#விசேஷ_தர்மம்
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரிய பகவான் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் அவரிடம், “தந்தையே! நான் என் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க நண்பன் துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான். அப்போது சூரிய
பகவான், “இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன். “க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம்.
அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும் முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்."
என்றார். கர்ணன்
தந்தையின் வார்த்தைகளில் இருக்கும் சத்தியத்தை உணர்தான். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான். அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான் விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய
சாமானிய தர்மத்தை விட்டு,
விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா? தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின் ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா? மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில்
விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.
அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார். வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள். கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே
வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம்.
“#வ்ருஷாகபயே_நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், முரண்பாடான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத்
தந்தருள்வார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தில_ஹோமம்
பொதுவாகவே மரணம் என்பது யாருக்கு எப்போது வரும் என்றே சொல்ல முடியாது. அது வயது வித்யாசம் பார்க்காமல் வரக்கூடியது. விபத்துகளில் மரணம் நேரும் போது பல நேரங்களில் உடல் சிதைந்து தகனம் செய்ய தகுதியற்ற நிலையை அடைந்து விடுவதால் அந்த பிரேதங்களுக்கு சரியான முறையில் சம்ஸ்காரங்கள்
செய்யப் படுவதில்லை. அந்தகைய ஆன்மாக்கள் அந்த அஸ்தி கிடக்கும் இடத்தையே ஆவிகளாக சுற்றி வருகின்றன. இந்நிலையில், அவற்றிற்கு மோக்ஷம் கிடைத்து பித்ரு லோகத்தை அடைய செய்யப்படும் ஹோமமே தில ஹோமம் ஆகும். இது ப்ரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த முன்னோர்கள் நல்ல கதி
அடையவும் கருப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப் படும் ஹோமம் ஆகும். கிருஷ்ண பக்ஷம் சனிக் கிழமை, அமாவாஸை பரணி நக்ஷத்ரம் குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் தில ஹோமத்துக்குச் சிறந்தவை. ஆனாலும் இப்படிப் பட்ட தில ஹோமத்தை தேவையில்லாமல் செய்யக்கூடாது.
#MahaPeriyava
There is an organisation in America called the Paul Brunton mission, extolling the British journalist who came to see the Sages here. Brunton had Sri Maha Periyava’s darshan and on his advice went to Ramana Maharishi whose gracious glance he received. Every year
the students who were members of this association, would visit Kanchipuram and stay on for 10 or 15 days, immersing themselves in Periyava’s blissful darshan. The Group had come as usual one year. One day, Periyava was seated under the Night-flowering jasmine (Pavazhamalli) tree,
which used to be in SriMatham in those days and was giving them the darshan. Periyava was sitting with his eyes closed. The American boys were seated around Periyava with their eyes closed in Meditation. It was very silent, not a whisper anywhere. The attendants Balu Mama and
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் குயவன் முனியாண்டி பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. அவன் அருகில் ஓர் ஆடு, கட்டிப் போடப்பட்டிருந்தது.
அவ்வப்போது, மே மே என்று கத்திக் கொண்டிருந்தது. வயதான மகான் பழனிசாமி , மெல்ல நடந்து அங்கே வந்தார்
குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.
வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் குயவன் முனியாண்டி. அதை வாங்கிக் குடித்த குரு பழனிசாமி, இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா என்று கேட்டார். இல்லீங்க சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது.
பிடித்துக் கட்டிப் போட்டேன் என்றான் குயவன். எதற்காக என்று கேட்டார் குரு பழனிசாமி. பண்டிகை வரப் போகிறதே! இறைவனுக்கு பலி கொடுக்கலாமென்று தான் என்று இழுத்தான் குயவன் முனியாண்டி .
பலியா? குரு வியப்புடன் வினவினார்.
ஆமாம் சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் ரொம்ப
Not much is written about Sri Vaishnava pontiffs. The present pontiff of Sri Vaishnava Mutt #Sri_Ahobila_Matam is the 46th Jeeyar since its inception. Let us learn about HH.
In the present day context, only a handful of families have maintained an unbroken Veda adyayana lineage
that could be traced back to many centuries in the past. It is lord Lakshmi Nrisimha's kripa kataksham that a few families still exist that stick to the rigorous vaideeka traditions irrespective of changes in social tastes and preferences. The Aani masam of Manmatha Varusham in
1955 (June 23, 1955) was a special day in a Vaideeka family belonging to Koundinya gotram, in Thillai Vilagam, Thiruvarur District, TN. A baby boy was born as fourth child to devout dampathis, Shri Bhaktavatsalachariar and Shirmathi Rajalakshmi. The child was named Rangarajan and
#MahaPeriyava
Periyava would get pain in the chest, often. When he suffered from this, he would not be able to eat anything at all. So I told Venkataramaiyer, the lawyer, about it. He would consult his Homeopathy books and give some medicine. In a day or two Periyava would be
relieved of the pain. Venkataramaiyer was no Homoeopathy doctor, but he practiced relying on his books. Then after a while, we thought of seeking Ayurvedic remedy. So I went to Venkata Subbachar and told him about Periyava’s suffering from frequent chest pain. He said “I am
working in Venkataramana pharmacy and can give a good medicine. But I do not wish to give Periyava something that is already on the shelf and being sold. His body is sacred and immaculate. Give me a few days, get me the things I want and I will make it afresh and have it ready.
#மகாபெரியவா
பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று, உறுதியாய் நம்பியவர் மீளா அடிமை என்னும் பிரதோஷம் மாமா. அப்படிப்
பட்டவர், ஒரு நாள் தன் அலுவலகத்தில் யாரோ வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததில் மனதில் லேசான சலனம். தானும் அக்கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை
எழுந்தது.
தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் அக்கோவிலுக்குப் போனவர்தான். அவரது தந்தையின் பெயரும் வைத்தியநாத சர்மா. அதனால் தன்னை வைத்தீஸ்வரர் அழைக்கிறார் என்கிற நினைப்புடன், வீட்டீற்கு வந்து தன் துணைவியாருடன் இதைப் பற்றிப் பேசுகிறார். துணைவியார் திடீரென எதிர்கேள்வி கேட்டார்.
“பெரியவாளே சாட்சாத் பரமேஸ்வரராய் இருக்கார்னு சொல்வீர்களே இப்போது ஏது இன்னொரு தெய்வத்தைப் பார்க்கணும்னு சொல்றேளே?" உண்மை உறைத்தது. மீளா அடிமை ஆடித்தான் போனார். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்து, பூஜை அறைக்குப் போய் மகாபெரியவாளின் திரு உருவத்திடம் நின்று கண்கலங்கி,