#பாஜக கூட்டணி சார்பில் #ஜனாதிபதி வேட்பாளராக #திரௌபதி_முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் 1958-ம் ஆண்டு, ஜூன் 20 பிறந்தார். இவர் தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு.
இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கணவரும், மகன்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்து விட்டது இவர்
தனிப்பட்ட வாழ்க்கையின் சோகம். மகளை ஆசிரியப்பணியின் சொற்ப வருமானத்தில் போராடி வளர்த்தார். அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த இவர், ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஒடிசா மாநிலத்தின் சட்டப் பேரவையில் 2007 ஆம் ஆண்டின் சிறந்த சட்டமன்ற
உறுப்பினருக்கான #நிலகாந்தா விருதை பெற்றிருக்கிறார். ஒடிசா அரசு அமைச்சரவையில் போக்குவரத்து, வணிகத் துறை, மீன்வளத் துறை மற்றும் விலங்கியல் என பல்வேறு துறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார் 2015 மே 18 முதல் 2021 ஜூலை 12 வரை ஜார்க்கண்ட்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையுடன் பதவி
வகித்தார். ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்த பிறகும் பதவியில் இருந்து நீக்கப்படாத ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநர் இவர். இவர் அங்கு பிரபலமான ஆளுநராக இருந்தார். ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் ஆகியோரிடம் அவருக்கு நற்பெயர் இருந்தது. இவர் வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண்
ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார். அவரது பதவிக் காலத்தின் போது, பாஜக கூட்டணியின் முந்தைய ரகுபர் தாஸ் அரசிடமும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் தற்போதைய ஹேமந்த் சோரேன் அரசிடமும், அவர்களின் சில முடிவுகளை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தினார். அத்தகைய சில மசோதாக்களை அவர் தாமதமின்ற
திருப்பி அனுப்பினார். 2017 தொடக்கத்தில் ஜார்க்கண்டில் பாஜக தலைமையிலான ரகுபர் தாஸ் அரசு பழங்குடியினரின் நிலங்களைப் பாதுகாக்க ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (சிஎன்டி சட்டம்) & சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் (எஸ்பிடி சட்டம்) ஆகியவற்றின்
சில விதிகளைத் திருத்த அந்த அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்ற இவர் ஆளுநராக உதவினார். குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு போட்டியிடுவது குறித்து மோடி, "இவர் தன் வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம்
அளிப்பதற்காகவும் அர்ப்பணித்துள்ளார். அவரின் கொள்கை விஷயங்களைப் பற்றிய புரிதலும், இரக்க குணமும் நம் நாட்டிற்கு பெரிதும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்று நல்ல ஜனாதிபதியாக தொண்டாற்றுவார் என்று இறைவனை வேண்டுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அறிவு_ஞானம்
ஒரு குருவிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது என்று குருவிடம் கேட்டனர். அவர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு மூவரையும்
ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து, “நான்போய் வந்த அறையினுள் மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா”என்றார்.
அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய
மூன்று தம்ளர்களில் பால் இருந்தது.
தங்கத் தம்ளரில்இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில்
பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால்
#MahaPeriyava
I was in Tiruvannamalai in my young age. Our house was near the foothill. One Maami used to teach us song and dance and would ask us to sing before #RamanaMaharshi. We would sing and dance before him, going in circles. He would never talk, only have a look with his
eyes. After I was married, a relative told me, "You have not seen Kumbakonam Swamy, Maha tapasvi, go and have darshan once." Periyaval at that time had the name 'Kumbakonam Swamy'. My husband and I came to Kanchipuram to have darshan, but we were told that Periyava had gone out
somewhere. We went to three or four nearby villages, but could not see him in those places. I was yearning for the darshan. Only when Periyava had come to Madras, we could have his darshan. At my first sight of him I thought, "He looks typically like Ramana Maharshi. What tejas
ஸ்ரீ கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கன்னையா என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள். கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்
படுவது வடமாநிலங்களில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற
#கீதகோவிந்தம்#ஸ்ரீமந்நாராயணீயம்#கிருஷ்ண_கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும். கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கிருஷ்ண லீலையை மனம் ஒன்ற
#ஸ்ரீபெரும்புதூர்_ஆதிகேசவ_பெருமாள்#ஶ்ரீராமானுஜர்_அவதார_ஸ்தலம்
ஸ்ரீபெரும்புதூர் என்று அழைக்கப் படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் சிவபெருமானின் சிவகணங்கள் அவரிடம் அவச்சாரப் பட்டன. சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சபித்தார்.
இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவமிருந்தனர். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக பூத கணங்களுக்கு காட்சி அளித்து, பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோசனம்
பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. ராமானுஜர் அவதரித்ததால் இது நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு சொர்க்க
#மகாபெரியவா
சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். 1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது
அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து
வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை
#அறிவோம்_மகான்கள்#ஶ்ரீநாராயண_தீர்த்தர் ஆந்திராவில் விஜயவாடா-குண்டூர் செல்லும் வழியில் உள்ளது மங்களகிரி. இது பானக நரசிம்ம ஷேத்திரம். அதன் அருகிலுள்ள காஜா கிராமத்தில் சுமார் 1665 - 1675ல் தல்லவல்லஜ என்ற அந்தண குலத்தில் நாராயண தீர்த்தர் பிறந்தார். அவரது இயற்பெயர் கோவிந்த சாஸ்திரி
என்றும், மாதவன் என்றும் அவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி என்றும் கர்ணபரம்பரை செய்திகள் குறிப்பிடும், அனால், ஆதார பூர்வமாக எதுவும் கிடைக்கவில்லை. அவர் 12 ஆண்டுகள் சாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்தவர். திருமணம் ஆன பின்னர் ஒரு முறை ஆற்றைக் கடக்க முற்பட்டார். வழக்கத்திற்கு மாறாக, ஆற்றின்
நடுவில் ஆழம் சற்று அதிகமாக தெரிந்தது. நடுவழியில் திரும்பவும் முடியாமல், அதே சமயம் எதிர் கரைக்கு செல்லவும் முடியாமல் தவித்தார். என்ன செய்வது? வேதங்கள் கற்றவர் அல்லவா! பளிச்சென ஒரு எண்ணம் தோன்றியது. துறவு மேற்கொண்டால், அது மறுபிறவிக்குச் சமம். அந்நிலையில் துன்பம் ஒருவரை தொடர்வது