#ஸ்ரீபெரும்புதூர்_ஆதிகேசவ_பெருமாள் #ஶ்ரீராமானுஜர்_அவதார_ஸ்தலம்
ஸ்ரீபெரும்புதூர் என்று அழைக்கப் படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் சிவபெருமானின் சிவகணங்கள் அவரிடம் அவச்சாரப் பட்டன. சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சபித்தார்.
இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவமிருந்தனர். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக பூத கணங்களுக்கு காட்சி அளித்து, பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோசனம்
பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. ராமானுஜர் அவதரித்ததால் இது நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு சொர்க்க
வாசல் என்று தனியாக கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று இந்த கோவிலுக்கு வருபவர்கள் வைகுண்டம் சென்ற பலனை அடைவார்கள். ஐந்து நிலை ராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் பெரிய பலி பீடத்தையும், துவஜஸ்தம்பத்தையும் கருடன் சன்னதி விமானத்தையும் காணலாம். துவஜஸ்தம்பத்தின் அருகே நின்று பெருமாளை நினைத்து
வணங்கிவிட்டு படிகளில் ஏறி வடக்கு நோக்கி திரும்பினால் ராமானுஜரின் சன்னதி அமைந்துள்ளது. சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தில் நின்று அந்த அற்புதமான அமைதியான திருமேனியை தரிசிக்கலாம். இரு கரம் கூப்பி நாம் வணங்கினால் அஞ்சலி முத்திரையுடன் அருள் பாலிக்கிறார் ராமானுஜர். ஸ்ரீராமானுஜரின்
திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரங்கள் வரும் தினங்களில் அவருக்கி திருமஞ்சனமும் திருவீதி உலா வரும் வைபவத்தை நாம் காணலாம். யதிராஜரை தரிசித்து விட்டு வெளியே வந்தால் கிழக்கு நோக்கிய முக மண்டலத்துடன், நின்ற திருக்கோலத்தில் ஆதிகேசவப் பெருமாளை தரிசனம்
செய்யலாம். மூலவரின் திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், ஸ்ரீ தேவியும், பூதேவியும் குடியிருக்கின்றனர். உத்சவர் கேசவ நந்தவர்த்தனரையும், நவநீத கிருஷ்ணரையும், செல்லப்பிள்ளையும் தரிசனம் செய்யலாம். அடுத்து யதிராஜநாதவல்லி தாயாரை தரிசனம் செய்யலாம். தாயாரின் சன்னிதியின் அருகிலேயே சக்கரத்தாழ்வாரின்
சன்னதி. ஆண்டாள் நாச்சியாருக்கும், இராமருக்கும் தனி சன்னதி உள்ளது. கோவிலை விட்டு வெளியே வந்தால் எதிரே இராமானுஜரின் அவதார திருத்தலத்தை காணலாம். ஆதிசேஷனின் அம்சமான ராமானுஜரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக் கோளாறு
கால சர்ப தோஷங்கள் நிவர்த்தியாகும். இக்கோயிலின் விமானம் (கருவறையின் கூரை) 1912 ஆம் ஆண்டில் தங்கமுலாம் பூசப்பட்டிருந்தது, மேலும் பழங்காலத்தில், இந்த அம்சத்தைக் கொண்ட ஒரே தென்னிந்திய கோயிலாக இருந்தது. விமானத்தில், ஸ்ரீ இராமானுசரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் தங்கத்
தகட்டின் வரலாற்றைப் பதிவு செய்யும் செப்புத் தகடு உள்ளது. இந்த கோவிலில் 10 அடி (3.0 மீ) உயரமான சுவர்களால் சூழப்பட்ட ஒரு செவ்வக திட்டம் உள்ளது. இது ஏழு அடுக்குகள் உள்ள நுழைவாயில் கோபுரத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
மூலவரின் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள
ஸ்ரீபெரும்புதூர் ஊரின் நடுவே கோயில் அழகிய வடிவில் அமைந்துள்ளது. இன்றைக்கும் ஸ்ரீபெரும்புதூரில் யார் இறந்தாலும் மேளம் அடித்துக்கொண்டு வந்து சுவாமிக்கு சூட்டப்பட்ட மாலை, ஆளவந்தார் கஷாயம், பரிவட்டம், பெற்றுச்சென்று இறந்தவர் உடலில் சாற்றுவர்.
உடையவர் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 27
#மகாலட்சுமியை_அரவணைத்தபடி_பரஸ்பர_ஆலிங்கனம்
ஶ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் திருவள்ளூரில் இருந்து 20கிமீ தூரத்தில் உள்ள #நரசிங்கபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இக்கோவில் சோழர்கள் மற்றும் விஜயநகர ராயர்கள் ImageImage
காலத்தை பெருமைப் படுத்துகிறது. கோவிலில் உள்ள கட்டிடக்கலை, விஜயநகர காலத்தைச் சேர்ந்தது என்று நினைக்க வைக்கிறது. ஆனால் இங்கு சோழ மன்னர்களின் ஆட்சி கால கல்வெட்டுகள் உள்ளன. ஆண்டாள் சன்னதியின் அடித்தளத்தில் உள்ள கல்வெட்டுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகவும் பழமையானதாகவும், முதலாம்
குலோத்துங்க சோழன் மற்றும் முதலாம் விக்ரம சோழன் காலத்தைச் சேர்ந்ததாகவும் கருதுகின்றனர். மதுராந்தக நல்லூரில் மதுராந்தக விண்ணகர் கோயிலைக் கட்டி, ராமர் சீதை லட்சுமணன் சிலைகளை நிறுவியதைப் பற்றியும், அவர்கள் தினசரி பூஜைகள் நடத்த மானியங்கள் கொடுத்தது பற்றியும் கல்வெட்டுகளில் உள்ளன. Image
Read 13 tweets
Jun 27
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு மனிதன் வாழ்வு முழுவதும் உண்மையே பேசாமல், பொய் சொல்லிக் கொண்டே வாழ்ந்து வந்தான். ஒரு நிலையில் அவன் மனம் திருந்தி, தனது தவறை உணர்ந்து, இனி பொய் கூற மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு, திருமகளின் திருவடிகளிலும் திருமாலின் திருவடிகளிலும் தஞ்சமடைந்தான்.
தான் Image
இதுவரை செய்த தவறுகளில் இருந்து காத்து, தனக்கு முக்தி அளிக்குமாறு திருமாலிடம் வேண்டினான். அப்போது திருமால், “நீ நிறைய பொய் பேசி இருக்கிறாய். அதனால் அதற்குத் தண்டனையாக ஏழு பிறவிகள் மீனாகப் பிறக்க வேண்டும். அதன்பின் உனக்கு முக்தி அளிக்கிறேன்!” என்றார். ஆனால் மகாலட்சுமியோ, “சுவாமி!
இவன் இதுவரை தவறு செய்திருந்தாலும், இப்போது திருந்தி நீங்களே கதி என்று வந்துவிட்டான். இனி இவனைத் தண்டிப்பது முறையல்ல! உடனடியாக இவனுக்கு முக்தியளித்து விடுங்கள்!” என்று கருணையோடு கூறினாள்.
“இப்போதே இவனுக்கு முக்தியளித்தால், இவன் செய்த தவறுக்கென்று சாஸ்திரம் விதித்துள்ள தண்டனையை
Read 7 tweets
Jun 27
#MahaPeriyava
Those who distrust the Puranas maintain that they contain accounts that are not in keeping with day-to-day realities. The stories in the texts refer to the arrival and departure of celestials and of their awarding boons to devotees. To the critics such accounts Image
seem false. A woman is turned into a stone because of a curse, then the curse is broken with the grant of boon; or the sun is stopped from rising - such stories seem untrue to us because they are beyond the realms of possibility and refer to acts beyond our own capacity.
Since
such things do not happen these days, is it right to argue that they could not have occurred at any time? In the past the mantras of the Vedas had their own vibrant power because of the exemplary life led by those who chanted them. Then people practised severe austerities and
Read 46 tweets
Jun 26
#அறிவு_ஞானம்
ஒரு குருவிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது என்று குருவிடம் கேட்டனர். அவர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு மூவரையும் Image
ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து, “நான்போய் வந்த அறையினுள் மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா”என்றார்.
அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய
மூன்று தம்ளர்களில் பால் இருந்தது.
தங்கத் தம்ளரில்இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில்
பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால்
Read 11 tweets
Jun 26
#MahaPeriyava
I was in Tiruvannamalai in my young age. Our house was near the foothill. One Maami used to teach us song and dance and would ask us to sing before #RamanaMaharshi. We would sing and dance before him, going in circles. He would never talk, only have a look with his Image
eyes. After I was married, a relative told me, "You have not seen Kumbakonam Swamy, Maha tapasvi, go and have darshan once." Periyaval at that time had the name 'Kumbakonam Swamy'. My husband and I came to Kanchipuram to have darshan, but we were told that Periyava had gone out
somewhere. We went to three or four nearby villages, but could not see him in those places. I was yearning for the darshan. Only when Periyava had come to Madras, we could have his darshan. At my first sight of him I thought, "He looks typically like Ramana Maharshi. What tejas
Read 28 tweets
Jun 25
ஸ்ரீ கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கன்னையா என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள். கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப் Image
படுவது வடமாநிலங்களில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற Image
#கீதகோவிந்தம் #ஸ்ரீமந்நாராயணீயம் #கிருஷ்ண_கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும். கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கிருஷ்ண லீலையை மனம் ஒன்ற
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(