கோவில் இந்தக் கோவில் உத்சவர் விக்கிரகம், ஸ்ரீராமரே உருவாக்கித் தந்தருளிய விக்கிரகம் என்கிறது புராணம். இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். பேரழகு வாய்ந்த ராமர். அழகுக்கே அழகு சேர்க்கும் ராமர். சேவித்துக்கொண்டே இருக்கலாம். பார்த்தவர் மயங்கும் அழகு! மந்தகாசப்
புன்னகை! இது போன்ற தத்ரூபமான புன்னகையை வேறு எங்குமே காண முடியாது. வில்லினைப் பிடித்திருக்கும் அழகு அதி ஆச்சர்யம்!
“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு! என்பது ஓர் அழியா அழகு உடையான்”
என்ற கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீராமனை முழுவதுமாக துதிக்கமுடியாமல்
தன்னுடைய இயலாமையை ‘ஐயோ’ என்ற பதத்தால் கம்பரே வெளிப்படுத்தி இருக்கும்போது நாம் எம்மாத்திரம்! கண்ணுக்கினியானை கண்டோம்! என்று மெய்சிலிர்க்க மட்டுமே முடியும். இராமரின் வனவாசம் முடிந்த பிறகு அவர் வாக்குக் கொடுத்தபடி பாரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு வந்து அவரின் உபசரிப்பை ஏற்றுக்
கொண்டார். ராமரையும் அவரின் குண மாண்புகளையும் கண்டு சிலிர்த்த அங்கு கூடியிருந்த ரிஷிகள், முனிவர்கள் அவர்களுடேனேயே ஆஸ்ரமத்தில் தங்கி இருக்க வேண்டினர். உதாரண புருஷர் நீங்கள் என வணங்கிப் போற்றினர். ஆனால் வந்திருப்பது இறைவன், இவர் எடுத்திருப்பது அவதாரம் என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்
அயோத்தி திரும்ப வேண்டும் என்று சொல்லி கிளம்பும்போது அவர்களால் அவரை விட்டு பிரிய மனமில்லை. மிகவும் வருந்தினர். அவர் கிளம்பும் சமயம் அங்கே அழகும் கம்பீரமும் கொண்டு ராமரைப் போலவே நின்றது சிலை ஒன்று! அப்படியே தத்ரூபமாக இருந்தது சிலை. பிரமித்துப் போனார்கள் முனிவர்கள். தொட்டு, தடவி
மகிழ்ந்தனர். உங்களுக்காக என் உருவத்தை நானே சிலையாக உருவாக்கியுள்ளேன். பிரிவுத் துயர் இனி இல்லை. இந்தச் சிலையிலும் நான் வாசம் செய்கிறேன் என அவர்களுக்கு அருளினார். அனைவரும் விழுந்து நமஸ்கரித்து இராமபிரானின் ஆசி பெற்றனர். அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில்
பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால்,
'ஏவரி வெஞ்சலை வலவா’ என பாடியுள்ளார். ஸ்ரீ சவுரிராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகிலுள்ள தல
ஞாயிறு என்ற ஊரில்மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்கள் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்
கட்டி, ஆராதனை செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார். அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர்
அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில்
வைத்து இருந்தார். இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால், தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை
அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர். வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி
செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம். ஶ்ரீ கோதண்டராமர் கோவில், #பஞ்ச_ராம_க்ஷேத்திரங்களில் ஒன்று. அபிமான ஸ்தலம். தக்ஷிண அயோத்தி. ஒரு காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் வடுவூர் வகுளாரண்ய க்ஷேத்ரம் என்றும் பாஸ்கர ஷேத்திரம் என்றும் பெயர்.
ஐந்து நிலை ராஜ கோபுரம். மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் லக்ஷ்மணர், அனுமாருடன் எழுந்தருளி உள்ளார். கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது. ஸ்ரீ ராமநவமி விழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை
பார்ப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை. கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். சித்திரை மாதம் அட்சயதிரிதியை, ஆடிமாதம்
ஆற்றங்கரையில் தீர்த்தவாரி, புரட்டாசியில் தேசிகன் உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசை தீர்த்தவாரி, மாசிமகம், ஆகியவை முக்கிய உத்சவங்கள்.
வடுவூர் சிலையழகு,மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர்.
சென்று சேவித்து வருவோம்.
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே!
ஜய ஸ்ரீராம்

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 24
#MahaPeriyava
Anjalai worked as a cleaning lady for her daily bread. Poverty had been oppressing her endlessly. She had two children. In the year 1984 having travelled the length and breadth of Bharath sanctifying the land, Maha Periyava on His return was passing through the Image
village where Anjalai was living. Her family environment was such that she had never known or realised the greatness of the Mahan. She came to the place where Sri Periyava had His camp, just with the idea of seeing the ‘Samiyar’ (sage) who had come down to her village. She had
taken her two sons also along with her. There was not much crowd at that time with Periyava, so that she could have His darshan without any difficulty. She saw Him and was about to leave the place with her children. Sri Sri Sri Periyava asked His attendant, “Ask her, her name!”
Read 14 tweets
Jun 24
#SriRamanujar Ramanujar studied Ramayanam from Peria Tirumalai Nambi. He studied it not once, but 18 times! Among the Lord’s avataras, Ramanujar was deeply devoted to the Rama and Krishna avatarams. The icon that he worshipped everyday was that of Krishna. One day, a devout Image
Vaishnava brought an icon of Rama to Ramanujar. Ramanujar said that here was One who did not even say He expected surrender. Krishna had said that He would most certainly grant liberation provided a person surrendered to Him. But Rama did not even lay down such conditions. Such
was the simplicity of Rama. Just as association with Rama was the way to liberation, so was association with Ramanujar, because Ramanujar himself was associated with other Sri Vaishnava preceptors. One day Ramanujar was giving a discourse on the Ramayanam. He had reached the part
Read 7 tweets
Jun 24
#மகாபெரியவா
ஸ்வாமிநாதன், பள்ளியில் 1906வது ஆண்டில் நாங்காவது ஃபாரத்தில் பயின்று வந்தபோது, மாணவர்கள் பள்ளியின் ஆண்டு விழாவுக்கென ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில மகாகவி எழுதிய "ஜான் மன்னர்" என்னும் நாடகத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நாடகத்தில் ஆர்தர் இளவரசன் என்னும் முக்கிய Image
பாத்திரத்தைத் தாங்கி நடிக்கத் தகுதியான மாணவன் கிடைக்கவில்லை. அப்போது, பன்னிரண்டு வயதே நிரம்பிய ஸ்வாமிநாதரின் நினைவு தலைமை ஆசிரியருக்கு வந்தது. உடனே அவர், ஸ்வாமிநாதனை அழைத்து, அந்தக் கதாபாத்திரத்தை அவரே நடிக்க வேண்டுமென்று கூறினார். இந்தச் செய்தியை பெற்றோறிடம் ஸ்வாமிநாதன் கூறி,
அந்த நாடகத்தில் நடிப்பதற்குத் தேவையான உடைகளைத் தைத்துத் தரவேண்டுமென்று கேட்டிக் கொண்டார். பழமையில் ஊறிய பெற்றோர், தங்கள் புதல்வன் நாடகத்தில் நடிப்பதை விரும்பவில்லை. ஆனால், அருமைப் புதல்வனின் ஆசையைப் புறக்கணிக்கவும் விரும்பவில்லை. அரனால் அவர்கள் ஸ்வாமிநாதனுக்குத் தேவையான உடைகளைத்
Read 10 tweets
Jun 23
#ராமநாதபுரம்_குண்டுக்கரை_சுவாமிநாத_சுவாமி 11 தலை 22 கைகளுடன் கூடிய முருகன் இங்கு உரைகிறார். ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை
முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள எனது பழைய சிலையை எடுத்து விட்டு புதிய சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும், என கூறி மறைந்தார். பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி புதிய முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார்.
சுவாமிமலையானின் பெயரான ‘சுவாமிநாதன்’ என்று பெயர் சூட்டினார். சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார்.
Read 6 tweets
Jun 22
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் நந்தமகாராஜாவின் அரண்மனை வாசலில், யாருக்கெல்லாம் பழம் வேண்டுமோ வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று பழங்களின் பெயர்களை சொல்லி கூவிக்கூவி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் ஒரு பாட்டி. இதை அரண்மனைக்குள் இருந்து கேட்ட குழந்தை கிருஷ்ணர் தனது கைகளில் தானியங்களை
எடுத்துக் கொண்டு பழம் வாங்க சென்றார். தன் தாய் தந்தையர் பண்டமாற்று முறையில் பிறரிடமிருந்து பொருட்களை வாங்குவதை குழந்தை கிருஷ்ணர் கவனித்து இருந்ததால் தானும் ஏதாவது கொடுத்தால் மட்டுமே பழங்கள் வாங்க முடியும் என்று கொஞ்சம் தானியங்களை கைகளில் அள்ளிச்சென்று கொடுத்து பழம் வாங்க வந்தார்.
ஆனால் அவர் மிகவும் சிறு குழந்தையாக இருந்ததால் அவர் நடந்து வரும்போது தானியங்கள் எல்லாம் கீழே சிந்திவிட்டது.
சிறிய கை அல்லவா! அவர் கைகளில் அவ்வளவு தானியம் பிடிக்கவில்லை கீழே சிந்தி கொண்டே வந்தது. இறுதியில் பழம் விற்கும் பாட்டியிடம் வந்தபோது கண்ணனின் கைகளில் தானியங்கள் எதுவுமில்லை.
Read 6 tweets
Jun 22
#மகாபெரியவா
ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து அவருக்கு. கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம். தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில், சிவன் கோயில் எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத் திருப்பணிகள் செய்வார். பெரிய தொகை நன்கொடை
கொடுப்போர் கூட அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்க மாட்டார்கள். அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால் அவர்
மழை-காற்றுக்கு உட்படாமல், கல் கருவறையில் குடி புகுந்தார். இப்படி எத்தனையோ கோயில்கள். ஆனால் வைதிகர் எந்தக் குடமுழுக்கிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதில்லை. கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக் கொண்டு நிற்பார்.
தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(