#கர்மவினை#கர்மா
இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் எடுத்து இருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்து இருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே #சஞ்சித_கர்மா. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப் படுகிறது. அதுவே #பிராரப்த_கர்மா. பிராரப்த
கர்மா நிறைவடையாமல்
இந்தப் பிறவி முடிவடையாது. இது தவிர #ஆகாம்ய_கர்மா என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல, கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர் செய்வினையின் பயனாலேயே அவரவர்
அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும். துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம வழியே. இதைத் தான், தீதும் நன்றும் பிறர் தர வாரா என நம் மதம் போதிக்கிறது.
நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அதனால்
ஆகாமி
கர்மா நம் கையில் தான் உள்ளது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது. எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பது நம் செய்யப் போகும் செயலில் தான் உள்ளது என்று புலப்படுகிறது. இதை போதிப்பது தான்
#ஆன்மீகம். பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.
'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்
விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்' என்பது உண்மை. நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எதற்கும் நிதானமும்
பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது. அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பாணலிங்கம் சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம். பஞ்சாயதன பூஜை செய்பவர்கள் சிவனார் அம்சமாக பாண லிங்கத்தை வைத்து வழிபடுவார்கள். நர்மதை ஆற்றில் நீரில் சுழற்சியின் காரணமாக நீள் உருண்டையாகத் திகழும் பாண லிங்கங்கள் உளுந்தளவு முதல் பெரும் பாறை அளவுக்கும் கிடைகின்றன. நர்மதை
நதிக்கரையில் சோணபுரத்தை ஆட்சி செய்தவன் வாணாசுரன். சிறந்த சிவபக்தன். அவன் கோட்டையைச் சிவபெருமானே காவல் செய்தார் என்பதில் இருந்து அவனின் சிவபக்தியின் ஆழம் நமக்குப் புலப்படும். இந்த வாணாசுரன் தினமும் ஆயிரம் சிவலிங்கங்களை வைத்து பூஜிப்பான். பூஜை முடிந்ததும் லிங்கங்களை நர்மதை நதியில்
விட்டுவிடுவான். அப்படி அவன் நர்மதையில் விட்ட லிங்கங்கள் அனந்த கோடி என்பார்கள். அவையே இப்போது பாண லிங்கங்களாக வெளிப்படுகின்றன என்பது நம்பிக்கை. நர்மதையில் கிடைக்கும் பாண லிங்கங்களைக் காசிக்குக் கொண்டு சென்று கங்கையில் நீராட்டிப் பூசித்து எடுத்து வருவது விசேஷம். பாண லிங்கங்களை
1901 ஆம் ஆண்டு தேவனார்விளாகத்தில் ஸ்ரீ உ.வே வித்துவான் பருத்திப்பட்டு வங்கீபுரம் திருவேங்கடாசர்யார் அவர்களுக்கு ப்லவ வருஷம் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார்

ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாசாரியார் ஸ்வாமி.
செல்வச்சிறப்படைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், “இந்த வீடு, தோட்டம், செல்வம் எல்லாம் தம்முடையது கிடையாது, எல்லாம் கண்ணனுடையது, இவற்றுக்கு டிரஸ்டியாக அடியேனை நியமித்துள்ளான், இதை கவனத்தில் கொண்டே காரியங்களைச் செய்து வருகிறேன்” என்று
தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், மிக்க எளிமையுடனும், வைராக்கியத்துடனும் வாழ்ந்து வந்தார். சிறுவயதில் மற்ற சிறுவர்களுடன் பெருமாள் விக்ரகங்களுடன் விளையாடிக் கொண்டு பொழுதைக் கழித்து சாஸ்திரங்களையும் ஆழ்வார் அருளிச் செயல்களையும் கற்று, சிறுவயது முதலே பலருக்குக் காலட்சேபம்
#மகாபெரியவா என் தாயார் என்னை என் கோடை விடுமுறைக்கு அரக்கோணம் அத்தை வீட்டில் சில நாள் அழைத்து சென்ற பொழுது அது பெரியவா ஜெயந்திக்கு முந்தைய நாள். எங்கள் அத்தை, என் தாயை, அரக்கோணம் ராஜகோபால் ஐயர் வீட்டில் பெரியவா பெரிய படம் இருக்கும், அவர்கள் வீட்டில் பெரியவா ஜெயந்தி அன்று
ஆயுட்ஷேம பூஜை செய்வார்கள், அதனால் இன்றே போய் பாத்து விட்டு வர அழைத்து சென்று இருக்கிறார்கள். அம்மாவுக்கு பெரியவா படம் பாத்தவுடன், அவரை நேரில் தரிசனம் செய்ய ஆசை, மனதார வேண்டி கொண்டு இருகிறார்கள். ஆனால் எவ்வாறு செல்வது, பெரியவா இருப்பது கலவையில். நங்கள் இருப்பது அரக்கோணம். பணம்
பெரிய அளவில் இல்லாத குடும்பம்.
ராஜகோபால் ஐயர் வீட்டு, மாமிக்கு என் அம்மாவை பிடித்துப் போக, நீங்கள் பெரியவா ஆயுட்ஷேம பூஜைக்கும் நாளை நிச்சயம் வரணும் என்று அழைப்பு விடுத்தார். ஜெயந்தி அன்று, எப்பொழுதும் 6 கஜம் புடவை கட்டும் அம்மா, தீடிர் என 9 கஜம் புடவை கட்டி போகலாம் என ஏதோ தோண, 9
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
அய்யா நான் மகா விஷ்ணுவைக் கண்ணால் காண முடியுமா என குரு ஒருவரிடம் கேட்டான் சுரேஷ்.
“தம்பி, நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
அய்யா எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை நான்
எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்!
“தம்பி, கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் பரிபூரண ஸ்ரீ மகா விஷ்ணுவின் அன்பை உணரும் நுட்பமும் திட்பமும் அமைந்து
இருக்க வேண்டும். உடம்பை நீ பார்க்கிறாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகிறதா?”
ஆம். நன்றாகத் தெரிகிறது.
“தம்பி, அவசரப்படாதே. எல்லாம் தெரிகிறதா?”
என்ன ஐயா விளையாட்டு! தெரிகிறது தெரிகிறது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம் தான் தெரிகிறது.
“தம்பி, எல்லா அங்கங்களும் தெரிகிறதா?”
#மகாபெரியவா
ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாம் இட்டிருந்தார். ஒரு நாள் இரவு, தேவகோட்டையில் இருந்து ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக. ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர்
அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, "வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா” என்றவர், அவரை நிறுத்தி, "அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா” என்றார். அவரும் விசாரித்து வந்தார்.
“சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து
வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்” என்றார். “ராமச்சந்திரா! வெளியே பூஜைக் கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப் போய்
#ஒரு_மண்டலம்#48நாட்கள்
சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவது நமக்குத் தெரிகிறது. அது போல நம் பூமியைச் சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுந்து, முழுமையாக நம்மை பாதித்து நம்
உடலில், மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதே போல நம்மை சுற்றிலும் உள்ள
கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது விழுந்து தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவை இருக்கும் தூரத்தின் காரணமாக, அவற்றின் உருவ வேறுபாடு காரணமாக அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப் போல கண்களுக்குத்