மேலோட்டமாக பார்க்கும்போது எங்கோ எதையோ நாடி திரிபவனை தான்பால் ஈர்த்து ஆண்ட பெருமானே என்றே பொருள்கொள்கிறோம் ?? ஆனால் அவ்வரிகளை உட்கொண்டு அனுபவிக்க உற்றவன் உணர்வித்த பொருளே இப்பதிவு !!
பிற பொருள் !! உயிர் !! மீது உள்ள ஈர்ப்பே இன்றுவரை வாழ வைக்கிறது !! ஈர்ப்புக்கு உட்படும் பொருளும் ! உயிரும் ! மாறலாம் ஆனால் ஈர்ப்பு என்று ஒன்று எதையோ ! எதைநாடியோ !! நம்மை பயணிக்கவைத்து கொண்டே இருக்கு ! இருக்கும் !!
நமது உடலில் உயிர் என்ற ஒன்றின் ஈர்ப்பாலே உடல் உடலாகவே இருக்கிறது !! அந்த ஈர்ப்பின் பயனாக உடலின் உள் நடக்கும் இயக்கமும் !! வெளியே நடக்கும் இயக்கமும் !!
நம்மை போல நாம் அறிந்தும் அறியாதும் பல்லுயிர்கள் இந்த பூமியை சார்ந்தே இருக்கிறது ! இயங்குகிறது !! அந்த பூமியும் நம்மை போல எதையும் விடாது !! தன்னுள்ளே !! தன்னுடன் !! ஈர்த்தே வைத்துகொண்டு இருக்கிறது !! புவியின் மைய ஈர்ப்பால் !!
இந்த பூமிக்கு துணை கோளாக பூமியை சுற்றும் சந்திரன் ஓர் தன்னுள் உள்ள ஈர்ப்பால் உடையாது ! சிதறாது !! பூமியின் மையத்தில் உள்ள ஈர்ப்பால் சுற்றுகிறது !! ஈர்ப்புமாறாதே ?!
நமது பூமியை சுற்றி கோள்கள் !! தன்னுள் உள்ள ஈர்ப்பால் தன்னே சுற்றிக்கொண்டும் ஒரே ஈர்ப்பில் இருப்பதாலே சூரியனை சரியான கோணத்தில் !! நேரத்தில் !! தூரத்தில் !! ஈர்ப்பாலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது !!
நம் அறிந்த சூரிய குடும்பம் போல நாம் அறியா பற்பல சூரியக்குடும்பங்கள் பிரபஞ்சத்தில் ஓர் ஈர்ப்பால் நம் அறிந்த சூரியகுடும்பத்தை இன்றுவரையும் ஓர் இடையுறு இல்லாதே சுற்றவிட்டு ?! அவைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன !!
பிரபஞ்சனாகி சிவத்தாலே ஓர் மைய ஈர்ப்பின் பிரதிபலிப்பாகவே இத்தனை ஈர்ப்புகள் !!
பிரபஞ்ச ஈர்ப்பு !! அண்ட ஈர்ப்பு !! சூரியக்குடும்ப ஈர்ப்பு !! உபகோள்கள் ஈர்ப்பு !!
கோள்கள் ஈர்ப்பு !! கோள்கள் மீது உள்ள உயிர்களை அக்கோள்களிலே இருக்கவைக்கும் ஈர்ப்பு !! உயிரின் ஈர்ப்பால் உடல் !! உயிர் கொண்ட உடலின் ஈரப்பால் எண்ணம் !! எண்ணத்தின் ஈர்ப்பால் உடல முதல் உலகின் இயக்கம் !!
ஓர் உயிர் எந்த தன்மையில் !! எந்த உடல் கொண்டும் !! இல்லாமலும் ?? எப்படி இருந்தாலும் ?! அவன் அருளால் அவனது ஈர்ப்பால் !! ஈர்ப்புள் !! ஈர்ப்புடனே என்றும் இருக்கும் !!
எத்தகைய ஈர்ப்புக்கு ஆட்பட்டு உள்ளோம் !! உணர்ந்த ஈர்ப்பு சிறிதே !! உணரா ஈர்ப்பு அளவிட முடியாது !!
அத்தகைய ஈர்ப்புக்கு ஆட்படவைத்து என்னையும் ஆண்டு அருளும் எந்தை பெருமானே !! என்பதே என்னுள் மெய்பொருள் உணர்த்திய பொருள் !!
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே !!
திருச்சிற்றம்பலம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்று நம் நிறுவனத்தில் பணியாற்றும் ஓர் ஊழியர் (பெண்) எப்போதும் ருத்ராச்சம் அணிந்து இருப்பவர், அவர்கள் சொந்தத்தில் ஓர் மரணம், காலையில் விடுமுறை வேண்டும் என்று தகவல் சொல்ல வந்தபோது
என்னை எல்லோரும் ருத்ராச்சதை கழட்டும்படி தீட்டுகிறார்கள், பிணத்தை எடுத்த பின் வேண்டுமானால் போட்டு கொள் என்று சொல்கிறார்கள் என்று சொல்ல !!
நம் வாயோ சும்மா இருக்குமா ??
இறந்தவருக்கு மரியாதை செலுத்ததானே போகிறாய் ஆமாம், நீ இப்படியே போய் நமச்சிவாய மந்திரம் சொல்லிக்கொண்டே அங்கே இரு !
எத்தனையோ லட்சம் பணம் செலவு செய்து இறுதி மரியாதை செய்வது வேண்டுமானால் ஊருக்காக இருக்கும்..
ஆனால் நீ ஒரு ஆள் மட்டுமே அந்த அலைபாயும் இறந்த ஆன்மா இறைவன் அடி நிழலில் இளைப்பாற துணை புரிவாய் என்று சொன்னேன் !!
காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது. மாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.
இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும். காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம்
#வீதி_உலாவிற்கு_வெளியே_வராத_நடராஜர் #சைவ_சமயம்
சோழவள நாட்டில் திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கோனேரிராஜபுரம் என்ற ஊரில் பூமீஸ்வரர் கோயிலில் இருக்கும் நடராஜர் ஆறடி உயரத்தில், மிக அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிறார்.
• இங்குள்ள நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம் மார்பில் மருவு உடலில் கொழுப்புக் கட்டி கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் நகம் போன்றவைகள் இருப்பது அதிசயமாகும்.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக்கூத்தராகிய நடராஜப்
பெருமான் காண்போரை கவர்ந்திழுக்கும் சுந்தர நடராஜராகவும்,
உலகிலேயே மிகப்பெரிய நடராஜராகவும் விளங்குகிறார்.
ஒரு சமயம் சோழ மன்னர் ஒருவரது கனவில் பூமீஸ்வரர் தோன்றி கலைநுட்பத்துடன் கூடிய பெரிய பஞ்சலோக நடராஜர் சிலை ஒன்றை அமைக்கும்படி கூறினார்.
அதையடுத்து, நல்ல அழகிய நடராஜர் சிலை அமைத்திட மன்னன் தனது ஆஸ்தான கலைஞர்களிடம் கூறினான்.
கேட்காதே !! நினைத்தற்கு மேலாக !! நினைத்து கூட கற்பனை செய்யாத !!
பெற்றால் தீர்ந்து போகாதா !!
என்றும் எப்போதும் நிலைத்திருக்கும் !!
பிறருக்கு கொடுத்தாலும் குறையாத !!
புரிதல் !! பக்குவம் !! தெளிவு !! என்று பெற்று ...
என்ன பெற்றோம் என்று தெரியாத வண்ணம் அகத்தே ஓர் அமைதி !!
வார்த்தைகள் அற்ற உணர்வு !!
சொல்லற்ற மௌனம் !!
எண்ணமற்ற நிர்வாணம் !!
நான் இப்படி என்று நம்மை வியக்கும் மாற்றம் !!
இனி வாழ்வில் எதிர்கொள்ளும் போது அதை நம் கையாளும் விதத்தில் !! முன்பு இல்லாத அணுகுமுறை !! பொறுமை !! நிதானம் !! போன்ற வெளிப்பாடுகள் ..
#துலாமை_நேர்_நிறுத்திய#அமர்நீதி_நாயனார் #சைவ_சமயம்
அமர்நீதி நாயனார், சோழவள நாட்டில் பழையாறை என்ற பகுதியில் பிறந்தவர். வணிக குலத்தில் பிறந்தவர். சிவ பக்தியில் திளைத்தவர். பொன், நவரத்தினங்கள், சிறந்த பட்டு,
பருத்தி ஆடை போன்றவைகளை எந்த பகுதியில் சிறப்பாக விளையுமோ அந்தப் பகுதிகளுக்கே சென்று வாங்கி வந்து முறையான விலையில் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் செல்வத்தில் இறைவனுக்கும், அவர்களின் அடியவர்களுக்கும் தொண்டுகள் புரிந்துவந்தார்.
சிவனடியார்களுக்கு துறவிகள் அரைஞாணுக்கு பதிலாக கட்டும் கீழாடை மற்றும் கோவணம் முதலானவற்றை வழங்கி வந்தார். சிவனடியாருக்குச் செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார்.
பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்...
அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...
பாடல்
வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!
பாடல் விளக்கம்:
எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்... எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.... எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்....