ஸ்ரீ கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கன்னையா என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள். கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்
படுவது வடமாநிலங்களில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற
#கீதகோவிந்தம்#ஸ்ரீமந்நாராயணீயம்#கிருஷ்ண_கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும். கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கிருஷ்ண லீலையை மனம் ஒன்ற
கேட்டால் பசி, தாகம் ஏற்படாது. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி. ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும். ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம்
சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை
#பகவத்கீதை மூலம் உணர்த்தியுள்ளார் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாலட்சுமியை_அரவணைத்தபடி_பரஸ்பர_ஆலிங்கனம்
ஶ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் திருவள்ளூரில் இருந்து 20கிமீ தூரத்தில் உள்ள #நரசிங்கபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இக்கோவில் சோழர்கள் மற்றும் விஜயநகர ராயர்கள்
காலத்தை பெருமைப் படுத்துகிறது. கோவிலில் உள்ள கட்டிடக்கலை, விஜயநகர காலத்தைச் சேர்ந்தது என்று நினைக்க வைக்கிறது. ஆனால் இங்கு சோழ மன்னர்களின் ஆட்சி கால கல்வெட்டுகள் உள்ளன. ஆண்டாள் சன்னதியின் அடித்தளத்தில் உள்ள கல்வெட்டுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகவும் பழமையானதாகவும், முதலாம்
குலோத்துங்க சோழன் மற்றும் முதலாம் விக்ரம சோழன் காலத்தைச் சேர்ந்ததாகவும் கருதுகின்றனர். மதுராந்தக நல்லூரில் மதுராந்தக விண்ணகர் கோயிலைக் கட்டி, ராமர் சீதை லட்சுமணன் சிலைகளை நிறுவியதைப் பற்றியும், அவர்கள் தினசரி பூஜைகள் நடத்த மானியங்கள் கொடுத்தது பற்றியும் கல்வெட்டுகளில் உள்ளன.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு மனிதன் வாழ்வு முழுவதும் உண்மையே பேசாமல், பொய் சொல்லிக் கொண்டே வாழ்ந்து வந்தான். ஒரு நிலையில் அவன் மனம் திருந்தி, தனது தவறை உணர்ந்து, இனி பொய் கூற மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு, திருமகளின் திருவடிகளிலும் திருமாலின் திருவடிகளிலும் தஞ்சமடைந்தான்.
தான்
இதுவரை செய்த தவறுகளில் இருந்து காத்து, தனக்கு முக்தி அளிக்குமாறு திருமாலிடம் வேண்டினான். அப்போது திருமால், “நீ நிறைய பொய் பேசி இருக்கிறாய். அதனால் அதற்குத் தண்டனையாக ஏழு பிறவிகள் மீனாகப் பிறக்க வேண்டும். அதன்பின் உனக்கு முக்தி அளிக்கிறேன்!” என்றார். ஆனால் மகாலட்சுமியோ, “சுவாமி!
இவன் இதுவரை தவறு செய்திருந்தாலும், இப்போது திருந்தி நீங்களே கதி என்று வந்துவிட்டான். இனி இவனைத் தண்டிப்பது முறையல்ல! உடனடியாக இவனுக்கு முக்தியளித்து விடுங்கள்!” என்று கருணையோடு கூறினாள்.
“இப்போதே இவனுக்கு முக்தியளித்தால், இவன் செய்த தவறுக்கென்று சாஸ்திரம் விதித்துள்ள தண்டனையை
#MahaPeriyava
Those who distrust the Puranas maintain that they contain accounts that are not in keeping with day-to-day realities. The stories in the texts refer to the arrival and departure of celestials and of their awarding boons to devotees. To the critics such accounts
seem false. A woman is turned into a stone because of a curse, then the curse is broken with the grant of boon; or the sun is stopped from rising - such stories seem untrue to us because they are beyond the realms of possibility and refer to acts beyond our own capacity.
Since
such things do not happen these days, is it right to argue that they could not have occurred at any time? In the past the mantras of the Vedas had their own vibrant power because of the exemplary life led by those who chanted them. Then people practised severe austerities and
#அறிவு_ஞானம்
ஒரு குருவிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது என்று குருவிடம் கேட்டனர். அவர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு மூவரையும்
ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து, “நான்போய் வந்த அறையினுள் மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா”என்றார்.
அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய
மூன்று தம்ளர்களில் பால் இருந்தது.
தங்கத் தம்ளரில்இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில்
பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால்
#MahaPeriyava
I was in Tiruvannamalai in my young age. Our house was near the foothill. One Maami used to teach us song and dance and would ask us to sing before #RamanaMaharshi. We would sing and dance before him, going in circles. He would never talk, only have a look with his
eyes. After I was married, a relative told me, "You have not seen Kumbakonam Swamy, Maha tapasvi, go and have darshan once." Periyaval at that time had the name 'Kumbakonam Swamy'. My husband and I came to Kanchipuram to have darshan, but we were told that Periyava had gone out
somewhere. We went to three or four nearby villages, but could not see him in those places. I was yearning for the darshan. Only when Periyava had come to Madras, we could have his darshan. At my first sight of him I thought, "He looks typically like Ramana Maharshi. What tejas
#ஸ்ரீபெரும்புதூர்_ஆதிகேசவ_பெருமாள்#ஶ்ரீராமானுஜர்_அவதார_ஸ்தலம்
ஸ்ரீபெரும்புதூர் என்று அழைக்கப் படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் சிவபெருமானின் சிவகணங்கள் அவரிடம் அவச்சாரப் பட்டன. சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சபித்தார்.
இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவமிருந்தனர். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக பூத கணங்களுக்கு காட்சி அளித்து, பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோசனம்
பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. ராமானுஜர் அவதரித்ததால் இது நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு சொர்க்க