M.SivaRajan Profile picture
Jul 15 27 tweets 9 min read
🌹#ஆடி_மாத_பிறப்பு🌹

தக்ஷிணாயன புண்ணிய கால பிறப்பு சூரியன் தனது பாதையை தென் புறத்தை நோக்கி செலுத்த ஆரம்பிக்கும் நாள்.

தட்சிணாயன புண்ணிய காலம்

வடக்கு கிழக்கு திசையில் இருந்து சூரியனின் தென் கிழக்குப்பயணத்தை, தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று குறிப்பிடுவர்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சூரியன் தென் பகுதியுலும் வட பகுதிலும் வானில் காணப்படுவதே இந்த பக்க்ஷ மாறுதல் எனப்படுவது.

இன்றையில் இருந்து ஆறுமாதங்கள் “பிதுர் பக்ஷம் ” என அழைக்கப்படுகிற புண்ணிய மாதங்கள்
இன்று சூரியன் தெற்கு பகுதியான “பிதுர் உலகின் ” பக்கமாக பிரயாணத்தை தொடங்குவதால்! தென் புலத்தான் என்று யமனுக்கு பெயர்! அந்த உலகை தனது கதிர்க்காளால் சகதியூட்ட போக்கிற சூரியனை இன்று வழிபாட்டு நமது உடல் செயல் மற்றும் சுகங்களை அளிக்கும் பித்துர்களை வணங்கி போற்றுவோம்!
இந்த ஆறுமாதங்களில் நிறைய இறை வழிப்பாட்டு உற்சவங்கள் நடைபெறும் ஒவ்வொரு மாதங்களிலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு ! இந்த தக்ஷிணாயனதில் “சாதுர் மாச்யம் ” எனப்படும் நான்கு மாதங்களில் இந்த இறை வழிபாட்டு திருவிழாக்களும் நிர்ணயக்கப்பட்டு இருக்கின்றன .
இந்த நான்கு மாதங்களில் சன்யாசிகள் “சதுர்மாஸ்ய சங்கல்பம் ” எடுத்துகொண்டு இருப்பார்கள் , சன்யாசிகள் பிதுர் உலகில் , வாரிசு இல்லாத , மிருகங்கள் மற்றும் தாவர பல வித உயிர் இனங்களுக்காக ..

இறைவனை வேண்டி தவம் இருக்கும் மாதங்கள் இவை .
நமது பிதுர்களையும் அவர்களுக்கு மேலான தெய்வங்களையும் வணங்கும் நான்கு மாதங்கள் ஆரம்பித்து விட்டன! ஆஷாட (ஆடி ) மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கி கார்த்திகை மாதம் வளர் பிறை ஏகாதசி அன்று முடியும் வரை இந்த அனைத்து திருவிழாக்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன ..
தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதம் ஆடி…!

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை.
நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

தட்சிணாயன காலத்தில் பகலை விட இரவுப் பொழுது கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
குளிர்ச்சியான காலமாகவும் தட்சிணாயனம் கருதப்படுகிறது.

எனவே அதன் தொடக்க நாளான ஆடி மாதம் முதல் நாளன்று வீடுகளில் தேங்காய்ப்பால் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம். ஆடி மாதம் முதல் நாளில் புதுமணத் தம்பதியரை மாமனார் இல்லத்துக்கு அழைத்து,
அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் தேங்காய்ப்பால் வழங்கும் வழக்கமும் உண்டு.பொதுவாக, காலைப் பொழுதை விட மாலைப் பொழுது விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அவ்வாறே, தேவர்களின் மாலைப் பொழுது தட்சிணாயன காலத்தில் வருவதால்,
பெரும்பாலான பண்டிகைகள் தட்சிணாயன காலத்தில் இருப்பதைக் காணலாம்.

ஆடி மாதத்திலே ஆடிப் பூரம், ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், வரலட்சுமி விரதம் ஆகியவை எல்லாம் மிகவும் விசேஷமானவை.

குறிப்பாக அம்பிகை மகாலட்சுமி போன்ற பெண் தெய்வங்களுக்குரிய மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது.
அதைத் தொடர்ந்து ஆவணி மாதத்தில், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, கந்த சஷ்டி, மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்
என இப்படிப் பலப்பல முக்கியமான பண்டிகைகள் யாவும் தட்சிணாயனக் காலத்துக்குள் வருவதைக் காணலாம்.

வேதம் பயிலத் தொடங்குதலாகிய உபாகர்மாவும், காயத்ரி ஜபமும் தட்சிணாயன காலத்தில் ஆவணி அவிட்டத்தை ஒட்டி அனுஷ்டிக்கப்படுகின்றன.
பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதற்கு உகந்த காலமான மகாளய பட்சமும் தட்சிணாயன காலத்தில் புரட்டாசி மாதத்தில் வருவதைக் காண்கிறோம்.

புரட்டாசி சனிக்கிழமைகள் திருமலையப்பனுக்கு மிகவும் உகந்த நாட்களாக இருப்பதையும் காண்கிறோம்
தேவர்களின் இரவு பொழுதான தட்சிணாயனத்தின் கடைசி மாதமான மார்கழி தேவர்களின் பகலுக்கு முந்தைய காலமான பிரம்ம முகூர்த்த காலம் (பின்மாலைப் பொழுது) ஆகும்.

பிரம்ம முகூர்த்தம் இறைவழிபாட்டுக்கு உகந்த காலமாக இருப்பதால் மார்கழி மாதம் முழுக்க முழுக்க இறைவழிபாட்டுக்கு என்றே
அர்ப்பணிக்கபடுகிறது
உத்தராயண, தட்சிணாயன காலங்களுக்கு அதிபதிகளான தேவர்கள் உண்டு. அந்த தேவர்களுக்கென்று தனி உலகங்களும் இருப்பதாகச் சாத்திரங்கள் சொல்கின்றன. பகவத் கீதை எட்டாம் அத்தியாயம் இருபத்து நான்காவது ஸ்லோகத்தில்,
அக்னிர்ஜ்யோதிர: அஹச்சுக்ல:
ஷண்மாஸா உத்தராயணம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி
ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா:
என்று கண்ணன் குறிப்பிடுகிறான்.
ஒளியின் லோகம், பகல் தேவதையின் லோகம், வளர்பிறை தேவதையின் லோகம், உத்தராயண தேவதையின் லோகம் ஆகியவற்றைக் கடந்து செல்லும் பிரம்ம ஞானிகள் பரப்பிரம்மத்தை அடைகிறார்கள்.
அவர்கள் மீண்டும் வந்து பூமியில் பிறப்பதில்லை.

அடுத்து இருபத்தைந்தாம் ஸ்லோகத்தில்,
“தூமோ ராத்ரி: ததா க்ருஷ்ண:

ஷண்மாஸா தக்ஷிணாயனம்
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதி:
யோகீ ப்ராப்ய நிவர்ததே”
என்கிறான் கண்ணன். அதாவது,
புண்ணியம் செய்த நல்லோர்கள்
புகையின் லோகம், இரவு தேவதையின் லோகம், தேய்பிறை தேவதையின் லோகம், தட்சிணாயன தேவதையின் லோகம் ஆகியவற்றைக் கடந்து சென்று சந்திர சம்பந்தமான ஒளியை அடைந்து, மீண்டும் பூமியில் வந்து பிறக்கிறார்கள்.இப்படி மீட்சியில்லா வைகுண்டத்தை அடைபவர் உத்தராயண
தேவதையின் உலகம் வாயிலாகவும், புண்ணியம் செய்து நல்லுலகம் சென்று மீள்பவர்கள் தட்சிணாயன தேவதையின் உலகம் வாயிலாகவும் பயணிப்பதை இந்த கீதை ஸ்லோகங்கள் மூலம் அறிய முடிகிறது.

சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு
உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம். உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும் தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும்.அதில் மிகவும் பிரசித்தமான உத்தராயண தட்சிணாயன வாசல்களைக் கொண்ட திருத்தலம் திருக்குடந்தை என்னும் கும்பகோணம்.
கும்பகோணத்துக்கு ‘பாஸ்கர க்ஷேத்திரம்’ (சூரியன் வழிபடும் க்ஷேத்திரம்) என்று பெயர். குடந்தையில் கோவில் கொண்டுள்ள சார்ங்கபாணிப் பெருமாளையும் சக்கரபாணிப் பெருமாளையும் சூரியன் தினந்தோறும் வழிபடுகிறார்.
அவர் வந்து வழிபாடு செய்து விட்டுச் செல்வதற்கு ஏதுவாக, உத்தராயண காலத்தில் சார்ங்கபாணி, சக்கரபாணி சுவாமி திருக்கோவில்களில் கருவறைகளின் உத்தராயண வாசல் திறந்திருக்கும்.
சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் அக்காலத்தில் வடக்கு வாசலான உத்தராயண வாசல் வழியே வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வார்.

அவ்வாறே தட்சிணாயன காலத்தில் தெற்கு நோக்கிப் பயணிக்கும் சூரியன், தெற்கு வாசலான தட்சிணாயன வாசல் வழியே வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வார்.
இன்றும் இந்த இரண்டு திருக்கோவில்களிலும் உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் நாளில் உத்தராயண வாசல் திறக்கும் நிகழ்வும், தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் நாளில் தட்சிணாயன வாசல் திறக்கும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடப்பதைக் காணலாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jul 15
#சாளக்கிராமம்_சிறப்புகள்

சாளக்கிராமம் உள்ள வீடு பாடல் பெற்ற தலத்தின் சிறப்பினைக் கொண்ட புண்ய க்ஷேத்ரம்.

12 சாளக்கிராமம் கொண்ட வீடு ஒரு திவ்ய தேசம்
ஆகும்.

அங்கு லக்ஷ்மி நித்ய வாசம் செய்கிறாள்.

மேலும் பாவங்கள் குறைந்து அழிந்து விடும்.
மஹாபெரியவா ஒருமுறை,

"எங்கு சாளக்கிராம பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஒரு குறையும் வருவதில்லை.

அதைச்சுற்றி சுமார் 2km தூரத்திற்குள் உயிர் விடும் எந்த உயிரினமும், அதன் கடைசி நேரத்தில் அந்த புண்ணிய பூஜையின் அதிர்வுகளை பெற்று...
வாசனைகளும் , வினைகளும் குறைந்து சாந்தியாக, அமைதியடைந்து அதனால் அதன் மறுபிறவி மிக சிறந்ததாக அமையப் பெறுகின்றன " என்று கூறி இருக்கிறார் .

மேலும் அந்த
வீட்டிலுள்ளோர்கள் கொடிய மரணம் , மோசமான விபத்துகள் , துர்மரணம் போன்றவை சாளக்கிராம பூஜை நடைபெறும் வீட்டில் நிகழ்வதில்லை.
Read 12 tweets
Jul 15
#ஓம்_நமசிவாய

#பஞ்சாட்சர_மந்திரம்

#பஞ்சாட்சர_மகிமை

🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஒரு முறை நீ சொல்லுவாய்
ஓங்கார ஓசை தினம் கேட்கும் என்பது உண்மையே

🌹 🌿 ஓம் நமசிவாய என்று இரு முறை நீ சொல்லுவாய்
இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் கிட்டும் நிச்சயம்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று மூன்று முறை சொல்லுவாய்
முக்கண்ணன் மனமகிழ்ந்து முக்தி தருவார் திண்ணமே

🌹 🌿 ஓம் நமசிவாய என்று நான்கு முறை சொல்லுவாய்
நான்குவேதம் படித்த பலன் உன்னைச் சேரும் உண்மையே
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஐந்து முறை சொல்லுவாய்
ஐங்கரனும் அருகில் வந்து ஆசி கூறிச் செல்லுவார்

🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஆறு முறை சொல்லுவாய்
அறுமுகனும் திருவருளை தேடி வந்து தந்திடுவார்
Read 6 tweets
Jul 15
*"பிறக்கப் போகிறது ஆடி மாதம்" -17.07 2022-. ஆடி மாதம் பிறந்தாலே நமக்கு பண்டிகைகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கி விடும்.

ஆடி பிறக்கின்ற முதல் நாளே ஆடிப்பண்டிகை நாள் தான்.
1. *கடக சூரியன்*

ஆடி மாதம் முழுவதும் சூரிய பகவான் சந்திர பகவான் ராசியான கடக ராசியில் சஞ்சரிப்பார்.
இது கடக மாதம் என்றும் பெயர் பெறும்.
2.*தக்ஷிணாயன புண்ணிய காலம்*

ஆடி மாதம் முதல் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது.

ஆடி முதல் மார்கழி வரையிலுமுள்ள ஆறு மாதங்களும் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆகும்.
Read 29 tweets
Jul 14
#நவ_பாஷாண_முருகன்

*பழனிக்கு அடுத்ததாக நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அதிசய பூம்பாறை வேலப்பர் ஆலயம்.*

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே இருக்கும் பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் ஆலயம்.
10 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் போகர் அவர்கள் சீனாவிலிருந்து திரும்பினார்.

அதாவது பழனி ஆண்டவர் சிலையை செய்து முடித்த பின் அவர் சீனா சென்றார்,

அங்கிருந்து திரும்பிய பிறகு அவர் மற்றொருநவபாசன சிலையை செய்தார்.
அந்த திருச்சிலை பழனிக்கும் பூம்பாறைக்கும் ( இன்று அது மேற்கத்திய மலைகள் என அழைக்கப்படுகிறது) நடுவே அமைந்தது.

இந்த இடத்தை யானை கஜம் ( போகர் காடு) என்றும் அழைக்கின்றனர்.

கோவிலில் உள்ள கல்வெட்டுக்களின் படி இந்த கோவில் சேர சாம்ராஜ்ஜியத்தால் கட்டப்பட்டது.
Read 9 tweets
Jul 14
நினைத்ததை நிறைவேற்றும் #துளசி_பூஜை :

அலங்கார பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி.

திருமாலின் திருமார்பில், மாலையாக மகிழ்வோடு காட்சி தருபவள் துளசி தேவி.

துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும்.
துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன் என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார்.

*துளசி பூஜை :*

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அன்று துளசித்தாய்க்கு விரதமிருந்து பூஜை செய்வது மிகுந்த பலனை தரும்.

துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்கு சமமானதாக கருதப்படுகிறது.
Read 6 tweets
Jul 14
#பைரவர்_வழிபாடு

#ஜோதிட_பரிகாரம்

உங்கள் இராசிக்கு பைரவரை வணங்கும் முறை

கடுமையான கிரக தோஷம் உள்ளவர்கள் பைரவ வழிபாடு செய்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

எவராலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பைரவர் தீர்த்து வைப்பார்.
பைரவரை ஒவ்வொரு இராசியினரும் எப்படி வழிபட வேண்டும்? என்பதற்கு வழிமுறை உள்ளது.

இவ்வாறாக இராசிக்கு ஏற்ப பைரவரை வணங்கினால் தோஷங்கள் தீர்ந்து, நல்வாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு இராசியினரும், ஒவ்வொரு அம்சங்களை பார்த்து வழிபடுவது மிகவும் நல்லது.
மேஷ இராசிக்காரர்கள் பைரவருடைய உடலில் சிரசு எனப்படும் தலைப்பகுதியை பார்த்து வணங்குவது தோஷத்தை போக்கும்.

ரிஷப இராசிக்காரர்கள் கழுத்து பகுதியையும்,

மிதுன இராசிக்காரர்கள் தோல் பகுதியையும்,

கடக இராசிக்காரர்கள் மார்பையும்,

சிம்ம இராசிக்காரர்கள் வயிற்றுப் பகுதியையும்,
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(