#அறிவோம்_மகான்கள்#அம்மாளுஅம்மாள்
கும்பகோணத்தில் கன்னட மாத்வ வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் 1906ல் அம்மாளு அம்மாள் பிறந்தார். அக்கால வழக்கப்படி குழந்தையாக இருந்த போதே திருமணம் நடந்தது. ஆனால் ஒரு சில வருடங்களில் கணவனான சிறுவன் இறந்து விட்டான். அவர் குழந்தை விதவை ஆகிவிட்டார்.
அந்தக்கால விதவைகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளை எழுத்தால் விவரிக்க முடியாது. சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, உருவத்தில் சிதைக்கப்பட்டு, உள்ளத்தில் நொறுக்கப்பட்டு, சமூகத்தால் அபசகுணமாக வெறுக்கப்பட்டு உலகத்தால் சபிக்கப்பட்ட ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தார். நரசிம்மனிடம்,
நாராயணனிடம், கிருஷ்ணனிடம் அவர் கொண்ட பக்தி ஒன்றே அவரை உயிர்வாழ வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு சமயம் தாங்க முடியாத துன்பத்தால் தற்கொலை செய்து கொள்ளச் சென்றார். பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி, பகவானே, என்னை ஏற்றுக் கொள் என்று குதிக்கும்போது, நில் என்று ஒரு குரல்
தடுத்தது. கண்ணை திறந்தார். உக்கிரமான நரசிம்மன் அவர் எதிரே சாந்த ஸ்வரூபியாக நின்றிருந்தார். "எதற்காக இந்த தற்கொலை முயற்சி? உன் கடைசி நிமிஷம் வரை உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க நிழலும் தான் கிடைக்க போகிறதே” என்றார் நரசிம்ம மூர்த்தி. ஆனால் அம்மாளு அம்மாள் அவரிடம் ஒரு வரம்
கேட்டார். "எனக்கு பசியே இருக்கக் கூடாது."
"அம்மாளு இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது. போதுமா” என்று தெய்வம் வரமளித்தது. அன்று முதல் ஒரு நாளைக்கு ஒருமுறை ஒரு டம்பளர் மோர், பால், ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி அன்று அதுவும்
கிடையாது. உற்சாகத்தோடு இருந்தார். கிருஷ்ண பஜனையில் நாள் தோறும் அற்புதமாக தன்னை மறந்த நிலையில் கடைசி மூச்சு பிரியும் வரை ஈடுபட்டார். இளம் விதைவையாக வாழ்ந்த அம்மாளு அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான். "நீ பண்டரிபுரம் வாயேன்" என்றான் பண்டரிநாதன். இந்த குரல்
அவரை மறுநாள் பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று தன் அம்மாவை துணைக்கு அழைத்தார். ஆனால் அம்மா கூட வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் தம்புராவோடும் பண்டரிபுரம் சென்றவர் பல வருடங்கள் அங்கேயே தங்கிவிட்டார். கோவிலை பெருக்கி, கழுவி, கோலமிட்டார்.
மலர்கள் பறித்து மாலை தொடுத்தார், சூட்டினார், பாடினார். நிறைய பக்ஷணங்கள், உணவு வகைகள் சமைத்தார். எல்லாம் குமுட்டி அடுப்பில் தான். பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தார். எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தார். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவர் உட்கொள்ளவில்லை. அந்த ஊர்
ராணி, அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து விட்டார் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்கள் சரமாரியாக அவர் வாயிலிருந்து பிறந்தன. எந்த க்ஷேத்ரம் சென்றாலும் அந்த ஸ்தல மஹிமை
அப்படியே பாடலில் வந்து நிற்கும். அவர் அந்த க்ஷேத்ரங்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை, ஒன்றுமே தெரியாது, என்றாலும் இந்த அதிசயம் பல க்ஷேத்ரங்களில் நடந்திருக்கிறது! இன்னொரு அதிசயம் நடந்துள்ளது. ஒரு பெரியவர் மரணத் தருவாயில் இருக்கும்போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள்.
அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தன்னை மறந்த நிலையில் கண்களை மூடி பாடினார். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவருக்கு தெரிந்தது. அதை பாடினார். அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராம நாம உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது.
பிறகு தான் தெரிந்தது! அம்மாளு அம்மாள் நரசிம்மனை மறப்பாரா? தன் உயிரைக் காத்து புதிய பாதை அமைத்துக் கொடுத்த நரசிம்மனுக்கு ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடுவார். அன்று 108 வகை பிரசாதங்கள், பக்ஷணங்களை ஆசையோடு தயாரித்து, வழக்கமான உணவும் இதைத் தவிர சமைத்து, இந்தா நரசிம்மா வா, வந்து இதை
ஏற்றுக்கொள் என்று அர்பணிப்பார். அன்று வெகு அருமையான கீர்த்தனங்களை பொழிவார். தானாகவே தைல தாரையாக ஆயிரக்கணக்கான ஸ்லோகங்கள், கீர்த்தனைகள் அவர் வாயிலிருந்து புறப்பட்டிருக்கிறது. #மகாபெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒரு மாத்வர், என் பெண்ணுக்கு கல்யாணம். பெரியவா
ஆசீர்வாதம் பெற வந்திருக்கிறேன் என்று வந்து வணங்கினார்.
”என்கிட்டே எதுக்கு வந்திருக்கே? மரத்தடியில் ஒரு நித்ய உபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக் கொண்ட எண்ணங்களும் நிறைவேறும்" பெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின்
மஹத்வத்தை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மஹா பெரியவா ஒரு தடவை, "அம்மாளு அம்மாள் #புரந்தரதாசர் அம்சம்" என்று கூறியிருக்கிறார். பாகவத தர்மத்தின் உதாரணமாக நித்ய பஜனை, ஆடல் பாடல் என்று அவர் வாழ்க்கை பூரணமாக கடந்தது. கிருஷ்ணனை
நேரில் கண்டார் என்பார்கள். ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு அம்மாள் தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி, தம் குழுவினருடன் இரவு
நேரக் கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு அம்மாளு அம்மாள் தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில், கீழே தாள சப்தமும், நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்நேரத்தில் யார் ஆடுவார்?
ப்ரமையோ என்றிருந்தனர். இன்னமும் சப்தம் அதிகரிக்க, நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்தபோது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார். உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர்
கேதார ராகத்தில் ‘பாலக் கடல சய்யா’ எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி, சில ஜதிகள், நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப் போன்ற, எவராலும் சாதாரணமாக ஆட முடியாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும்
பயின்று வருவதல்ல, யாராலும் பயிற்றுவிக்க முடியாததும்கூட என்று கூறி பிரமித்து நின்றனர். இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு என உணர்ச்சிவசப்பட்டனர். இவர் புரந்தர தாஸரின் அவதாரம் என்று ஒரு மனதாக புகழ்ந்தார்கள். 2002ல் மதுராபுரி ஆஸ்ரமத்தில் 94வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச
பெருமாள் தரிசனம் கிடைத்தது. அந்த கணமே "நாக்கு கால மூர்தியு நீனே" நீ தானே நாலு கால மூர்த்தி என பாடினார். அந்த நாலு கால மூர்த்திகள் யார்? விடியற்காலையில் ஸ்ரீமந் நாராயணன், காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன், அந்தி நேரத்தில் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன், இரவில் ஸ்ரீ வேணுகோபாலன், கோபிநாதன்.
பங்குனி உத்தரம் சிறந்த நாள். கௌரி சிவனை அடைந்தாள். சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். கடைசி காலங்ள் கும்பகோணத்தில் கழித்தன. வயதானாலும் கிருஷ்ணனை தூங்கப் பண்ணி, எழுப்பி, குளிப்பாட்டி, சிங்காரித்து, ஆடைகள் அணிவித்து, பாடி, உணவு சமைத்து நிவேதித்து, தாயாக பாண்டுரங்கனுக்க
சேவை செய்தவர் அம்மாளு அம்மாள். கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள் 104 வயது வாழ்ந்து 2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தார். அதற்கு சில நாட்கள் முன்பே அவரது நாவில் ஒரு பாடல் வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்தது. (பாகவதத்தில் இருந்து)
கலௌ கலு பவிஷ்யந்தி
நாராயண பராயணா: |
இந்த ஸ்லோகத்தின் பொருள், கிருதயுகம் முதலியவற்றில் வாழ்ந்தவர்கள் கலியில் பிறக்க வேண்டுமென்று ஆசைப் படுவார்கள். ஏனென்றால் திராவிட தேசத்தில் நாராயணனே அடையத்
தக்கவன் என்று பறை சாற்றும் சான்றோர்கள் கலியுகத்தில் இங்கும் அங்கும் தோன்றுவார்கள்.
எங்குத் தாமிரபரணி, கிருதமாலா ( வைகை ) பயஸ்வதி ( பாலாறு ), பெருமை மிகுந்த காவிரி, மேற்குக்கடலில் சென்று கலக்கும் பெரியாறு ஆகிய நதிகள் ஓடுகின்றனவோ அங்கு அவர்கள் தோன்றுவார்கள். இந்த ஆறுகளின் தண்ணீரைப்
பருகுகின்ற தூய மனம் படைத்தவர்கள் திருமாலிடம் அபார பக்திகொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது.
ஆகவே தான் அற்புத ஆழ்வார்கள் போல் அம்மாளு அம்மாளும் நம்மிடையே தோன்றி இருக்கிறார். அவரது குரு #ராமச்சந்திர_தீர்த்தர் சமாதி கும்பகோணம் காவிரிக்கரையில் அமரேந்திர புரத்தில் உள்ளது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
Thanks to Shri J.K. Sivan sir for this article and Smt. Uma Gururajan for the translation.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா பெரியவா கும்பகோணம் ஸ்ரீ காஞ்சி மடத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு வெகு விமரிசையாக வியாச பூஜை நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை முடிந்து, எல்லா பக்தர்களும் பெரியவா தரிசிக்க முட்டி மோதிக் கொண்டிருந்தனர். அவரின் திருக்கரங்களால் அபிஷேகத் தீர்த்தம் வழங்கிக்
கொண்டிருந்தார். வரிசையில் பக்தர்கள் வர, அதில் ஒரு பக்தரின் முறை வந்தது. பிரசாதம் தரும் போது மகான் அவரை நிமிர்ந்து பார்த்தார். பிறகு அவரிடம், "நாளை நீ வேத பாராயணத்துக்குச் சீக்கிரம் வந்துடு." என்று சொன்னார்.அவரும் மறுநாள் காலையில் மகான் இட்ட கட்டளைப்படியே வேத விற்பன்னர்களின்
அந்தப் பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பாராயணம் நடந்து கொண்டிருக்கும் வேளை, அந்த நேரத்தில் பெரியவா திடீர் விஜயம் செய்தார். வழக்கமாக இப்படி அவர் வருவதில்லை. முதல் நாள் தன்னிடம் அநுக்கிரஹம் பெற்ற குறிப்பிட்ட அந்த பக்தர், மனமுருகிப் பாராயணம் செய்வதைக் கவனித்தார். வேத
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மணி தேவியின் படுக்கையறையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அப்பொழுது ருக்மணியும் அவளது பணிப் பெண்களும் பகவானுக்கு பலவிதமான பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மணியை பார்த்து பரிகசிக்கத் துவங்கினார். தோற்றத்தில்
குணத்தில் உனக்குத் தகுதியான சீரும் சிறப்புமிக்க பல அரசர்கள் உன்னை மணக்க விரும்பினர். உண்மையில் உன் தந்தையும் சகோதரனும் உன்னை சிசுபாலனுக்கு கொடுக்க எண்ணி இருந்தனர். அப்படி இருக்க ஒரு முறை ஜராசந்தனிடம் இருந்த பயத்தால் என் ராஜியத்தை துறந்து கடலுக்கு ஓடிய என்னைப் போன்ற தகுதியற்ற
ஒருவனை கணவனாய் நீ ஏன் ஏற்றுக்கொண்டாய்? மேலும் உலக நீதிகளையும் நான் மீறுகிறேன்.
எனக்குச் சொந்தமானது எதுவும் இல்லை. நான் பரம ஏழைகளுக்கு பிரியமானவன். செல்வ சிறப்புடன் உள்ளவர்கள் என்னை போன்ற ஒருவனை பூஜிக்க மாட்டார்கள் என்று கேலி பேசினார் கிருஷ்ணர். தன் கணவருக்கு மிகப் பிரியமானவள்
#MahaPeriyava
My wife had a severe health problem. The doctor's opinion was to do a major operation and that too immediately. I admitted her in a popular nursing home in Tiruchy. The surgery was scheduled for the next day. Only me and my wife were there in the hospital. They took
her to the operation theatre. My mind was very upset with confusion and worry. I prayed to our Kuladeivam (family deity) Ezhumalaiyan (the God of the Seven Hills). The unsteadiness of mind persisted. Suddenly I remembered PeriyavaaL. I prayed to Him that after she got well, we
both would come and have darshan of Him, that only He should save her life and that I would offer a sum of Rs. 1,008/- as kaanikkai (token of my gratitude). Within an hour and a half, they brought her to the ward, the operation being completed. The doctor told me, "We thought
தர்காவில் மயிலிறகு வைத்து பேய் விரட்டினால் கடவுள் நம்பிக்கை. அதே மாரியம்மன் கோவிலில் வேப்பிலை கொண்டு பேய் விரட்டினால் மூடநம்பிக்கை.
பரிசுத்த ஆவி கொண்டு கொடிய நோய்களை பாதிரியார் விரட்டினால் நம்பிக்கை. அதே இறக்கும் தருவாயில் இருப்பவருக்கு திருநீரு பூசினால் மூடநம்பிக்கை.
நோன்பு
கஞ்சி, கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்டால் சமத்துவம். அதே கோவில் பிரசாதம் தீண்ட கூடாத பொருள்.
இந்து கடவுள்கள் உருவவழிபாடு மூடநம்பிக்கை. அதே இயேசு மேரி மாதா சிலை வழிபாடு, தர்கா சமாதி தொழுகை கடவுள் நம்பிக்கை.
ஈ.வெ.ரா சிலையில் அவர் கீழே விழாமலிருக்க கைத்தடி, அண்ணா சிலையில் அவர் படிக்க
கல்லினால் ஆன புத்தகம், கருணாநிதி சமாதியில் அவர் சாப்பிட தயிர்வடை இவையெல்லாம் பகுத்தறிவு. அதே இந்துமத சிலை வழிபாட்டு முறைகள் மூடநம்பிக்கை.
கம்யூனிஸ்டுகள் காலம் காலமாக சிவப்பு துண்டும், கருணாநிதி மஞ்சள் துண்டும், திக க்ருப் கருப்பு சட்டையும் போட்டால் அது அடையாளம். கடவுள்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருமுறை தன் முன்னோர் ஸ்ராத்தத்துக்கு தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார். அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும் என்றார் அவர். உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை
கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப் போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்? விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப் படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத் தெரிந்தது. இருந்த போதிலும் விட்டுக்
கொடுக்காமல், "ஆஹா 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்" என்றார். வஸிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு ஹிந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நக்ஷத்ரத்தை பார்க்க வேண்டும். வஸிஷ்டரும் அருந்ததியும் இணை பிரியாமல் இருப்பதுபோல நீங்கள்
#MahaPeriyava
A judge from the Chennai High Court came for darshan. He was wearing a dhoti in a traditional manner but did not wear an angavastram (upper cloth) to cover the upper part of his body.
When asked why, he said, "We have a custom to welcome poor people who come to our
home and feed them. On one such occasion a guest who had a meal took away my sunglasses and angavastram. From then on I have stopped wearing an upper cloth or sun glasses." Listening to his explanation patiently, Periyavaa asked that the judge be provided with an angavastram from
the SriMatham.
"Henceforth, daily wear an angavastram. ekavastram (one-piece cloth) is not proper. Wearing sunglasses or not may be according to your wishes. You should not do satkarma (auspicious rituals) with ekavastram."
The judge promised to do as advised.