#மாணிக்கவாசகர்#குருபூஜை
வாதவூரார் என்றும் வாதவூர் தலைவன் எனவும் போற்றப்படுகிற மாணிக்கவாசகருக்கு நேற்று குருபூஜை. மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள ஒத்தக்கடைக்கு அருகில் கிளை பிரிந்து செல்லும் சாலையில், திருமோகூர் திருத்தலத்தைக் கடந்து, 20 கி.மீ. தொலைவில் திருவாதவூர்
எனும் அழகிய தலம் உள்ளது. சிறிய கிராமம். இந்த கிராமத்தின் அளவில் பாதியாக கோயில் அமைந்துள்ளது. அற்புதமான இந்தக் கோயில் பல சாந்நித்தியங்களைக் கொண்ட ஆலயமாக திகழ்கிறது. இதுதான் மாணிக்கவாசகர் அவதரித்த பூமி. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பார்கள். படிப்போர்
உள்ளத்தைப் பக்திப் பெருக்கால் நெகிழச் செய்யும் திருவாசகத்தை உலகுக்கு அளித்தவர் மாணிக்கவாசகப் பெருமான். பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் திருவாதவூரில் பிறந்தார். அவர் பிறந்த ஊரின் பெயராலேயே ‘திருவாதவூரார்’ என்றே அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கல்வி, ஞானம்
ஆகியவற்றில் சிறந்து விளங்கிய திருவாதவூராரின் புகழைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கிக் கௌரவித்தான். ஒருமுறை, தரமான, வளமான குதிரைகள் பல சோழநாட்டுத் துறைமுகங்களில் கப்பல்களில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன், அமைச்சரான வாதவூராரை அனுப்பி அந்தக்
குதிரைகளை வாங்கிவரும்படி ஆணையிட்டான். திருவாதவூராரும் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டார். வாணிபம் செய்யச் சென்ற வாதவூராரை தன் வசமாக்க முடிவு செய்தார் ஈசன். சோழ நாட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த திருத்தலம் திருப்பெருந்துறை. அங்கு, குருந்த மரத்தடியில் ஞானமே வடிவாய் சிவபெருமான்
அமர்ந்திருந்தார். ஒளி பொருந்திய அவரின் திருமுகத்தைக் கண்டதும் வாதவூராருக்கு அன்பும் பக்தியும் பெருகியது. உணர்வுப் பெருக்கோடு அவரின் காலில் விழுந்து வணங்கினார். பக்திப் பெருக கண்ணீர் சிந்தியபடி இறைவனின் பெரும் கருணையை எண்ணி பாடல்களைப் பாடத் தொடங்கினார். பெருமானின் தரிசனம் கண்டபின்
உலகின் இன்பங்களில் பற்று அறுந்தது. அமைச்சருக்குரிய ஆடைகள் அனைத்தையும் துறந்து கௌபீனம் உடுத்தி, திருநீறு தரித்து துறவியாக மாறினார். சிவபக்தியில் முழுமையாய்த் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன்னை மறந்து, தான் வந்த பணியையும் மறந்தார். கொண்டுவந்த பொன், பொருள் அனைத்தையும் கோயில்களின்
திருப்பணிகளுக்கும் அடியார்களுக்கும் செலவிட்டார். தான் கொடுத்தனுப்பிய செல்வங்கள் அனைத்தையும் களவாடிவிட்டாரோ என்று சந்தேகம் கொண்ட மன்னன் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தான். அப்போதும், 'எல்லாம் ஈசனின் செயல்' என்றிருந்தார் மாணிக்கவாசகர். சிவபெருமான், வனத்தில் இருந்த நரிகளை எல்லாம்
பரிகளாக்கி மதுரைக்கு அனுப்பினார். வந்து சேர்ந்த குதிரைகளைக் கண்ட மன்னன் மகிழ்ச்சியில் மாணிக்கவாசகரை விடுதலை செய்தான். ஆனால் அன்றிரவே பரிகள் நரிகளாக மாறி ஊளையிட்டன. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் சினம் கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்க வாசகரை வைகை நதியின் சுடு மணலில்
நிறுத்தி மரண தண்டனை அளிக்கக் கட்டளை இட்டான். அப்போது இறைவனின் கருணை, மழையாகப் பெய்து வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த, 'வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்க வரவேண்டும்' என்று ஆணையிட்டான். பிட்டுக்கு ஈடாகக் கரையடைக்க வந்த ஈசனோ, வேலையைச் செய்யாமல் படுத்து
தூங்கினார். அதைக் கண்ட பாண்டியன் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் ஈசனை அடித்தான். அந்தப் பிரம்படியானது, உலகின் அனைத்து உயிர்கள் மீதும் விழுந்தது. பாண்டியனும் வலியால் துடித்தான். மாணிக்கவாசகரைக் காக்க சிவபெருமான் செய்த திருவிளையாடலே இது என்பதை உணர்ந்த பாண்டிய மன்னன் மீண்டும் அவரை
அமைச்சர் பதவியில் நியமித்தான். ஆனால், அவரோ அதை நிராகரித்துவிட்டு, சிவபெருமானின் புகழ் பாடுவதையே வேலையாகக் கொண்டு சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கே தங்கி இறைவனை எண்ணிப் பாடல்கள் பாடத் தொடங்கினார். தில்லையம் பதியானின் கருணையை மாணிக்கவாசகர் கண்ணீர் சிந்திப் பாட, வேதியர் ஒருவர்
ஓலையில் எழுதினார். பாடல்கள் அனைத்தையும் எழுதி முடித்த நிலையில், அந்த வேதியர், 'திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்’ என்று எழுதி ஓலைகளைக் கீழ்வைத்து மறைந்தார். பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் 8ஆம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32
ஆண்டுகளே வாழ்ந்த அவர், மக்கள் காணும் வகையில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தன்று சிதம்பரத்தில் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.
அவர் அவதரித்த இல்லம் இப்போது கோயிலாக எழுப்பப்பட்டு, அங்கே பூஜைகள் நடைபெறுகிறது. மணிவாசகரை மனதார வணங்கி ஞானமும் யோகமும் பெறுவோம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Not much is written about Sri Vaishnava pontiffs. The present pontiff of Sri Vaishnava Mutt #Sri_Ahobila_Matam is the 46th Jeeyar since its inception. Let us learn about HH.
In the present day context, only a handful of families have maintained an unbroken Veda adyayana lineage
that could be traced back to many centuries in the past. It is lord Lakshmi Nrisimha's kripa kataksham that a few families still exist that stick to the rigorous vaideeka traditions irrespective of changes in social tastes and preferences. The Aani masam of Manmatha Varusham in
1955 (June 23, 1955) was a special day in a Vaideeka family belonging to Koundinya gotram, in Thillai Vilagam, Thiruvarur District, TN. A baby boy was born as fourth child to devout dampathis, Shri Bhaktavatsalachariar and Shirmathi Rajalakshmi. The child was named Rangarajan and
#MahaPeriyava
Periyava would get pain in the chest, often. When he suffered from this, he would not be able to eat anything at all. So I told Venkataramaiyer, the lawyer, about it. He would consult his Homeopathy books and give some medicine. In a day or two Periyava would be
relieved of the pain. Venkataramaiyer was no Homoeopathy doctor, but he practiced relying on his books. Then after a while, we thought of seeking Ayurvedic remedy. So I went to Venkata Subbachar and told him about Periyava’s suffering from frequent chest pain. He said “I am
working in Venkataramana pharmacy and can give a good medicine. But I do not wish to give Periyava something that is already on the shelf and being sold. His body is sacred and immaculate. Give me a few days, get me the things I want and I will make it afresh and have it ready.
#மகாபெரியவா
பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று, உறுதியாய் நம்பியவர் மீளா அடிமை என்னும் பிரதோஷம் மாமா. அப்படிப்
பட்டவர், ஒரு நாள் தன் அலுவலகத்தில் யாரோ வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததில் மனதில் லேசான சலனம். தானும் அக்கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை
எழுந்தது.
தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் அக்கோவிலுக்குப் போனவர்தான். அவரது தந்தையின் பெயரும் வைத்தியநாத சர்மா. அதனால் தன்னை வைத்தீஸ்வரர் அழைக்கிறார் என்கிற நினைப்புடன், வீட்டீற்கு வந்து தன் துணைவியாருடன் இதைப் பற்றிப் பேசுகிறார். துணைவியார் திடீரென எதிர்கேள்வி கேட்டார்.
“பெரியவாளே சாட்சாத் பரமேஸ்வரராய் இருக்கார்னு சொல்வீர்களே இப்போது ஏது இன்னொரு தெய்வத்தைப் பார்க்கணும்னு சொல்றேளே?" உண்மை உறைத்தது. மீளா அடிமை ஆடித்தான் போனார். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்து, பூஜை அறைக்குப் போய் மகாபெரியவாளின் திரு உருவத்திடம் நின்று கண்கலங்கி,
#ரங்கநாத_பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் பக்தனனின் மேல் அவருக்கு இருக்கும் பேரன்பை விளக்கும் திருவிழா பங்குனி பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள அவர் ஶ்ரீரங்கம் விட்டு #ஜீயர்புரம் என்ற
ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடை
பெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. ரங்கனுக்கு அக்காரவடிசில் கோவிலில் காத்துக் கொண்டிருக்கும் போது பெருமானுக்கும் பழைய சோறு, மாவடுவும் இங்கு விருந்து!
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தோல்வி என்று ஒன்று வந்து விட்டால் நாம் நிலை குலைந்து போய் விடுகிறோம். அத்தனை முயற்சிகளும் உழைப்புகளும் வீண் என்று நமக்குள்ளேயே களைத்துப் போகிறோம். தோல்வியை வேறு கோணத்தில் பார்ப்போமா? ஒரு தோல்வியின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இதைவிட ஒரு சிறப்பான வாழ்க்கை அமைய
நமக்கு வழிகாட்ட நினைத்திருக்கலாம். ஒரு நண்பர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியாததால் இன்ஜினியரிங்கில் சேர முடியவில்லை. எல்லோரும் அவரை தோல்வி அடைந்தவனாக பார்த்தார்கள். ஆனால் அவர் கணிதம் படித்து, கணினி தொடர்பான வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்று இன்று 100
பேருக்கு மேல் அவர் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். ஒரு வேளை இன்ஜினியரிங் படித்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நண்பர் ஆரம்ப கட்டத்தில் ஏதேதோ முயற்சி செய்தார். எல்லாம் தோல்வி அல்லது மனதுக்கு பிடிக்கவில்லை. யோகாவில் நுழைந்தார். எல்லோரும் திரும்பப்
நாம் நமஸ்காரம் செய்கிறோம், ஏன்? செயல் ஆவது யாதொன்றும் இல்லை, எல்லாம் உன் செயல், என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கம் #ஐந்துவகை_நமஸ்காரங்கள்
அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.
#ஓரங்க_நமஸ்காரம்
வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது. #மூன்றங்க_நமஸ்காரம்
வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம். #பஞ்சாங்க_நமஸ்காரம்
வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகிய ஐந்து
அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும். #அஷ்டாங்க_நமஸ்காரம்
ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி