#ஆரியபட்டா குப்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வான சாஸ்திரமும் சோதிட சாஸ்திரமும் உச்ச நிலையை அடைந்திருந்தது. காரணம், அப்போது வாழ்ந்திருந்த ஆரிய பட்டர், வராகமிஹிரர், பாஸ்கராசாரியார் போன்ற அறிஞர்களே! மாமேதை ஆரியபட்டரே இந்திய சோதிட சாஸ்திரத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
கணிதத்தில் இவர் சிறந்த வல்லுநர். கணித சூத்திரங்கள் பலவற்றை முதன் முதலாக அவர் வகுத்ததோடு, அவற்றுக்கு விளக்கமும் எழுதி வைத்தார். இன்றும் கூட அவரது சூத்திரங்கள் கணிதத் துறையில் பயன்பட்டு வருகின்றன. பூஜ்யம்: இப்போது உலகம் எங்கும் தசம முறை வழக்கில் உள்ளது. இந்தத் தசம முறை, பண்டைக்
காலத்திலேயே பாரதத்தில் கையாளப்பட்டு வந்த, ஒன்று முதல் ஒன்பது மற்றும் பூஜ்யம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டதே. பூஜ்யம் முதன் முதலாக நம் நாட்டில் தான் கண்டறியப்பட்டது. புகழ்பெற்ற வெளிநாட்டு யாத்ரீகர்களான இப்னவேஷியா (ஒன்பதாம் நூற்றாண்டு) அலம் சூதி (பத்தாம் நூற்றாண்டு) அல்பரூனி(பதினோராம்
நூற்றாண்டு) ஆகியோர், தாங்கள் எழுதியுள்ள நூல்களில், #இந்துகளே பூஜ்யத்தைக் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரிய பட்டர் தாம் எழுதியுள்ள கணித நூலில் பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம், ஒரு கோடி, பத்துக் கோடி போன்ற எண்களைக் குறிப்பிட கீழ்க்கண்டவாறு பெயர்களைப் பயன்
படுத்தியுள்ளார். 1-ஏக, 10- தச, 100- சத, 1000-சகஸ்ர, 10,000-அயுத, 100000-பிரயத, 10000000-கோடி, 100000000-அபுர்த, 1000000000-விருத்த. இது தவிர, ஆரிய பட்டர் எழுத்துக் குறி மூலம் எண்களைக் குறிப்பிடும் ஒரு முறையையும் புதிதாக உருவாக்கினார். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன்
குறுக்கிட்டு சூரியனை மறைப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது என ஆரியபட்டர் அக்காலத்திலேயே தமது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். இதுமட்டுமல்ல, பூமி தன்னைத் தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது எனக் கணக்கிட்டு கூறிய முதல் மனிதரும் அவரே. ஒரு வருடம் என்பது 365. 2586805
நாட்கள் கொண்டது என்று ஆரியபட்டர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது உள்ள விஞ்ஞானிகளோ 365.2563604 நாட்கள் கொண்டது ஒரு வருடம் என நவீன சாதனங்களைக் கொண்டு கணித்துக் கூறுகிறார்கள். அவர்கள் கூறும் இந்தக் கணக்கு ஆரியபட்டர் இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே, நவீன சாதன வசதிகள்
எதுவும் இன்றி கணித்துக் கூறியதற்குக் கிட்டத்தட்ட ஒத்தே உள்ளது. வட்டத்தின் பரப்பு பை-ஆர்-ஸ்கொயர் என்பது இப்போது ஜியோமிதியில் வழக்கில் உள்ள மிக முக்கியமான சூத்திரங்களுள் ஒன்று. இதை உருவாக்கியவர் ஆரியபட்டர்தான். இவர் பொயு 476-ல் பிறந்தவர். தமது இருபத்து மூன்றாவது வயதில் (499-ல்)
ஆரிய பட்டீயம் என்ற நூலை இயற்றினார். ஆனால், இவர் எங்கே பிறந்தார், வாழ்ந்தார் என்பது குறித்து வரலாற்றாசிரியர்களால் உறுதிபடக் கூறமுடியவில்லை. அக்காலத்தில் மகத நாட்டின் தலைநகராக விளங்கிய பாடலிபுத்திரத்தில் (தற்போதைய பாட்னா) பிறந்தவர் என்பர். வேறு சிலர் அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர்
என்கின்றனர். திருவனந்தபுரத்தில் ஆரியபட்டீயத்துக்கு நீலகண்டி என்ற ஓர் உரைநூல் அக்காலத்தில் எழுதப்பட்டது ஆரியபட்டர் தென்னாட்டவர் என்பதற்கு ஆதாரமாக இதை சுட்டிக் காட்டுகிறார்கள். #ஆரியபட்டீயம் ஆரியபட்டரின் ஆரியபட்டீயம் நான்கு காண்டங்களாக (பாகங்களாக) பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பாகமான
கீதிகா பாகத்தில் 10 சுலோகங்கள் இதில் எண்களை எழுத்துகள் மூலம் குறிப்பிடும் முறை விளக்கப் பட்டுள்ளது. இரண்டாம் காண்டமான கணித பாகத்தில் 33 சுலோகங்கள். இதில் வர்க்க மூலம், கனமூலம் கண்டுபிடிப்பதற்கான விதிகள் விளக்கப்பட்டுள்ளன, பரப்பளவு, சராசரிகள், வட்டத்தின் சுற்றளவு, வட்டத்தின்
பரப்பளவு கண்டுபிடிப்பதற்கான விதிகள் விவரிக்கப்பட்டடுள்ளன. மூன்றாவது காண்டமான கால கிரியா பாதத்தில் சூரிய வருடம், சந்திர மாதம், நட்சத்திர மாதம், அதி மாதம், கிரகணங்களின் தேதி, இடம் கண்டுபிடிப்பதற்கான முறைகள் 25 சுலோகங்களில் கூறப்பட்டுள்ளன. நான்காவது காண்டமான கோளபாதாவில் துருவ வட்டம்
அடிவானம் பற்றிய விவரங்கள் 50 சுலோகங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆரியபட்டரே இந்திய வான சாஸ்திரத்தின் தந்தை என்பதாலேயே வானவெளியில் முதன் முதலாக (1975-ஆம் ஆண்டு) ஏவப்பட்ட நம் முதல் செயற்கைக்கோளுக்கு ஆரியபட்டா என்று பெயர் சூட்டியது பாரத அரசு!
பாரத கண்டத்திற்கே உரிய, இந்து மதத்திற்கே உரிய ஜ்யோதிஷம், சோதிடம், வானவியல் ஆன்மீகத்தை சேர்ந்ததா?
வேதங்கள் நான்கு, ரிக் யஜுர் சாம அதர்வண. இதில் ஜோதிஷம் முக்கிய அங்கத்தை வகுக்கிறது. ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள்
எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை! இவை இஸ்லாமிய உலகத்தினரும் பயன்படுத்தினர் மற்றும் இதை அடிப்படையாகக் கொண்ட ஜலாலி நாள்காட்டியை, 1073 ஆண்டில் ஒமர் கய்யாம் மற்றும் பலர் அடங்கிய வானியல் வல்லுனர்கள் அறிமுகப்படுத்தினர், இவை இன்றும் ஈரான்
மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயன்பட்டு வருகின்றன.
“இந்தியக் கணிதம் என்பது வேதகாலம் முதற்கொண்டே இருந்துவருவது. வேத வேள்விகள் செய்வதற்காகத் தீ வளர்க்கும் வேதிகைகள், பல்வேறு வடிவங்களால் ஆனவை. இவை சதுரமாக, செவ்வகமாக, வட்டமாக, மேலும் பல சிக்கலான வடிவங்கள் கொண்டவையாக இருக்கு
இவற்றை அமைப்பதற்குக் கணிதத்தின் தேவை அவசியம். அதேபோல வேள்விகளைச் சரியான நேரத்தில், நாளில் செய்வதற்கு வானியல் குறித்த அறிவு அவசியமாக இருந்தது. இவ்வாறுதான் கணிதமும் வானியலும் ஜ்யோதிஷம் என்ற பெயரில் வேதத்தின் அங்கமாக உருவாகி வளர்ந்தன. இந்நிலையில் மிகத் தெளிவாக, எழுதுபவர் பெயர்,
அவருடைய பின்னணி போன்றவற்றுடன் நமக்குக் கிடைப்பவர் ஆரியபடர். கவனியுங்கள், இவர் பெயர் ‘ஆரியபட்டர்’ அல்ல, ஆரியபடர். சமஸ்கிருத உச்சரிப்பில், நான்காவது ‘ப’, முதலாவது ‘ட’ சேர்த்து ‘ப4ட1ர்’ என்று உச்சரிக்கவேண்டும். ஆர்யபடர் எழுதிய கணித, வானியல் நூல் ஆர்யபடீயம் என்று அழைக்கப்படுகிறது.”
கோட்ஸில் உள்ளது கிழக்கு டுடேவில் இருந்து @bseshadri எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.
நம் தேசத்தில் ஆன்மீகமும் அறிவியலும் இரு கண்கள்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
பிரகாஷ் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தன், எப்பொழுதும் எந்த வேலையை முடித்தாலும் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறுவது வழக்கம். ஒரு முறை தனது விலையுயர்ந்த காரை தன் வீட்டின் முன்பாக வீதியில்
நிறுத்தியிருந்தான். அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது
மஇயற்கை உபாதையை கழித்தது. இதைப் பார்த்த பிரகாஷ் சிரித்தான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் சிவா, நண்பா ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் என்று ஆச்சரியத்துடன் கேட்டான். பிரகாஷ் மிகவும் சாந்தமாக, நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கிறது. அதற்கு
இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. சொன்னாலும் அதற்குப் புரியாது என்று சிரித்துக் கொண்டே சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறினான். கேள்வி கேட்ட நண்பன் சிவா இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது போலத் தான் நம் வாழ்விலும் நமது மதிப்பை அறியாதவர்கள் நம்மை
#நற்சிந்தனை ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதிகளில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம், நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அழைத்தார்கள். ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி, அவர்களிடம் ஒரு பாகற்காயை
கொடுத்து, நீங்கள் புனித நதிகளில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என்றார். அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார். புனித நதியில் முழுகி
வந்த பாகற்காய். இப்போது சாப்பிட்டுப் பாருங்கள் தித்திக்கும் என்றார். ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது! தித்திக்கும்னிங்க கசக்குதே என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன். பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை
#மடி#ஆசாரம் என்றால் என்ன?
இது பற்றி இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு அன்றே #ஶ்ரீபுரந்தரதாசர் விடை அளித்துவிட்டார். சுத்தமும் தேவை, அதையும் விட முக்கிய தேவையை தெரிந்துகொளவோம்.
மடிமடி என்று அடிக்கடி சொல்வார்கள். மடியாக இருக்க வேறு வழி உண்டு. ஓடி விளையாடும் சிறுவனின் (ஸ்ரீகிருஷ்ணனின்) திருவடிகளை விடாமல் நினைத்து, அதைப்பற்றி பாடுவதே நிஜமான மடியாகும்.
பட்டெய நீருளகத்தி ஒணகிஸி
உட்டுகொண்டரே அது மடியல்லா
ஒட்டெயொளகின காம
க்ரோத
மத மத்ஸர பிட்டு நடெதரே அது மடியு
(கட்டிக்கொள்ளும்) ஆடையை நீரில் நனைத்து, காய வைத்து அணிந்து கொண்டால், அது மடியல்ல. நம் உடம்பில் இருக்கும் காமம், குரோதம் (கோபம்) மதம் (கர்வம்), மத்ஸரம் (பொறாமை) ஆகியவற்றை விட்டுவிட்டாலே அது மடிதான்.
#ஸர்வம்_ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🙏🏻
ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில். அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்து வரும் சிறுவன் துளசிராமனும் காலை நான்கு மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களை எல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தர
வேண்டிய பணி. கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான். கிருஷ்ணார்ப்பணம் என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து, தொடுப்பான். பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது
போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான். கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு மாலை சூட்ட போனால் ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் காட்சி தருவார். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனைக் கூப்பிட்டு, இதெல்லாம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை நீ எடுத்துக்
கொள் என்றான். ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை என்று சொன்னான் கர்ணன். ஆஹா நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன்
காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய் என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான். அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்
பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், பொயு 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர்
கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின்
நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்.
தம் தாயார் இறந்த
பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.
பட்டினத்தடிகளின் பாடல்
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே;
பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும்