தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.
போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.
#பாதீடு என்றால் #பங்கிடுகை என்பது பொருள். செல்வத்தைக் கொள்ளையிடல், உலகெங்கும் வீரநிலைக் காலத்தில் காணப்படும் போர் நிகழ்வாகும்.
கொள்ளையிடப்பட்ட செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளுதலும் (#பாதீடு), கொடையாக வழங்குதலும் உண்டு என்பதை சங்க இலக்கிய செய்யுட்கள் நமக்கு எடுத்துக்காட்டும்.
கிட்டும் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வது கொள்ளைப் போர்களின் நியதி.
இப்பாதீடு குருதித் தொடர்புடையோர் இடம்பெறும் சபையில் நிகழும்.
கொள்ளைப் பொருளைப் பாதீடு செய்யும் பணியைக்குழுத் தலைவன் (அ) முதியவர் ஏற்பர்.
தனக்கு நல்ல பங்குகிட்டவேண்டி வடபுலத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய பங்கைத் தீர்மானிக்கும் (#பாகம், #அம்சம்) தெய்வங்களை வழிபட்டனர்.
இதுவே காலப்போக்கில் தனக்குரிய பங்கு தலைவிதியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதும் மரபாக மாற்றமுற்றது என அறியலாம்.
#பால் எனும் தமிழ்ச்சொல் குறித்த ஆய்வில் கைலாசபதியும் (1986) இக்கருத்தையே எதிரொலிக்கிறார்.
‘அணங்கறி கழங்கு' எனும் அடிகள், பகுத்தலில் கழங்கு பயன்படுத்தப்பட்டதால்...
அது தெய்வத்தன்மை பெற்றதாக இச்செய்தி அறிவிக்கின்றது.
கால்நடைகள், #ஆயர் சமூகத்தில் கூட்டுரிமைக்கு உரியவைகளாதலால் இம்மக்களுக்கு #பொதுவர் என்ற பெயரும் உண்டு.
சமூகத்தின் மையமாகச் செயல்பட்ட ஊரின் மன்றத்தின் காவல் அரணில் கூட்டுரிமைக்குரிய கால்நடைகள் பாதுகாக்கப்பட்டன.
எனவே, கால்நடைகளுக்கு #மந்தை என்ற பெயரும் உண்டு. இதன் வேர்ச்சொல் மன்றத்திலிருந்து பிறந்தது.
#மாடு என்றாலே #செல்வம் என்று பொருள். #செல்வம் என்றாலே #பகிர்ந்து கொள்ளப்படுவது எனும் மரபு தொல்குடிச் சமூகங்களில் கடைபிடிக்கப்பட்டதாலேயே...
கால்நடைகளும் சமூகத்திற்கு பொதுவானதாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஆநிரை கவர்தலில் கொள்ளையிடப்பட்ட கால்நடைகளும், பொதுவாக #பாதீடு செய்யப்பட்டது.
புலவர்களும் தாம் பெற்ற பரிசிலை தம் சுற்றத்தாரோடு பகிர்ந்து கொண்டனர் என்பதை மோசிகீரனாரின் பாடல் நமக்கு விளக்குகிறது.
#சீறூர் மன்னன் பயிர்ச்சாகுபடியில் பெற்ற 'வரகு தானியம்' முழுமையையும் சுற்றத்திற்கும்,
இரவலர்க்கும் பகிர்ந்தளித்துவிட்ட நிலையில் மேலும், இரவலர்க்கு அளித்தல் வேண்டி குறியெதிர்ப்பை முறையில் 'வரகு கடன்' பெற்ற செய்தியும் உண்டு.
கொள்ளைப் பொருள், உணவு தானியங்கள் மட்டுமல்லாது கடும் வறட்சி நிலையில், நீரையும் முறை முறையாக பகுத்துண்ணும் நிலைக்கு #எயினர் தள்ளப்பட்டனர்.
உழவரும், பரதவரும் உற்பத்தியை இரவலர்க்குப் பகிர்ந்தளித்தனர், எனும் செய்தி #பகுத்தல் மரபைக் குறிப்பதாகும்.
பாரியின் பறம்புமலையில் வரகு, திணை, அவரை பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட நிகழ்வைக்கூறும் பாடற்செய்தியைக் கூட்டுழைப்பின் போது நிகழ்ந்த கூட்டுண்ணலாகக் கருதலாம்.
இப்பாடலில் நிலத்தில் புதைக்கப்பட்ட முற்றிய தேறல் புல்வேயக் குரம்பைக் குடிதோறும் பகிர்ந்து உண்டதாக கூறப்படுகிறது.
சங்க இலக்கியப் பாடல்களில் #கூட்டுண்ணல் மரபு அரிதாகவே காணப்படுகின்றது.
ஏனல் உழவர் மென்றினை நுவணை முறை முறையாகப் பகுத்துண்டனர்.
#எயினர் கொள்ளைப் பொருளைத் தாம் வசித்த ‘குறும்பில் கோள்முறைப் பகுத்தனர்'.
ஆகோளில் கவர்ந்து கொணரப்பட்ட கால்நடைகள் வீரர்களிடையே #பாதீடு செய்யப்பட்டது.
மீன் வேட்டையில் கிடைத்த மீன்களைச் சிறுகுடிப்பாக்கத்தில் #பரதவர் பகிர்ந்து கொண்டனர்.
பரதவரால் சேகரிக்கப்பட்ட முத்துக்களும் #பாதீடு செய்யப்பட்டன.
#எயினர் குடியிருப்பில் வீட்டு முன்றிலில் உடும்பின் தசை கூறு செய்யப்பட்டது.
- நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமான சான்றுகளாக விளங்கும் #தமிழி எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட 'சமணர் படுக்கைகள்' பெருவழிகளிலேயே அமைந்துள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பண்டைய வணிகர்கள் பண்டு பெரும்பாலும் சமண சமயத்தைப் பின்பற்றியுள்ளனர்.
சமண முனிவர்களும் வணிகர்களை நெறிப்படுத்தியுள்ளனர்.
அதன் நன்றி நிமித்தமாக வணிகர்கள் தாங்கள் வணிகத்திற்காக செல்லும் நகரங்களில் அமைந்த மலைப்பகுதி குகைத்தளங்களில்,
சமண முனிவர்களுக்கு படுக்கைகளை வெட்டிக் கொடுத்து அச்செய்திகளை கல்வெட்டுச் சான்றுகளாக்கியுள்ளனர்.
'வெள்அறை நிகமதோர்' #மாங்குளம் சமணக்குகைக் கல்வெட்டில், #நிகமம் என்பது வணிகக் குழுவினைக் குறிக்கும் சொல்லாகும்.
சிலப்பதிகாரத்தில் காவிரிக்கரையோரமே ஒரு பெருவழி சென்று, #உறையூர் அடைந்து, சோழநாட்டு எல்லையில் மூன்று பிரிவாகப் பிரிந்து, #கொடும்பாளுர் வழியாக #மதுரை அடைந்துள்ளது.
பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.
#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.
இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.
இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.
பண்டைக்காலத்தில் நிலவழிகள் கால்நடை மேய்ப்பர்களால் உருவாக்கம் பெற்றன.
மேய்ச்சலுக்காக நீர் நிலை தேடியும், புல்வெளி தேடியும் இடம்பெயரும் இனக்குழுக்கள்,
தங்கள் கால்நடைகளுடன் சென்று வந்த பாதைகளே பின்னாளில் தரைவழிகளாக இனங்காணப்பட்டன.