இன்று நம் நிறுவனத்தில் பணியாற்றும் ஓர் ஊழியர் (பெண்) எப்போதும் ருத்ராச்சம் அணிந்து இருப்பவர், அவர்கள் சொந்தத்தில் ஓர் மரணம், காலையில் விடுமுறை வேண்டும் என்று தகவல் சொல்ல வந்தபோது
என்னை எல்லோரும் ருத்ராச்சதை கழட்டும்படி தீட்டுகிறார்கள், பிணத்தை எடுத்த பின் வேண்டுமானால் போட்டு கொள் என்று சொல்கிறார்கள் என்று சொல்ல !!
நம் வாயோ சும்மா இருக்குமா ??
இறந்தவருக்கு மரியாதை செலுத்ததானே போகிறாய் ஆமாம், நீ இப்படியே போய் நமச்சிவாய மந்திரம் சொல்லிக்கொண்டே அங்கே இரு !
எத்தனையோ லட்சம் பணம் செலவு செய்து இறுதி மரியாதை செய்வது வேண்டுமானால் ஊருக்காக இருக்கும்..
ஆனால் நீ ஒரு ஆள் மட்டுமே அந்த அலைபாயும் இறந்த ஆன்மா இறைவன் அடி நிழலில் இளைப்பாற துணை புரிவாய் என்று சொன்னேன் !!
நீங்கள் எவ்வளவு பணம் செலவு செய்து ஐஸ் பெட்டியில் பிணத்தை வைத்து, பெரிய பெரிய மாலைகள் கொண்டு அதை அலங்கரித்தாலும் ??
அது எல்லாம் நான் அந்த இழவுக்கு அதை செய்தேன் இதை செய்தேன் என்று உங்களை மட்டுமே முன்னிறுத்தி ??
நான் செத்தால் எனக்கு இப்படி மாலை வேண்டும் என்று ஊருக்கு அறிவிக்கவே பயன்படும் !!
அதுவே அந்த கூட்டில் வாழ்ந்து பிரிந்த ஆன்மா தன் உடலில் மீண்டும் புகுந்து சிறிது காலம் வாழ்வேனா ?? என்று ஏங்கி திரியும் போது !!
ருத்ராச்சம் அணிந்து ஒளியுடல் கொண்டு ஓர் உயிர் தமக்காக சிவநாமம் ஜெபித்து கொண்டு இருக்க அந்த உடலில் மீண்டும் புக நினைக்கும் ஆன்மா
ஆதமநாதனை உணரும் என்றும் உறவு அவனே என்றும் நீங்கதவனும் அவனே எல்லோரும் என் உடலை தூக்கி போட்டு விட்டு திரும்பி கூட பார்க்க அஞ்சி விலகி செல்லும் வேளையில் ?
அஞ்சேல் என்று அருளி !! என் உடல் எரித்த சாம்பலை கூட பூசி அலைபாயும் என் ஆன்மாவை அரவணைத்து ஏற்க கூட ஒருவனே இருக்கிறான் என்ற மெய் உணர்ந்து,
இனி இப்படி ஓர் பிறவியே வேண்டாம் என்று அந்த ஆன்மா சரணடைய, மீண்டும் பிறவாநிலை எய்த,
உனக்காக ஒருவன் அரவணைத்து அருள இருக்கிறான் என்று மெய்யை அந்த உடல்விட்ட ஆன்மாவுக்கு அறிவிக்க கூட ருத்ராச்சம் அணிந்து சிவநாமம் சொல்லும் ஓர் உயிர் பயன்படும் !!
இந்த உலகத்திலேயே தீட்டு ஆனா இடம் என்று அறிவுத்து அங்கு சென்று வந்தால் கூட குளித்துவிட்டு தான் வீட்டுக்கு வரவேண்டும் என்று அஞ்சும் சுடுகாட்டில், பரிதவிக்கும் ஆன்மாக்களுக்கு கூட அராவனைத்து அருள் காத்திருக்கும் நம் சிவத்துக்கு எதுடா தீட்டு !!
இனி மரண விட்டுக்கு சென்றால் நீங்கள் எப்போதும் ருத்ராச்சம் தரித்தபடியே செல்லுங்கள், முடிந்தால் திருவாசம் தேவாரம் பாடுங்கள் !! இல்லை சிவநாமம் சொல்லுங்கள் .....
அதைவிட ஓர் சிறந்த மரியாதையை அந்த இறந்த ஆன்மாவுக்கு யாரும் செய்ய முடியாது !! இதுவே நிதர்சனம் ........
இதை விட ஓர் சிறந்த சிவதொண்டும் இல்லை ....
ஏதோ இவன் அனுபவித்த வரை, அனுபவிக்க அனுபவபடுத்தியவனால் ....
மேலோட்டமாக பார்க்கும்போது எங்கோ எதையோ நாடி திரிபவனை தான்பால் ஈர்த்து ஆண்ட பெருமானே என்றே பொருள்கொள்கிறோம் ?? ஆனால் அவ்வரிகளை உட்கொண்டு அனுபவிக்க உற்றவன் உணர்வித்த பொருளே இப்பதிவு !!
பிற பொருள் !! உயிர் !! மீது உள்ள ஈர்ப்பே இன்றுவரை வாழ வைக்கிறது !! ஈர்ப்புக்கு உட்படும் பொருளும் ! உயிரும் ! மாறலாம் ஆனால் ஈர்ப்பு என்று ஒன்று எதையோ ! எதைநாடியோ !! நம்மை பயணிக்கவைத்து கொண்டே இருக்கு ! இருக்கும் !!
நமது உடலில் உயிர் என்ற ஒன்றின் ஈர்ப்பாலே உடல் உடலாகவே இருக்கிறது !! அந்த ஈர்ப்பின் பயனாக உடலின் உள் நடக்கும் இயக்கமும் !! வெளியே நடக்கும் இயக்கமும் !!
காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது. மாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.
இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும். காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம்
#வீதி_உலாவிற்கு_வெளியே_வராத_நடராஜர் #சைவ_சமயம்
சோழவள நாட்டில் திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கோனேரிராஜபுரம் என்ற ஊரில் பூமீஸ்வரர் கோயிலில் இருக்கும் நடராஜர் ஆறடி உயரத்தில், மிக அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிறார்.
• இங்குள்ள நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம் மார்பில் மருவு உடலில் கொழுப்புக் கட்டி கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் நகம் போன்றவைகள் இருப்பது அதிசயமாகும்.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக்கூத்தராகிய நடராஜப்
பெருமான் காண்போரை கவர்ந்திழுக்கும் சுந்தர நடராஜராகவும்,
உலகிலேயே மிகப்பெரிய நடராஜராகவும் விளங்குகிறார்.
ஒரு சமயம் சோழ மன்னர் ஒருவரது கனவில் பூமீஸ்வரர் தோன்றி கலைநுட்பத்துடன் கூடிய பெரிய பஞ்சலோக நடராஜர் சிலை ஒன்றை அமைக்கும்படி கூறினார்.
அதையடுத்து, நல்ல அழகிய நடராஜர் சிலை அமைத்திட மன்னன் தனது ஆஸ்தான கலைஞர்களிடம் கூறினான்.
கேட்காதே !! நினைத்தற்கு மேலாக !! நினைத்து கூட கற்பனை செய்யாத !!
பெற்றால் தீர்ந்து போகாதா !!
என்றும் எப்போதும் நிலைத்திருக்கும் !!
பிறருக்கு கொடுத்தாலும் குறையாத !!
புரிதல் !! பக்குவம் !! தெளிவு !! என்று பெற்று ...
என்ன பெற்றோம் என்று தெரியாத வண்ணம் அகத்தே ஓர் அமைதி !!
வார்த்தைகள் அற்ற உணர்வு !!
சொல்லற்ற மௌனம் !!
எண்ணமற்ற நிர்வாணம் !!
நான் இப்படி என்று நம்மை வியக்கும் மாற்றம் !!
இனி வாழ்வில் எதிர்கொள்ளும் போது அதை நம் கையாளும் விதத்தில் !! முன்பு இல்லாத அணுகுமுறை !! பொறுமை !! நிதானம் !! போன்ற வெளிப்பாடுகள் ..
#துலாமை_நேர்_நிறுத்திய#அமர்நீதி_நாயனார் #சைவ_சமயம்
அமர்நீதி நாயனார், சோழவள நாட்டில் பழையாறை என்ற பகுதியில் பிறந்தவர். வணிக குலத்தில் பிறந்தவர். சிவ பக்தியில் திளைத்தவர். பொன், நவரத்தினங்கள், சிறந்த பட்டு,
பருத்தி ஆடை போன்றவைகளை எந்த பகுதியில் சிறப்பாக விளையுமோ அந்தப் பகுதிகளுக்கே சென்று வாங்கி வந்து முறையான விலையில் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் செல்வத்தில் இறைவனுக்கும், அவர்களின் அடியவர்களுக்கும் தொண்டுகள் புரிந்துவந்தார்.
சிவனடியார்களுக்கு துறவிகள் அரைஞாணுக்கு பதிலாக கட்டும் கீழாடை மற்றும் கோவணம் முதலானவற்றை வழங்கி வந்தார். சிவனடியாருக்குச் செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார்.
பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்...
அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...
பாடல்
வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!
பாடல் விளக்கம்:
எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்... எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.... எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்....